வெள்ளி, 22 டிசம்பர், 2023

 

திருவாதிரை


திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.


ஆருத்ரா தரிசனம்


மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் மற்றும் ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானைமற்றும் தியாகராஜர் பெருமான் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.


மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் மற்றும் திருவாரூர் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில்் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும். திருவாதிரை தினததில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். திருவாரூர் பஞ்சபூத தலத்தில்் பூமி தலமாக இருக்கிறது் பிறந்தாலும் பேசினாலும்் முக்தி தரும் தலம், சிதமபரம் பஞ்சபூதத தலஙகளில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.


சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.


மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிப்பதால் திருவாதிரை திருவிழா என போற்றப்படுகின்றது. 


இதன் காரணமாக சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம் நடப்பெறும். ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.




இதை முன்னிட்டு உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு (மார்கழி 12) டிசம்பர் 27ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.


ஆருத்ரா தரிசன பலன்கள் :


ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் இருக்கும் மரகத நடராஜரை தரிசிக்க இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.


ஆருத்ரா தரிசனம் : சிதம்பரம், உத்திரகோசமங்கை திருக்கோயிலில் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். 


சிவபெருமானின் ரூபத்தை பெரும்பாலான சிவாலயங்களில் சிவ லிங்கமாக தான் காட்சி தருவது வழக்கம். ஆனால் சில சிவாலயங்களில் இருக்கும் சிவனின் நடராஜர் ரூபம் மிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


அப்படி நடராஜர் ஸ்வாமிக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். அந்த சிறப்பு வாய்ந்த நாளில் மிக முக்கிய நாளாக ஆருத்ரா அபிஷேப் பெருவிழா ஆண்டு தோறும் மார்கழி மாதம் கொண்டாடப்படுகின்றது.


சிவாலயங்களில் மிக முக்கியமாக பஞ்ச சபைகளான


1. திருவாலங்காடு -இரத்தின சபை


2. சிதம்பரம் - கனக சபை

3. மதுரை -ரஜித சபை (வெள்ளி அம்பலம்)


4. திருநெல்வேலி - தாமிர சபை


5. திருக்குற்றாலம் - சித்திர சபை

குறிப்பாக இந்த ஐந்து சபைகளில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருவது வழக்கம்.


ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.


திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்


திருச்சிற்றம்பலம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக