வெள்ளி, 22 டிசம்பர், 2023

திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி

'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி 



திருவாதிரை களி வந்த கதை 

சேந்தனார் என்ற விறகு வியாபாரி இருந்தார். மிகச் சிறந்த சிவ பக்தன். தினமும் விறகு வெட்டி, விற்று, அதில் வரும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்காவது உணவளிக்காமல் சாப்பிடுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருந்தார். ஒரு நாள் மழை பெய்கு விறகு முழுவதம் நனைந்து ஈரமானதால், அவற்றை விற்க முடியவில்லை. இதனால் வீட்டு செலவிற்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் கவலையில் இருந்த சேந்தனாரிடம் சிவனடியார் ஒருவர் வந்து பசிக்கிறது என உணவு கேட்டுள்ளார்

வீட்டில் எந்த பொருட்களும் இல்லாத நிலையில் சேர்ந்தனாரின் மவைவி, அரிசி மாவு, வெல்லம் சேர்த்து களியும், அதோடு எஞ்சி இருந்த 7 காய்கறிகளை சேர்த்து கூட்டு ஒன்று சமைத்து சிவனடியாருக்கு படைத்தனர். மறுநாள் அந்த ஊர் கோவில் அர்ச்சகர் பூஜைக்காக கோவிலை திறந்த போது, அங்கு களி, காய்கறி கூட்டு சிதறி கிடைப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். சேந்தனாரின் பக்தியை சோதிக்க சிவ பெருமானே அடியாராக வந்ததையும் புரிந்து கொண்டார்.

     சேந்தனாரை ஆட்கொள்ள சிவபெருமான் இந்த திருவிளையாடலை நிகழ்த்திய தினம் மார்கழி திருவாதிரை. இதன் நினைவாகவே இந்த நாளில் சிவபெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைக்கும் வழக்கம் வந்தது.

திருச்சிற்றம்பலம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக