சனி, 9 ஆகஸ்ட், 2014

சாகாக்கல்வி: தை பூசம்(2013) தீட்சை பெற்ற அன்பர்களுக்கு அருளிய ...

சாகாக்கல்வி: தை பூசம்(2013) தீட்சை பெற்ற அன்பர்களுக்கு அருளிய ...: ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் வடலூர் தை பூசம்(2013) அன்று திருவடி தீட்சை பெற்ற அன்பர்களுக்கு அருளிய உபதேசம். இறைவனை காண முதல...

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

காரைக்காலம்மையாரின் அறிவார்ந்த சிந்தனைகள்,


காரைக்காலம்மையாரின் அறிவார்ந்த சிந்தனைகள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் தமிழகத்தில் கொண்டு வரப்போகம் பக்தி மார்க்கத்திற்கு அல்லது சைவத்தின் மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக வித்திட்டவர் காரைக்கால் அம்மையாரே ஆவார்,காலத்தால் முற்பட்டவர் அம்மையார் அவர்கள், அதனால் இவருடைய பதிகங்கள் மூத்த திருப்பதியங்கள் என போற்றப்படுகின்றன. மறைந்து போன தமிழ் இசைக்கு முதன் முதலில் உயிர் தருமருந்தாய் அமைந்தவை, அம்மையாருடைய மூத்த திருப்பதியங்கள், புனிதவதியார் என்னும் இயற்பெயருடன் வாழ்ந்த அம்மையாருக்கு சிவபெருமானார்அருளியவற்றை காண்போம், 1) இறைவரே அடியவராக வந்து அம்மையாரிடம் உணவு அருந்தியவர் 2). இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தருளினார் 3. கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவை அருளினார் 4, அம்மையார் கேட்டவரங்களை அருளி அம்மையே என அழைத்தருளினார் 5, பதியங்களுக்கு முதன்முதலில் பண் அமைத்து பாடல்களை பதிகமாக அமைத்தவர். 6, மூவர் முதலிகள் எனப் போற்றப்படும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர். இந்த மூவருக்கும் தெளிவான வழிகாட்டியவர், அம்மையார் " வேதத்திற்கு முற்பட்டவர்" சிவபெருமானார் என்று பாடினார், வேதத்திற்கு மூலமானவர்அவர்என்றும் வேத்ப் பெருளே சிவபெருமானார் தான் என்றும் அறுதியிட்டு சொன்னவர் அம்மையார், "வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு ஆதியனை" - திரு இரட்டை மணிமாலை கடவுள் மனம் வாக்கிற்கு எட்டாத இடத்தில் இருப்பதாக கூறினார், ஆனால்அம்மையார் " நினைப்பவர்மனத்தில் நிறைந்து விளங்குபவர்" என்று பாடினார். மூன்றாம் நூற்றாண்டிலேயே சைவ வளர்ச்சிக்கு அம்மையார் விதைத்த நல்வித்துக்ளாவன, 1,தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஓப்படைத்தல் " யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்நெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக் கைம்மா உரிப்போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக்கு ஆளாயினேன், அற்புத திருஅந்தாதி 2, எந்நிலையிலும் சிவபெருமானிடம் முழு அன்பு செலுத்துதல் "இடர்களையா ரேனும் எமக்கு இரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடர் உருவில் அன்பறாது என்னெஞ் சவர்க்கு - அற்புத அந்தாதி வரும் துன்பங்களை நீக்க வில்லை என்றாலும், நற்கதி அருளவில்லை என்றாலும், இரக்கம் காட்டவில்லை என்றாலும், என்னுடைய அன்பு எப்போதுமு சிவபெருமானருக்கே உரியதாகும், 3, இறையன்பில் உறுதி வேண்டும் எனல்: ஒன்றே நினைத்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றே காண் கங்கையான் திங்கட் கதிர்முடிான் பொங்கொளிசேர் அங்கையாற்கு ஆளாம் அது, - அற்புத திருஅந்தாதி ஒரு நெறிய மனம் வைத்துணர்தல் என்பார்சம்பந்தர், இதைத்தான் மூன்றாம் நூற்றாண்டில் அம்மையார் வாழ்ந்து காட்டி முழக்கமிட்டார், 4, இருவினையையும் போக்கி கொள்ளுதல்: சிவபெருமானாருடைய திருவடிகளைச் சார்ந்து இருவினைகளையும் போக்கி கொள்ள வேண்டும், இதனால் காலன் கையில் அகப்படாமல் இன்ப உலகு அடையலாம் என்றார், " காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் " அற்புத அந்தாதி முப்புரம் எரித்த சிவபெருமானாருடைய திருவடிகளை சார்ந்து இருவினைகளையும் போக்கி ெகொண்டேன், இனிமேல் என்னிடம் வரமாட்டான் , நரகம் புகுதலும் இனி இல்லையாயிற்று. 5, பிறப்பை அறுக்க முயற்சித்தல் வேண்டும்: மானிடப்பிறப்பு எடுத்துள்ள தன் நோக்கமே இனி பிறவாமைப் பெறுவதற்குத்தான், பிறப்பும் இறப்பும் இல்லாத சிவபரம் பொருள் ஒன்றே நம் பிறவியை அறுக்கும் என்று தெளிந்து, அப்பெருமானாரை வாழ்த்தி வணங்கி பிறவா நெறி அடைதல் வேண்டும், ஈசன் அவன் அல்லாது இல்லை என நினைந்து கூசி மனத்தகத்து கொண்டிருந்து - பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும் பிறவாமை காக்கும் பிரான், - திருஇரட்டை மணிமாலை அம்மையார அடிபணிந்து நலம் பல பெறுவோம் திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

பன்னிரு திருமறைகள் பற்றிய சிறு விளக்கம்


பன்னிரு திருமறைகள் பற்றிய சிறு விளக்கம் பண் என்பது பாடலின் ஒலி. `பருந்தும் நிழலும் போலப் பாடலும் பண்ணும்' என்பது பண்டையோர் எடுத்துக் காட்டுரை. ஆகவே பண் என்பது பாடல் வகைகளுக்கும் அவற்றின் சீர் அமைப்புக் கும் ஏற்ப அமைவது. ஆதலால் திருப்பாடல்களைச் சீர் முதலிய யாப் பிலக்கண அமைதி கருதி ஒருங்கு தொகுத்த பண்முறை தொன்று தொட்டு வருவதாயிற்று. இந்தப்பண் முறையமைப்பை ஒட்டியே இப் பதிப்பு வெளிவருகிறது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. தோத்திரங்களில் சிறந்தன எவை? ஏதோ ஒவ்வொருகால் ஒன்றிய மனத்தோடு ஒரு மனிதன் புலமை நிலைமையினின்று புகன்றவற்றைக்காட்டிலும், உலகத்தைப் பண்படுத்துவதற்கென்றே திருவருள் வயத்தால் அவதரித்து, சிந்தையைச் சிவமாக்கி, திருவருளோடு வளர்ந்து, சென்ற சென்ற இட மெல்லாம் திருவருளைக்கண்டு, அது உள்நின்று உணர்த்த உரைக்கப் பெற்ற தோத்திரங்களே மிகமிக உயர்ந்தது என்பதில் ஐயமுண்டோ! ஆதலால், "எனதுரை தனதுரையாக" வந்த தோத்திரங்களாய்ச் சிறந் தன தேவார திருவாசகமாகிய பன்னிரு திருமுறைகளே. அவற்றுள் தேவாரம் என்ற சிறப்புப் பெயருக்குரியன முதல் ஏழு திருமுறைகள். அவற்றுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிச்செய்தவை. திருஞானசம்பந்தப்பெருமான் அறிவாற் சிவனேயென்பது திண்ணம். அதிலும் முதிர்ந்து விளைந்த சிவபுண்ணிய மேலீட்டால் இளமையிலேயே சிவஞானம் கைவரப்பெற்ற செம்மல். ஆதலால், ஆண்டில் இளைஞரான இவர் திருவாயிலிருந்து தோன்றி முதிர்ந்து விளைந்த சுவையமுதம் முதன் மூன்று திருமுறைகள். அதிலும் திரு வருட்பராசத்தி சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி `உண் அடிசில்' என ஊட்ட, உண்டவாய் புலர்வதற்கு முன்னே சிவஞானத்தோடு ஒட்டி வந்த பெருமையையுடையது `தோடு' என்ற பாடலை முதற்கண் கொண்டுள்ள முதல் திருமுறை. பொதுவாகத் திருமுறைப் பாகுபாட்டில் பண்முறையெனவும் தலமுறையெனவும் இருமுறை உண்டு. அவற்றுள் பண்முறையாவது பண் ஒற்றுமைபற்றிப் பாடல்களை வரிசைப்படுத்தியது. தலமுறை யாவது கோயில் முதலாகத் தலங்களின் முறைபற்றிக் கோக்கப் பெற்றது. பன்னிரு திருமுறையில் முதலாவது வரும் பாடல் "தோடுடைய " என்று துவங்கினார் திருஞானசம்பந்த பிள்ளயார், இதன்பால் சேக்கிழார் பெருமான் விளக்கம் தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது. மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும். உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு. இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள். ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு. தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது. குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார். `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம் திருச்சிற்றம்பலம் / ஓம் சிவசிவ ஓம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

"தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்"


"தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்" தங்களைத் தேடி வந்து வணங்கும் அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டும் திருநாவுக்கரசர் சுவாமிகள் " புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவாதிருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய் பாதிரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீவண்ணனே." அப்பர் த,வே,4 செழுமையான கங்கை நீரைச்செஞ்சடையில் வைத்திருக்கும் தீ நிறவண்ணரே! திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள அண்ணலே! எளியேன் மறுபிறவியில் புழுவாகப் பிறந்தாலும் புண்ணிய வடிவினரான தங்களின் திருவடிகள் என் மனத்தை விட்டு நீங்காதிருக்க அருள் செய்யுங்கள். இதைப்போலவே தங்களைத் தேடி வந்து வணங்கும் அன்பர்களுக்கும் அருள் புரியுங்கள். இறைவர் தேவர்கள் மூவர்கள் முதலியவர்களால் அறிய முடியாத அருமைப்பாடு உடையவர், அவர் கற்பகமாய் அடியவர்கட்கு அருள் செய்பவர். அவரிடம் நாம் இந்த உலக போகங்களுக்காக வேண்டுவது நமது அறிவின் குறைபாடே ஆகும். பொன் கலப்பையைக் கொண்டு கொள்ளுக்கு உழுவது போலவாகும், அப்பெருமானரிடம் அரியனவற்றைக் கேட்க வேண்டும். இப்பிறவியில் நமக்கு வேண்டியவற்றைக் கால நேரம் அறிந்து அவரே அளிப்பார். இக்கருத்தினையே மாணிக்கவாசகரும் " வேண்டத்தக்கது அறிவாய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டும் அயன் மாய்கரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் வேண்டி நீ யாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன்றுண்டென்னில் அதுவும்உன்றன் விருப்பன்றே." எனபொருட்டு நீ எது தருவதானலும் , அது உந்தன் விருப்பம் அன்றே, எனக்கு என்ன வேண்டும் எப்போது வேண்டும் என்பதை அறிந்தவனும் நீயே, அதை தருவது உன்னுடைய விருப்பமல்லவோ என்கிறார் மணிவாசகர் திருச்சிற்றம்பலம் நன்றி ; தமிழ் வேதம்

இறைவன் யார்?


இறைவன் யார்? எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம் , கோடான கோடி அணு்க்களின் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், ேமலும், வெளியும் அதுவதில் உயிர் சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இைத வள்ளலார் அவர்கள், "குலவு பேரண்டப் பகுதியோர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே நிலவிய பிண்டப் பகுதிகள் முழுவதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும் மெய்யறி வானந்தம் விளங்க அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும் அருட் பெருஞ்சோதி என் அரசே." இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் ெகாண்டிருக்கிறார், இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படி ெசயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்திைய நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும் உயிரையும் பேணப்படுத்தும் வழிவகைகளை ெதரிந்து கொள்வதே ஆன்ம ஞானம். ஆன்ம ஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவ்றறையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கணடு நிம்மதியாக வாழலாம். திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம்

சனி, 2 ஆகஸ்ட், 2014

Thirumandiram - Pulan addakkam