வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

காரைக்காலம்மையாரின் அறிவார்ந்த சிந்தனைகள்,


காரைக்காலம்மையாரின் அறிவார்ந்த சிந்தனைகள், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பெருமக்கள் தமிழகத்தில் கொண்டு வரப்போகம் பக்தி மார்க்கத்திற்கு அல்லது சைவத்தின் மறுமலர்ச்சிக்கு முன்னோடியாக வித்திட்டவர் காரைக்கால் அம்மையாரே ஆவார்,காலத்தால் முற்பட்டவர் அம்மையார் அவர்கள், அதனால் இவருடைய பதிகங்கள் மூத்த திருப்பதியங்கள் என போற்றப்படுகின்றன. மறைந்து போன தமிழ் இசைக்கு முதன் முதலில் உயிர் தருமருந்தாய் அமைந்தவை, அம்மையாருடைய மூத்த திருப்பதியங்கள், புனிதவதியார் என்னும் இயற்பெயருடன் வாழ்ந்த அம்மையாருக்கு சிவபெருமானார்அருளியவற்றை காண்போம், 1) இறைவரே அடியவராக வந்து அம்மையாரிடம் உணவு அருந்தியவர் 2). இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தருளினார் 3. கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவை அருளினார் 4, அம்மையார் கேட்டவரங்களை அருளி அம்மையே என அழைத்தருளினார் 5, பதியங்களுக்கு முதன்முதலில் பண் அமைத்து பாடல்களை பதிகமாக அமைத்தவர். 6, மூவர் முதலிகள் எனப் போற்றப்படும் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர். இந்த மூவருக்கும் தெளிவான வழிகாட்டியவர், அம்மையார் " வேதத்திற்கு முற்பட்டவர்" சிவபெருமானார் என்று பாடினார், வேதத்திற்கு மூலமானவர்அவர்என்றும் வேத்ப் பெருளே சிவபெருமானார் தான் என்றும் அறுதியிட்டு சொன்னவர் அம்மையார், "வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு ஆதியனை" - திரு இரட்டை மணிமாலை கடவுள் மனம் வாக்கிற்கு எட்டாத இடத்தில் இருப்பதாக கூறினார், ஆனால்அம்மையார் " நினைப்பவர்மனத்தில் நிறைந்து விளங்குபவர்" என்று பாடினார். மூன்றாம் நூற்றாண்டிலேயே சைவ வளர்ச்சிக்கு அம்மையார் விதைத்த நல்வித்துக்ளாவன, 1,தன்னை முழுவதுமாக இறைவனிடம் ஓப்படைத்தல் " யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்நெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக் கைம்மா உரிப்போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக்கு ஆளாயினேன், அற்புத திருஅந்தாதி 2, எந்நிலையிலும் சிவபெருமானிடம் முழு அன்பு செலுத்துதல் "இடர்களையா ரேனும் எமக்கு இரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடர் உருவில் அன்பறாது என்னெஞ் சவர்க்கு - அற்புத அந்தாதி வரும் துன்பங்களை நீக்க வில்லை என்றாலும், நற்கதி அருளவில்லை என்றாலும், இரக்கம் காட்டவில்லை என்றாலும், என்னுடைய அன்பு எப்போதுமு சிவபெருமானருக்கே உரியதாகும், 3, இறையன்பில் உறுதி வேண்டும் எனல்: ஒன்றே நினைத்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றே என் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றே காண் கங்கையான் திங்கட் கதிர்முடிான் பொங்கொளிசேர் அங்கையாற்கு ஆளாம் அது, - அற்புத திருஅந்தாதி ஒரு நெறிய மனம் வைத்துணர்தல் என்பார்சம்பந்தர், இதைத்தான் மூன்றாம் நூற்றாண்டில் அம்மையார் வாழ்ந்து காட்டி முழக்கமிட்டார், 4, இருவினையையும் போக்கி கொள்ளுதல்: சிவபெருமானாருடைய திருவடிகளைச் சார்ந்து இருவினைகளையும் போக்கி கொள்ள வேண்டும், இதனால் காலன் கையில் அகப்படாமல் இன்ப உலகு அடையலாம் என்றார், " காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் " அற்புத அந்தாதி முப்புரம் எரித்த சிவபெருமானாருடைய திருவடிகளை சார்ந்து இருவினைகளையும் போக்கி ெகொண்டேன், இனிமேல் என்னிடம் வரமாட்டான் , நரகம் புகுதலும் இனி இல்லையாயிற்று. 5, பிறப்பை அறுக்க முயற்சித்தல் வேண்டும்: மானிடப்பிறப்பு எடுத்துள்ள தன் நோக்கமே இனி பிறவாமைப் பெறுவதற்குத்தான், பிறப்பும் இறப்பும் இல்லாத சிவபரம் பொருள் ஒன்றே நம் பிறவியை அறுக்கும் என்று தெளிந்து, அப்பெருமானாரை வாழ்த்தி வணங்கி பிறவா நெறி அடைதல் வேண்டும், ஈசன் அவன் அல்லாது இல்லை என நினைந்து கூசி மனத்தகத்து கொண்டிருந்து - பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும் பிறவாமை காக்கும் பிரான், - திருஇரட்டை மணிமாலை அம்மையார அடிபணிந்து நலம் பல பெறுவோம் திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக