புதன், 21 ஜனவரி, 2015

பாம்பாட்டிச் சித்தர் / வரலாறு தமிழகம் போற்றும் சித்தர் பெருமக்களில் பாம்பாட்டிச் சித்தரும் ஒருவர் ஆவார். பாம்புகளைப் பிடிப்பது, படமெடுத்து ஆட வைத்து வேடிக்கை காட்டுவது இவரது தொழிலாகும். எத்தகைய பெரிய, கொடிய பாம்பாக இருந்தாலும் அதனை இவர் வெகு எளிதாகப் பிடித்து விடும் ஆற்றல் பெற்றவர். பாம்பு விஷத்தை முறிக்கும் மூலிகைகள் பலவற்றை இவர் நன்கறிந்திருந்தார். இவர் கோவைக்கு அருகிலுள்ள மருதமலையில் அந்தக் காலத்திலேயே விஷமுறிவு வைத்தியம் மற்றும் ஆய்வுக் கூடம் ஒன்றை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.ஒரு நாள் மலை மீது பெரிய நாகப்பாம்பு ஒன்றைப் பிடிக்க வேண்டி விரைந்து சென்றபோது இவர் சட்டை முனியைக் கண்டார். இவ்விருவரின் சந்திப்பு பற்றி போக முனிவர் தம் போகர் 7000-ல், புற்றருகில் சென்றுமல்லோ சித்தர் தாமும் பனிதமுள்ள நவரத்தினப் பாம்பு தன்னை வெற்றியுடன் தான் பிடிக்கப் போகும்போது வேதாந்தச் சட்டைமுனி அங்கிருந்தார். என்று கூறுகிறார். மேலும் சட்டை முனி தாம் கண்ட பாம்பாட்டிக்கு உபதேசம் செய்தருளினார். இதனால் காடுகளில் கொடிய பாம்புகளை பிடித்து நாடு நகரங்களில் சென்று பாம்புகலை ஆட வைத்து வேடிக்கை காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த பாம்பாட்டி சட்டை முனியின் பேரருளால் மெய்ஞ்ஞானப் பாலூண்டு நானிலம் போற்றும் சித்தராக மாறினார். சிறிது காலத்துக்கு சமாதி நிலையில் இருந்த பாம்பாட்டிச் சித்தர் பின் வெளிவந்து சித்துக்கள் பல புரிந்தபடி தேச சஞ்சாரம் செய்து வந்தார். ஒருநாள் அந்நாட்டு மன்னர் இறந்து போனார். அது கண்ட இவர் அவனுடம்பில் கூடு விட்டு கூடு பாய்ந்து அவரது மனைவியுடன் இருந்தபோது செத்த பாம்பு ஒன்றை உயிர்ப்பித்து ஆட வைத்தார். அதனால் இவர் பாம்பாட்டிச் சித்தர் என்ற பெயரைப் பெற்றார் என்று கூறுவோரும் உண்டு. வேறு சிலர் இவர் மன்னரது மனைவியுடன் அதிக நாட்கள் தங்கி விட்டதால், இவரது சீடர்கள் பாம்பாட்டிகளைப் போன்று வேடமிட்டு அரண்மனைக்குள் புகுந்து பாம்புகளை ஆட வைத்துப் பாடிய பாடல்களைக் கேட்டுத் தாம் யார் என்ற உண்மையை உணர்ந்து தம் பழைய உடம்பினுள் பிரவேசித்தார் என்று கூறுகின்றனர். எது எப்படி என்றாலும் இவரது வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது என்றே கூறலாம். ஒரு சமயம் பாண்டிய நாட்டின் எல்லைப் பகுதியில் இருந்த காடு ஒன்றில் ஏராளமான கொடிய பாம்புகள் இருந்தன. அப்போது பயந் என்பதை அறியாத இளைஞன் ஒருவன் அக்காட்டு வழியே வந்தான். படமெடுத்து ஆடிய நாகம் ஒன்றினை அவன் வரும் வழியில் கண்டான். அதன் ஆட்டம் அவனை வெகுவாகக் கவர்ந்தது. வெகுவாக ரசித்துச் சிரித்தான். அப்போது அக்கொடிய நாகம் அவன் மீது சீறிப் பாய்ந்தது. அது கண்டு கலங்காத அவன் அதனைப் பிடித்துத் தரையில் ஓங்கியடித்தான். அதனால் அப்பாம்பு இறந்து போனது. ஊர் திரும்பியவன் தன் நண்பர்களிடம் காட்டில் நடந்ததைக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டான். அப்போது அவனது நண்பர்கள் மிரண்டு, “அடேய்! அந்தக் காட்டு வழியே இனிமேல் போகாதே! கொடிய விஷப் பாம்புகள் அங்கு ஏராளமாக உள்ளன” என்று எச்சரித்தனர். ஆனால் அவனோ அவர்களது கூற்றை அலட்சியம் செய்தான். அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார். அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.” அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார். சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார். பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான் அவனது வேண்டுதலை ஏற்ற சித்தர் பெருமான், “மனித உடல் ஓர் அற்புதம்ப் படைப்பு! இவ்வுடம்புள் காலம் காலமாக ஓர் பாம்பு உறக்க நிலையில் மூலாதாரச் சக்கரத்தில் உள்ளது. அதனை குண்டலினி என்ரு கூறுவர். சிவத்தை உணர்வு நிலையில் வாழும் பண்பாளர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். சுவாசம் ஒடுங்கினால் குண்டலினி என்னும் அப்பாம்பு சீறி எழும். தியானத்தின் வாயிலாக அதனை ஆட்டிப் படைக்கலாம். இதனால் ஆன்மா சித்தி அடையும்” என்றார். “சுவாமி, மாபெரும் இரகசியத்தை நான் இன்று மாதவச் சீலரான தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தாங்கல் காட்டியருளிய வழியை இனி நான் கடைப்பிடிப்பேன். இது சத்தியம்!” என்றான். “மகனே! அவ்வாறு செய்தாயானால் நீ வெற்றி பெறுவாய்!” என்றுரைத்த சித்தர் பெருமான் அருள் ஒளியை அந்த இளைஞன் மீது பாய்ச்சியருளிவிட்டு சட்டென மறைந்தருளினார். அந்த இளைஞன் சந்தித்த சித்தர் பெருமானே சட்டைமுனி ஆவார். சித்தர் பெருமான் சென்ற திசை நோக்கி வணங்கிய இளைஞன் அங்கிருந்த அத்தி மரத்தடியில் அமர்ந்து, சித்தர் பெருமான் உரைத்து அருளியபடி தியானத்தில் அமர்ந்தான். தியான முடிவில், குண்டலினி சக்தியை முற்றிலுமாக உணர்ந்து அனுபவித்தான். “ஆஹா! பரமானந்தம் அளிக்கும் இந்த மெய்ஞ்ஞான சுகத்தை இதுநாள் வரையில் நாம் அறியாது இருந்தோமே!” என்று வேதனைப்பட்டான். அப்போது அவனுக்கு உபதேசித்தருளிய சித்தர் பெருமானான சட்டைமுனி அவன் முன்பாகத் தோன்றி, “மகனே! நான் உனக்கு உபதேசம் செய்தருளினேனே தவிர உன் பெயரைக் கூட நான் தெரிந்து கொள்ளவில்லை! நீயாவது உன் பெயரைக் கூறியிருக்கலாமே?” என்றார். அதற்கு அவன் “சுவாமி! கொடிய பாம்புகளை மட்டுமே பிடித்து ஆட வைத்துக் கொண்டிருந்த நான் குண்டலினிச் சக்தியால் உலகையே என்னுள் காணும் சக்தியை உபதேசித் தருளியவர் தாங்கள்! தங்களிடம் என் பெயரை என்னவென்று நான் கூறுவது? முன்பும் (பாம்பு) இப்போதும் (குண்டலினிப் பாம்பு) பாம்பைத் தான் பிடித்து என் விருப்பப்படி ஆட்டுவிக்கிறேன். அதனால் சுவாமி! என் பெயர் பாம்பாட்டி என்றே வைத்துக் கொள்ளுங்கள்” என்றான். அது கேட்டுச் சிரித்த சட்டைமுனி “ஆஹா! நீ நல்ல பெயரைக் கூறினாய். நீ பாம்பாட்டிச் சித்தனே! நீ வாழ்வாயாக!” என்றுரைத்து மறைந்தருளினார். தம் குருதேவரான சட்டையின் அருளாசியால் பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் மீண்டும் ஆழ்ந்தார். சிறகடித்துப் பறந்து வந்து சித்திகள் அவரிடம் இரண்டறக் கலந்தன. கண்களைத் திறந்தார். அவருள் இருந்த சித்திகள்யாவும் வெளிப்பட்டன. இரும்பு செம்பானது, செம்பு பொன் ஆனது, மணல் சுவை மிகுந்த சர்க்கரையானது. தன் கரங்களால் கூழாங்கற்களை எடுத்து உற்றுப் பார்த்தார். உடனே அவை ஒளி வீசும் நவரத்தினக் கற்களாக மாறின. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் சிரித்தார். என்ன வாழ்க்கை இது… நவரத்தினக் கல் கொண்ட பாம்பைத் தேடி நான் அலைந்தேன். அது கிடைக்கவே இல்லை. இப்போது சாதாரண கூழாங்கற்களையே நவரத்தினக் கற்களாக மாற்றிடும் சித்து வேலை தானாக என்னிடம் வந்துள்ளது. இதுதான் காலத்தின் கோலம் போலும். ச்சே…. வேண்டவே வேண்டாம் இவை… என்று கூறி அக்கற்களை வீசியெறிந்தார். தான் சந்தித்த மானிடர்களுக்குப் பாம்பாட்டிச் சித்தர் உபதேசம் செய்தருளினார். ஆனால் அவரிடம் வந்தோர் அனைவரும் அவரிடம் நடித்துத் தங்களது வாழ்வை வளமாக்கிக் கொண்டார்களே தவிர, நல்லவற்றை கடைப்பிடிப்பதில் அவர்கள் முயலவில்லை. அது கண்டு பாம்பாட்டிச் சித்தர் பெரிதும் வேதனைப் பட்டார். என்ன மனிதர்கள் இவர்கள்…. வயிற்றுப் பசிக்கு மட்டுமே இவர்கள் அலைகிறார்களே ஒழிய ஆன்மா என்று ஒன்று உண்டு. அதன் பசியை போக்க வேண்டும் என்று எண்ணம் துளியளவு கூட இல்லாதிருக்கிறார்களே… என்று அவர் வருந்தினார். இரவு, பகல் என அலைந்து திரிந்தார். பலரின் வியாதிகளைப் போக்கியருளினார். வறுமையால் வாடித் துன்புறும் ஏழை எளியோருக்கு இரசவாதம் மூலம் பொன்னைச் செய்து அவர்களது வறுமையைப் பாம்பாட்டிச் சித்தர் போக்கியருளினார். மன்னர் ஒருவர் கீழ்மக்களது சேர்க்கையால் செய்யத் தகாதவற்றை எல்லாம் செய்தார். இதனால் அம்மன்னரது உடல் இளைத்து மெலிந்தது. அடையாளமே தெரியாதவாறு அவர் உடல் இளைத்ததால் மிகவும் அவதிப்பட்டார். ஒருநாள் அம்மன்னர் நடந்து செல்லும் போது, கால் இடறிக் கீழே விழுந்தார். விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. ஆம்… இவர் இறந்து போனார். கலைகள் பலவற்றைக் கற்றறிந்த உத்தமக் குல மகளான அரசி, ஐயோ, எவ்வளவோ சொல்லியும் நீங்கள் திருந்தவே இல்லையே, இப்போது என்னைத் தனியே தவிக்கவிட்டுவிட்டுச் சென்று விட்டீர்களே… என்று கதறி அழுதாள். அரசியின் துயரைக் கண்டு குடிமக்களும் அமைச்சர்களும் மிகவும் வருந்தினர். அரண்மனையில் இருந்து வெளிவந்த அழுகை ஒலி விண்ணை எட்டியது. பாம்பாட்டிச் சித்தரின் செவிகளில் இந்த அழுகை ஒலி விழுந்தது. உடனே அவர் விண்ணில் இருந்து பூமிக்கு வந்தார். பூமியை அடைந்ததும் அவர் தம் உடலை ஒருபுறமாக வைத்துவிட்டு, செத்த பாம்பு ஒன்றை எடுத்து இறந்த மன்னர் உடலைச் சுற்றி அழுது கொண்டிருந்தவர்களின் மத்தியில் வீசியெறிந்தார். தங்களிடையே விழுந்தது செத்த பாம்பு என்பதை அறியாது அனைவரும் அலறியடித்து ஓடினர். பாம்பாட்டிச் சித்தர் அருவமாக இறந்த மன்னர் உடலருகே வந்தார். உடனே மன்னர் உடம்பினுள் அவர் கூடு விட்டு கூடு பாயும் கலைப்படி புகுந்தார் உடனே இறந்த மன்னரின் உடம்பு உயிர் பெற்று மெல்ல அசைந்தது. கண்கள் சட்டெனத் திறந்தன. அரசர் எழுந்து அமர்ந்தார். அது கண்டு அரசியும், அமைச்சர்களும், கூடியிருந்தோரும், மன்னர் இறக்கவில்லை. உயிருடன்தான் உள்ளார், என்று மகிழ்ந்து கூவினர். அரசி தன் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். மிகவும் மகிழ்ந்த அவள் அவரைத் தழுவிடத் தனது கரங்களை நீட்டினாள். அதுகண்டு சட்டென விலகிய மன்னர் அங்கு தரையில் கிடந்த உயிரற்ற பாம்பின் உடலைப் பார்த்து, எழு பாம்பே… நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திருக்கலாமே என்றார். உடனே செத்த பாம்பு உயிர் பெற்று மெல்ல நெளிந்து நகர்ந்தது. அனைவரும் அது கண்டு வியந்தனர். பாம்பு வெளியே செல்ல முற்படுவதைக் கண்ட மன்னர், பாம்பே… எங்கே போகிறாய் நீ.. என்ன அரவரம் உனக்கு உன் மனைவி, மக்கள் நினைவு வந்து விட்டதோ.. சீச்சீ…. செத்துப் போன நீ இப்போது உயிர் பெற்றுச் செல்கிறாய் ஏமாறாதே உருப்படும் வழியைப் பார் என்றார். அவரது கூற்று ஆடு பாம்பே, ஆடு பாம்பே… என்று முடியும் பாடல்களாகவே வெளி வந்தன. அரிய உபதேசங்களைக் கொண்ட அப்பாடல்களுக்கு ஏற்றபடி அப்பாம்பும் படமெடுத்து ஆடியது. மன்னரது பாடல்களையும் அவர் பாடியதற்கு ஏற்ப பாம்பு படமெடுத்து ஆடியதையும் கண்டு அனைவரும் வியந்தனர். மன்னர் உருவில் இருப்பவர் பாம்பாட்டிச் சித்தரே என்பதை உணராது அவர்கள் குழப்பம் அடைந்தனர். மன்னரது பாடல்களைக் கேட்ட அரசி, ஒரு நாட்டையே ஆளும் நம் மன்னர் செத்துப் பிழைத்த பின் தத்துவமழையாகப் பொழிகிறாரே… இது எப்படி. என்று புரியாது தவித்தாள். அரசியின் எண்ணத்தை உணர்ந்த மன்னர், செல்வத்தில் மூழ்கிச் சீர் கெட்டுப் போவதில் என்ன லாபம் உண்டாகப் போகிறது. பரமனையே நினை. பேரின்பம் கிட்டும். என்று பாடலாகப் பாடினார். என்ன விந்தை இது. நான் உள்ளத்தில் நினைத்ததைப் பாடலாகப் பாடுகிறாரே… எப்படி. பாலும், பழமும் உண்டு எந்நேரமும் பெண் மோகத்தில் மூழ்கிய இவர், பரமனை சிந்தையில் வை, என்று கூறுகிறாரே… என்று வியந்தாள் அரசி. உடனே மன்னர் உருவிலிருந்த சித்தர் பாலும், பழமும் விழுங்கிய வாய், உயிர் போன பின், மண்ணையும் விழுங்கும் இதனை நீ மறக்கலாகுமா. என்று பொருள்படுமாறு பாடினார். அதுகேட்டு அரசி ஓர் முடிவுக்கு வந்தவளாய், சுவாமி உண்மையை மறைக்காது கூறுங்கள் தாங்கள் எங்களின் மன்னர் தானா அல்லது உத்தமமான ஓர் ஆத்மா என் மன்னரின் உடம்புள் புகுந்துள்ளதா. என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு மன்னராக இருந்த சித்தர், அரசியை நீ ஒரு விவேகி, அதனாலேயே நீ உண்மையை உணர்ந்து கொண்டாய். அறிவு என்ற அங்குசம் கொண்டு கோபம் என்னும் மதயானையைக் கொன்றவர்கள் நாங்கள், உன் கணவன் இறந்ததால் அழுது கொண்டிருந்த உனது அவல நிலையை மாற்றவே யாம் இறந்த உன் மன்னரது உடம்புள் புகுந்தோம் எமது பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்பதாகும், என்று கூறினார். அதுகேட்டு அரசி மெய்சிலிர்த்து சுவாமி என் துயரத்தை போக்கியருள வந்த தெய்வம் தாங்கள், இனி இந்த என் அரசரின் உடலின் நிலை என்னவாகும். நான் உய்ய என்ன செய்ய வேண்டும். வழிகாட்டி அருளவேண்டும் என்று பணிவுடன் வேண்டினாள். மனம் என்னும் குதிரையை அறிவு என்ற கடிவாளம் கொண்டு அடக்கிடு கோபத்தை விட்டொழி தெளிவு உனக்கு தானாக வரும், என்று சித்தர் உபதேசித்தருளினார். அவர் உபதேசம் செய்து முடித்ததும் மன்னரது உடல் உயிரற்ற உடலாகச் சட்டெனக் கீழே விழுந்தது. மன்னரது உடம்புள் இருந்து நீங்கிய பாம்பாட்டிச் சித்தர் மீண்டும் தம் உடம்புள் புகுந்தார். அதுவரை படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த பாம்பும் அங்கிருந்து அகன்று சென்றது. அங்கிருந்த அனைவரும் பயத்துடனும், வியப்புடனும் நிகழ்ந்தவை அனைத்தையும் கண்டனர். சித்தர் உபதேசத்தைத் தன் சிந்தையில் வைத்த அரசி, முறைப்படி மன்னரின் இறுதிக் கடன்களைச் செய்து முடித்தாள். பின் சித்தரது வழியில் வாழ்ந்து முக்தியடைந்தாள். பாம்பாட்டிச் சித்தர் விருத்தாசலத்தில் சித்தி அடைந்தார் என்றும் துவாரகையில் சித்தியடைந்தார் என்றும் பல செய்திகள் கூறப்படுகின்றன. திருக்கோகா்ணத்தில் பிறந்த பாம்பாட்டி சித்தர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தார் என்றும் மருத மலையில் வாழ்ந்தார் என்றும் முரண்பட்ட பல தகவல்கள் உள்ளன. ஆனாலும் அவர் மருதமலையில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு ஆதாரமாக அங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை, சுனை முதலானைவை உள்ளன. திரு சிற்றம்பலம் நன்றி ; தமிழ் கடல் மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

உடல் ஒரு ஓட்டைப்பாண்டம்

உடல் ஒரு ஓட்டைப்பாண்டம் முக்தி அடைவதற்கு மூன்று வழிகள் உண்டு. அவை கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் என்பன. கர்ம யோகத்தை உடலாலும்,ஞானயோகத்தை அறிவினாலும் பக்தியோகத்தை மனதினாலும் வசப்படுத்தலாம். சித்தர்கள் வாழும் காலத்திலேயே மனதாலும் உடலாலும் முக்தி அடைந்தார்கள், நாற்றம் பிடித்தஅழுக்கு உடம்பை ஆபாசக்கொட்டிலை மாமிசம் நிறைந்த ஓட்டைத்துருத்தியை சோறிட்டு அடைக்கம தோற்பை - தசவாயுக்களாலும் நிறையப்பெற்ற நிலையற்ற பாத்திரமாகிய உடம்பின் மேல் நேசம் கொண்டு இத்தனை காலம் சுமந்து திரிந்து விட்டேனே என்று நினைக்கும் சித்தர்கள் அகக்கண்ணால் இறைவனைக் காணும் வல்லமை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறக்கும் போது எதையும் கொண்டு போக முடியாது என்று உலகத்தை உணர்ந்தவர்கள் பக்தி மார்க்கத்தில் ஞானத்தை செலுத்தி துன்பவலை என்ற பாசக்கட்டை அறுத்தெறிந்து வாழக்கற்றுக்கொண்டாவர்கள் சித்தர்கள். ஐம்புலங்களால் நாம் அறியும் அறிவு ஐந்து. ஆத்ம அறிவைச் சேர்த்து ஆறறிவு. மிருகங்குளுக்கு நான்கு அறிவு. சீவனை சேர்த்தால் ஐந்து அறிவு. பறவைகளுக்கு அறிவு மூன்று. மார்பினால் நகரும் பிராணிகளுக்கு (ஊர்வன) இரண்டு அறிவு. தாவரங்களுக்கு ஒரு அறிவு.இப்படி அறிந்து தெளிந்து கூறியவர்கள் சித்தர்கள். ஒரு சித்தர் " இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்து இருந்தேன், ஆனால் இந்த உடம்புக்குள்ளே தான் இறைவன் இருக்கிறான் என்பதைக் கண்டு கொண்டேன் உடலே கோயில் சீவனே சீவன் என்பதை உணர்ந்து கொண்டேன் இந்த உடம்பு அழிந்து விட்டால் உயிரும் அழிந்து விடுமே அதன்பின் ஞானத்தை எங்கே உணரமுடியும் அதனோடு எப்படி சேர முடியும் என்று அரிய விளக்கத்தை கூறியிருக்கிறார் திருமூலர் திருமந்திரத்தில் "உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினையான் இருந்து ஓம்புகின்றேனே." என்கிறார் பித்தனைப் போல் வாழ்ந்த சித்தர் " இவ்வுலகில் நிலையாக வாழ்வாய் என்று நினைப்பது மாயை, நீ ஒரு நாள் இறக்கத்தான் போகிறாய் உடம்பு உன்னுடையது என்று வளர்த்து சந்தோசப்படுகிறாயே அது உன்னுடையதா? நாய் நரி, கழுகு ஆகியவை நம்முடையது என்று ஆனந்தப்படுகிறதே, நீ இறந்தபின் கொடிய கழுகுக் கூட்டம் பறந்து வந்து உன் உடம்பை சின்னா பின்னமாக்கி கொத்தி தின்னத்தானே போகிறது, 9 துவாரங்களுடைய தோல் பையாகிய இந்த உடம்பின் மீது ஆசை வைக்காதே" என்று கூறுகிறார், மேலும் கூறுகிறார் " காக்கை கவரில்என் கண்டார் பழிக்கில்என் பால்துளி பெய்யில்என் பல்லோர் பழிச்சில்என் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டு போனஇக் கூட்டையே". தோலால் ஆன இப்பையாம் இவ்வுடம்பினுள் உயிராகிய கூத்தன் இருந்துகொண்டு செய்ய வேண்டிய தொழில்களை செய்து முடித்து, வினைகளை அனுபவிக்குமாறு செய்கிறான், இப்படி செய்யும் உயிர் உடலை விட்டுப் போன பிறகு பிணமாக போன பின் அதனை காக்கை கவர்ந்தால் என்ன? பார்த்தவர்கள் பழித்துப் பேசினால் என்ன? பாலைத்துளியாகத் கொட்டினால் என்ன? பலரும் அப்பிணத்தை புகழ்ந்து பேசினால் என்ன? கழுகும் காக்கையும் மண்ணும் தின்னும் உடல்தானே அது. காலத்தை தனக்குள் கட்டுப்படுத்தி மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள். இரும்தையே ரசவாதத்தினால் பொன்னாக்கினார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். நவக்கிரங்களை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தார்கள் சித்தர்கள். இயற்கையின் சக்திக்கு மாறாக மூச்சடக்கி வானத்தில் பறந்த சித்தர்களும் தண்ணீர்மேல் நடந்தவர்களும் இருக்கிறார்கள். மக்களின் நன்மைக்காக இவைகளை பயன்படுத்தினார்களே தவிர, அவர்களுக்கு என்று எதையும் செய்யவில்லை, யோகம் ஞானம், வைத்திய சாஸ்திரங்களையும் நமக்காக அருளியிருக்கிறார்கள், சித்தர்கள் நம் நாட்டில் எத்தனையே பேர் இருந்திருக்கிறார்கள்,நாம் பதிென்ட்டு சித்தர்களை முதல் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம், அவர்களோடு நில்லாது அவர்களின் தீட்சத் - ஞான உபதேசம்பெற்று அவரகளின் சீடர்களாகவும் அறிய பல நிகழ்வுகளைச் செய்து சித்தி விளயாட்டுகள் பல புரிந்து ஜீவ சமாதி அடைந்த சித்தர்களும் ஏராளமானபேர்கள் உண்டு என்பதை பல வரலாறுகள் வழியாக அறியலாம். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வியாழன், 15 ஜனவரி, 2015

மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி

மனிதனிடம் இருக்கும் மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி◆◆ ¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ★வித்து சக்தியை அஷ்வினி முத்திரை செய்து உச்சியில் ரசமணியாக கட்டினால் கூடு விட்டு கூடு பாய முடியும். மூலாதாரத்தில் ஐந்து சக்திகள் ஒடுங்கி இருக்கிறது. ★காந்த சக்தி( bio magnetic energy) ★மின் சக்தி (bio electrical energy) ★வெப்ப சக்தி ( bio heat energy) ★ஒலி சக்தி ( bio light energy?) ★ஒளி சக்தி ( bio atomic energy) ★ஐந்து சக்தி மூலாதாரத்தில் இருக்கிறது. இது முதுகு தண்டு வழியே மேலே ஏறும் போது bio magnetic energy அளவில் வித்து சக்தி இருந்தால் நமக்கு சில ஆசோதன சக்திகள் வரும். அதில் நாம் தேங்கிடுவோம். அதற்கு மேல் நாம் போக மாட்டோம். ★மக்கள் ஈர்ப்பு, ஜன வசியம், பூத வசியம், தேவதை வசியம். இந்த வசிய கலையை கற்றுக்கொண்டு மக்களுடன் நாம் இருந்துவிடுவோம். ★வித்து சக்தி மேலே ஏறும்போது bio electrical energy dominate செய்கிறது என்றால் உடம்பில் நல்ல vibration spread ஆகும். healing, நோய்களை குணப்படுத்துதல் போன்றவற்றை செய்யலாம். ★வித்து சக்தியில் bio heat energy அதிகமானால் யார் வினையையும் பஷ்பமாக எரித்து விட முடியும். ★நம் வினையையும் எரித்து விடலாம். அடுத்தவர் வினையையும் எரித்துவிடலாம். அதுவே bio light energy ஆக மாறினால் யாருடைய பிரச்சினையையும் தீர்த்து விடலாம். அந்த மாதிரி கண்ணிற்கு ஒலி வரும். ★நாம் எங்கு சென்றாலும் aura spread ஆகி கொண்டே செல்லும். புத்தர் இருக்கும் இடத்தில் 30km அளவிற்கு அந்த aura பரவிடும். aura பரவிவிட்டால் அங்கு இருக்கும் விலங்குகள் கூட சண்டை போடாது. பாம்பும் கீரியும் சண்டை போடாது. புலி அந்த இடத்தில் மானை விரட்டாது. எல்லாம் ஒற்றுமையின் இருக்கும். ★சூரியன் தேவையில்லை எந்த இடத்திலும் ஒலியை உருவாக்க முடியும். சுய பிரகாசம் உடையவர்கள் ரிஷிகள். வானத்தில் 27 நட்சத்திரம் எல்லாம் ரிஷிகள் தான். ரிஷி நிலையை அடையும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரமாக மாறிடுவார்கள். ★அதுவே அந்த வித்து சக்தி atomic energy வரைக்கும் சென்றுவிட்டால் எந்த இடத்திலும் தோன்றலாம் எந்த இடத்திலும் மறையலாம். கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற சித்துக்கள் செய்ய முடியும். அந்த நிலையை அடைவார்கள். ★அதே போல இங்கு இருக்கும் அணுக்களை பிரித்து எங்கும் வேண்டுமானாலும் கொண்டுசென்று சேர்ப்பது. இது atomic energy ஆக வித்து மாறும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த சக்தி வருகிறது. ★ஆன்மிகத்தில் எல்லா கீழ்நிலை சக்தியையும் மேல்நிலை சக்தியாக மாற்ற வேண்டும். தேகத்தை தங்கமாக மாற்ற வேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறுவார். ★ஆசன பயிற்சி செய்பவர்கள் சிரசாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம் செய்யும் போது மூலபந்தம் செய்து செய்து வித்து சக்தியை தலை உச்சியை நோக்கி இழுக்கலாம். இது ஒரு வகை. ★சித்தாசனத்தில் உட்கார்ந்து குதிங்காலை மூலபந்தத்தில் அழுத்தி கொண்டு இழுப்பதன் மூலமாகவும் வித்து சக்தியை உச்சிக்கு கொண்டுவரலாம். அதை தியானமாக காலையில் 4;30 மகான்கள், சித்தர்கள் பெயரை சொல்லிக்கொண்டு குண்டலினியை மேலே எழுப்பலாம். ★ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி ★ஓம் அகப்பை சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் அசுவினித் தேவர் திருவடிகள் போற்றி ★ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள் போற்றி ★ஒம் அனுமான் திருவடிகள் போற்றி ★ஓம் அம்பிகனந்தர் திருவடிகள் போற்றி ★ஓம் அருணகிரி நாதர் திருவடிகள் போற்றி ★ஓம் அருள் நந்தி சிவச்சாரியார் திருவடிகள் போற்றி ★ஓம் அல்லமா பிரபு திருவடிகள் போற்றி ★ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி ★ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி ★ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி ★ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி ★ஓம் உமாபதியார் சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி ★ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி ★ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கடைபிள்ளைச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கன்னானந்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கண்ணிசித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி ★ஓம் கணபதி தாசர் திருவடிகள் போற்றி ★ஓம் கதம்ப மகரிஷி திருவடிகள் போற்றி ★ஓம் கபிலர் திருவடிகள் போற்றி ★ஓம் கமல முனிவர் திருவடிகள் போற்றி ★ஓம் கருவர்தேவர் திருவடிகள் போற்றி ★ஓம் கல்லுளிச் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கலைகோட்டு முனிவர் திருவடிகள் போற்றி ★ஓம் கவுபல சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கணராமர் திருவடிகள் போற்றி ★ஓம் ககபுஜண்டர் திருவடிகள் போற்றி ★ஓம் காசிபர் திருவடிகள் போற்றி ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி ★ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி ★ஓம் குதம்பை சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி ★ஓம் குரு தக்ஷினா மூ ர்த்தி திருவடிகள் போற்றி ★ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி ★ஓம் குறும்பை சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கூர்மானந்தர் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கொங்கநேஸ்வரர் சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி ★ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி ★ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி ★ஓம் சங்கமுனி சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி ★ஓம் சங்கிலி சித்தர் திருவடிகள் போற்றி ★ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி. ★ உலகிலுள்ள கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி. ★இப்படி மகான்கள் பெயரை சொல்லும் போது மகான்கள் குண்டலினியை ஏற்ற உதவி செய்வார்கள். மகான்களை வசியம் செய்துவிடலாம். ★பாதரசத்தை சில மூலிகைகள் மூலம் பதப்படுத்தி மணியாக கட்டுவது ரசமணி . இதற்கு சில சக்திகள் உள்ளது. வெளியில் ரசமணி கட்டுவது ஒரு வகை. நமக்குள்ளே நமது வித்து சக்தியை ரசமணியாக கட்டுவது என்பது ஒரு வகை. ★இதுவே இருப்பதிலேயே உயர்ந்த நிலை. வெளியில் ஒரு கருவியின் வழியாக ஒரு செயலை செய்து பாதரசத்தை மணியாக கட்டுவது ரசமணி என்று பெயர் . நம் உடம்பிற்குள்ளேயே ரசமனியை உருவாக்குவது என்பது ஒரு வகை. ★வள்ளல் பெருமான் தனக்குள்ளேயே மணியை உருவாக்கியவர். அண்ட சராசரத்தை அரை கன பொழுதில் பார்க்கும் ஆற்றலை பெற்றவர் வள்ளலார். ★அந்த வகையில் கீழ் நிலையில் இரு க்கும் வித்து சக்தியை நமது முயற்சி மூலமாக மேல்நிலைக்கு ஏற்றி நாதத்தை பரதாதமாகவும், வித்துவை பரவித்துவாக மாற்றிவிட்டால் அட்டமா சித்துக்கள் வாய்க்கும்.

புதன், 14 ஜனவரி, 2015

திருவண்ணாமலை அதிசயம்

திருவண்ணாமலை அதிசயம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! ! திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் ! அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம். ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு. மூன்று இளையனார்! இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது. காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான். ஒன்பது கோபுரங்கள்! கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்). சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம். உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்! திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. மலையளவு பயன்! நரசிம்மர் இரணிய வதம் செய்தபோது, அருகிலிருந்த சிறுபாலகனான பிரகலாதனை நரசிம்மரின் உக்கிரம் தாக்கவில்லை. காரணம் இரணியன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது நாரதர் யோசனைப்படி கிரிவலம் வந்தாள். அப்போது பெய்த அமுத மழைத் துளி மலைமீதுபட்டு அவள் வயிற்றில் பட்டது. அது குழந்தைக்கு தக்கபலம் கொடுத்ததால்தான் இரணியன் மகன் பிரகலாதனுக்கு சக்தி கிடைத்தது. கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடிக்கு ராஜசூய யாகம் செய்த பலனும், மூன்றாம் அடிக்கு அனைத்து யாகங்களையும் செய்த பலனும் கிட்டும். திருவண்ணாமலை என உச்சரித்தாலே ஐந்தெழுத்தை மூன்று கோடி முறை உச்சரித்த பலன் கிட்டும். மகாதீப தரிசனம் கண்டால், அவர்களின் 21 தலை முறையினருக்கும் புண்ணியம் கிட்டும். கிரிவலப் பாதையிலுள்ள இடுக்குப் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்று வாயில்கள்- நேர்க்கோட்டில் இருக்காது. இதன்வழியே படுத்துநெளிந்து, வளைந்துதான் வெளிவர வேண்டும். இதனால் குழந்தைப்பேறு கிட்டும்; கருப்பைக் கோளாறுகள் நீங்கும். மலையின் கிழக்கே இந்திரலிங்கம், தென் கிழக்கே அக்னிலிங்கம், தெற்கே எமலிங்கம், தென்மேற்கே நிருதிலிங்கம், மேற்கே வருணலிங்கம், வடமேற்கே வாயுலிங்கம், வடக்கே குபேரலிங்கம், வடகிழக்கே ஈசான்ய லிங்கம் அமைந்துள்ளன. இந்த எட்டு லிங்க தரிசனம் முடிக்கவும் கிரிவலமும் முடிந்துவிடும். பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்! கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள். கார்த்திகை ஜோதி மகத்துவம்! அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம். தீபத் திருவிழா! உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள். பரணி தீபம்! பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். மகாதீபம்! மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள். ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும். லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்! “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

செவ்வாய், 13 ஜனவரி, 2015

...http:// senthillakshmi.blogspot.in/ ..

...http:// senthillakshmi.blogspot.in/ ..

சித்தர் திருமூலர்

சித்தர் திருமூலர் கூடுவிட்டு கூடுபாய்ந்த சித்தர்களுள் மிகவும் பிரசித்த பெற்று கூடு மாறிய உடம்புடன் கொண்ட பெயரினைக் கொண்டவர் திருமூலர் என்ற சித்தர், மூலக்குருவாம் தட்சினாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்ற நந்திகள் நால்வருடன் சேர்த்து எண் சித்தர்களில் ஒருவர் சுந்தரர் என்ற ஞானசித்தர் திருமூலர், உடம்பை சுருக்கி சிறிய அணுவாக மாற்றும் அணிமா சக்தியை பெற்றவர் திருமூலர் என்ற சித்தர்,, பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர், கைலாயத்துக்கு சென்று சிவனை தரிசித்து பேற்றைப் பெற்றவர், சித்தர்களில் முதன்மையானவர், திருமூலர் மூவாயிரம் மந்திரங்களைச் செய்ததோடு முந்நூறு மந்திரம், முப்பது உபதேசம் என்னும் நூல்களை செய்தருளியுள்ளார், "மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் மூலன் உரைசெய்தமுந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது பதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றுமே, இந்நூல்களோடு இன்றி வைத்தியம் பற்றியும் இவரின் பாடல்களில் காணலாம், சிவத்தலங்களில் சிவபெருமானைப்பற்றி பாடி காலத்தை கழித்துக் கொண்டு மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது,ஒருமுறை திருவாடுதுறைக் கடக்கும் போது , சாத்தனூர் என்னும்ஊரைக் கடக்கும் போது மாடு மேய்த்துக் கொண்டு இருந்த மூலன் என்ற இடையன்இறந்து கிடப்பதையும், அதனைக் கண்ட பசுக்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டு இருப்பதைக் கண்டார், பசுக்களுக்கு மூலனிடம் ஏற்பட்டு இருந்த தாய்ப்பாசத்தினை சித்தர் கண்டு மனம் இளகினார, பசுக்களின் மேல் இரக்கம் கொண்டு மாடுமேய்த்த மூலன் என்ற மாடு மேய்ப்பவனின் உடலுக்கு உயிர்ப்பிக்க முடிவு செய்தார், தனியாக ஒரிடத்ததில் தன் உடம்பில் உள்ள உயிரை கூடுவிட்டு கூடுபாய்ந்து மூலனின் உடம்பில் சேர்ந்து மூலனாக மாறினார், சித்தர், அன்றிலிருந்து சுந்தரர் என்ற சித்தர் திருமூலர் சித்தரானார், இறந்து கிடந்த இடையன் மூலன் தூக்கித்தில் எழுவதுபோல் எழுந்தான், மூலன் எழுந்ததால் மாடுகளும் கன்றுகளும் உற்சாகம் அடைந்து தங்கள் கால்ளைத் தூக்கி அன்பை வெளிப்படுத்தின, மாடுகள் வழிகாட்டிக் கொண்டு செல்ல மூலன் வீட்டை அடைந்தான், கொட்டிலில் மாடுகளை அடைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த மூலனுக்கு அதிர்ச்சி காத்ததிருந்தது. மூலனின் மனைவி கணவன் வீடு திரும்பி விட்டதால் சந்தோசத்துடன் தொடுவதற்கு முற்பட்டாள், மூலனின் உடலில் இருப்பது சித்தர் அல்லவா? எனவே அவர் ஒரடி பின்நோக்கி நகர்ந்து என்னை த் தொடதே நான் உன் கணவன் அல்ல என்று தெரிவித்தார்,கணவன் அல்ல என்று கணவனே கூறியதைக் கேட்ட மூலனின் மனைவி ஊர் பெரியோர்களிடம் தன் நிலை பற்றி கூறினார் மன்றாடினாள், பின் ஊர் பெரியவர்களிடம் சித்தர் தான் ஒரு சித்தர் எனவும் மாடுமேய்க்கும் இடையனான மூலன் இறந்து கிடந்தததையும் அதற்கு ஆவினங்களுக்காக மனம் இறங்கி இவ்வாறு செய்தததையும் ஊர் பெரியவர்களிடம் விவரித்தார் சித்தர், இதனை அறிந்த ஊர் பெரியவர்கள் மூலன் வடிவில் இருப்பது சித்தர் தான் என்பதை இடையனின் மனைவிக்கு உணர்த்தினார் மூலனாக இருந்த சித்தர் திருமூலர் உண்மையான சித்தர் என்பதை அறிந்து ஊர் பெரியவர்கள் அவரை வணங்கினார்கள், பின் திருமூலர் தன் உடல் இருந்த இடத்திற்கு சென்றார், அங்கே தன் உடல் காணப்படாதது கண்டு அதிர்ச்சியுற்றார், மிருகங்கள் தன் உடலை இழுத்து சென்றுவிட்டதோ? இல்லை மூலனின் உடலில் இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் போலும் என்று நினைத்த திருமூலர் திருவாடுதறை கோவிலுக்கு மேற்கே இருந்த அரசமரத்தடியில் தியான நிலையில் அமர்ந்தார், அங்கே பலகாலம் இருந்து திருமந்திரத்தை இயற்றினார், திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாக இருந்தது, மூலனின் உடம்பில் புகுந்ததால் திருமூலர் சித்தர் என்று அழைக்கப்பட்டார், அவர் பெருமையை வெளிப்படுத்த திருவாடுதுறையில் அவருக்கு ஒரு கோவில் ஏற்படுத்தப்பட்டது. சித்தர்கள் சராசரி மனிதர்கள் அல்ல, தாங்கள் அறிந்த ஆத்ம தத்துவங்களை யோக சாதனைகளையும் உலகில் அனுபவங்களையும் பாடியிருக்கிறார்கள், அப்பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒன்றுமறிாத பித்தன் பாடடியிருப்பது போல் தோன்றினாலும் அதன் உள்ளே சென்று பொருளை அறியும்போது வியப்பு ஏற்படுகிறது.. ஒரு சித்தர் பாடிய பாடலை மேலோட்டமாக பார்த்தால் ஏதோ டப்பாங்குத்து பாடல் போல் தோன்றினாலும் அதன் உள்பொருள் நமக்கு மெய் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது, "நந்தவனத்தில் ஒர்ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டுவந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி." குயவனாக உருவகப்படுத்தப்படும் பிரம்மாவிடம் ஜீவன் என்னும் ஒரு ஆண்டி பத்து மாதமாக வேண்டி கருப்பையில் இருந்து , உடல் என்னும் தோண்டியைக் கொண்டு வந்து உலகத்தில் பலவாறாகவும் கூத்தாடிக் கடைசியில் அந்த உடலாகிய தோண்டிடைய போட்டு உடைக்கிறான் என்ற மாபெரும் தத்துவம் இந்த நான்கு வரிப்பாடல் வாய்லாக வெளிப்படுகிறது, இதனால் தானே இரண்டு வரிப்பாடல்களை இயற்றி திருவள்ளுவரும் சித்தராக வர்ணிக்கப்படுகிறார், சித்தர் திருமூலர் சிதம்பரம், திருவாடுதுறை ஆகிய தலங்களில் ஜீவசமாதியானதாக கூறப்படுகிறது, குருபகவானின் அருள் ஆதிக்கம் பெற்றவராக இருப்பதால் இவரை வியாழக்கிழமை தோறும் வழிபட்டால் குருபகவானின் அனுக்கிரகம் பெறமுடியும் குருவினால் ஏற்படும் தோசங்களிலிருந்து தப்பிக்க முடியும். திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய ஓம் மேலும்பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.