ஞாயிறு, 19 ஜூலை, 2015

திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள்


திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள் 1. பிறரைப்பற்றி புறங்கூறும் கொடுஞ் செயலை விட வேண்டும் "பேச்சொடு பேச்சு கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலேன் ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன் நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் தோன்றி னேனே. " - அப்பர் பிரான் திருமுறை 4 பதி.78 பேசும் பொழுதெல்லாம் பிறரைப் பற்றி அவதூறு பேசும் கொடுஞ் செயலை விடுமாறு அறியேன். நாவினால் இறைவருடைய பெருமைகளை பேசி நன்மைகள் அடைவதையும உணரவில்லை. இகழ்ச்சிக்கு இடமான இந்த உடம்பினுள் இருந்து கொண்டுள்ளேன். யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்? மாணவர்கள்பொருட்டு ஆசிரியர் விரல் விட்டு எண்ணுவது (கூட்டுவது) போல், நம் பொருட்டு நம்முடைய செயல்களைத் தம் செயல்களாகவே பாடியுள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள். ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைப் பற்றி புறங்கூறுவது மிகக் கொடிய பாவச் செயல் என்பதை நான்காவது தமிழ் திருமுறை கூறுகின்றது என்பதை உணர வேண்டும். பிறரைப பற்றி புறங்கூறுவதால், நம்முடைய புண்ணியங்கள் குறையும். யாரையும்புறங்கூறிப் பேசினோமோ அவர் செய்த பாவங்களில் ஒரு பகுதி நம்மை வந்து சேரும். இது ஒன்றே நம் வாழ்க்கையை அழிப்பதற்குப் போதும். அதனால் தான் இதனைக் " கொடுஞ்செயல்" என்கிறார் சுவாமிகள். இதற்கு மாறாக இறைவருடைய பெருமைகளை பேசினால் பல நன்மைகள் நம்மை வந்தடையும். என்பதை இப்பாடல் கூறியுள்ளதைக் கண்டு மகிழலாம். வேண்டியவர்களை பற்றி நல்லது மட்டுமே பேசுங்கள் வேண்டாதவர்களைப் பற்றி எதையுமே பேசக்கூடாது. " அவ்வியம் பேசி அறங்கெட நிலலன்மின்" தமிழ் வேதம் 10 திருமந்திரம் புறங்கூறி நம் பெற்ற புண்ணியத்தை இழக்காதீர் 2, நாம் வாழும் உலகிற்கு அன்றாடம் ஏதாவது கொடுக்க வேண்டும். நம்முடைய வாழ்வு என்பது இருவழிப்பாதை ஆகும். ஒரு வழி இல்லவே இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப பிறமனிதர்கட்கோ, பிராணிகளுக்கோ, கொடுத்தே ஆக வேண்டும். ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள புண்ணியங்களால் நாம் தற்போது சுகத்தை அனுபவித்து வருகின்றோம். அந்த புண்ணியங்கள் காலியாகிவிட்டால் நம்முடைய இன்பங்கள் தொலைந்து துன்பங்கள் சூழ்ந்துவிடும். இது எப்படி எனில் வங்கியில் நாம் சேர்த்து வைத்துள்ளவற்றை எடுத்து ச் செலவு செய்து வருகிறோம். சேமிப்பு காலியாகி விட்டால் துன்பம்தான். இதற்கு என்ன செய்கிறோம். அவ்வப்போது சேமிப்பில் பணம் போட்டு வருகிறோம். சேமிப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறறோம். இதைப்போலத்தான் புண்ணியமும்.ஏற்கனவே நாம் சேர்த்து வைத்துள்ள புண்ணியங்கள் குறையாம் அன்றாடம் புண்ணியங்களைச் செய்து கொண்டே வர வேண்டும். அன்றாடம் உலகத்திலிருந்து காற்றை, சூரியஒளி, தண்ணீர் ஆகியவற்றை பெறுகிறோம். இதன் பொருட்டு உலகிற்கு அன்றாடம் ஏதாவது நாம் கொடுத்தே ஆக வேண்டும். வாங்கினால் கொடுக்கத்தானே வேண்டும். பிறந்தால் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி அல்லது கடவுளின் கட்டளை. இதை மீறக்கூடாது. அப்படி இயற்கைக்கு மாறாக பெற்றுக் கொண்டே இருந்து, கொடுக்காமல் வாழ்ந்தால் துன்பமே சூழும். இதனை திருநாவுக்கரசர் நான்காவது தமிழ் திருமுறையில் கூறியதைக் காண்போம். " படைகள்போல் வினைகள் வந்து பற்றியென்பக்கல் நின்றும் விடகிலா ஆதலாலே விகர்தனை விரும்பி ஏத்தும் இடையிலேன் என்செயகேன் நான் இரப்பர் தங்கட்கு என்றும் கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே." தி, மு. 4. பதி 69 3, மன இறுக்கம் (டென்சன்) இல்லாமல் வாழும்வழி மனஇறுக்கம் பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது என்று தற்கால அறிவியலார் கூறுகின்றனர். மன இறுக்கம் இல்லாது போனால் நோய்கள் வரா. இதற்கு வழியை திருஞானசம்பந்தர் கூறுவது, " உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே" மன இறுக்கம் நோயைத்தரும். மன உருக்கம் நோய் வாராமல் தடுக்கும். "உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே" சம்பந்தர். திருவலஞ்சுழி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளல் சிவபெருமானாரை உடலால் வணங்கியும், உள்ளத்தால் நினைத்தும், உள்ளம் உருக வேண்டும். அத்தகைய உருகும் உள்ளம் உடையவருக்கு நோய்கள் வாரா. இறைவழிபாட்டில் நம்முடைய உள்ளம் உருகுவதில்லை. காரணம் பொருள் வேண்டி, இம்மை போகம் வேண்டி, வழிபாடு செய்கிறோம். மனத்தில் பேராசை நிறைந்துள்ளதால் உள்ளம் உருகுவதில்லை. " ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் " திருமுறை 10 4, சிவாய வழிபாடு அவசியம் தேவை "பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்கத்திற் பொலிய வேந்திக் கூந்தற் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே." சம்பந்தர் தி,மு 2 பதி 71 குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குறும்பலா ஈசரை வணங்கும் குறிக்கோளுடன் ஆண்யானையும்பெணயானையும் வருகின்றன. இறைவருக்கு சாத்துவதற்கு என்று வருகின்ற வழியில் உள்ள வேங்கை மரத்துப் பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தில் வைத்துக் கொண்டு வருகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து களிறும் பிடியும் குறும்பலா ஈசரை வணங்குகின்றன. இதில் நாம் உணறும்கருத்து. 1,சிவ வழிபாடு தேவை. விலங்குகளே சிவவழிபாடு செய்கின்றன.மனிதர்களாக பிறந்த நாம் இவ்வழிபாட்டை வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். 2, குடும்பமே சிவ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதை இப்பாடலில கணலாம். அப்போதுதான் குடும்ப நலமாகவும் வளமாகவும் திகழும், சந்ததிகளும் செம்மையாக திகழ்வார்கள். 3. சிவாலயம் செல்லும் பொழுது இறைவழிபாட்டிற்குரிய பொருட்கள்மலர் நல்லெண்ணெய் , நெய், பால், இளநீர், இப்படி இறைவருக்கு வேண்டிய பொருட்களை கொண்டு செல்லவேண்டும். இதனால்தான் அன்றே நமது பெரியோர்கள் இறைவர், பெரியோர் நோய் வாய்ப்பட்டவர், கருவுற்றதாய், வயது முதிர்ந்தோர், குரு முதலியவர்களிடம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். திருஞான சம்பந்த சுவாமிகள் திருவலஞ்சுழி பதியத்தின் முதல் பாடலில் " வண்டெலாம் நசையால் இசைபாடும் வலஞ்சுழி" என்கிறார் , வண்டுகளே பாடும்போது நாமும் பாடி வணங்க வேண்டாமா? திருமுறைகள் மனித குலத்திற்கு தேவையான வாழ்வியல் கருத்துக்கள் அரிய வரலாறுகள், அறிவியல் உண்மைகள் இயற்கை எழில் நலம், முத்தி பேற்றுக்குரிய எளிய வழிகள் ஆகியவற்றைக் கூறுவனவாகும். திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத்தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 18 ஜூலை, 2015

ஆக்கையால் பயன்


திருமுறைகள் கூறும் வினை நீக்கம்.

நம்முடைய திருமுறைகளில் பெரும்பாலனவை வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டுள்ளன. வினை கழிய என்ன செய்வது என்று நமது அருளாளர்களே குறிப்பிட்டுள்ளார்கள். அது கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுவதே ஆகும். கைவினை ெசய்தல் என்றால், திருக்கோவில்களில் அலகிடுதல், ெமழுகுதல், பூப்பறித்து பூமாலை சாற்றுதல், பாமாலை பாடுதல், தலையார கும்பிடுதல், கூத்தாடுதல், போன்ற தொண்டுகளை செய்து இறைவன் திருவடியை போற்றி பரவுதன் மூலம் வினைப்பயின்று நாம் நீக்கம் பெறலாம், எ்னபது தெளிவு், நாம் இந்த மானிடப்பிறப்பு பிறந்ததன் பயன் பெற உடலுறுப்புக்ள நலமடையவும், நம் உடல் உறுப்புக்ளால் வழிபாட்டிற்கு எவ்வாறு பயன்பட ெசய்ய வேண்டும் என்று திருமுறைகள் கூறுவதைப்பார்ப்போம். தலை; தலையை தாழ்த்தி வணங்க வேண்டும் " தலையே நீ வணங்காய் .............. தலைவனை " ,,,,, அப்பர் " சிரங்குவிவார் ஓங்குவிக்கும் ......... சிவபுராணம் கண்கள் ; கண்காள் காண்மின்களோ .... கடல் நஞ்சுண்ட கண்டனை தன்னை ................ அப்பர் அடிகள் செவி ; செவிகாள் கேண்மின்களோ ..... எரிபோல் மேனிபிரானை வாய் ; வாயே வாழ்த்து கண்டாய் ..... மதயானை உரிபோர்த்தானை மூக்கு ; மூக்ேக நீ முரலாய் ..... முது காடுறை முக்கண்ணனை நெஞ்சு ; நெஞ்சே நீ நினையாய் ....... நிமிர் புன்சடை நின்மலனை கைகள் ; கைகாள் கூப்பி தொழீர் ....... பாம்பணிந்த பரமனை ஆக்கை (உடல்) ; ஆக்கையால் பயன் என் ..... அரன் கோவில் வலம் வருதல் கால்கள் ; கால்களால் பயன் ... கோவில்கோபுரங்களை வலம் வரல் அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தக்கால் கூன், செவிடு, முடம் அற்று பிறத்தல் அரிது. இவ்வாறு ஒச்சமின்றி பிறந்த நம் உடல் ெகாண்டு ஈசனை வணங்க பயன்படுத்தாத இந்த ஆக்கையினால் பயன் என்ன? " உற்றார் ஆர் உளரோ ... உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ " அப்பர் ெபருமான் திருமுறை பாடல் 4 இதனையே பட்டினத்து அடிகளும் "ஊரும் சதமல்ல , உற்றார் சதமல்ல, ............................... கச்சியப்பா நீ யே சதம் " என்கிறார், எனவே இப்பிறப்பின் பிறவி பயனை அடையவும், இன்னும் பிறவா நிலை பெறவும் நம் ெபற்ற ஆக்கையால் ஆலவாய் சுந்தரனை வணங்கி பாடி பிறவி பயன் பெறுவோம். திருச்சிற்றம்பலம் வை.பூமாலை http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

திங்கள், 13 ஜூலை, 2015

என்.கணேசன்: இருந்தும் இல்லாமலும் இறைவன்!

என்.கணேசன்: இருந்தும் இல்லாமலும் இறைவன்!: கீதை காட்டும் பாதை 36 "பொ றாமை இல்லாதவனான உனக்கு இந்த இரகசிய வித்யையை உபதேசிக்கிறேன், இதை அறிந்து இந்த அசுபமான சம்சாரத்திலிரு...

வியாழன், 9 ஜூலை, 2015


தண்டியடிகள் நாயன்மார் வரலாறு சோழநாட்டில் தலைசிறந்த நகரம் திருவாரூர், ஆரூரில் பிறந்தவர்கள் யாவருமு சிவகணங்களாகவர். திருவாரூரில் பிறந்தால் முத்தி காசியில் இறந்தால் முத்தி என்பவர். திருவிடங்கத் தலங்கள் ஏழினுள் முதன்மையாக தலம், திருமகள் பூசித்து பேறு பெற்றதலம் திருவாரூர். பல்பிறவிப் புண்ணியத்தால் தண்டியடிகள் நாயனார் திருவாரூரில் அவதரித்தார். இவர் பிறவியிலேயே கண் இழந்தவர். ஆரூர் இறவைரை அக் கண்ணால் வழிபடும் அன்புடையவர் இவர். திருவாரூரில் எழுந்தருளியுள்ள புற்றிடங்கொண்ட புண்ணயரைப் பலகாலும் வலம் வருவார். திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருப்பணிகள் பல செய்யவார். திருக்கோயிலின் மேற்புறத்தில் உள்ள திருக்குளத்தை சுற்றிச் சமணர்களுடைய ஆதிக்கம் நிறைந்திருந்தன. இதனால் திருக்குளம் பழுதுபட்டது. கண்ணில்லாத தண்டிணடிகள் குளத்தினை தூர்வாரி சுத்தம்செய்ய முயன்றார், ஆனால் அவரோ கண் பார்வையற்ற நிலையில் குளத்தை எவ்வாறு சுத்தம் செய்வது என்ற எண்ணத்தில தன் உத்தியை கையாண்டு குளத்தின் நடுவே தறியை ( கொம்பினையும் ) நட்டார். குளக்கரையில் மேட்டுப்பகுதியில் ஒரு தறியையும் நட்டார். இரு கொம்புகளக்கும் இடையே கயிறு கட்டினார். அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டே குளத்தில் உள்ள மண்ணைக் கூடையில் சுமந்து கரைமேல் கொட்டினார். இதனைக் கண்ட சமணர்கள் " மண்ணை வெட்டும்பொழுது சிற்றுயிர்கள் மாண்டுவிடும் ஆதலால் குளத்தில மண் வெட்ட வேண்டாம் " என்று தடுத்தனர், தண்டியடிகள் இதனைப் பொருட்படுத்தாமல் திருப்பணியை செய்தார்." கண்ணில்லா உமக்கு காதும் இல்லையா? " என்று எல்லி நகையாடினர் சமணர்கள், " சிவபெருமானது திருவருளால் உலகமெல்லாம் அறியும் படி நான் கண் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள்? " என்று தண்டியடிகள் கேட்டார். சமணர்கள் " நாங்கள் யாவரும் இந்த ஊரை விட்டே ஓடி விடுகிறோம்," என்றனர். அத்துடன் நில்லாது, தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டி, கூடை ஆகியவற்றை பிடுங்கி எறிந்தார்கள் நாயனார் மனம் வெதும்பினார். ஆரூர் பெருமானின் முன்னின்று, " அடியேனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும்." என்று கண்ணீர் சொரிந்து தொழுதார். ஆழமான வழிபாடு ஆண்டவரை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. கண்ணுதற் கடவுள் அன்றிரவு தண்டியடிகள் கனவிலே தோன்றி, " அன்பனே கவலை விடுக ! நாளை உமது கண்கள் ஒளிபெறும் உமது திருப்பணியைத் தடுத்தவர்கள் கண்களை இழப்பர்," என்றுஅருளிச் செய்தார். அன்றிரவே சோழ மன்னன் கனவிலும் தோன்றி " தண்டியடிகள் நானாரின் குறையை தீர்ப்பாயக " என்று பணித்து மறைந்தருளினார். பொழுது விடிந்த உடன் அரசன் தண்டியடிகளிடம் வந்து தான் கண்ட கனவு நிலையைக் கூறி வணங்கினார், தண்டியடிகள் நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறினார், மறுநாள் தண்டியடிகளும் மன்னனும் குளக்கைரையை அடந்தார்கள், " சிவபெருமானே பரம்பொருள் அவரது அடிமையாக இருப்பது உண்மையானால் உலகர் முன் என் கண்கள் ஒளிபெறட்டும் " என்று கூறி திருஐந்தெழுத்தினை ஓதிக் கொண்டே திருக்குளத்தில மூழ்கினார் தண்டியடிகள். கண் பெற்று எழுந்தார், தேவர்கள் பூமழை பொழிந்தனர். சமணர்கள் கண்களை இழந்தனார். முன்பு ஒப்புக்கொண்டவாறு சமணர்கள் திருவாரூரை விட்டு நீங்கினார்கள். தண்டியடிகள் வழக்கம் போல முக்கட் பெருமானுக்குத் தொண்டுகள் செய்து சிவபதம் நண்ணினார். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

புதன், 8 ஜூலை, 2015

திங்கள், 6 ஜூலை, 2015

திருமுறைகள் வெளி வர வித்திட்டவர்கள்


சைவத்தின் ஆனிவேராகக் கருதப்படும் பன்னிரு திருமுறைகள் இன்று எல்லாராலும் பாடப்படும் தேவாரப் பதிகங்கள் இன்று நம்மால் ஓதி ஆராதிக்க வித்திட்டவர்கள் சங்க கால சோழ மன்னர்கள் வம்சாவழியினருக்கே சாரும்.தென் தமிழ்நாட்டில் சோழ சாம்ராஜ்யத்தில் செங்கோலாட்சி வந்த இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டியார் தான் முதன் முதலில் இந்த தேவாரப்பதிகங்கள் இருப்பதை கண்டறிந்து அதனை நமக்கெல்லாம் கிடைக்கச் செய்து, இறைவனின் திருவருளை பெற தேவாரப்பதிகங்கள் புத்துயிர் பெற செய்தவர்கள். இந்த குந்தவை பிராட்டியார் ஒருநாள் தன் நகரிலுள்ள சிவலாயத்தில் சிவதரிசனம்செய்ய சென்றபோது, கோவிலில் பூ தொடுக்கும் ஒரு சிறுவன் பூவை தொடுத்தவாறு அப்பரின் தேவாரப்பாடலான " குனிந்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குவின் சிறிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்மாநிலத்தே " என்ற பதியத்தை இராகத்தோடு பாடுவதை கேட்ட இளவரசி, அவனை அருகில் அழைத்து இந்த பாடல்கள் எங்கு கற்றாய் இது யாருடைய பாடல்கள் என வினவினார், அதற்கு அச்சிறுவன் இது திருநாவுக்கரசர் பெருமான் பாடிய தேவாரப்பதிகப் பாடல் இதனை எனது தந்தையார் எனக்கு பயின்று கொடுத்ததை சிவனார் சந்நதியில் அனுதினமும் பாடி மகிழ்வேன் என்றான். இந்த பாடல்கள் மட்டும்தான் தெரியுமா ? இன்னும் பாடல்கள் உள்ளனவா என்றதற்கு சிறுவன் எனது தந்தையாரிடம் வினவினீர்களானால் தங்களுக்கு வேண்டிய விபரங்கள் தெரியும் என்றான். உடனே அவனின் தந்தையை அனுகி இதன் விபரங்களை சேகரித்தார். இது சைவ சமய சிவனடியார்களால் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு இது தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. அதன் பதிகப்பாடல்கள் ஒன்றிரண்டுதான் எனக்கு தெரியும் மீதமுள்ள பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்னும் சிவனடியார் ஒருவர் உள்ளார் அவரிடம் கண்டு தெளிவு பெறலாம் என்று விபரங்கள் கூறியனுப்பினார் குந்தவை பிராட்டியாரை. உடனே குந்தவை பிராட்டியார் தன் சகோதரன் இராஜராஜசோழனிடம் இது பற்றி கூறி தேவாரப்பதிகங்கள் எங்கிருந்தாலும் அதன் பிரதிகளை கண்டுபிடித்தருளிட உத்தரவு இட்டார், மன்னரின் சேனைகளும் இதனை தேடும் பணியில் ஈடுபட்டதுடன் நம்பியாண்டார் நம்பிகளையும் காண மன்னனே நேரில் சென்றார், மேலும் இந்த தேவாரப்பதிகப்பாடல்கள் கொண்ட ஏடுகள் எங்கும் கிடைக்கிறதா என்பதையும் அறிய பல திக்குகளுக்கு தன் பணியாளர்களை நியமித்தான். மன்னன் தேடிச்செல்லும் நம்பியடிகள் ஒருநாள் தான் முறையாக வழிபடும் பொல்லாப் பிள்ளையார் என்ற திருக்கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலையில் நம்பியடிகளின் பாலகன் நம்பி என்ற பள்ளி செல்லும் சிறுவனை தன் பொருட்டு பொல்லாப் பிள்ளையாருக்கு அபிசேக ஆராதனை செய்யும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் அவனுடைய தாயார். அவனும் பிள்ளையாருக்கு அபிசேகம்செய்ய வேண்டிய பொருட்களையும், அவருக்கு படையல் பொருளான கொழுக்கட்டையையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சிறுவன் நம்பி பொல்லா பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயக பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்து, நீரால் அபிசேகம் செய்து தான் கொண்டு வந்த வஸ்திரங்களால் அலங்காரம் செய்து தான் கொண்டுவந்த படையல் நெய்வேத்திய பொருட்களான கொழுக்கட்டையை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். பிள்ளையார் உண்ண மாட்டார் என்பது அவனுக்கு தெரியத தால் அவன் மேலும் மேலும் அரைகூவி பிள்ளையாரை சாப்பிட வேண்டினான். பாலகன் பலமுறை கெஞ்சியும் தரிசனம் அளிக்காத பிள்ளையாரை தான் படைத்த கொழுக்கட்டையை உண்ணா விடில் தான் இங்கே மாண்டு விடுவதாகவும் பிள்ளையாரின் காலில் முட்டி மோதினான், உடனே பிள்ளையார் அவனுக்கு தரிசனம் கொடுத்து படைத்த கொழுக்கட்டை வேத்தியங்களை உண்டு மகிழ்ந்தார். பிள்ளையார் தான் படைத்த கொழுக்கட்டைகளை உண்ட சந்தோசத்தில் தான் கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அவனுடைய தாயார் விநாயகருக்கு படைத்த கொழுக்கட்டைகளை எங்கே என்று அன்னை கேட்க அவனே விநாயகர் உண்ட செய்தியை கூறினான் ஆனால் அன்னை அதனை நம்ப வில்லை. பாலகன் பொய் சொல்கிறான் என்றே நம்பினார்கள். இது பற்றி ஆராவாரம் ஏற்பட்டது. உடனே எல்லோரும் பிள்ளையார் உண்டதை உன்னால் நிரூபிக்க முடியுமா? என்று வினவ , அவனே தான் இன்னும் ஒரு முறை பிள்ளையாருக்கு படைத்து அவர்தான் உண்டார் என்பதை நிருக்கிறேன் என்று கூறி மறுபடியும் பொல்லா பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். இதன்படி பலமுறை வேண்டி பிள்ளையார் வராத நிலையில் மறுபடியும் சிறுவன் பிள்ளையாரை உருக்கத்துடன் வேண்டி தான் வரவில்லை எனில் தான் இங்கே இறந்து விடுவேன் என்று வேண்ட உடனே பிள்ளையார் தரிசனம்எல்லாருக்கு கிடைத்து கொழுக்கட்டையையும் உண்டு சென்றார், இச்செய்தி சோழ மன்னன் வரை பரவியது , எனவே மன்னனும் நம்பியாண்டரின் பாலகனை சந்தித்து தேவாரப்பதிகங்கள் எங்கு உள்ளன. என்று விநாயகரிடமே கேட்டு சொல்ல கூறினார், அதன்படி பிள்ளையார் தரிசனம் கொடுத்து தேவாரப்பதிகங்கள் யாவும் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் ஓதுவாரகளின் பொறுப்பில் உள்ளது. என செய்தி கிடைத்தவுடன் மன்னன் அங்கு சென்று, சிதம்பரம் ஓதுவார்களிடம் வினவினார், அவர்கள் மூவரின் தேவாரப்பதிகங்கள் நடராஜபெருமானின் சன்னதியில் உள்ள அறையில் உள்ளது, என்றும், அது அந்த மூவர்கள் வந்தால்தான் தங்களால் எடுத்துக் கொடுக்க முடியுமென கூறினார்கள். மன்னன் யோசனை செய்தான் சித்தி முத்தியடைந்த மூவரை எப்படி அழைத்து வருவது எப்படி தேவாரப்பதியங்களை பெறுவது என்று மனம்வருந்திக் கொண்டிருக்கும் போது ஒரு சித்தர், மறைந்த மூவரின் விக்ரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வாருங்கள் உங்களுக்கு தேவாரப்பதியங்கள் கிடைக்கும் என அருள் வாக்கு கிடைத்தது. மன்னரும் அதன்படி மூவரின் விக்கரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார், ஓதுவார்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை, ஏனனெனில் இது வெறும் விக்கிரங்கள் என்றால் கோவிலில் குடிகொண்டிருக்கும் நடராஜபெருமானும் விக்கிரமாகத்தானே தெரியும், உடனே மூவர் பெருமக்களும் நடராஜர் சன்னதி வந்தவுடன், அறையில் தேவாரப்பதியங்கள் கொண்ட நூல் ஆடைகளால் மூடப்பட்டிருந்த மூட்டையை எடுத்து கொடுத்தனர் , அதில் சுமார் 10 ஆயிரம் கொண்ட ஏடுகள் காரையானால் அரிக்கப்பட்டு மீதம் இருந்த சுமார் 6000 ஒலைச்சுவடுகள் தான் எஞ்சியிருந்தன, அதனை கொண்டு வந்து அதற்கு பூஜைகள் செய்து தேவாரப்பதிகங்களை முறைப்படுத்தி உலகிற்கு வெளியிட்ட பெருமை சோழ மன்னர்களுக்கே சார்ந்தது. திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் ஓம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

சனி, 4 ஜூலை, 2015

பிரம்ம ஞானம் பெறுதல்


பிரம்ம ஞானம் பெறுதல் பிரம்ம ஞானம் பெற ஒருவர் ஐந்து பொருள்களை சரண் செய்தல் வேண்டும்.அவையாவன: 1. ஐந்து பிராணன்கள் ( ஐம்புலன்களின் சக்திகள்) 2. ஐந்து புலன் அறிவு 3. மனம் 4.அறிவு 5. தான் என்ற அகந்தை பிரம்ம ஞானம்பெறுவது என்பது தன்னைத்தான் அறிதல் என்ற அடிப்படை தத்துவம் கொண்டதாகும். இது ஒரு கத்தி முனையில நடப்பது போன்றது. எல்லோராலும் அவரவர் வாழ்நாளில் பிரம்ம ஞானத்தை பெறுதல் என்பது அரிது. அதற்காக சில முக்கிய குணநலன்களை பெற்றிருக்க வேண்டும் மிகமிக அவசியம் பிரம்ம ஞானம் பெறும் முறை: 1.விடுதலை பெற மனமார்த்த ஆவல் : " தான் விடுதலை கட்டாயம் அடைந்தே தீருவேன் " என்ற உறுதியுடன் வேறொன்றும் வேண்டாதவரே ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதி உடையவர் ஆவர் 2.இகபரப் பொருள்கள் மீது விரக்தி : பொருள்கள் மீது விரக்தி பற்றற்ற நிலை பெற முடியாதவர்களுக்கு ஆன்மீக உலகில் நுழைய உரிமை கிடையாது 3, உள்நோக்கு சிந்தனை : ஐம்புலன்களைக் கொண்டு நாம் வெளிப்புறத்தை அறிகிறோம், புறப்பொருள்களை நோக்கிறோம். தன்னைத்தான் உணர விரும்புகிறவன் முதலில் "தன்னை தானறிய " முற்பட வேண்டும். 4, பாவங்களிலிருந்து வெளிப்படல்: ஒருவன் தீயச் செயல்களை ஒழித்து மன அமைதி பெற்றாலொழிய அறிவளவில் கூட தன்னை தான் உணர்தல் என்பது இயலாத காரியம் 5. நற்குண நற்செயல்கள்: உள்நோக்கு, தவம், உண்மையுடன் கூடிய வாழ்வு பெற்றிருந்தாலொழிய கடவுளை அறிய முடியாது 6, நல்லவை, இனியவை: நல்லவை, எனபன ஆன்ம விவகாரங்களுக்கு உரியவை. இனியவை யாவும் இவ்வுலகில் சுகபோக வாழ்வுக்கு தேவை. இரண்டும் மனிதனை அண்டி வருகின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் மனிதன் சிந்தித்து பெற வேண்டும். அறிவுடையவன் நல்லவற்றையே நாடிட அறிவுபெற முயலாதவன் தன் பேராசை, அதீத பற்று இவை காரணமாக இனியவற்றையே நாடுகிறான். 7. மனம் புலன் ஆகியவற்றை கட்டுப்படுத்துதல்: உடல் ஒரு தேர், அறிவு ஒரு தேரோட்டி தான் என்பது தேரினுள் அமர்ந்திருக்கும் எஜமான் மனம் என்பது கடிவாளம் ஆகும். புலன்கள் குதிரைகள், புலன்றி பொருள்கள் என்பவை தேரோடும் பாதை, மனிதன் தன்னைத்தான் அறிந்து, அறிவு எனும் தேரோட்டியின் துணை கொண்டு மனமாகிய கடிவாளத்தை கட்டுப்படுத்தி புலன் அடக்கத்தோடு நல்வழியைப் பின்பற்றினால் அவனது பயணம் நன்கு முடிவ பெற்று, அவன் சேர வேண்டிய இடம் ( அதாவது எங்கும் நிறைந்த பரம்பொருளின் இருப்பிடமாகிய கைலாசம் ) அடைய முடியும். 8, அகத்தூய்மை,: உள்ளத்தூய்மை பெற்றவரே விவேகமும், வைராக்கியமும் பெற்று தன்னைத் தான் உணர முடியும். தான் என்பது போய் ஆசை அறவே நீங்கி, உள்ளத் தூய்மை ஏற்பட்டால் அன்றி தன்னைத்தானறிதல் என்பது இயலாத ஒன்று. 9. குருவின் முக்கியத்துவம்: தன்னைத் தானுணர்ந்த ஒரு சற்குருவால் மட்டுமே உதாரண புருசனாக விளங்கித் தன் சீடனையும் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் 10. இறையருள் : யாரொருவனை இறைவன் தன் பக்தனாக , அடியாராக ஏற்றுக் கொள்கிறாரோ அந்த அதிர்ஸ்டசாலி மட்டும்தான் விவேகமும், வைராக்கியமும் பெற்று சம்சார சாகரத்தை பாதுகாப்பாக கடந்து இறைவனின் திருவடிகளை அடைய முடியும். எனவே இறைவனருள் பெறுவது எல்லவற்றைக் காட்டிலும் முக்கியம். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com