சைவத்தின் ஆனிவேராகக் கருதப்படும் பன்னிரு திருமுறைகள் இன்று எல்லாராலும் பாடப்படும் தேவாரப் பதிகங்கள் இன்று நம்மால் ஓதி ஆராதிக்க வித்திட்டவர்கள் சங்க கால சோழ மன்னர்கள் வம்சாவழியினருக்கே சாரும்.தென் தமிழ்நாட்டில் சோழ சாம்ராஜ்யத்தில் செங்கோலாட்சி வந்த இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை பிராட்டியார் தான் முதன் முதலில் இந்த தேவாரப்பதிகங்கள் இருப்பதை கண்டறிந்து அதனை நமக்கெல்லாம் கிடைக்கச் செய்து, இறைவனின் திருவருளை பெற தேவாரப்பதிகங்கள் புத்துயிர் பெற செய்தவர்கள். இந்த குந்தவை பிராட்டியார் ஒருநாள் தன் நகரிலுள்ள சிவலாயத்தில் சிவதரிசனம்செய்ய சென்றபோது, கோவிலில் பூ தொடுக்கும் ஒரு சிறுவன் பூவை தொடுத்தவாறு அப்பரின் தேவாரப்பாடலான " குனிந்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குவின் சிறிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீரும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்மாநிலத்தே " என்ற பதியத்தை இராகத்தோடு பாடுவதை கேட்ட இளவரசி, அவனை அருகில் அழைத்து இந்த பாடல்கள் எங்கு கற்றாய் இது யாருடைய பாடல்கள் என வினவினார், அதற்கு அச்சிறுவன் இது திருநாவுக்கரசர் பெருமான் பாடிய தேவாரப்பதிகப் பாடல் இதனை எனது தந்தையார் எனக்கு பயின்று கொடுத்ததை சிவனார் சந்நதியில் அனுதினமும் பாடி மகிழ்வேன் என்றான். இந்த பாடல்கள் மட்டும்தான் தெரியுமா ? இன்னும் பாடல்கள் உள்ளனவா என்றதற்கு சிறுவன் எனது தந்தையாரிடம் வினவினீர்களானால் தங்களுக்கு வேண்டிய விபரங்கள் தெரியும் என்றான். உடனே அவனின் தந்தையை அனுகி இதன் விபரங்களை சேகரித்தார். இது சைவ சமய சிவனடியார்களால் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு இது தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து வைக்கப் பட்டுள்ளது. அதன் பதிகப்பாடல்கள் ஒன்றிரண்டுதான் எனக்கு தெரியும் மீதமுள்ள பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்னும் சிவனடியார் ஒருவர் உள்ளார் அவரிடம் கண்டு தெளிவு பெறலாம் என்று விபரங்கள் கூறியனுப்பினார் குந்தவை பிராட்டியாரை. உடனே குந்தவை பிராட்டியார் தன் சகோதரன் இராஜராஜசோழனிடம் இது பற்றி கூறி தேவாரப்பதிகங்கள் எங்கிருந்தாலும் அதன் பிரதிகளை கண்டுபிடித்தருளிட உத்தரவு இட்டார், மன்னரின் சேனைகளும் இதனை தேடும் பணியில் ஈடுபட்டதுடன் நம்பியாண்டார் நம்பிகளையும் காண மன்னனே நேரில் சென்றார், மேலும் இந்த தேவாரப்பதிகப்பாடல்கள் கொண்ட ஏடுகள் எங்கும் கிடைக்கிறதா என்பதையும் அறிய பல திக்குகளுக்கு தன் பணியாளர்களை நியமித்தான்.
மன்னன் தேடிச்செல்லும் நம்பியடிகள் ஒருநாள் தான் முறையாக வழிபடும் பொல்லாப் பிள்ளையார் என்ற திருக்கோவிலுக்கு செல்லமுடியாத சூழ்நிலையில் நம்பியடிகளின் பாலகன் நம்பி என்ற பள்ளி செல்லும் சிறுவனை தன் பொருட்டு பொல்லாப் பிள்ளையாருக்கு அபிசேக ஆராதனை செய்யும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் அவனுடைய தாயார். அவனும் பிள்ளையாருக்கு அபிசேகம்செய்ய வேண்டிய பொருட்களையும், அவருக்கு படையல் பொருளான கொழுக்கட்டையையும் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சிறுவன் நம்பி பொல்லா பிள்ளையார் கோவிலுக்கு சென்று விநாயக பெருமானுக்கு எண்ணெய் அபிசேகம் செய்து, நீரால் அபிசேகம் செய்து தான் கொண்டு வந்த வஸ்திரங்களால் அலங்காரம் செய்து தான் கொண்டுவந்த படையல் நெய்வேத்திய பொருட்களான கொழுக்கட்டையை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். பிள்ளையார் உண்ண மாட்டார் என்பது அவனுக்கு தெரியத தால் அவன் மேலும் மேலும் அரைகூவி பிள்ளையாரை சாப்பிட வேண்டினான். பாலகன் பலமுறை கெஞ்சியும் தரிசனம் அளிக்காத பிள்ளையாரை தான் படைத்த கொழுக்கட்டையை உண்ணா விடில் தான் இங்கே மாண்டு விடுவதாகவும் பிள்ளையாரின் காலில் முட்டி மோதினான், உடனே பிள்ளையார் அவனுக்கு தரிசனம் கொடுத்து படைத்த கொழுக்கட்டை வேத்தியங்களை உண்டு மகிழ்ந்தார். பிள்ளையார் தான் படைத்த கொழுக்கட்டைகளை உண்ட சந்தோசத்தில் தான் கொண்டு வந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான். அவனுடைய தாயார் விநாயகருக்கு படைத்த கொழுக்கட்டைகளை எங்கே என்று அன்னை கேட்க அவனே விநாயகர் உண்ட செய்தியை கூறினான் ஆனால் அன்னை அதனை நம்ப வில்லை. பாலகன் பொய் சொல்கிறான் என்றே நம்பினார்கள். இது பற்றி ஆராவாரம் ஏற்பட்டது. உடனே எல்லோரும் பிள்ளையார் உண்டதை உன்னால் நிரூபிக்க முடியுமா? என்று வினவ , அவனே தான் இன்னும் ஒரு முறை பிள்ளையாருக்கு படைத்து அவர்தான் உண்டார் என்பதை நிருக்கிறேன் என்று கூறி மறுபடியும் பொல்லா பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்து பிள்ளையாரை உண்ண வேண்டினான். இதன்படி பலமுறை வேண்டி பிள்ளையார் வராத நிலையில் மறுபடியும் சிறுவன் பிள்ளையாரை உருக்கத்துடன் வேண்டி தான் வரவில்லை எனில் தான் இங்கே இறந்து விடுவேன் என்று வேண்ட உடனே பிள்ளையார் தரிசனம்எல்லாருக்கு கிடைத்து கொழுக்கட்டையையும் உண்டு சென்றார், இச்செய்தி சோழ மன்னன் வரை பரவியது , எனவே மன்னனும் நம்பியாண்டரின் பாலகனை சந்தித்து தேவாரப்பதிகங்கள் எங்கு உள்ளன. என்று விநாயகரிடமே கேட்டு சொல்ல கூறினார், அதன்படி பிள்ளையார் தரிசனம் கொடுத்து தேவாரப்பதிகங்கள் யாவும் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் ஓதுவாரகளின் பொறுப்பில் உள்ளது. என செய்தி கிடைத்தவுடன் மன்னன் அங்கு சென்று, சிதம்பரம் ஓதுவார்களிடம் வினவினார், அவர்கள் மூவரின் தேவாரப்பதிகங்கள் நடராஜபெருமானின் சன்னதியில் உள்ள அறையில் உள்ளது, என்றும், அது அந்த மூவர்கள் வந்தால்தான் தங்களால் எடுத்துக் கொடுக்க முடியுமென கூறினார்கள். மன்னன் யோசனை செய்தான் சித்தி முத்தியடைந்த மூவரை எப்படி அழைத்து வருவது எப்படி தேவாரப்பதியங்களை பெறுவது என்று மனம்வருந்திக் கொண்டிருக்கும் போது ஒரு சித்தர், மறைந்த மூவரின் விக்ரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வாருங்கள் உங்களுக்கு தேவாரப்பதியங்கள் கிடைக்கும் என அருள் வாக்கு கிடைத்தது. மன்னரும் அதன்படி மூவரின் விக்கரங்களை உருவாக்கி அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்றார், ஓதுவார்களால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை, ஏனனெனில் இது வெறும் விக்கிரங்கள் என்றால் கோவிலில் குடிகொண்டிருக்கும் நடராஜபெருமானும் விக்கிரமாகத்தானே தெரியும், உடனே மூவர் பெருமக்களும் நடராஜர் சன்னதி வந்தவுடன், அறையில் தேவாரப்பதியங்கள் கொண்ட நூல் ஆடைகளால் மூடப்பட்டிருந்த மூட்டையை எடுத்து கொடுத்தனர் , அதில் சுமார் 10 ஆயிரம் கொண்ட ஏடுகள் காரையானால் அரிக்கப்பட்டு மீதம் இருந்த சுமார் 6000 ஒலைச்சுவடுகள் தான் எஞ்சியிருந்தன, அதனை கொண்டு வந்து அதற்கு பூஜைகள் செய்து தேவாரப்பதிகங்களை முறைப்படுத்தி உலகிற்கு வெளியிட்ட பெருமை சோழ மன்னர்களுக்கே சார்ந்தது.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் ஓம்
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக