ஞாயிறு, 19 ஜூலை, 2015

திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள்


திருமுறைகளில் காணும் வாழ்வியல் கருத்துக்கள் 1. பிறரைப்பற்றி புறங்கூறும் கொடுஞ் செயலை விட வேண்டும் "பேச்சொடு பேச்சு கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலேன் ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன் நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் தோன்றி னேனே. " - அப்பர் பிரான் திருமுறை 4 பதி.78 பேசும் பொழுதெல்லாம் பிறரைப் பற்றி அவதூறு பேசும் கொடுஞ் செயலை விடுமாறு அறியேன். நாவினால் இறைவருடைய பெருமைகளை பேசி நன்மைகள் அடைவதையும உணரவில்லை. இகழ்ச்சிக்கு இடமான இந்த உடம்பினுள் இருந்து கொண்டுள்ளேன். யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்? மாணவர்கள்பொருட்டு ஆசிரியர் விரல் விட்டு எண்ணுவது (கூட்டுவது) போல், நம் பொருட்டு நம்முடைய செயல்களைத் தம் செயல்களாகவே பாடியுள்ளார் திருநாவுக்கரசு சுவாமிகள். ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைப் பற்றி புறங்கூறுவது மிகக் கொடிய பாவச் செயல் என்பதை நான்காவது தமிழ் திருமுறை கூறுகின்றது என்பதை உணர வேண்டும். பிறரைப பற்றி புறங்கூறுவதால், நம்முடைய புண்ணியங்கள் குறையும். யாரையும்புறங்கூறிப் பேசினோமோ அவர் செய்த பாவங்களில் ஒரு பகுதி நம்மை வந்து சேரும். இது ஒன்றே நம் வாழ்க்கையை அழிப்பதற்குப் போதும். அதனால் தான் இதனைக் " கொடுஞ்செயல்" என்கிறார் சுவாமிகள். இதற்கு மாறாக இறைவருடைய பெருமைகளை பேசினால் பல நன்மைகள் நம்மை வந்தடையும். என்பதை இப்பாடல் கூறியுள்ளதைக் கண்டு மகிழலாம். வேண்டியவர்களை பற்றி நல்லது மட்டுமே பேசுங்கள் வேண்டாதவர்களைப் பற்றி எதையுமே பேசக்கூடாது. " அவ்வியம் பேசி அறங்கெட நிலலன்மின்" தமிழ் வேதம் 10 திருமந்திரம் புறங்கூறி நம் பெற்ற புண்ணியத்தை இழக்காதீர் 2, நாம் வாழும் உலகிற்கு அன்றாடம் ஏதாவது கொடுக்க வேண்டும். நம்முடைய வாழ்வு என்பது இருவழிப்பாதை ஆகும். ஒரு வழி இல்லவே இல்லை. அவரவர் தகுதிக்கு ஏற்ப பிறமனிதர்கட்கோ, பிராணிகளுக்கோ, கொடுத்தே ஆக வேண்டும். ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள புண்ணியங்களால் நாம் தற்போது சுகத்தை அனுபவித்து வருகின்றோம். அந்த புண்ணியங்கள் காலியாகிவிட்டால் நம்முடைய இன்பங்கள் தொலைந்து துன்பங்கள் சூழ்ந்துவிடும். இது எப்படி எனில் வங்கியில் நாம் சேர்த்து வைத்துள்ளவற்றை எடுத்து ச் செலவு செய்து வருகிறோம். சேமிப்பு காலியாகி விட்டால் துன்பம்தான். இதற்கு என்ன செய்கிறோம். அவ்வப்போது சேமிப்பில் பணம் போட்டு வருகிறோம். சேமிப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறறோம். இதைப்போலத்தான் புண்ணியமும்.ஏற்கனவே நாம் சேர்த்து வைத்துள்ள புண்ணியங்கள் குறையாம் அன்றாடம் புண்ணியங்களைச் செய்து கொண்டே வர வேண்டும். அன்றாடம் உலகத்திலிருந்து காற்றை, சூரியஒளி, தண்ணீர் ஆகியவற்றை பெறுகிறோம். இதன் பொருட்டு உலகிற்கு அன்றாடம் ஏதாவது நாம் கொடுத்தே ஆக வேண்டும். வாங்கினால் கொடுக்கத்தானே வேண்டும். பிறந்தால் இறக்கத்தான் வேண்டும். இதுதான் இயற்கையின் நியதி அல்லது கடவுளின் கட்டளை. இதை மீறக்கூடாது. அப்படி இயற்கைக்கு மாறாக பெற்றுக் கொண்டே இருந்து, கொடுக்காமல் வாழ்ந்தால் துன்பமே சூழும். இதனை திருநாவுக்கரசர் நான்காவது தமிழ் திருமுறையில் கூறியதைக் காண்போம். " படைகள்போல் வினைகள் வந்து பற்றியென்பக்கல் நின்றும் விடகிலா ஆதலாலே விகர்தனை விரும்பி ஏத்தும் இடையிலேன் என்செயகேன் நான் இரப்பர் தங்கட்கு என்றும் கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே." தி, மு. 4. பதி 69 3, மன இறுக்கம் (டென்சன்) இல்லாமல் வாழும்வழி மனஇறுக்கம் பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது என்று தற்கால அறிவியலார் கூறுகின்றனர். மன இறுக்கம் இல்லாது போனால் நோய்கள் வரா. இதற்கு வழியை திருஞானசம்பந்தர் கூறுவது, " உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே" மன இறுக்கம் நோயைத்தரும். மன உருக்கம் நோய் வாராமல் தடுக்கும். "உள்ளம் உருக உணருமின்கள் உறுநோய் அடையாவே" சம்பந்தர். திருவலஞ்சுழி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளல் சிவபெருமானாரை உடலால் வணங்கியும், உள்ளத்தால் நினைத்தும், உள்ளம் உருக வேண்டும். அத்தகைய உருகும் உள்ளம் உடையவருக்கு நோய்கள் வாரா. இறைவழிபாட்டில் நம்முடைய உள்ளம் உருகுவதில்லை. காரணம் பொருள் வேண்டி, இம்மை போகம் வேண்டி, வழிபாடு செய்கிறோம். மனத்தில் பேராசை நிறைந்துள்ளதால் உள்ளம் உருகுவதில்லை. " ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் " திருமுறை 10 4, சிவாய வழிபாடு அவசியம் தேவை "பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்கத்திற் பொலிய வேந்திக் கூந்தற் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே." சம்பந்தர் தி,மு 2 பதி 71 குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குறும்பலா ஈசரை வணங்கும் குறிக்கோளுடன் ஆண்யானையும்பெணயானையும் வருகின்றன. இறைவருக்கு சாத்துவதற்கு என்று வருகின்ற வழியில் உள்ள வேங்கை மரத்துப் பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தில் வைத்துக் கொண்டு வருகின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து களிறும் பிடியும் குறும்பலா ஈசரை வணங்குகின்றன. இதில் நாம் உணறும்கருத்து. 1,சிவ வழிபாடு தேவை. விலங்குகளே சிவவழிபாடு செய்கின்றன.மனிதர்களாக பிறந்த நாம் இவ்வழிபாட்டை வாழ்வின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். 2, குடும்பமே சிவ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பதை இப்பாடலில கணலாம். அப்போதுதான் குடும்ப நலமாகவும் வளமாகவும் திகழும், சந்ததிகளும் செம்மையாக திகழ்வார்கள். 3. சிவாலயம் செல்லும் பொழுது இறைவழிபாட்டிற்குரிய பொருட்கள்மலர் நல்லெண்ணெய் , நெய், பால், இளநீர், இப்படி இறைவருக்கு வேண்டிய பொருட்களை கொண்டு செல்லவேண்டும். இதனால்தான் அன்றே நமது பெரியோர்கள் இறைவர், பெரியோர் நோய் வாய்ப்பட்டவர், கருவுற்றதாய், வயது முதிர்ந்தோர், குரு முதலியவர்களிடம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்று கூறியுள்ளனர். திருஞான சம்பந்த சுவாமிகள் திருவலஞ்சுழி பதியத்தின் முதல் பாடலில் " வண்டெலாம் நசையால் இசைபாடும் வலஞ்சுழி" என்கிறார் , வண்டுகளே பாடும்போது நாமும் பாடி வணங்க வேண்டாமா? திருமுறைகள் மனித குலத்திற்கு தேவையான வாழ்வியல் கருத்துக்கள் அரிய வரலாறுகள், அறிவியல் உண்மைகள் இயற்கை எழில் நலம், முத்தி பேற்றுக்குரிய எளிய வழிகள் ஆகியவற்றைக் கூறுவனவாகும். திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத்தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக