பிரம்ம ஞானம் பெறுதல்
பிரம்ம ஞானம் பெற ஒருவர் ஐந்து பொருள்களை சரண் செய்தல் வேண்டும்.அவையாவன:
1. ஐந்து பிராணன்கள் ( ஐம்புலன்களின் சக்திகள்)
2. ஐந்து புலன் அறிவு
3. மனம்
4.அறிவு
5. தான் என்ற அகந்தை
பிரம்ம ஞானம்பெறுவது என்பது தன்னைத்தான் அறிதல் என்ற அடிப்படை தத்துவம் கொண்டதாகும். இது ஒரு கத்தி முனையில நடப்பது போன்றது. எல்லோராலும் அவரவர் வாழ்நாளில் பிரம்ம ஞானத்தை பெறுதல் என்பது அரிது. அதற்காக சில முக்கிய குணநலன்களை பெற்றிருக்க வேண்டும் மிகமிக அவசியம்
பிரம்ம ஞானம் பெறும் முறை:
1.விடுதலை பெற மனமார்த்த ஆவல் :
" தான் விடுதலை கட்டாயம் அடைந்தே தீருவேன் " என்ற உறுதியுடன் வேறொன்றும் வேண்டாதவரே ஆன்மீக வாழ்க்கைக்கு தகுதி உடையவர் ஆவர்
2.இகபரப் பொருள்கள் மீது விரக்தி :
பொருள்கள் மீது விரக்தி பற்றற்ற நிலை பெற முடியாதவர்களுக்கு ஆன்மீக உலகில் நுழைய உரிமை கிடையாது
3, உள்நோக்கு சிந்தனை :
ஐம்புலன்களைக் கொண்டு நாம் வெளிப்புறத்தை அறிகிறோம், புறப்பொருள்களை நோக்கிறோம். தன்னைத்தான் உணர விரும்புகிறவன் முதலில் "தன்னை தானறிய " முற்பட வேண்டும்.
4, பாவங்களிலிருந்து வெளிப்படல்:
ஒருவன் தீயச் செயல்களை ஒழித்து மன அமைதி பெற்றாலொழிய அறிவளவில் கூட தன்னை தான் உணர்தல் என்பது இயலாத காரியம்
5. நற்குண நற்செயல்கள்:
உள்நோக்கு, தவம், உண்மையுடன் கூடிய வாழ்வு பெற்றிருந்தாலொழிய கடவுளை அறிய முடியாது
6, நல்லவை, இனியவை:
நல்லவை, எனபன ஆன்ம விவகாரங்களுக்கு உரியவை. இனியவை யாவும் இவ்வுலகில் சுகபோக வாழ்வுக்கு தேவை. இரண்டும் மனிதனை அண்டி வருகின்றன. இவற்றில் ஒன்றை மட்டும் மனிதன் சிந்தித்து பெற வேண்டும். அறிவுடையவன் நல்லவற்றையே நாடிட அறிவுபெற முயலாதவன் தன் பேராசை, அதீத பற்று இவை காரணமாக இனியவற்றையே நாடுகிறான்.
7. மனம் புலன் ஆகியவற்றை கட்டுப்படுத்துதல்:
உடல் ஒரு தேர், அறிவு ஒரு தேரோட்டி தான் என்பது தேரினுள் அமர்ந்திருக்கும் எஜமான் மனம் என்பது கடிவாளம் ஆகும். புலன்கள் குதிரைகள், புலன்றி பொருள்கள் என்பவை தேரோடும் பாதை, மனிதன் தன்னைத்தான் அறிந்து, அறிவு எனும் தேரோட்டியின் துணை கொண்டு மனமாகிய கடிவாளத்தை கட்டுப்படுத்தி புலன் அடக்கத்தோடு நல்வழியைப் பின்பற்றினால் அவனது பயணம் நன்கு முடிவ பெற்று, அவன் சேர வேண்டிய இடம் ( அதாவது எங்கும் நிறைந்த பரம்பொருளின் இருப்பிடமாகிய கைலாசம் ) அடைய முடியும்.
8, அகத்தூய்மை,:
உள்ளத்தூய்மை பெற்றவரே விவேகமும், வைராக்கியமும் பெற்று தன்னைத் தான் உணர முடியும். தான் என்பது போய் ஆசை அறவே நீங்கி, உள்ளத் தூய்மை ஏற்பட்டால் அன்றி தன்னைத்தானறிதல் என்பது இயலாத ஒன்று.
9. குருவின் முக்கியத்துவம்:
தன்னைத் தானுணர்ந்த ஒரு சற்குருவால் மட்டுமே உதாரண புருசனாக விளங்கித் தன் சீடனையும் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்
10. இறையருள் :
யாரொருவனை இறைவன் தன் பக்தனாக , அடியாராக ஏற்றுக் கொள்கிறாரோ அந்த அதிர்ஸ்டசாலி மட்டும்தான் விவேகமும், வைராக்கியமும் பெற்று சம்சார சாகரத்தை பாதுகாப்பாக கடந்து இறைவனின் திருவடிகளை அடைய முடியும். எனவே இறைவனருள் பெறுவது எல்லவற்றைக் காட்டிலும் முக்கியம்.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய நம
மேலும் பல ஆன்மீக தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக