ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆன்மாவைப் பற்றி அறிவது ஆன்மிகம்.ஆனால் தற்போது இறைவனை பற்றி அறிவதே ஆன்மிகம் எனப்படுகிறது. ஆன்மாவின் வழியில் தானே இறைவனை அறியவும் உணரவும் முடியும்.
உயிர், ஆன்மா, ஆத்மா மூன்றும் ஒன்றுதான். அனைத்தும் ஆத்மாக்களிலும் பெரிய ( எண்ணத்தால் உயர்ந்த) ஆத்மாவை மகாத்மா என்கிறோம்,நாமும் வாழ்ந்து நம்முடன் வாழும் உயிர்களையும் வாழவைக்கிறோம், அதன்வழியில் பெறுவது ஆன்மதிருப்தி, நம் ஆன்ம முன்னேற்றம் நாம் நம்மை அறியாமலேயே நம் உள்நோக்கிச் செல்கிறோம். அதுவே ஆன்மிகத்தின் முதல்படி
பிறருக்கு சமயத்தில் உதவும்போதும், பசித்தோருக்கு அன்னதானம் செய்யும்போதும், பிறருக்கு விளங்காததை விளங்க விளக்கும்போதும், நாமும் மகிழ்ச்சி அடைகிறோம் நம்மால் அவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர், அப்போது புண்ணியம் உயிர் வளரத் தொடங்கிறது.
ஒன்றுக்கு ஆைச்படுவதும் அதை அனுபவிப்பதும் அதனால் பெருமைப்படுவதும் இன்ப துன்ப வேதனைப்படுவதும் உயிரன்றி வேறல்ல. அதனால் தான் எது அனுபவிக்கிறதோ , எது அறிகிறதோ அதுவே உயிர் என உணரவேண்டும். கோபம், காமம் வஞ்சம், பொறாமை நம் உயிரை கீழ்நோக்கி செலுத்துகின்றன. உயிர்வளர்ச்சி அங்கே தடைப்படுகிறது. மேலும் கல்வி, செல்வம் ஆகியவற்றால் ஆணவமே முதன்மையாகிறது. ஆகையால் அவற்றால் உயிர் முன்னேறுவதில்லை. பரந்த எண்ணத்தால் மட்டுமே உயிர் முன்னேற்றம் அடைகிறது. "தான்" என்ற எண்ணத்தை விடும் போதுதான் நம்உயிர் முன்னேற தொடங்கிறது. அங்குதான் உண்மையான இறைத்தேடல் ஆரம்பிக்கிறது. அப்போதுதான் இறைவன் உண்மையில் புலப்படத்தொடங்கிறது.
எந்த உயிரும் மகிழ்வாக இருப்பதே ஆன்மதிருப்தி. ஆனால் " நம்மால் மற்ற உயிர்கள் மகிழ்கின்றன " என்று எண்ணினால் " நான்" என்ற ஆணவம் அங்கு புகுந்து விடுகிறது. ஆகவே இறைவனை உணர்ந்து மகிழும்போது தான் உண்மையான திருப்தி உண்டாகிறது. "நான்" என்ற உணர்வு அங்கு எழுவதில்லை அதுதான் உண்மையான ஆன்மதிருப்தி, அன்றுதான் உயிர் உண்மையாகத் தன்னை உணர்கிறது. அதன்பின்பே அது இறைவனை உண்மை யாகவும் முழுமையாகவும் உணரத்தொடங்கிறது. அதாவது தற்பேதம் இல்லாமல் உயிர் இறைவனை உணர ஆரம்பிக்கும். அதுவே தெய்விகம்.
ஆன்மா தன்னை முழுமையாக உணர்வதே ஆன்மிகம், ஆன்மா உலகை அனுவிப்பது லெளகியம். ஆன்மா தெய்வத்தை உணர்ந்து அதை அனுபவிப்பது தெய்விகம். தெய்விகமே ஆன்மிகத்தின் பயன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக