செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ஆசை / கோவணத்திற்கு ஆசைப்பட்டு குடும்பம் வந்தது/ ஆன்மீகம் விலகியது


ஆசை / கோவணத்திற்கு ஆசைப்பட்டு குடும்பம் வந்தது/ ஆன்மீகம் விலகியது ஒரு ஊரில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அன்றாடம் காலையில் எழுந்து குளித்து, திருவெண்ணீரு அணிந்து, பூக்கள் பறித்து மாலை தொடுத்து சிவாலயத்திற்கு சென்று சிவபூசை தவறாது செய்து பின் நண்பகல் 12 மணிக்கு நாலு வீடுகளில் யாசித்து கிடைத்த உணவை உண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார். மாைலயில் தேவாரப்பாடல்கள் பாடி சிவபூைச செய்து வழிபாடு செய்து வந்தார். இரவு 8,00 மணிக்கு வீடுகளில் மறுபடியும் யாசித்து உண்பார்.இதனால் இவர் மேல் அந்த ஊர்மக்களுக்கு சிறந்த துறவியாகவே காணப்பட்டார். அவ்வேைளயில் அந்த ஊரில் உள்ள மடாலயத்திலுள்ள மடாதிபதி இயற்கை எய்தினார். இந்த துறவியை மடாதிபதி ஆக்கினார்கள் அந்த ஊர் மக்கள். ஒருநாள் இவருைடய கோவணம் எலியால் கடிக்கப்பெற்று சேதம் அைடந்து விட்டது. இதற்காக ஒரு பூனையை கொண்டு வந்து வளர்த்து எலியிடமிருந்து கோவணத்தின் சேதாரம் காப்பாற்றி வந்தார். பூனையை வளர்க்க அதற்கு பால் வேண்டும் என்பதற்காக ஒரு பசு மாட்டை வாங்கி வந்தார். அப்பசுமாட்டை பராமரிக்க ஒரு பெண்ைண வேலைக்கு வைத்தார். காலம் மாற்றங்களை தந்தது. வேலைக்கு வைத்த அம்மையாரை மணந்து கொண்டார் துறவி, தற்போது துறவி குடும்பஸ்தாராக மாறினார். குடும்பம் வந்த பிறகு பூத்தொண்டும் சிவாலய வழிபாடும் இல்லாமல் போய்விட்டது. இரண்டு பிள்ளைகள் ஆயிற்று. வாழ்க்கைக்கே நேரத்தை செலவிட வேண்டியதாயிற்று. இறைமையை பற்றி சிந்திக்கவே நேரமில்லாது போயிற்று. இதன் உட்கருத்து; ஒரு சிறிய பற்றினால் ஏற்பட்ட விளைவு ஆக்கைக்கே இரைதேடி அலமந்து காக்கைக்கு இரையாகிக் கழிய வேண்டியதாயிற்று ஒரு துறவிக்கு, எனவே பற்றற்ற நிலையே ஆன்மிகத்திற்கு வழிகாட்டி நன்றி ; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக