வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

சிவமும் தமிழும்


சிவமும் தமிழும் சிவத்தலங்களில் நடு நாட்டு தலங்கள் 21, ஆவற்றுள் திருவாமாத்தூர் 21 வது தலம். சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற தலம். இைறவர் அபிராமேசர், மாதை நாதர், இறைவி அழகிய நாயகி. இத்தலத்திற்கு இரட்ைட புலவர்கள் பாடிய " ஆமாத்தூர் கலம்பகம் " பாடப்பட்ட வரலாற்றை சிந்திப்பதே இக் கட்டுரை. தமிழுலகில் அனைவராலும் போற்றப்படும் " திருவாமாத்தூர் கலம்பகம் " பாடிய இரட்ைடயர்களை பற்றி குறிப்புகள் திருவாடுதுைற ஆதின வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் வெளியிட்ட " இரட்ைடயர்கள் பிரபந்தங்கள் " என்னும் நூலில் காணமுடிகின்றன. இரட்டை புலவர்கள் பிறப்பிலேயே ஒருவர் குருடர், மற்றவர் முடவர். முடவர் குருடர் ேதாளில் ஏறிக்கொண்டும், குருடர் முடவரை சுந்து செல்வார். ேதாள்மீது அமர்ந்துள்ள முடவர் குருடருக்கு கண்போல வழிகாட்டுவார். இவர்கள் சோழநாட்டில் ஆடுதுைறக்கு அருகில் உள்ள இலந்துறை என்னும் ஊரில் பிறந்தவர்கள். பலபிறவி புண்ணியத்தால் சிவபெருமானார் மீது சாயாத அன்பு உைடயவர்களாகவும், கல்விச் செல்வம் மிகுந்தவரகளாகவும் விளங்கினர். ஆனால் வறுமை இருந்த போதிலும் சிவத்தல யாத்திரை செய்து இறைவரை தீந் தமிழால் பாடி மகிழ்ந்தனர். இப்படி இவர்கள் தில்ைலக்கு வந்த பொழுது தில்லைக் கலம்பகமும் காஞ்சிபுரம் வந்த போது " கச்சியூர்க் கலம்பகமும் " பாடி மகிழ்ந்தார்கள். இறையருள் செயல்படத் தொடங்கியது.இவ்வாறு சிவயாத்திரை நிகழ்கையில் திருமாத்தூர் சென்று " திருமாத்தூர் கலம்பகம் " அங்குள்ள கோவிலைப் பார்க்காமலேயே பாடி முடித்தனர். அப்பகுதியை ஆண்டுவந்த அச்சுதேவப் பல்லவ மன்னரின் அரண்மனை அைடந்தார்கள் இரட்டை புலவர்கள். ஆமாத்தூர் கலம்பகம் அரசவையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என இரட்டை புலவர்கள் வேண்டிக் கொண்டனர் அரசனும் சம்மதித்தான்.முடவர் படித்தார், பாடல்களின் அரிய கருத்துக்களை விளக்கிக் கூறினார் குருடர். பாடல்களின் சொற்சுவை, பொருட்சுவை ஆகியவற்றில் மன்னன் மூழ்கினான். இவ்வாறு அரங்கேற்றம் நடைெபற்றுக் கொண்டிருந்த போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் ஆமாத்தூர் அடிகள் ( மாதை நாதர்) பம்பை என்னும் ஆற்றின் மேற்குக் கரையில் கோயில் கொண்டுள்ளார் என பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகும். ஆனால் ஆற்றின் கீழக்கரையில்தான் ஆலயம் அமைந்துள்ளது. அறிந்த புலவர்கள் " எம் நாவிலுறை நாமகள் ( சரஸ்வதி) பொய் கூறாள் எனக் கூறி அரங்கேற்றத்தை அந்த அளவில் நிறுத்தினார்கள். எஞ்சியதை மறுநாள் அரங்கேற்றம் செய்வதாகக் கூறிமுடித்தார்ள். நேரே மாதைநாதர் ஆலயத்திற்கு சென்று உள்ளம் உருகி வழிபட்டார்கள். ஆமாத்தூர் பெருமானார் தெய்வப்புலவர்கள் பாடிய அருந்தமிழ் பாடல் பொய்யாகக் கூடாது என விரும்பினார். அன்றிரவு பெருமழை பெய்வித்தார் இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் பம்பை ஆறு நிலை மாறிவிட்டது. கோவில் மேல்கைரயில் காணப்பட்டது ( ஆறு கோவிலின் கீழ்புறமாக ஓடியது. மக்களும் மன்னனும் கண்டு அதிசயத்தார்கள். இரட்டை புலவர்களை தெய்வப் புலவர்கள் என்று போற்றி மகிழ்ந்தார்கள்.அரங்கேற்றமும் இனிதே நடந்தேறியது. கோவில் மேற்கரையில் அமையுமாறு பாடிய செந்தமிழ் பாடலுக்கு ஏற்ப ஆற்றை திசைமாறி ஓடச் செய்த சிவபெருமானார் விரும்புவது தமிழ் பாடல்களே என அறிந்து மனம் மகிழ்ந்தனர். திருச்சிற்றம்பலம் நன்றி தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக