வியாழன், 6 பிப்ரவரி, 2014

பிறவாமை பெறவதற்கு எளிய வழி


பிறவாமை பெறவதற்கு எளிய வழி வாழ்ந்து முடிவு பெறும் / வயதான ஒரு முதியவர் வாழ்வில் வெறுப்படைந்து ஒரு ஆன்மீக ஞானியிடம் வந்து ஐயா எனக்கு வாழ்வில் முத்தியடைய வழி கூறுங்கள் என்றார், அன்னாைர ஞானத்துறவி கேட்டார் " ஐயா தாங்கள் வாழ்வின் முதிர்வு நிலைக்கு வந்துவிட்டீர்கள் தாங்கள் இதுவரை நான் வினவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக யாதேனும் இதுவரை செய்துள்ளீர்களா? என்று வினவினார். அவர் முதியவரிடம் கேட்டது; 1) இறைவருடைய திருநாமமாகிய திரு ஐந்தெழுத்தினை இதுவரை சொல்லிவந்துள்ளீர்களா? 2) இறைவனுைடய பெருைமகளை ஒருமுறையாவது பேசியுள்ளீர்களா? 3) சிவாலயத்தை ஒருமுறையாவது வலம் வந்துள்ளீர்களா? 4) உண்பதற்கு முன் இறைவருக்கு மலர் பறித்து இட்டு தொழுதுள்ளீர்களா? 5)சிவநாமத்தின் தோற்றமாக திகழும் திருெவண்ணீரு தினமும் அணிந்துள்ளீர்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக முதியவர் எல்லாவற்றிக்கு "இல்லை" எனவும் யாதும் இதுவரை செய்யவில்லை என்றார் உடனே ஞானியார் இத்தனையுள் ஒன்று கூட ஒரு நாள் கூட செய்யாத உமக்கு எங்கே முத்தி கிடைக்கும் நீங்கள் மறுபடி மறுபடி பிறந்து உங்களுைடய பிறவி பிணி இன்னும் நீங்கா நிலையை தான் கொண்டுள்ளீர்கள் என்றார், வாழ்பவர்கள் நோய்களால் துன்புற்று இறப்பர், மீண்டும் பிறப்பர், அப்பிறவியிலும் பயனின்றி மீண்டும் இறப்பர், இதுவே இவர்களுக்கு தொழிலாகும், இறைவன் திருநாமம் ஐந்தெழுத்தை சொல்லாமலும், திருநீறு அணிணாமலும், இறைவன் புகழ் பாடமலும் பிறவி பெருங்கடல் நீந்தார், இதனை திருநாவுக்கரசர் தன் பாடலில் " திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் தீவண்ணர் திறம்ஒருகால் பேசாராகில் ஒருகாலும் திருக்கோவில் சூழா ராகில் உண்பதன்முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில் அருநோய்கள் கெட வெண்ணீ றணயாராகில் அளியற்றார் பிறந்த வாறு ஏதே வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் ெசத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே, நாவுக்கரசர் இதனையே திருமூலரும் யாவர்க்கும் ஆம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கும் ஆம்பசு வுக்கொரு வாய்உறை யாவர்ககும் ஆம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கும் ஆம்பிறர்க் கின்னுரை தானே, என்று இறைவனுக்கு அர்ச்சனை ெசய்ய பச்சிலை, பசுவுக்கு ஒருவாய் புல், அல்லது உண்ணும்போது பிறருக்கு ஒரு கவள கைப்பிடி அளவு உணவு அல்லது பிறர் முகம் சுளிக்காத அளவு இன்சொல் என்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக