திங்கள், 17 பிப்ரவரி, 2014

தமிழ் வேதங்கள் காட்டும் பக்தி / சிவவழிபாடு


தமிழ் வேதங்கள் காட்டும் பக்தி / சிவவழிபாடு இறைவர் நாம் தெரிந்தும் தெரியாமலும் முற்பிறவிகளில் செய்த தீவினைகளை நமக்கே ஊட்டுகிறார் இதுவும் நாம் திருந்த வேண்டும் என்னும் அளப்பருங்கருனையால்தான் இதை செய்கிறார் இறைவர். நாம் செய்த வினையால் நமக்கு துன்பங்கள் வருகின்றன. அப்படி வரும் பொழுது பலர் கடவுளை நிந்திக்கவும் செய்கிறார்கள் . சிவ வழிபாட்டிலிருந்து விலகிவிடுகிறார்கள் இப்படி இல்லாமல் அடிக்கும் தாயின் காலையே பற்றிக் கொள்ளும் குழந்தையைப் போல மேலும் மேலும் சிவபெருமானாரையே பற்ற வேண்டும் என்கிறார் காரைக்கால் அம்மையார் " இடர்களையா ரேனும் எமக்கு இரங்காரேனும் படரும் நெறிபணிணா ரேனும் ... சுடர் உருவில் என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு அன்பறாது என்நெஞ் சவர்க்கு .... அற்புதத் திரு அந்தாதி (எமக்கு வரக்கூடிய துன்பங்களை போக்கவில்லை என்றாலும் நற்கதி அடையும் வழியை அருளவில்லை என்றாலும், ஒளிவடிவினரான சிவபெருமானாைர மறவேன் ) இறைவழிபாடு என்பது வியாபாரம் இல்லை. ஒரு உயிர் தன்னைத் தான் கடைத்தேற்றிக் கொள்ள / மீண்டும் பிறவாமலிருக்க தானே எடுக்கும் அரிய முயற்சியே இறைவழிபாடு என்பது " கண்டு எந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அது வேண்டேன் " ....... அற்புத திரு அந்தாதி பயன்கருதாத இறைவழிபாட்டினை அம்மையார் கூறியுள்ளார். இறைவழிபாடு என்பது நற்குணங்களால் நிறைத்து நலம் பெறுவதாகும். வானுலகத்தை கொடுத்தால் கூட வேண்டாம் என்பது அம்மையாரின் கூற்று மனம் சிவபெருமானாரை நினைக்கவும், நாக்கு அவர் புகழைப் பாடவும், தலை அவரை வணங்கவும், கை அவரை தொழவும், காது அவர் புகழை கேட்கவும், மனம் அன்பால் இறைவரை இறத்தவும், உடல் அவரை நினைத்து அரும்பவும், வைத்தேன் என்பது அம்மையாரின் பாடல் " சிந்தனை செய்ய மனம் அமைத்தேன் செப்ப நா அமைத்தேன் வந்தனை செய்யத் தலை அமைத்தேன் கை தொழ அமைத்தேன் பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன் மெய் அரும்பவைத்தேன் வெந்த வெண்ணீ றணி ஈசற்கு இவையான் விதித்தனவே. ....... பொன்வண்ணத் தந்தாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக