புதன், 19 பிப்ரவரி, 2014

திருஐந்தெழுத்தின் ஆற்றல்


திருஐந்தெழுத்தின் ஆற்றல் திருஐந்தெழுத்தின் ஆற்றல் " உறவாவார் உருத்ததிரபல் கணத்தி னோர்கள் உடுப்பன கோவணத்ெதாடு கீள்உளவாம் அன்றே செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும் நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம் நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர்நயன்ச சோதியையே தொடர்வுற் றோமே. நம்சிவாய மந்திரத்தை சொல்வதால் 1) மீன் கொடியுடைய மன்மதனை நெற்றிக்கண்ணால் பொடியாக்கி சோதி வடிவினராம் சிவபொருமானாருடைய அருள் கிடைக்கும் 2) சிவனருட் செல்வர்களின் நட்பு கிடைக்கும் 3) நம் மீது பகைமை கொள்பவரும் நண்பர்கள் ஆவார்கள் 4) நமக்கு வரவேண்டிய தீமையும் நன்மையாகவே முடியும். ஐந்தெழுத்தினை நாளும் தொடர்ந்து சொல்லி வந்தால் அறிவு வளரும், செல்வம் பெருகும், சான்றோர் நட்பு கிடைக்கும் பாவங்கள் தொலையும், தீமையும் நன்மையாக மாறும் ஓம் நமச்சிவாயம் நன்றி ; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக