திருமுறைகளில் வாழ்வியல் - வாழும் வழி
திருநாவுக்கரசு சுவாமிகள் நாமெல்லாம் கடைத்தேறுவதற்கு ஓர் உபாயம் கூறியுள்ளார், மனிதப் பிறப்பெடுத்து வாழ்வதற்கு மட்டுமல்லை. இனிப் பிறவாமையை பெறுவதற்கே ஆகும், இந்த நோக்கமே தெரியாமல் மிகப்பலர் வாழ்ந்து வருகின்றனர்,
மெய்யுள்ளே விளக்கை யேற்றி வேண்டள வுயரத் தூண்டி
உண்வதோர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சாலச்
செய்வது ஒன்றறிய மாட்டேன் திருப்புகலூர னீரே, - நாவுக்கரசர் பதிகம் ,த,வே, 4
திருப்புகலூரில் எழுந்தருளியுள்ள இறைவரே ! "உடம்பினுள்ளே விளக்கை ( அருள் என்னும் விளக்கு) ஏற்றி வேண்டும்அளவிற்கு அவ்விளக்கினை தூண்டி ( அருள்மயமாதல்) பிறவாமையைப் பெறலாம் என்று முயல் கின்றேன், ஆனால் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து பொறிகளை உடம்பில் வைத்துள்ளீர், ஐம்பொறிகளாகிய அவர்கள் மிக வலிமை உடையவர்களாக இருக்கிறார்கள், என்ன செய்வது என்று புரியவில்லை " என்கிறார்,
இதனை ஓர் உதராணத்தின் மூலம் தெளியலாம் உடம்பு என்பது வீடு, இவ்வீட்டிற்கு மெய், வாய், கண், மூக்கு , செவி எனப்படும் ஐந்து சன்னல்கள் உள்ளன, உலக ஆசை என்னும் காற்று ஐந்து பொறிகளின் வழியே மனம் என்னும் அறையில் ஏற்றப்பட்டுள்ள "அருள்" என்னும் விளக்கை தொடர்ந்து எரிய விடாமல் செய்கின்றது, நான் எப்படி நலம் பெறுவது, என்று திருப்புகலூர் பெருமானாகிய தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்,
பசி, தாகம், இச்சை, பயம் ஆகியவற்றால் பிற உயிர்கள் துன்படுவதைக் கண்ணால் கண்ட பொழுதும், காதால் கேட்ட பொழுதும், நம் உள்ளத்தால் உண்டாகும் இரக்கம், அல்லது கருணையைத் தான் அருள் என்கிறோம்,
நான், எனது என்னும் பற்றினால் மனம் கல்லாக இருக்குமானால், அருள் உணர்வு அல்லது இரக்க குணம் தோன்றாது, அருள் உணர்வை அல்லது இரக்க குணத்தைத்தான் அருள் விளக்கு என்கின்றார், பட்டினத்து அடிகள், இக்குணம் உடையவர்களே சிவபெருமானாருடைய திருவருளைப் பெற முடியும் என்கின்றனர், இறையருள் பெற்ற சிவஞானியர்கள்,
"ஈரநெஞ்சினர் காண்பர் இணையடி - திருமூலர்
"அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்" - திருக்குறள்
"அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை " - குறள்
அருள் கண் இல்லார்க்கு அரும் பொருள் தோன்றா - திருமூலர்
அருள் , இரக்கம், ஈரம், கருணை, பரிவு , தயவு, உருக்கம், ஆகிய சொற்கள் ஒரே பொருளில் கையாளப்பட்டு வருவதை நாம் அறியலாம்,
அருள் உணர்வு அல்லது இரக்க குணம் நம் மனத்தில் தோன்றும் பல நேரங்களில் ஆசையின் காரணமாக இக்குணம் வளர்ச்சியடைவதில்லை.
பிற உயிர்கள் பல காரணங்களால் துன்பப்படுகின்றன என்று கண்ணால் பார்த்த பொழுதும், காதால் கேட்ட பொழுதும் நம் உள்ளத்தில் தயவு அல்லது கருணை ஏற்படுபதைத்தான் " உள்ளம் உருகுதல் " அகம் குழைதல் என்கிறோம்.
உருகிய தங்கத்தில் கல்பதியும், உருகிய வெண்ணெயிலிருந்து வாசனை வெளிப்படும், உள்ளம் உருகினால் இறைவருடைய திருவடி பதியும்,
" நஞ்சுண்ணப் பொலிந்த மிடற்றினார்
உள்ளம் உருகில் உடனாவார்," -- ஞான சம்பந்தர் த,வே, 2, பதிகம் 111
தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்று எண்ணும் நிலைதான் "அருள்" உடையவர்களின் தன்மை, ஆசையுடையவர்கட்கு இந்த அருள் உடையவராகத் திகழும் நிலை அமைவதில்லை.
ஆசை என்னும் பெருஙகாற்று மனத்திற்குள் நுழைவதற்குரிய வாயில்கள்தான் ஐம்பொறிகள், இவற்றை அடக்கினால் ஆசை என்னும் காற்று உள்ளே நுழைய முடியாது, இதற்கு வழிதான் என் என்று காண்போம்,
1, நம்முடைய ஐந்து பொறி புலன்களை வெல்ல வேண்டும், அல்லது நல்வழியில் செலுத்த வேண்டும், என்றால் புலன்களை வென்ற சான்றோர்களுடன் மட்டுமே பழக வேண்டும் என்கிறார் நாவுக்கரசர்
2, பதினோராம் திருமுறையில் பட்டினத்தடிகள் கூறியுள்ளதைக் காண்போம்,
கருமுதல் தொடங்கி பெருநாள் எல்லாம்
காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை
அரிதின் இகழ்ந்து போக்கிப் பொருதிறன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அருள்நனி சுரக்கும் பிரள விடங்க நின்
செல்வச் சிலம்பு மெல்லென மிழற்ற
அமையாக் காட்சி இமையக்
கொழுந்தையும்உடனே கொண்டிங்கு
எழுந்தருளத் தகும் எம்பெருமானே, - திருக்கழுமலை மும்மணிக்கோவை
நமது மனம் எனும் அறையில் காலங்காலமாக உள்ள குப்பைகளான ஆசை, கோபம், பொய், பொறாமை, களவு, முதலியனவற்றை நீக்க வேண்டும்,
மெய் வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிப்புலங்களை அவற்றின் வழியே செல்லவிடாது நல்லனவற்றில் செலுத்த வேண்டும்,
மனம் எனும் அறையை அன்பு எனும் சாணம் கொண்டு மெழுக வேண்டும், அன்பு தான் அல்லாத தன்மையாகும், அதாவது சுயநலமில்லாமையே அன்புடைடயவர்களின் இயல்பாகும், அருள் அல்லது இரக்கம் எனும் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்,
கொடுக்க கூடிய மனம் உண்டானால் கொடுக்கக்கூடிய வாய்ப்பை இறைவர் அளிப்பார்
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ்வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக