தென்னாடுடைய சிவனே
நீக்கமற எங்கும் நிறைந்துள்ள ஈசா! உன்னை நான் தென்னாட்டில் சிறப்பாக காண்கிறேன். அத்தகைய உன்னை வணங்குகிறேன் , சகல லோகங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் பரம சுகத்தைத் தந்தருளும் பரமேசுவரன் உலக ரக்ஷண்யத்துக்காக திருசூலத்தைத் தாங்கி நிற்கும் முக்கண்ணன் - வேத முதல்வன் - வினைதீர்க்கும்தயாபரன் - திருசடைப் பெருமாரான கயிலை மலை வாசனின் பனிமலர்த் திருவடிகளுக்கு அநேக கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரம் பொருள் - எல்லாம் அறிந்த கருணை வள்ளல் - தாண்டவம் ஆடிடும் ஆண்டவன் - தண்டைச் சீலம் பணிந்த சேவடிக் கமலங் களைத் தஞ்சம் கிடந்து அநேக கோடி தண்டம் சமர்ப்பிக்கிறேன், மூன்று திருநயனங்கள் - நான்கு திருத் தோள்கள் செளந்திரய வதனம் - நாகாபரணம் - திருவெண்ணிறு பொலியும் திருமேனி - ருத்ராட்ச மாலைகள் துலங்கும் திருத்தோற்றம் பூண்டு விளங்கும் ஸ்ரீசிவசக்தி சொருபனுக்கு சரணம்! சரணம்!!
நமச்சிவாய எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை இடையறாது தியானித்தால், திருவெண்ணீறு , ருட்ராட்சம் அணிதல் - இவை அனைத்தும் நமக்கு சகல மங்களகளையும் பொங்கச் செய்கின்றன,மங்களம் என்றாலே சிவம் - சிவம் என்றாலே மங்களம், சிவம் என்றாலே அன்பு - அன்பே சிவம், சிவநாமம், சிவ சிந்தனை சிவ வழிபாடு நமக்கு சுகமான வாழ்வைத்தருவதற்கு அருள் செய்கிறது. சிவன் எல்லா உலகங்களுக்கும் முதல்வன் திரிகரணங்களுக்கு எட்டாதவன் திரபுரம் எரித்தவன், அவன் அம்பலத்தாடுபவன், ஆனந்த சொரூபன். சங்கர நாராயணனாக எழுந்தருளி ஹரியும் சிவமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் எம்பெருமான் " சக்தியும் சிவனும் " ஒன்றே எனும் தத்துவத்தையும் உலகிற்கு உணர்த்துவதற்காகவே அர்த்த நாரீசுவராக தோற்றமளித்தவன்.
எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம் ! நான் முகனும் அவனே நாராயணனும் அவனே! சக்தியும் அவனே! சிவனும் அவனே!
மகேஸ்வரியே மகா மாயாசக்தியாக விளங்குகிறாள், மகேசனே மகாதேவனாக விளங்குகிறான், அவள் சங்கரனுக்கு ப்ரியம் ஊட்டும் சிவகாம சுந்தரி! சர்வ பூதங்களுக்கும் ஆதாரமானவள், அவன் பஞ்ச பூதங்களிலும் வியாபித்தவன்! உயிரும் உடலும் இணைந்தது வாழ்க்கை! உயிர் தத்துவம் சிவம்! உடல் தத்துவம் சக்தி! உடல் இல்லையேல் உயிர் இல்லை, இதுவே சிவசக்தி சொரூபத்தின் மெய்ஞான விளக்கம்! அவள் மஹிஷாசுரனை மர்த்தனம் செய்தவள், இவன் பஞ்ச சபையில் நர்த்தனம் புரிபவன், அவள் அலங்கார அம்பிகை! இவன் அபிசேக பிரியன்! ஆடை ஆபரணம் எதுவும் இன்றி பிக்ஷாண்டவராகி முனிவர்தம் பக்தியை பரிசீத்தவன், அவளோ அன்ன பூரணியாக எழுந்தருளி நமக்கு அன்னத்தை அள்ளித்தருபவள், சிவன் அப்பன், அவள் அம்மை, இருவரும் நம்மை எல்லாம் காத்தருளும் அம்மை அப்பன் - அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்! சிவன் மகேஸ்வரன் இவள் மகாமாயை! அவன் மயான பூமியின் சிவமணி - இவள் மனோண்மணி! எட்டு திருத்தலங்களில் சிவபெருமான் ஆணவத்தை அடக்கும் ருத்திரமூர்த்தியாக காட்சி தருகிறார், சக்தியோ அந்த எட்டு திருத்தலங்களில் சிவனுடன் சேர்ந்து அருள் வடிவமான அம்பிகையாக எழுந்தருளி நம்மை காத்து வருகிறாள். திருசடை பெருமான் ஜலந்தராசுரனை கால் கட்டை விரலால் சம்கரித்து தேவர்களைக் காத்த இடம் திருவிற்குடி , இங்கே அம்மன் ஏலவார் குழலியாக எழுந்தருளி சிவசக்தியாக பக்தர்களுக்கு அருளி வருகிறாள், எம்பெருமான் மன்மதனை எரித்த திருக்குறுகை திருத்தலம், அங்கே சம்கார மூர்த்தியின் சக்தியாக ஞானம்பிகை எனும் நாமத்தில் ருத்திரமாகாளியாகஅருட்கோலம் காட்டுகிறாள், இவ்வாறு அங்கிங்கெனாதபடி எங்கும் சிவசக்தி சொரூபமாகவே அருட்காட்சி தருகின்றனர்,
திருச்சிற்றம்பலம்- தென்னாடுடைய சிவனே போற்றி
மேலும் ஆன்மீகத் தேடல்களுக்கு
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக