சனி, 16 ஆகஸ்ட், 2014

தமிழ் வேதத்தில் "நலம் பெறும் வழி "


தமிழ் வேதத்தில் "நலம் பெறும் வழி " நலம் தரும் பஞ்சாசரத்தினை அனுதினமும் ஐம்பொறிகளாலும் உந்தச் செய்து வந்தாலே நாளும் நாமும் நலம்பெறுவது நிச்சயமே, " சிவன் அவன் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே" அவன் திருத்தாழ் வணங்க முடியும், காலையில் எழுந்தவுடன் நமது அடிப்படை அனுதினமும் செய்கின்ற பணிகளை செய்யும் போதே, அவனை மெய் என்னும் மனத்தால் நினைத்து, பூக்ககை கொண்டு பொன்னடிகளை தவறாமல் போற்றியும், கண்ணால் அவன் திருமேனியினை கண்டு களிப்புற்று, வாயினால் அவனது நாமத்தை (சிவாயநம ) பாடியும், செவிகளால் மற்றவர்கள் அவன் புகழைப்பாடுவதைக் கேட்டும், நாளும் நம்மையறியாமலே அனிச்சச் செயலாக செய்ய பழகிக் கொண்டோமானால் " அவன் அருளாலே அவன் தாள் வணங்கி " இப்பிறப்பின் பயனை முழுவதுமாக அடையலாம், நம் மெய் என்னும் உடம்பை வளர்க்க தினமும் உழைக்கிறோம், உண்கிறோம், அது போன்றே இதனையும் நமது கடமையில் ஒன்றாக கொள்ளவேண்டும், சிவ பெருமானாரை நம்முடைய மனத்தில் இருத்தி தியானிக்க வேண்டும், அப்படி செய்து வந்தால் அவருடைய திருவருள் நம் மீது விழும், தாகம் வந்தால் தண்ணீர் பருகிறோம், வெயிலில் வந்தால் மரத்தின் நிழலை நோக்கிறோம், இது இயல்பாகவே நம்மை மறந்து செயல்படுவது, அதுபோல் துன்பம் வரும்போது அவன் அருளை பெற அவனிடம் அடைக்கலம் அடைதல் வேண்டும், " தேடி சென்று திருந்தடி ஏத்துமின் நாடி வந்தவர் நம்மையும்ஆட்கொள்வார்" என்கிறார் அப்பர் பெருமானார், "நாடும் நகரமும் நல்திருக்போயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப்பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. " திருமந்திரம் இந்த பாடல்களை நன்கு சிந்தித்தால் உண்மை விளங்கும், நம் தேவைக்கு ஏற்றபடி சிந்தனையை ஓடவிடக் கூடாது, பொருள் சம்பாதிப்பதில் இப்படி நாம் இருப்பதில்லையே, இறைவழிபாடு என்று சொல்லும் போது அதற்கு நேரம் இல்லை என கூறி உதாசீனப் படுத்துகிறோம், உண்ணும் உணவிற்கும், தேடும் பொருளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நம்மை இயக்கும் இறைவனை நினைத்து மனம் உருகுவதில்லை, ஆக்கைகே ( உணவு) தேடி அலைந்துத் திரிந்தோமானால் முடிவில் காக்கைக்கே ( உணவு) யாகிக் கழிய வேண்டியிருக்கும், "மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார் நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் என்கந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசேர! ,,,,,,, ஓம் நமசிவாய ஓம் ------- சிவவாக்கியர் சித்தர் பாடல் மேலே கண்ட பாடல் வரிகளின் படி வெண்கல பாத்திரத்திற்கும் , மண் பாத்திரத்திற்கும் உள்ள மரியாதை பாதுகாப்பு எண்சான் உடம்பாகிய இந்த பாத்திரத்திற்கு உயிர் எனும் அதிலுள்ள பொருள் விலகிவிட்டால் நாறமென்றும் , அந்த பிணத்தை சற்றும் வைத்திராது உடனே அப்புறப்படுத்த முயல்கிறோம், இந்த மனித வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது தான், இதை மாற்ற முடியாதுதான், இருப்பினும் இறைவருடைய திருநாமத்தை சொல்லிக் கொண்டே துன்பங்களை தாங்கிக் கொண்டு இறைவழிபாடும் நம் அன்றாட செயல்முறைகளில் ஒன்றாக கொண்டு செயல்பட வேண்டும், எனவே நித்தமும் நாம் நம் ஐம்புலன்காளால் சிந்தித்து, சித்தத்தை சிவன்பால் வைத்து, சேவை செய்து நாளும் வழிபாடு செய்வதுதான் நலம் பெறும் வழியாகும், திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீக செய்திகளுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக