பூசைகள்
அக பூசை , புற பூசை
கடவுளை மனதில் நிறுத்தி தாமே பூசை செய்வது. இந்தப் பூசை செய்யும் போது யாரும் பார்க்க முடியாது. இப்பூசையைச் செய்ய எந்தவொரு பொருளும் செலவுசெய்யத் தேவையில்லை. பூசாரியும்தேவையில்லை. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்யலாம். நேரகாலம் பார்க்கவும் தேவையில்லை. இதனை ஞானபூசை என்பர்.இப்பூசையின் சிறப்பை தாயுமானசுவாமிகள்
“நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம் அன்பு
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே”
என இறையை தன் மனக்கோயிலில் எழுந்தருள அழைப்பதைப் பாருங்கள்.
திருநாவுக்கரசு நாயனார் தான் செய்த அகப்பூசையை
“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய அட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே” - (பன்.திரு: 4:76:4)
இன்பர் கோவில் உருவான சரித்திரத்தில் பூசலார் கட்டிய மனக்கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இறைவனே வந்து சிறப்பித்ததினை அறியலாம்
புற பூசை
எல்லோரும் பார்த்திருக்கச் கடவுளுக்கு பூசை செய்வது.இதனை கிரியாபூசை என்றும் கூறுவர். தேவாரம் பாடி,மந்திரங்களைக்கூறி, நாம் இப்பூசையை பூவால் அர்ச்சித்தும்செய்யலாம். பூசாரியைக் கொண்டும் செய்விக்கலாம். இதுவேகோயில்களில் நடைபெறும் பூசையாகும். இப்பூசையை ஒவ்வொருகோயில் அறக்காவலர் தத்தமது வீக்கத்தைப் பொறுத்து பெரும்தடல் புடலாக போட்டி போட்டு செய்வர். அதிலும் நம் கோயில்திருவிழாக்களையும் சிறப்புப் பூசைகளயும் செய்தோர் தாம்செய்ததைச் சொல்லும் பாங்கைக் கேட்க காதுகள் கோடி வேண்டும்.இதற்கு சில கோயில் அறக்காவலர்களும் பூசாரிகளும்விதிவிலக்கல்ல.
நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைப்பவரது மனத்துள்ளே புகுந்துநிற்கும் பொன்போலும் சடையையுடைய இறைவன், பொய்யும்புரட்டும் மிக்கோர் பூசையில் இடுகின்ற பூவையும் நீரையும் பார்த்துஅவர்களின் அறியமையை எண்ணி வெட்கப்பட்டுச் சிரிப்பாராம்' எனதிருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் பாடியுள்ளார். அதனை நாம்நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை.
“நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப்புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும்நீரும் கண்டு
நக்கு நிற்கும் அவர்தம்மை நாணியே” (பன்.திரு: 5: 90: 9)
எம்மனம் குற்றங்களாகிய தூசுக்களால் அழுக்குப் படிந்துஇருக்கின்றது. மனம்நிறைய குற்றங்களைச் சுமந்து கொண்டு நாம்என்ன கூக்குரல் இட்டாலும் இறைவனின் தன்மையை நாம்உணரமாட்டோம் என்பதை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில்
சீலமும் பாடி சிவனே சிவனேயென்று
ஓலமிடினும் உணராய் உணராய் காண்”
என்று சுவையாகச் சொல்லியுள்ளார்.
இராமபிரானே தனது பிரகத்திதோசம் கழிய சிவபூசை செய்ததினை யாவரும் அறியலாம்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
சிவசிந்தாந்த தத்துவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக