மண் புழு அருளிய மகத்தான கீடக கீதை
அர்ஜுனன் தன் அக்னி அஸ்திரத்தால் எழுப்பிய நெருப்பால் சூடாகிப் போன பூமியில் ருத்ர கங்கைத்தீர்த்தமும், உடனடியாகச் சேர்ந்திட..... அதன் சக்தியில் கிடந்த ஒரு சின்னஞ் சிறு புழு திடீரென்று பேசலாயிற்று எதற்ேகா?
தென்கிழக்கு திக்கு மூர்த்தியான அக்னிக்காக, பெருவனங்களை அழித்தது அக்னிக்காக, பெருவனங்களை அழித்தது சரியா? கோடான கோடி தாவரங்கள் ஜீவன்கள் இப்பெரும் நெருப்பு மண்டலத்தில் அழிந்திருக்குமே என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதிலாக மனித குலத்தை பார்த்து ஒருமையில் ஆனால் அன்பு பாரிக்கும் உரிமையுடன் அப்புழு பேசியது.
எவண்டா இந்தக் காடுகளை ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா அர்ஜுனன் மூலம் தீக்கிரையாக்கியது, எல்லாம் விதி நிர்ணயித்தபடியே நிகழ்கின்றது என்பது அவனுக்கு தெரியாதா?இனியேனும் ஒன்றை எந்த ஒரு மனிதனும் இந்த உலகில் நன்றாய் தெரிந்து கொள்ளட்டும் இந்த பூவுலகில் அனைத்தையும் இயக்குபவன் கண்ணபிரானே என்று! இந்த நித்திய சத்தியத்தை ஆறறிவுள்ள இந்த மனித குலம் இன்னமுமா தெரிந்து கொள்ளவி்ல்ைல. கிருஷ்ண பரமாத்மா நேரில் நம்மோடு மனித வடிவில் பேசுபவராய் இருக்கும் போதே மனித சமுதாயத்தில் இந்த வகை அறியாமை, அதுவம் ஆறாம் பகுத்தறிவு பரிமளிக்க வேண்டிய மனித குலத்திலா? கேட்பதற்கே வெட்கமாக உள்ளது.
அர்ஜுனன் இப்போது நினைத்தால் தன் அஸ்திர சக்தியால் இந்த இடத்தையே பசுமையான மரங்களால் ஆன சோலையாய் கண் இமைக்கும் நேரத்தில் மீண்டும் மாற்றி விட முடியுமே, பரமாத்மாவின் இயக்கத்தில் அல்லவா இந்த அர்ச்சுனன் ஒரு சிறு கருவியாய் இயங்கிக் கொண்டு இருக்கிறான். இதை பார்த்தும் இந்த மனித குலத்திற்கு புத்தி வரவில்லையே.அடியேனைப் போன்று கோடான கோடி புழு பூச்சிகள் தாவரங்கள் மரங்கள் எல்லாம் கொடிய கர்ம வினைகளால் கோடி ஜென்மங்களை எடுத்து எடுத்து அவதிப்படுகின்றன. மனிதர்களாகிய நீங்களும்தான் இந்த அவதியைப்படுகிறீர்கள் இதற்கெல்லாம் என்ன தீர்வு ?
ஸ்ரீகிருஷ்ன பகவானின் ஆனையால் உருவானது வெறும் நெருப்பு மட்டும் அல்ல, சாட்சாத் அக்னி வேள்வியே,இந்த அக்னி மண்டலத்துள் அடியேன் போல் உள்ள புழு,பூச்சி தாவர இனங்கள் சரவ கோடி கர்ம வினைகளும் தற்போது முழுதுமே பஸ்மாகி விட்டனவே. வேறு எவரால் இப்படி எளிமையாக சாதித்து தர முடியும்?
இந்தபுழு இப்படி பேசுவதற்கு காரணம் எல்லாம் இந்த பிரபஞ்சத்தில்இயங்கும் கிருஷ்ண பரமாத்வால்தான் அவரும் நித்தமும் ஆற்றுவது சிவபூசைதான். கிருஷணனின் சிவ பூசையில் விளைந்த ருத்ர கங்கைத்தீர்த்தின் ஸ்பரிசத்தையும் பெற்று யாங்கள் முக்ததி அடைந்து விட்டோம் என்றாலும் மோட்சத்திற்கு முந்தைய இறுதிக்காலத்தில் ஒரு சிறிதேனும் எங்கள் வினைச் சுமையை அனுபவித்து கழிக்க வேண்டிட்டோம்.இதன்படியே இப்போது நாங்கள் சகதியில் உழல்கின்றோம், இந்த ருத்ர கங்கை தீர்த்தத்தை சற்றே ஸ்பரிசித்தாலே போதுமே எவரும் கடைத்தேறிவிடலாமே.
எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் நடப்பதெல்லாம இறைச் சித்தமே என அறிதல் வேண்டும். வாழ்க்கையில் சமுதாயத்தில்வருவதை எல்லாம் சர்வேஸ்வரின் இயக்கம் என தயங்காது தளராது திடமான மனோ வைராக்கியத்துடன் ஏற்றுக் கொண்டால் நிச்சியமாய் இறைவனின் திருவடி நிழல் சாசுவதமாய் கிட்டும் என்றது அந்த புழு.
இந்த புழு தந்த கீதைக்கு கீடக கீதை என்று பெயர். ருத்ர கங்கை நீரின் ஸ்பரிசம் தந்த சகதியின் சக்தியில் இருந்து ஓர் உத்தம புழு மொழிந்த அதியற்புதமான கீதையிது. இந்த கீதையினை கேட்ட மாத்திரத்தில் எண்ணற்றோர் நற்கதி அடைந்தனர்.
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும் இவ்வையகத்தே ...... என்ற அப்பர் சுவாமிகளின் பதிகம் போல் மனம் உருகி பிராத்திக்க வேண்டும் என்பது உணர்த்துவதே இந்த கீடக கீதை
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக