வெள்ளி, 26 மே, 2017

மாணிவாசகரின் திரு வாசக சிந்தனைகள்

மாணிவாசகரின் திரு வாசக சிந்தனைகள்

தன்மையும திறமையும் மாறுபட்டவர்களை எப்படி ஆட்கொள்கிறார் இறைவன்?

கீர்த்தி திருஅகலில் உணர்த்தும் சிந்தனைகள்

"எப்பெருந் தன்மையும் எவ்வெரவர் திறமும்
அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டு அருளி "  கீர்த்திதிருஅகவல் 135/136)

இந்த இரண்டு அடிகட்கும் மரபுவழிப் பொருள்  கூறுபவர் வெவ்வேறு விதமாக கூறுவர். ஆழ்ந்து சிந்தித்தால் படைப்பின் ரகசியத்தையும், மாறுபட்ட பல்வேறு வழிகளில்  செல்பவர்  ஒரிடத்தில் வேறும் இயல்பையும் உணர்த்துகிறார். இறைவருடைய படைப்பில் பல்வேறு மன, அறிவு வளர்ச்சி உடையவர்கள் ஓரே இடத்தில் ஒரே காலத்தில் கூடி வாழ்ந்தாலும் ஒவ்வொருவருடைய தன்மையும் திறமும் வெவ்வேறு தன்மைப்பட்டதைக் காணலாம். ஆனாலும் இவர்கள் அனைவரும் ஒரே கொள்கையை பின்பற்றி ஒரே வழியில் செல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகக் கடினம். அனைவரும் ஒரே வழியில் ஒரே முறையில் ஒரே நம்பிக்கையுடன் வாழ்ந்து முன்னேற ேவண்டுமென்றால்  இவர்கள் அனைவரும் ஒரே வகையான அளவுடைய மன் அறிவு என்பவற்றுடன் இறைவன் படைத்திருக்க வேண்டு்ம். இந்த ஒரே மாதிரியான மனநிலை மனிதர்களிடம் இல்லை. இப்படி பட்ட நிலையில் தங்கள் தன்மையும் திறமும் இறைவனால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும்.?
  தன்மையும் திறமையும் மாறுபட்டவர்களை எப்படி ஆட்கொள்கிறார் இறைவன் ?
  அப்பரிசதனால்  என்பதால் அவர்கள் தன்மையையோ திறத்தையோ மாற்றிக் கொள்ள வேண்டுமென்று இறைவன் கட்டளையிடப்படுவதில்லை. அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்க்ள வழியிலேயே ஆட்கொள்கின்றார் இறைவன் உதாரானத்திற்காக ஒன்றைக்காணலாம்.


    திண்ணனார் ( கண்ணப்பர்) திருநாளைப்போவர் (ந்ந்தனார்) ஆகிய இருவருடைய வாழ்க்கையும் எடுத்துக்கொண்டு காணலாம்.
   தம்முடைய பிறப்புத் தாழ்ந்த இனத்தை ேசர்ந்தது தனக்கு கல்விி அறிவு இல்லை.இறைவனுடைய சிறப்பை அறிந்து கொள்ளும் முயற்சியும்இல்லை என்ற எந்தக் கவலையும் படாதவர் திண்ணனார். இறைவனை நிர்ககுண , நிராமய, நிராலயனாக அவர் காணவில்லை, மலையிடை தனக்கு உற்ற தோழனாகவே இறைவரைக் கருதுகிறார். அதனால்தான் தன் வாயிலிருந்த நீரை தேவருக்கு அப்படியே அபிசேடகம் ெசய்யவும், தனது செருப்புக்காலை முகத்தின் மேல் வைக்கவும் தயங்கவில்ைல. ஆரே நாளில் அவருக்கு வீடுபேறு தந்தருளினார் இறைவர். திண்ணனாரின் தன்மையும் திறத்தையும் மாற்ற விரும்பவில்லை இறைவர். திண்ணனாரும் மாற்றவேண்டும் என்ற எண்ணம் கொள்ளவில்லை. அப்பரிசு அதனாலேயே அவரை ஆண்டுகொண்டார்.

  இதற்கு மறுதலையாகவே திருநாளைப்போவர் (நந்தனார்) , தம் பிறப்பு இழிவானதென என்றும் இந்த உடம்புடன் திருக்கோவிலுக்கு செல்லக் கூடாதென்றும் தாமே முடிவு செய்து கொண்டார். இவர் மேல் இறக்கம் கொண்ட திருப்புண்கூர் நாதன் நந்தியை விலகுமாறு செய்தும் கூட நந்தனாரின் உள்ளத்தில் தம் பிறப்பைப்பற்றிய தாழ்வு உணர்வு நீங்கியபாடில்லை.  சிதம்பரம் சென்றுங்கூட கோவிலுக்குள்  செல்லமுடியாமல்  இன்னல் தரும் இழிபிறவி இது தடையாம் என்ற எண்ணத்துடனயே துயில் கொண்டார். இந் நிலையில் தில்லைக் கூத்தன் பிறப்பில் இழிவு ஏதும் இல்லை நீ உள்ளே வரலாம் என்று ஆணையிட்டும் அவர் அவ்வாறு செய்ய மனம் வரவில்லை. இந்நிலையில் இறைவர் அவர் முன் தோன்றி " இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ முழ்கி முப்பரி நூல்தரித்த மார்புடன் முன் அனைவாய்  " என்று தான் கூறினார்,
  ஆக தம் செயல் பற்றிய திறனை சிறிதும் ஐயம்கொள்ளத திண்ணனாரை ஏற்றுக்கொண்ட இறைவர் நந்தனாருக்கு அவர் பொருட்டே அவருக்காக இறங்கி வழிவகை செய்து ஏற்றுக்கொண்டார், தன்னுடைய பிறப்பில் இழிவு என்ற உணர்வு கொண்டாலும் அவரை அவர் தன்னைக்கே மாற்று ஆட்கொண்டார் இருவருக்கும் அவரவர் தன்மை திறமைக்கேற்ப தன்வழியை மாற்றிக்கொண்டார் இறைவர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் ஆழ்ந்து சிந்தித்தால் அடிகளாரின் தன்மையும்திறமும் மாறுபட்டவர்களை ஆட்கொண்ட  கருத்தினை தெளிவுற விளக்கியுள்ள திறன் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு  ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; திருவாசக சிந்தனைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக