வியாழன், 25 மே, 2017

நாயனார் வரலாறு / நாவரிந்த நாயனார்

நாயனார் வரலாறு / நாவரிந்த நாயனார்


சிவனடியார்களை இகழ்ந்தவர் நாவைத் தண்டாயம் என்னும் குறடுபோலும் கருவியால் இழுத்துக் கத்தியால் அரிந்த வேளாளர்.
குரு பூசை  ஐப்பசி - பூரம்

சோழவள நாட்டில் விரிஞ்சையூர் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர் சக்தி நாயனார். அடியார்களை யாரேனும் இகழ்ந்துரைப்பவர்கள் யாேரனும் ஆகில் அவர்தம் நாவை பிடித்து இழுத்துசக்தி என்ற (குறடு போன்ற கருவி) கருவியால் அரிந்துவிடுவார் அதனால் அவர் சக்தி நாயனார் எனப்பட்டார்.
இறைவரை நிந்தனை செய்து வாழ்ந்து விடலாம். இறைவரைப் போற்றுதல் போன்றே அடியாரை போற்றி வழிபடுதல் இறைவழிபாட்டில் முதன்மை என்பது யாவரும் அறிந்ததே.அதுபோல இறைவர்தம் அடியாரை யார் நிந்தித்தாலுமு் இறைவரை நிந்திப்பதைவிட கொடியது என்று எண்ணினார் எனவே அடியார் தம் பெருமையைத்தான் முதலாகக் கொண்டவர் இறைவரை நிந்திப்பதைவிட  அவருடைய அடியார்களை நிந்தித்து வாழ்வது கடினம். இதற்கு உய்வே இல்லை. அடியாரைப் பகைத்தவர் எக்காலத்திலும் கடைத்தேற முடியாது.
அடியார்நிந்தனை செய்வோரை இம்மையிலேயே தண்டித்தால், அப்பாவம் மறுமையில் தொடராது இல்லை என்றால் ஒன்று பலவாகப் பெருகி மறுமையில் அளவில்லா துன்பந்தரும்.
 அடியார் நிந்தனை புரிிவோர் மறுமையில் பெருந்துன்பத்தால்  வருந்தாமலிருக்க வேண்டும் என்னும் கருணையினால் தண்டித்து வந்தார் சக்தி நாயனார். இச்செயலை வீரம் மிகுந்த ஆண்மையாளரே செய்யமுடியும் அதனால் சேக்கிழார்" அன்னதாகிய ஆண்மைத்திருப்பணி " என்று சக்தி  நாயனார் திருப்பணியைக் குறி்ப்பிடுகிறார்.அடியார் நிந்தனையின்று உலகமக்கள் வாழ வழிவகுத்த நாயனார் முடிவில் அம்பலவாணருடைய திருவடி நிழலில் இன்பமுற்றார்.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக