காஞ்சியில் வாழ்பவர் எத்தகையவராயினும் மாதவங்களாக மாறும் பேறு
பெரியபுராணம் போற்றும் பெண்ணடியார்கள் / உமாதேவியார் சிவபூசை
(திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் / சேக்கிழார் அருளியது)
தென்னாடு செய்த திருத்தவத்தால் உமாதேவியார் சிவபூசை செய்வதற்காக காஞ்சிபுரம் வந்தடைந்தார். அங்கு பதுமன் என்ற நாகம்உமாேதவியாரின் திருவடிகளை வணங்கி எல்லா உலகங்களையும் ஈன்றருளிய அன்னனயே அடியேன் வாழும் பிலத்தின் இடையில் நீவிர் அமர்ந்து திருக்கோயில் கொண்டுருள ேவண்டும் என்று விண்ணப்பித்து உமையம்மையும் பதுமனின் விண்ணப்பத்தினை ஏற்று அவ்வாறே அருள்புரிந்தார். உமாதேவி எல்லையில்லா இன்பத்தில் அருள் வடிவமான சிவலிங்கத்தை இருத்தி சிவபூசை செய்ய விரும்பினார்.
இறைவனின் திருவுருவை காண்பதற்காக எங்கு தேடியும் சிவபெருமான் திருவிளையாட்டினால் எங்கும் சிவமாக நிறைந்திருந்தேயன்றி ஓர்உருவமும் தென்பட வில்லை. அதனால் உமாதேவியார் மனம் வாக்கு காயத்தால் மாதவம் செய்தே ஈசனை காண விழைந்தார். மனம் இறைவனைக் காண்பதையே குறிக்கோளாக கொண்டு இறைவனையே எண்ணியது. திருவாக்கு இடைவிடாது நரந்தரமாக திருவைந்தெழுத்தையே நிகழ்த்தியது. திருக்கைகள் சிரமேற் குவித்து கூப்பிய வண்ணம் அருந்தவம் செய்தன. இவ்வாறு சிவனையே தஞ்சமாக வைத்து அரும் தவம் ஆற்றினார்.
உமையம்மையின் தனிப்பெருங்கணவராக சிவபெருமான் தேவியாரின் அருந்தவத்தை கண்டு வாளாதிரு்பபாரோ? தேவியார் காணும் படி மாமரத்தினடியில் வந்து சிவலிங்கத் திருமேனியாக காட்சியாளித்தார். உமாதேவியார் தான் செய்த பெருந்தவத்தின் பயனாக ஏகம்பத்தில் எழுந்தருளிய
ஏகாம்பரநாதரைக் கண்டதும் திருவடிகளில் விழுந்து வணங்கி எழுந்தார். தன் நாதர் மீது அளவில்லாத காத் உள்ளூரப் பொங்கி எழுந்தது. தன் நாதர் உரைத்த ஆகம விதிப்படி அவரை பூசை செய்ய வேண்டும் என்ற விருப்பம் பெருக்கெடுத்ததால் தேவியார் அவ்வாறே பூசை செய்யத் தொடங்கினார்.
தன்சேடியர்களான கமலினியும், அனிந்தரையும் பூக் கூடைகளை ஏந்தி கொண்டு தன்னுடன் வர, தேவியாரின் திருவடியினையடிகள் ஓதுங்கி நடந்து அடியெடுத்து வைத்து அம்பிகாவனம் என்னும் திருநந்தவனத்திற்கு சென்று சிவ பெருமானுக்கு ஏற்ற தூய புது நறுமலர்கள் கொய்தனர். பின்பு அந்த நறுமலர்களால் காப்பிடச் சந்தனம் மற்றும் தூபதீபங்கள் முதலான பூசை சாதனங்களைக் கொண்டு வந்து தேவியார் விரும்பும்பேதெல்லாம் சேடியர்கள் எடுத்து ஏத்த சிவாகமங்கள் வாசித்தவாறே மெய்யன்போடு உலக மாதவான எம்பிராட்டி உமாதேவியார் பூசை செய்து வந்தார்.
இதைக்கண்ட ஏகாம்பரநாதர் திருவுள்ளம் மகிழ்ந்தார். அம்மையார் மீது கொண்ட பெருங்காதல் மிகுதியினால் ஒரு திருவிளையாடல் மூலம் திருவருள் புரிய எண்ணினார். ஏழு கடல்களும் ஒன்றாக திரண்டு வானம் முட்ட வருவது போலக் கம்பா நதியில் வெள்ளம் பெருகி வருமாறு செய்தார். அந்த பெருவெள்ளம் பொங்கிப் பாய்ந்து மேலெழுந்து ஓடி வருவதைக் கண்டதும் உமையம்மை பதறினார். அந்த பெருவெள்ளம் சிவலிங்கத்தின் மீது வந்து விடுமோ என்று பதறினார். தன் கையால் அவ்வெள்ளத்தை தடுத்து நிறுத்த முயன்றார். தன் நாயகராகிய சிவலிஙகத்தின் மீது வெள்ளம் கொள்ளாதிருக்க அன்பு மிகுதியால் சிவலிங்கத் திருமேனியை தம் திருமுலைகள் சிவனாரின் மார்பில் பதிய தமது வளைக்கரங்களினால் வளைத்து நெருக்கி இருக்கி கட்டி அனைத்து தழுவிக்கொண்டார். தம் தேவியின் கொங்கைகளும் தளிர் கைகளுக்கும் மெத்தென்று குழையும்படி தன் வலிமையான திருமேனியை குழைந்து காட்டினார். இது கண்டு அண்ட சராசரங்களிலுள்ள எல்லா உயிர்களும் உருகி எம்பிராட்டிக்கு மெல்லியரானார் ஏகாம்பரார் என்று போற்றித் துதித்தன. தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். கம்மையாற்றில் எழுந்த பெருவெள்ளம் உமையம்மையின் திருமு்ன் வந்து வணங்கி அடங்கியது. தம் தேவி தழுவியதால் மெய்ப்பயனை பெற்ற சிவலிங்கப் பெருமான் தமது திருமேனியில் கைவளைத் தழும்பும் முலைச்சுவடும் அணிந்து கொண்டார்.
பெருமாட்டியாரின் தலைவரான சிவபெருமானும், அப்பெருமாட்டியாரின் பூசையினைப் பெருவிருப்பத்துடன் மகிழ்வுற ஏற்று வரும்பொழுது, காதல் மிகுந்ததொரு திருவிளையாட்டால், அழகிய குண்டலங்களை அணிந்த அம்மையாருக்கு அருள் புரிந்திட வேண்டி, ஒலி பொருந்திய கடல் ஏழும் ஒன்றாகத் திரண்டு பெருகி ஓங்கி, வான் உலகுகளும் தன்னுள் அடங்கிடுமாறு பரந்து, மேல் செல்வது போன்று பெருகி வரும்படி, கம்பையாற்றை வெள்ளமாகப் பெருகும்படி தமது திருவுள்ளத்து நினைந்தருளினார்.
இதோ அதற்கான சேக்கிழார் பெருமானின் பாடல்கள்.
அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி
அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல்
விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம்
மீது வந்துறும் எனவெருக் கொண்டே
உண்ணி லாவிய பதைப்புறு காதல்
உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை
தண்ணி லாமலர் வேணி யினாரைத்
தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்
தலைவரான சிவபெருமான், அருளிய அக் கம்பையாற்றின் பெருவெள்ளத்தினை, அழகிய கயல் மீன் போலும் கண்களையுடைய பெருமாட்டியார் நோக்கித், தாம் பூசனை புரிந்தருளும் தம் பெருமான்மேல், வானும் அடங்குமாறு பெருகி வரும் பெருவெள்ளம் வந்து அலைக்கும் என அச்சம் கொண்டு, தம் திருவுள்ளத்து நிலவுகின்ற பதைப்புடைய காதலுடன், தம் திருக்கையால் அவ்வெள்ளத்தைத் தடுத்திடவும், அவ்வெள்ளம் நில்லாமையைக் கண்டு, பின்னர்ச் செயல் வேறின்றி, குளிர்ந்த பிறையினைச் சடையில் உடையாரைத் தம்மையே தமக்கு ஒப்பான பிராட்டியார், இறுகத் தழுவிக் கொண்டார்.
மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவநா யகரை
முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி
முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்
செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே
கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்
மலையரசன் மகளாராகிய பூங்கொடி போன்ற பெருமாட்டியார், தம் திருவுள்ளத்துப் பெருமானார் மீது கொண்ட அன்பு கெழுமிய அச்சத்தால், மாமரத்தின் அடியின் மேவி இருந் தருளும் தேவர் தவைரைத் தம் மார்பகமாகிய மலையோடு வளை யணிந்த கைகளால் இறுகத் தழுவிக் கொள்ளலும், அப்பெருமாட்டி யாரின் அன்பினை விரும்பும் சிவபெருமான் அதுபொழுது வில்லின் வனப்புடைய திருநெற்றியையுடையவரான பெருமாட்டியாரின் திருமுலைக்கும், சிவந்த தளிர்போலும் அப்பெருமாட்டியாரின் திருக்கரங்களுக்கும், மெத்தென்று இருக்குமாறு, கொலை செயும் யானைத் தோல் போர்த்த தமது திருமேனியைக் குழைந்து காட்டினார்.
பாடல் எண் : 65
கம்பர் காதலி தழுவமெய் குழையக்
கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான
உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம்
உயிரும் யாக்கையும் உருகியொன் றாகி
எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானார்
என்றும் ஏகம்பர் என்றெடுத் தேத்த
வம்பு லாமலர் நிறையவிண் பொழியக்
கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே
தம் காதலியார் தம்மைத் தழுவிட, ஏகம்பர் தமது திருமேனி குழைந்திடக் கண்டபோது, நிற்பனவும் இயங்குவனவும் ஆகிய தேவர்கள் முதலாக உள்ள எழுவகைத் தோற்றத்து எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்பட்ட உயிர்கள் எல்லாம், தம் உயிரும் உடலும் உருகி ஒன்றாகி எம்பெருமாட்டியாருக்கு என்றும் மெல்லிய ரானார் எம்பெருமான் என்று எடுத்து மொழிந்து போற்றிட, நறுமணம் பொருந்திய மலர்களை வானம் பொழிந்திட, அது பொழுது கம்பை யாறும் வணங்கித் தன் வெள்ளம் தணிந்தது
பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு
கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ்
வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு
வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார்
4.5.66
1149
. கோதிலா அமுது அனையவள் முலைக்
குழைந்த தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள்
வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணராய ஏகம்பர் விரை மலர்ச்
செய்ய தாமரை கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை
தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி
சிறந்த செல்வமாகிய தூய நீற்றினை அணிந்து, பொங்கிடும் கங்கை ததும்பும் முடியையுடைய சடையை அணிந்து, திருக்காதில் வெண்தோடும் திருமார்பில் உருத்திராக்கமாகிய கண்டி கையும் தாழ அணிந்து, தாம் அருளுடன் கலந்த யோகத்தில் பொருந்திய திருவுள்ளம் உடையராக, அவர் தோற்றமில் காலத் தவராக நின்றாலும், பெருமாட்டியாரின் பெருந்தவத்தால் ஆய வரம் தானோ பிறிதோ அறியோம்; உலகம் யாவற்றையும் உளவாக்கிய அம்மையார் தம் உடலின் பயனைக் கொடுப்பவே அதனைக் கொண்டு, அப் பெருமாட்டியாரின் அடையாளங்களாகிய வளைத் தழும்புடன் முலைச் சுவடும் அணிந்து கொண்டார் பெருமான்.
தேவியார் விரும்பிய வண்ணம் சிவபெருமான் அவரது பூசையை ஏற்றக் கொண்டார், காஞ்சியில் வாழ்பவர்கள் எத்தன்மையராயினும் அவர்கள் செய்யும் தீவினையும் மெய்நெறியினை அடைவதற்கு அவற்றையே மாதவங்களாக மாறும் படியும் வரம் கொடுத்தருளினார் எம்பெருமான்.
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக