சனி, 27 டிசம்பர், 2014

பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள " கோயில் நான்மணி மாலை " என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி" என்றார். மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச் செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார் பட்டினத்து அடிகள். பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: " எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." } எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும் " போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள். இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம். மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார் பட்டினத்துப் பிள்ளையார். வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத் தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே மாள்வர் சிலரையன்றோ தெய்வமாக வணங்குவதே.

பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம்

பாதாள லிங்கள்கள் எவ்வாறு தோன்றிருக்கலாம் மனதை அடக்கத் தெரிந்தவன் மகான் என்று கூறுகிறோம், நம்மால் மனதை அடக்க முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. சூழ்நிலை காரணமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கற்பனையில் மனதை சிதறவிட்டுக் கொண்டிருக்கிறோம், இன்றைய காலகட்டத்தில் மனதை அடக்கி ஆள்பவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள். அந்த காலத்தில் முனிவர்கள் சித்தர்கள் மனதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மகோன்னத நிலையை அடைந்தார்கள் என்று கேள்விப்படுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் சில சிவன் கோவில்களில் பாதாள லிங்கம் என்று பாதாளத்தில் ஒரு சன்னதி அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். அப்படிப்பட்ட கோவில்களில் ஒரு சித்தர் ஐக்கியமாகி இருப்பது தெரியவருகின்றன, மானிட சரீர ரகசியம் அறிந்தவர்கள் உடலை பிறர் கண்களுக்கு புலப்படாமல் மறைத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். மானிட சரீர ரகசியத்தை உலகத்துக்க யோக சூத்திரமாக அருளிய தவசித்தர் பதஞ்சலி முனிவர். முற்கால சித்தர்கள் தங்களின் தவயோக நிலையினை பாதாள குகைகள் அல்லது செயற்கையான குகைகள் அமைத்து அங்கு தங்களின் உடலை ஐக்கியமாக்கி கொண்டவர்கள் சித்திர் பெருமக்கள், இன்றைய காலகட்டத்திலும் அண்ணாமலையில் பாதாளலிங்கத்தில் யோகம் செய்தவர் தவ சீலர் ரமணர் என்பதை நாம் அறியலாம்,இவர்களுக்காக இறைவன் தன் காட்சிதந்து அவரைகள் முத்தியடையவும் சூச்சமயமான உலகில் இன்றும் உலகிவரவும் அருள்பாவித்துள்ளதை இன்றும்அறியலாம், தில்லையில் சிவத்தாண்டவம் காண்ட சித்தர்கள் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள விஷ்ணு பகவான் சிவபெருமானின் சிவத்தாண்டவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தததைக்கண்ட ஆதிசேஷனும் தானும் அம்பலவாணனின் சிவத்தாண்டவம் காண ஆவல்கொண்டான், சிவன் அவருக்கு காட்சி கொடுத்து "பூமியில் பதஞ்சலி முனிவராகஅவதாரம் எடுக்கும்போது தில்லையம்பலத்தில் சிவத்தாண்டவம் காணும் பேற்றினை கொடுப்பேன், என்று அருள்பாலித்தார். அதேபோல்தவம் இருந்த வியாக்கிரபாத முனிவருக்கும் அருளினார். வியாக்மகிரபாத முனிவர் சிபிசக்கரவர்த்தியின் சாபத்தால் அவயம் இழக்கப்பட்டார், மனம் நொந்த அவர் தில்லைவனத்தில் நந்தவ பூக்களைக்கூட மரம் கொடிகளில் பறிக்க முடியாமல் அவயம் இழந்ததமையால் கஷ்டப்பட்டார், அப்போது ஒரு அதிசயம் நடந்தது. அவருக்கு புலிக்கால்களும் இருளை ஊடுருவி பார்க்கும் ஒளி மிகுந்த கண்களும் இறைவனால் கிடைக்கப் பெற்றார், அப்போது அங்கே வந்த பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாதரும் தில்லைவனத்தில் நடராஜபெருமானை வழிபட்டு வந்ததால் அவர்களுடைய ஆசை நிறைவேறியது, சிவபெருமானின் சிவ தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள், இவர்கள் இருவரும் சித்தர்களாக போற்றப்படுகிறார்கள். திருச்சிற்றம்பலம் மேலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே 2

பட்டினத்துப் பிள்ளையார் அருளிச் செய்துள்ள பிரபந்தங்களுள் ,பதினொன்றாம் திருமுறையில் உள்ள " கோயில் நான்மணி மாலை " என்பதும் ஒன்று. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும். தில்லைச் சிற்றம்பலத்தே நடம் புரியும் ஆனந்த சபேசனைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே என்பார் அப்பர் பெருமான். அவன் புகழை எப்படிப் பேசுவது? அது அளவிடமுடியாத, எவராலும் சொல்லமுடியாத புகழ் அல்லவா என்றுகூடத் தோன்றும். அவனோ தோன்றாப் பெருமையன். வானோர்க்கும் அரியவன். மறைகளுக்கும் எட்டாதவன். அவன் புகழைப் பாடவோ பேசவோ புண்ணியம் வாய்ந்தவர்கள் உண்மை அடியார்கள் அல்லவா? அவர்கள் வாய் மூலமாவது ஒருசில புகழையாவது நாம் கேட்டு உய்யலாம். அது நமது பாவ வினைகளை ஓடச் செய்யும் சுலபமான வழிதானே! இதைத்தான் பட்டினத்தாரும், " வினை கெடக் கேட்பது நின் பெருங் கீர்த்தி" என்றார். மனித உடல் அன்றாடும் பாவக் குப்பைகளை சேர்க்க வல்லது. இதற்குக் " குப்பாயம் " என்ற பெயர் திருவாசகத்தில் காணப்படுகிறது. ஒழுக்கமின்மை, பொய், சூது , கடும் பிணிகள் ஆகியவற்றை ஏற்றி வினையாகிய மீகாமன் , கலத்தைச் செலுத்தும்போது, புலன்களாகிய சுறா மீன்கள் அதனைத் தாக்குகின்றன. பிறவியாகிய பெரும் கடலில் அதனைக் கொண்டு தள்ளத் துவங்குகின்றன. குடும்பம் என்ற நெடும் கல் விழுந்து அக்கலத்தின் கூம்பு முறிகிறது. உணர்வுகளாகிய பாய்மரம் கிழித்து எறியப்படுகிறது. கலமானது தலைகுப்புற விழ ஆயத்தமாகும்போது, " தெய்வ நாயகமே, தும்பை மாலையை விரும்பிச் சூடிய பன்னகாபரணா , தில்லை அம்பலவாணா , உனது அருளாகிய கயிற்றைப் பூட்டி , இக்கலம் கவிழாமல் காத்து அருள்வாயாக " என்று மனதாரப் பிரார்த்தனை செய்கிறார் பட்டினத்து அடிகள். பெருமானது புகழ் எப்படிப்பட்டது? பட்டினத்தார் அருளுவதைக் கேட்போம்: " எல்லா சராசரங்களும் உன்னிடத்துத் தோன்றி உன்னிடத்தில் அடங்குவன. ஆனால் நீயோ ஒன்றினும் அடங்காதவன். தோன்றும் பொருள் அனைத்திலும் நீயே நீக்கமற நிற்கின்றாய். நின்பால் எனக்கு அன்பு பெறுவதற்கு நீயே அருளல் வேண்டும். உன் அருட் செல்வம் கிடைத்துவிட்டால் வேறு எனக்கு என்ன வேண்டும்? நின் தெய்வக்கூத்தையும், எடுத்த பொற்பாதத்தையும் கண்ட கண்களுக்கு வேறு ஒரு பேறு உளதோ? உன்னை நினைப்பதே சிறந்த தவம். { " தில்லை நகரில் செம்பொன் அம்பலம் மேவிய சிவனை நினைக்கும் தவம் சதுராவதே." } எனினும் ,எளியேனது சிந்தையில் தேவரீர் தோற்றுவித்தபடி , " நான் முகனின் தந்தையாம் திருமாலுக்குச் சக்கரம் கொடுத்ததையும், குபேரனுக்குச் சங்கநிதியையும்,பதும நிதியையும் கொடுத்த வள்ளன்மையையும், மார்க்கண்டனுக்காகக் காலால் காலனைக் கடந்ததையும், உலகம் யாவற்றையும் ஆல நஞ்சு அழிக்க வந்தபோது, அதனை அமுதாக உண்டு காத்த கருணையையும் ஒருநொடியில் மூன்று புரங்களையும் எரித்த வீரத்தையும் , தாருகா வன முனிவர்கள் ஏவிய யானையைப் போர்த்த பெருமையையும் , பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்த திருவிளையாடலையும் , கயிலையை எடுத்த அரக்கனது ஆணவத்தை அடக்கி அவனுக்கு இரங்கியதையும், தாதையின் தாளைத்தடிந்த வேதியச் சிறுவனுக்கு அருளி, அவனுக்குச் சண்டீச பதம் தந்ததையும், சிறுத் தொண்டர் மனையில் உண்டு பேரருள் செய்ததையும்,வேதாரண்யத்தில் விளக்கைத் தூண்டிய எலியை அரசனாக்கிய கருணையையும், கங்கையும் பாம்பும் செஞ்சடையில் பகைதீருமாறு ஒருசேர வைத்த பண்பையும் மலையான் மகளுக்குப் பாகம் ஈந்த பெருமையையும் , தில்லையில் " அம்பலத்து ஆடும் நாடகத்தையும் " போற்றுவதற்கு அடியேனுக்கு ஆற்றல் இல்லை . என்றாலும் ஆசையால் இவ்வாறு போற்ற எண்ணினேன். " என்கிறார் அடிகள். இத்தனை பெருமையும் ,கருணையும் வாய்ந்த ஒப்பற்ற கடவுளைத் தொழாது வேறு கடவுளர்களைத் தொழுவோரும் உளரே என்கிறார் அவர். அப்படிச் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை. ஆல நஞ்சு எழுந்தபோது எந்தத்தேவரும் அதனை எதிர்க்கவோ, பிறரைக் காக்கவோ முடியாதபோது, கயிலை நாயகனையே சரண் அடைந்தனர். அவ்வாறு நஞ்சுண்டு அவர்கள் காக்கப்பட்டிராவிட்டால் அப்போதே மாண்டிருப்பார்கள் அல்லவா? ஆகவே, கருணைக்கடலான நீல கண்டனைத் தொழுவதே நன்றியுடையவர்க்கு அடையாளம். மறைகளின் பிறப்பிடமாகவும், மறையோர்கள் தங்கள் கதி எனத் தொழப்படுவனுமான தில்லைக் கூத்தனை வணங்குவதே முறையாகும் என்று நம்மை எல்லாம் நல்வழிப்படுத்துவார் பட்டினத்துப் பிள்ளையார். வாழ்வாகவும் தங்கள் வைப்பாகவும் மறையோர் வணங்க ஆள்வாய் திருத்தில்லை அம்பலத்தாய் உன்னை அன்றி ஒன்றைத் தாழ்வார் அறியாச் சடில நஞ்சுண்டிலை ஆகில் அன்றே மாள்வர் சிலரையன்றோ தெய்வமாக வணங்குவதே.

ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே

ஈசனை பேசா நாள் எல்லாம் பிறவா நாளே பெறுதற்கரிய பிறப்பு மானிடப்பிறப்பு, அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது, அவ்வாறு பிறந்தாலும், கூன், செவிடு, குருடு அற்று பிறப்பது அரிது, என்பது அவ்வையின் திருவாக்கு. இப்படி பெறுதற்கரிய மானிடப் பிறப்பை பிறந்து விட்டால் அப்பிறப்பில் செய்யத பாவ கர்ம வினைகளையும், முற்பிறப்பில் பெற்ற பாவ கர்மங்களையும், இப்பிறப்பு புண்ணியத்தால் ஈசனை நினைந்து, தொழுது, புகழ்பரப்பி நம்பாவ கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள வேண்டும், வள்ளல் பெருமானும் ஈசனை " அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும், எப்போதும் எங்கு சென்றாலும், எவ்வேளையிலும், உன்னை மறவாமலும், உனது புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமென இறைவனிடம் வேண்டினார், இதன் நிமித்தமாக பட்டிணத்து அடிகளார் ஈசனை - நமச்சிவய மந்திரத்தை - நினையாமலும், கற்காமலும் சொல்லாமலும் இப்பிறப்பில் இருந்ததை மன்னித்து அருள கச்சியப்ப ஏகாம்பர நாதனை வேண்டும் பாடல் " கல்லாப்பிழையும், கருதாப்பிழையும், கசிந்துருகி நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின் அஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி யேகம்பனே." ஈசனுடைய திருநாமமாகிய நமசிவாய என்ற அஞ்செழுத்தை கல்லாததும், கருதாததும் கசிந்துருகாமலும் நினையாமலும், அனுதினமும் இமைப்பொழுதும் சொல்லாததும், துதியாததும், தொழாததும் ஆகிய எல்லாப்பிழைகளையும் பொறுத்தருள வேண்டுக்கூறுகிறார், எனவே இறைவனுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லாமல்இருப்பது பிழையாகும் , அப்படி பிழைகள் செய்து நம் கர்ம வினைகள் இப்பிறவியிலும் மேலும் மேலும் சேர்ப்பது பிறப்பின் பயனை ஏய்த முடியாது, நம் பாவ வினைகள் கழியாது, இப்பிறப்பிலும் முற்பிறப்பிலும் நம் பாவ கர்மங்களை களைய ஈசனை திருஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவ மந்திரத்தை இமைப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருந்தால் நம் கர்ம வினைகள் அதற்கொப்ப களையப்படும், இவ்வாறு இல்லை யெனில் அரிதற்கரிய இம்மானிட பிறப்பை பிறந்தும் பிறவா நிலையைத்தான் நாம் பெற்றதாவோம் என்று அப்பர் பெருமானார், 6ம் திருமுறையில் தில்லையம்பலனை வேண்டி பாடிய திருத்தாண்டப்பதிகம் பாடலில் "கற்றானைக் கங்கை வார்சடையான் தன்னைக் காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆருரும் புகுவானை அறிந்தோம் அன்றே மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதனை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவவா நாளே. எல்லாம் வல்லவன் கங்கையை கொண்டவன், நீண்ட சடையை உடையவன், காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சூழி என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவன், பொருள் அற்றவருக்கும், அலந்தாருக்கும் அருள்பவன், தனக்கு உவமை இல்லாதவன், தேவர்களால் வணங்கி போற்றப்படுபவன், திருவாரூரில் உகந்து தங்கி யிருப்பவன் ஆகிய எம் பெருமானை எல்லோருக்கும் மேலானவன் என்று தெரிந்தும், அப்பேர்பட்ட எம்பிரானை - ஈசனை - அவன் நாமமாகிய நமச்சிவ எனும் மந்திரத்தை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே, திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

வியாழன், 25 டிசம்பர், 2014

திருமுறை தேவாரப்பாடல் கூறும் சுகப் பிரசவம்

திருமுறை தேவாரப்பாடல் கூறும் சுகப் பிரசவம் பெண்கள் பிள்ளை பேறு காலங்களில் சுகப் பிரசவம் அடையும் பொருட்டும், பிள்ளைப்பேறு பெறு அடையும் பொருட்டும் ஞானசம்பந்தர் தேவாரப்பாடல்களில் இதற்காகவே சில பதியங்கள் முக்கிய திருத்தலங்களில் பாடியுள்ளார், கருவுற்ற தாய் மார்களின் கருவேலைப்பளுவினாலோ, பயத்தினாலோ, விதி வசத்தினாலோ, கலையாமல் பாதுகாத்துத் தரும் அற்புதப்பதியங்களில் ஒன்று திருக்காவூரில் எழுந்தருளியுள்ள கர்ப்பபுரீஸ்வரர் உடனுறை கருக்காத்த நாயகி ஐ வேண்டி பாடியுள்ள இப்பதிக பாடல்களை கருவூற்ற பெண்கள் பாராயணம் செய்து அனுதினமும் பாடி பூசித்து வந்தால் சுகப்பிரசவம் அடைவார்கள் என்பது தொன்று தொட்டு நம்பப்படும் தெய்வ நம்பிக்கை. "முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவவே மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக் கத்தை போர்த்த கடவுள் கருவாவூர் எம் அத்தர் வண்ணம்அழலும் அழல் வண்ணமே." முத்துப் போன்ற புன்னகை உடைய உமாதேவியார்அஞ்சும்படியான யானையின் தோலினை ஆடையாக அணிந்துள்ள திருக்காவூரில் எழுந்தருளியுள்ள ஈசனார், நெருப்பை ஒத்த செஞ்சனல் கொண்ட சென்னிறம் கொண்டவர் ஆவார், "வெந்த நீறு மெய் பூசிய வேதியன் சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் கந்த மெளவல் கமழுங் கருகாவூர் எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே." திருநீறு மெய் முழுவதும் பூசியுள்ள வேதியன் என் ஈசன், சிந்தையில் இருத்தி நினைக்கின்றவர்களின் மனத்தில் நின்று அவர்கள் விரும்பும் செல்வத்தை அருள்புரிபவன், நறுமணம் கமழும் முல்லை மலர்கள் பூத்திருக்கும் திருக்காவூரில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையான ஈசன், எரிகின்ற செந்தணலின் செந்தீயின் நிறத்தை கொண்டவன், மேலும் மற்றும் திருத்தலமான சிற்றேமம் என்னும் சிவத்தலத்தில் பாடியுள்ள பதிகப்பாடல்கள் மூலமும் சுகப்பிரசவமும் பிள்ளைப்பேறும் கிடைக்கும் என்பதை அங்கு நடந்த வரலாற்று கதை வழியாகவும் நம்பப்படுகிறது. இத்தலம் திருஞானசம்பந்த சுவாமிகளால் பாடல் பெற்றதலமாகும, சிற்றேமம் என்ற தலத்தில் வாழ்ந்த வணிகர் பொருளீட்டும் பொருட்டு வேறு நாடு சென்றார் , அச்சமயம் அவர் மனைவி கருவுற்றிருந்தாள், அப்பெண் சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள், கணவன் வருவதற்குக் காலம் கடந்தமையால் வாழ்க்கை நடத்த இவளல் இயலவில்லை, இறைவனிடம் மனம் ஒன்றி வழிபட்டு முறையிட்டாள், நாள்தோறும் ஒரு பொற்காசு வைத்துஉதவினார் இத்தலத்து ஈசன், ஆதலால் இவருக்கு பொன்வைத்த நாதர் எனப் போற்றப்படுகிறார், இறைவி அகிலாண்ட ஈசுவரியம்மன், பிள்ளைப் பேற்றுக்காலம் வந்ததும் இறைவருடைய ஆணைப்படி இறைவி, அகிலாண்டேசுவரியே தாயாக வந்து உதவி செய்தாள் என்பது அத்திருத்தலத்தின் வரலாறு. இத்தலத்து பதிகத்தை கருவுற்ற தாய்மார்கள் அன்றாடம் படித்து வந்தால், இறையருளால் பிள்ளைப்பேறு இனிதே எளிதாக நடைபெறும் என்பது தின்னம். " நிறைவெண்திங்கள் வாள்முக மாதர் பாட நீள்சடைக் குறைவெண்திங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான் சிறைவண்டுயாழ்செய் பைம்பொழிற் பழனம்சூழ் சிற்றேமத்தான் இறைவன் என்றே உலகெலாம் ஏத்தநின்ற பெருமானே," முழுநிலவு போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட சடை முடியில் பிறைச் சந்திரனை அணிந்து நடனம் ஆடும் இயல்புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்ற ஒலிக்கும் பசுமையான சோலைகளும் வயல்களும் சூழ்ந்த சிற்றேமத்தில் வீற்றிருக்கும் இறைவர், உலகெலாம் ஏத்திப்போற்றுகின்றசிவபெருமானார் ஆவாரே, திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை

பன்னிரு திருமுறைகளின் பாடல்கள் பாடுவதன் பெருமை திருமுறை பாடல்கள் யாவும் அறிவு கொண்டு பாடப்பட்டவை அல்ல, அவை சிவபெருமானாரே தக்க அருளாளர்கள் மூலமாக பாடியவை என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். "வேந்தன் அருளாலே விரித்த பாடல் இவை" இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட அருளாளர்கள் சீவபோதம் (மனித உணர்வு ) அகன்று , சிவபோதத்தில் ( இறை உணர்வு ) மூழ்கிய நிலையில் பிறந்தவை திருமுறைப்பாடல்கள். இந்த உண்மையை திருஞானசம்பந்தர் திருவாக்கினால் அறியலாம். "தன்இயல்பு இல்லா சண்பையர் கோன் சீர்ச்சம்பந்தன் இன்னிசை ஈரைந்து " முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய சிவபரம் பொருளால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய கருணை வெள்ளத்தில் மூழ்கி திளைத்த அருளாளர்கள் தாம் பெற்ற பேரின்பத்தினை நாமும் பெறுதல் வேண்டும் என்னும் நல்ல உயர்ந்த நோக்கத்துடன் அருளப்பட்டவைதான் தேவாரத்திருமுறைகள். அந்த அருளாளர்கள் பெற்ற பேரின்பம் அவர்களுடைய உள்ளத்தினின்றும் தோத்திரப்பாடல்களாக ஊற்றெடுத்து பெருவெள்ளமாக தமிழகம் எங்கும் பரவி ஓடியது. இப்பாடல்கள் யாவும் மனித இனம் நலம் பெறுவதற்காகவே இன்றளவும் நின்று நிலவுகின்றன. தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடுவதால், 1, இறையருள் தானே கைகூடும் என்கிறார் திருஞானசம்பந்தர் " பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே" என்கிறார் தமிழ் திருமுறைப்பாடல்களை மனம் கசிந்து பாடியும் தம்மை மறந்து ஆடுதலையும் செய்யும் அன்பர்களுக்கு சிவபெருமானார் தாமே முன்னின்று அருள் புரிவார். 2, நம்முடைய வினை விரைவில் நீங்கிவிடும் " பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே" - சம்பந்தர் கடவுளை வணங்கம் பொழுது பாடல்கள் பாடி வணங்க வேண்டும் என்கிறார் சம்பந்தர், நமக்காக பிறரைப் பாட செய்வது வழிபாடு ஆகாது, நமக்காக பிறர் சாப்பிட முடியாதன்றோ! நம் வாயினால் பாடி பணிந்தால் நம்முடைய வினைகள் விரைவில் நீங்கிவிடும் 3, சிவகதி (பிறவாமை ) கிடைக்கும் " ஞானசம்பந்ன் சொல் சித்தம் சேரச் செப்பு மாந்தர் தீவினை நோயிலராய் ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவாரே" " அந்திவண்ணன் தன்னை அழகார் ஞானசம்பந்தன் சொல் சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே" மனம் ஒன்றே வேண்டும் என்கிறார் சம்பந்தர், மனம் பாடலில் திளைக்க வேண்டும், அப்படி பாடினால் தீவினைகள் நீங்கும், தேவர் உலகில் இன்பமாய் வாழ்ந்து பிறப்பும் இறப்பும் இல்லாத சிவப்பேற்றை (சிவகதி) அடையலாம். 4. மறுபிறப்பு இல்லையாகும், திருஞானசம்பந்தரிடம் ஒருவர் " இறவாமலிருக்க வழி சொல்லுங்கள் " எனக் கேட்டார். அதற்கு சம்பந்தர் " இது என்ன பெரிய காரியம் பிறவாமல் இருந்தால் இறப்பு வராது" என்றார், அவர் பிறவாமலிருக்க வழியை கூறுங்கள் என்றார் " தமிழ் வேத திருமுறைப்பாடல்கள் பாடிக்கொண்டு வந்தால் மீண்டும் பிறப்பு இல்லையாகும், " என்றார் சம்பந்தர் "கடியார்ந்த பொழிற் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே" வந்தால் போக வேண்டும் வாங்கினால் கொடுக்க வேண்டும், பிறந்தால் இறக்க வேண்டும், பிறக்க வில்லை என்றால் இறக்க வேண்டியதில்லை அல்லவா? 5, பாடுவர்கட்கு அருளும் வகைகள் எல்லை இல்லாதன விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும் துளக்கில் நல்மலர் தொடுத்தால் தூயவிண் ஏறலாம் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும் அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே" - அப்பர் அடிகளார் சிவாலயத்தை பெருக்கித் தூய்மை செய்பவர் வாழ்வில் துன்பம் ஒழிந்து இன்பமடைவர் சிவாலயத்தை மெழுகினால் பெருக்குவதால் கிடைக்கும் பயனைவிட பத்து மடங்கு அதிக நலம் பெறலாம் அன்று மலர்ந்த தூய, நறுமண மலர்களை எடுத்து மாலையாக்கி சாத்துவோர் மேலான சிவலோக வாழ்வை பெறுவர் இறைவரை வாயார வாழ்த்தி பாடல்கள் பாடினால் அளவில்லா நலன்களை இறைவர் அருளுவார் " கீதம் சொன்னார்க்கு அளப்பில் அடிகள் தாம் அருளுமாறே" என்றாகும் 6. எல்லாவகை செல்வங்களையும் பெறலாம் "செல்வன்ஞானசம்பந்தன் செந்தமிழ் செல்வமாம் இவை செப்பவே" - சம்பந்தர் அருட்செலவராக விளங்கும் ஞான சம்பந்தர் அருளிய இச் செந்தமிழ் பாடல்களை பாடினால் எல்லா வகை செல்வங்ளையும் பெறலாம். அருட்செல்வம், பொருட்செல்வம், மக்கட் செல்வம, முத்திச் செல்வம் ஆகிய யாவற்றையும் பெறலாம், இம்மையில் பொருட்செல்வத்தையும் மறுமையில் முத்திச் செல்வத்தையும் அளிக்கும் அளவிலா ஆற்றல் உடையவை தமிழ் வேத திருமுறை தேவாரப் பாடல்கள் வாயாரப்பாடுவோம்! வளங்கள் பல பெறுவோம் !! திருச்சிற்றம்பலம் நன்றி : தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.