எல்லாம் சிவனென்ன நின்றாய்
ஆதி மூலம் ஆன சிவனே அவரவர் குலதெய்வமாகவும், ஆங்காங்க உள்ள சிறு தெய்வமாகவும் உள்ளார். நாம் வழிபடும் குலதெய்வ வழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் சைவசமயத்தவரிடம் மட்டுமே காணப்படுவதை நாம் அறியலாம், எல்லாம் சிவமாக காண்பதால் தான் சிவராத்திரியன்று குலதெய்வ வழிபாடும் ஆங்காங்க உள்ள சிறுதெய்வ வழிபாடும் சிறப்பாக அன்றுதான் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆதியில் பல குழுக்களாக வாழ்ந்துள்ள நம் முன்னோர்கள் அவரவர்களின் தம்முள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொண்டும் அவரே அக்குழுவை முன்னின்று காத்து வந்தமையால் அவனை நினைத்து வணங்குவது சிறுதெய்வ வணக்கம். இவையே பிற்காலத்தில் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. தம்குலத்தில் வாழ்ந்து மறைந்த ஒருவரை நினைத்து அவர் வழிவந்தோர் அவரை வணங்கியுள்ளனர். அவர் தன் குலத்தை காக்கிறார். அது குலதெய்வ வணக்கமாகிறது. இதுபோல ஊர்காவல் தெய்வங்கள் பல உள்ளன இவையும் முத்தி என்னும் வீடுபேறு தர இயலாதன ஆகவே இவை சிறுதெய்வங்களாக எண்ணப்டுகின்றன. ஊரைக்காப்பது ஊர் காவல் தெய்மாகி வழிபட்டு வந்துள்ளது.
ஒருவருக்கு சிறுதெய்வமான ஒன்று மற்றொருவருக்கு குலதெய்வமாகிறது. அதுபோல ஒருவருக்கு குலதெய்வமாக உள்ளது மற்றெருவருக்கு சிறுதெய்வமாக ஆகிறது. நம் முன்னோர் வணங்கிய குலதெய்வத்தை நாமும் வணங்கவது இயல்புதானே. நமது ஊர்காவல் தெய்வத்தையும் நவக்கிரகங்களையும் வணங்குவதில் தவறில்லை. வணங்குதல் வேறு; வழிபடுதல் வேறு, சிவராத்திரியில் நள்ளிரவில் அனைத்து சிவலிங்கங்களிலும் சிவன் எழுந்தருள்கிறார். அனைத்து சிறு தெய்வங்களையும் அன்று வணங்குகின்றனர். ஆகவே அனைத்து சிறு தெய்வ மேனியிலும் சிவனே இறங்குகின்றார் எனவே நம் குலதெய்வ மேனிகளையும் சிவவடிவமாகவே பாவித்து வணங்க வேண்டும். அப்படி வணங்கும்போது அவ்உருவில் நம் அளவில் சிவனே வந்திறங்கி அருள்வான். அப்போது அந்த தெய்வங்களளே மகிழும்.
இதையே " யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்" என்கிறார் சிவஞான சித்தர். இதை அப்பரும் " எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி " என அருளி செய்துள்ளார். நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அவ்வடிவில் அத்தெய்வமாக வருவது மாதொரு பாகனாகிய சிவபெருமான்தான் என்கிறது சிவஞான சித்தியார். எல்லா வடிவும் அவன் வடிவுதான் எதனுள்ளும் உள்ளீடாக இருப்பதும் அவன்தானே. கோபுரத்தை வழபடும்போது கோபுர வடிவில் உள்ள சிவனையும், திருவண்ணாமலையில் மலையே சிவமாக எண்ணி வழிபடவதை நாம் அறியலாம். அதுபோன்றே குலதெய்வத்தை வழிபடும் போது அதனுள் உள்ள சிவனருளையும் கண்டு வழிபட்டால் அதுவும் சிவவழிபாடாக மாறிவிடும். இதனையோ லிங்கத்தை வழிபடுவதால் அதனுள் உள்ள சிவத்தை , அருளை உணர்ந்து வழிபடுவது சிறந்தது. அதுபோலவே ஓர் உருவத்தை வழிபடுவதைவிட அவ்வுருவில் உள்ள சிவனருளை கண்டு வழிபடுவதே சிறந்தது. அதுவும் சிவ வழிபாடே . உயிரின் பக்குவ நிலையை இதன்மூலம் அறியலாம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக