வியாழன், 2 ஏப்ரல், 2015

இந்து வழிபாட்டு தத்துவங்கள்


இந்து வழிபாட்டு தத்துவங்கள் நமஸ்காரம் செய்தல்; நாம் சிவலாயத்தில் நுழைந்தவுடன் கொடிமரத்தின் அருகிலுள்ள பலிபீடத்தில் ஆன்கள் அஸ்டாங்க நமஸ்காரம் செய்தல் / அஸ்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் பூமியில் படும்படி நமஸ்காரம் செய்தல் வடக்கு பக்கம் தலை வைத்து, எட்டு அங்கங்கள் தரையி்ல் படும்படி வணங்குதல் வேண்டும், பெண்க்ள பஞ்சாங்க நமஸ்காரம் / அதாவது 5 உறுப்புக்கள் தலை, இருகை, இருகால் என்ற அங்கங்கள் தரையில் படும்படி வணங்குதல், பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர், இப்படி செய்வதால், நம் மனத்தில் , உள்ள காமம், ஆசை, குரோதம், லோபம், பேராசை, மத, மாச்சர்யம் என்னும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுத்ததாக உறுதி செய்வதாகும், இந்து வழிபாட்டு முறைகள் தத்துவங்கள் பிள்ளையார் முன்பு ேபாடும் தோப்புக்கரணம் நாம் பின்பற்றும் தெய்வீக வழிபாட்டில் பிள்ளையார் முன் போடும் தோப்புக்கரங்களின் தத்துவங்கள் நம் மனம், புத்தி, சித்தம் அகங்காரம், எனப்படும் குணங்களை ஓம் என்னும் மூலப்பொருளாகிய பிள்ளையாரின் முன்பு சமர்ப்பித்து தோற்பதுதான் தோற்புக்கரணம் என்றனது. இறைவனாகிய பிள்ளையார் நாம் செய்த தவறை உணர்ந்து நினைந்து வந்த காரியங்களை நிறைவேற ேவண்டும் என்பதற்காக தான் தோப்புக்கரணம் போடுகிறோம், இந்த தோப்புக்கரணம் 3 மூறை போட வேண்டும், மேலும் தம் தவறை உணர்த்தி மன்னிப்பு கேட்கும் முகத்தான் தலையின் இருபக்கங்களிலும் கைகளை பின்னலாக்கி வலது பக்கம் இடது கையாலும், இடது பக்கம் வலது கையாலும் தலையில் குட்டிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக