வெள்ளி, 10 ஏப்ரல், 2015


உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் அரிக்கேன் விளக்கு அரிக்கேன் என்னும் சொல் ஒரு புயலைக் குறிக்கும் பெயர். அந்தப் புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணை விள்க்கு தான் அரிக்கேன் விளக்கு என்று பெயர் வந்தது. ********************************************************** கதர் கதர் என்பது அரபு மொழிச் சொல்லாகும், அதற்கு கவுரவம் என்பது பொருள். கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை சுதந்திர வீரரான முகம்மது அலி காந்தியடிகளுக்கு போர்த்தி இதை கதராக (கவுரமாக) ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் தான் நூற்பு ஆடை "கதர்" என்று அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் சிசேரியன் ரோம் நாட்டில் ஜூலியஸ் சீசர் பிறந்த போது, அவனது தாயின் வயிற்றில் அறுவை செய்து தான் குழந்தையை எடுத்தார்கள். அதனால் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு அவனது பெயரே " சிசேரியன்" என்று நிலைத்து விட்டது. ************************************************************************* ரூபாய் ரூபாய் .. ரூபி என்பது ஆங்கிலச் சொல் அல்ல. சமஸ்கிருதச் சொல் "ராப்யா " என்பேத ரூப்யாவாகி, ரூபாய் ஆகியுள்ளது,ராப்யா என்றால் வார்ப்பட வெள்ளி என்று பொருள். மன்னர் ஷெர்ஷா தான் முதலில் கி,பி. 1538..1545 ரூபியா என்ற பெயரில் ெவள்ளிக் காசுகளை வெளியிட்டார். ஆப்பிரி்க்கா ஆப்பிரிக்கா என்றால் " வெயில் நிலம் " என்று பொருள் உங்களுக்கு தெரியுமா? சொற்கள் சொல்லும் சுவையான செய்திகள் ஆங்கிலச் சொற்கள் 1 முதல் 99 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c,d எழுத்துக்கள் கிடையாது, 100 (Hundred)எழுதும் போது மட்டும் 'd' வரும். 1 முதல் 999 வரை வரும் ஆங்கிலச் சொற்கள் எதிலும் a,b,c, எழுத்துக்கள் கிடையாது, 1000 (Thousand )எழுதும் ேபாது தான் a வரும் b என்னும் எழுத்து முதன் முதலாக billion மட்டும் வருகிறது. மொத்த எண்ணிக்கையிலும் ஒரு ஸ்பெல்லிங்கில் கூட வருவதில்லை. ************************************************************************* கபடி கபடி என்பது ஒரு விளையாட்டின் பெயர். இந்த விளையாட்டில் எதிர் அணியினரை நோக்கி "கபடி" கபடி" என்று பாடிக் கொணடு செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது கையைப் பிடித்தோ , காலை பிடித்தோ வந்தவரை வெளியேற்றுவது வழக்கம். அப்போது சொல்லப்படும் " கையைப்பிடி" என்று சொல்லப்படும் வார்த்தை "கைப்பிடி" என்று மருவி , கபடி என்று சுருங்கி, அதுவே விளையாட்டின் பெயராகவும் நிலைத்து விட்டதெனவும் கூறப்படுகிறது. இது தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு எனவே இது ஒரு தமிழ் சொல்லின் சுருக்கமே என்பதாகும். ****************************************************************************************************** உங்களுக்கு தெரியுமா? ெசாற்கள் சொல்லும் சுவையான செய்திகள் நீலப்புத்தகம் பிரிட்டிஷ் அரசின் அலுவலக அறிக்கை "நீலப்புத்தகம்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் புத்தகம் ஜெர்மனி மற்றும் சீனாவின் அலுவலக அறிக்கை " வெள்ளை புத்தகம் " என்னும் பெயரி்ல் அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு புத்தகம் நெதர்லாந்தின் அலுவலக வெளியீடுகள் அனைத்தும் " ஆரஞ்சு புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள் புத்தகம் பிரான்சின் அலுவலக வெளியீடுக்ள் அனைத்தும் " மஞ்சள் புத்தகம்" என்று அழைக்கப்படுகிறது சாம்பல் புத்தகம் ஜப்பான் மற்றும் பெல்ஜியம் அலுவல வெளியீடுக்ள் " சாம்பல் புத்தகம் என அழைக்கப்படுகிறது. சிவப்பு புத்தகம் ஒரு நாட்டில் தடை செய்யப்பட்ட நூல் " சிவப்பு புத்தகம்" என அழைக்கப்படுகிறது பச்சை புத்தகம் இத்தாலி மற்றும் ஈரானின் அலுவலக வெளியீடுகள் பச்சைபுத்தகம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளை அறிக்கை அதிகார பூர்வ உண்மைகள் பற்றி அரசு வெளியிடும் சிறு கையேடு " வெள்ளை அறிக்கை " எனப்படுகிறது. **********************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக