வெள்ளி, 17 ஏப்ரல், 2015

நாயன்மார் வரலாறு - கலிக்காம நாயனார்


நாயன்மார் வரலாறு - கலிக்காம நாயனார் பகைமையிலும் நட்பானவர் நெற்றிக்கண்ணை திறந்து சுட்டாலும் குற்றம் குற்றமே என்று எதிர் கொண்டார் நக்கீரர் திருவிளையாடல் புராணத்தில், தன் காதல் வசத்தால் தனக்காக இறைவனையே பெண்ணிடம் தூது அனுப்பினார் - ஆருரார் என்ற சுந்தரமூர்த்தி நாயனார். சிவனாடியார் இறைவரின் நண்பராக அன்பு செலுத்திய போதிலும், அவர் அடியாருக்கும் அடியவராக விங்கிய போதிலும், அவ்வடியார் மேல் சினம் கொண்டு இறைவரே தனக்கு சூலை நோயை தந்து துன்புறுத்திய போதிலும், ஆருராரிடம் நட்புக் கொள்ளவோ அவரை சென்று சந்திக்கவோ மறத்தவர் - எதிர்த்தவர் , இச்செயலைக் கண்டு சீற்றம் கொண்டும் தனக்கு இறைவரால் சூலைநோய் கண்டும் வெகுண்டு , அன்னாரிடம் பிணக்கு கொண்டார் கலிக்காம நாயனார். சோழ நாட்டில் காவிரியின் வடகரையில் மங்கலக்குடி எனும் தலம் உள்ளது, இதன் அருகே வைத்தீசுவரன் கோயிலும், திருப்புன்கூரும் உள்ளன. மங்கலக்குடி எனும் ஊரில் வேளாளர் குலத்தில் ஏயர் குடியில் கலிக்காமர் அவதரித்தார். ஏயர் குடியினர் சோழ மன்னரின் சேனாபதிகளாக இருந்து வந்தவர்கள். கலிக்காமர் அடியார் சிவபக்தியில் சிறந்து விளங்கினார், சிவனாடியார்களை பணிந்து அவர்கள் இட்ட பணிகளை செய்து மகிழ்ந்து வாழ்ந்து வந்தார். "தங்கள் நாயகர் அடிபணி வார்அடி சார்ந்து பொங்குகாதலின் அவர்பணி போற்றுதல் புரிந்தார்" என்கிறார் சேக்கிழார் திருப்புன்கூரில் உள்ள சிவலாயத்திற்கு அளவிலாத் திருப்பணிகள் செய்தார். இடையறாத சிவசிந்தனையுடன் வாழ்ந்து வந்தார். அந்நாளில் திருவாரூரில் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை தன் இல்வாழ்வு பிணக்கு நீங்க பரவையாரிடம் இரவிலே தூது அனுப்பிய செய்தியை க் கலிக்காம நாயனார் கேள்வியுற்றார். உள்ளம் வெகுண்டார், இறைவரை பெண்ணிடம் தூது அனுப்புவது எவ்வகையிலும் முறையன்று என்று எண்ணிக் கொதித்தார். தூது அனுப்பியவரைக் கண்டால் யாது நிகழுமோ? என்று பலப்பல நினைந்து சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் பகை கொண்டிருந்தார். கலிக்காம நாயனாருடைய சீற்றத்தை கேள்வியுற்றார் சுந்தரமூர்த்தி நாயனார். ஒரு சிறந்த சிவனடியார் தம் மீது சினம் கொண்டிருப்பதை கண்டு மிகவும் வருந்தினார். அவரது சினத்தை போக்கி நட்புக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார், ஆரூரார், கலிக்காமர் என்மீது கொண்டுள்ள பிணக்கை தேவரீர் தீர்த்தருள வேண்டும் என்று நாள்தோறம் முறையிட்டு வந்தார். ஏயர் கோன் கலிக்காமருக்கு கொடிய சூலை நோயை அருளி, ஆரூராரை சந்திக்க நிலையினை உண்டாக்கினார், ஆனால் கலிக்காமரோ தனக்கு கொடுமையான சூலை நோயினையும தாங்க மாட்டாமல் சிவபெருமானை வேண்டினார், அதற்கு சிவனார் " கலிக்காமரே! உன்னை வருத்தும் சூலை நோய் திருவாரூரில் உள்ள சுந்தரன் வந்து தீர்த்தாலன்றி நோய் நீங்காது " என்று நீலகண்ட பெருமான் கலிக்காமருக்கு முன் மொழிந்தருளினார். பெருமானே என் தந்தை, தந்தைக்கு தந்தை என்று வழிவழியாக தேவரீருக்கு திருத்தொண்டு புரிந்து வரும் குடியில் வந்த பழைய அடியவன் நான், அண்மையில் தங்களால் ஆட்கொள்ளப்பட்ட புதிய அடியவர் வந்து நோயை தீர்ப்பதைவிட இந்நோயால் வருந்துவது நன்று என்று உறுதியுடன் கூறினார். சிவபெருமான் சுந்தரரிடம் " ஆரூரனே ! நம்மால் சூலை நோய் பெற்ற வருந்தும் கலிக்காமனிடம் சென்று சூலையை நீக்குவாயாக" என்றளினார் சுந்தரர் கலிக்காமரிடம் தாம் வருகின்ற செய்தியைக் கூறம்படி ஒருவரை அனுப்பினார், " இறைவரைத் தூது அனுப்பிய ஒருவர் வந்து என் சூலை நோயைத் தீர்ப்பதை விட இறப்பதே மேல்" என்றுஉடைவாளை எடுத்து வயிற்றை கிழித்துக் கொண்டார். சூலை நோயும் உயிரும் ஒருங்கே தீர்ந்தன. கலிக்காமருடைய மனைவியாரும் கணவருடன் சேர்ந்து சிவபதம் அடைய எண்ணினார். அப்போது சுந்தரர் வந்து செய்தியை கேள்விப்பட்டார். அம்மையார், அடியார் ஒருவர் வரும் போது அழுவது முறையன்று என எண்ணினார். கணவர் திருமேனியை ஒருபுறம் மறைத்து வைத்து விட்டு, வேலையாட்களைக் கொண்டு அடியாரை வரவேற்க காத்திருந்தார். ஏவலர்களும் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வரவேற்று அவரது திருவடிகளை வணங்கி ஆசனத்தில் அமர்த்தினர். "அன்பர்களே கலிக்காமருடைய சூலை நோயை தீர்த்து அவருடன் இருப்பதற்கு மனம்விரும்புகின்றது. அவர் இருக்குமிடம் யாது? என வினவினார். அண்ணலே! கலிக்காமருக்கு தீங்கு ஒன்றுமில்லை, உள்ளேபள்ளி கொண்டுள்ளார், என்று அம்மையார் உத்தரவுப்படி கூறனார்கள். கலிக்காமருக்கு தீங்கு ஒன்றுமில்லை என்றாலும் என்மனம் மருள்கின்றது. அவரைக் காண வேண்டும் என்றார் சுந்தரர் வேறு வழியின்றி கலிக்காமருடைய உடலைக் காட்டினார்கள், குடல் சரிந்து அவர் மாண்டு கிடந்ததைக் கண்டார், சுந்தரர், இவருடன் அடியேனும் தொடர்ந்து செல்வேன் என்று கூறி உடைவாளை கையில் எடுத்தார். கண்ணுதற் பெருமானின் அளப்பெருங் கருணையினால் கலிக்காமர் அந்த வினாடியே உயிர் பெற்றேழுந்தார். கேளிரைக் காணப் பெற்றேன் என்று வாளை பற்றிக் கொண்டார் கலிக்காமர். சுந்தரர் கலிக்காமரை வணங்க, கலிக்காமரும் சுந்தரரை வணங்க ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சில நாட்கள் கலிக்காமருடன் தங்கி இருந்தார், பின்னர் திருவாரூர் புறப்பட்டார, கலிக்காமரும் அவருடன் திருவாரூர் வந்தார், ஆரூர் அண்ணலை இருவரும் வணங்கி மகிழ்ந்தார்கள், சில நாட்கள் சென்ற பிறகு ஆரூராரிடம் விடை பெற்றுக் கொண்டு கலிக்கம்பர் தமது ஊராகிய மங்கலக்குடி வந்து சேர்ந்தார், பற்பல தொண்டுகள் செய்து விமலரின் அடிமலர் சேர்ந்து இன்புற்றார். இவ்வாறு இறவைருக்கு இழிவு நேர்ந்துவிடுமோ என்று இறைவரையே எதிர்த்து தன் உயிரையும் மாய்த்து, அடியாரின் அடியாருக்கு அன்பு கொண்டார் கலிக்காம நாயனார். திருச்சிற்றம்பலம் நன்றி: தமிழ் வேதம் மேலும் பல ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக