திருமறைகளில் காணும் ஆசை, குரோதம்
மனிதனிடமுள்ள மிகவும் வேண்டாத்தகா குணங்களில் மிகவும் முக்கியமானவை ஆசை, குரோதம் என்ற கோபம், பொய் ,மற்றும் காமம். இவற்றில் ஆசையும் கோபமும் பல இன்னல்களையும் உடல் ரீதியாக பல கேடுகளையும் விளைவிக்கின்றன என்பதை திருமுறைகளில் காணும் கருத்துக்கள் பல
" காமம் வெகுளி கழிபெரும் பொய்யெனும்
தூய்மையில் குப்பை" - பட்டினத்து அடிகள்
மனித மனத்தை அசுத்தப்படுத்தும் குப்பைகள் ஆசையும் கோபமும் என்கிறார் பட்டினத்தார் சுவாமிகள்.
" அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வச் செற்றக்
குரோத நீக்கியுன்
திறத்தனாய் யொழிந்தேன் திருவாரூர் அம்மானே" - திருமுறை 4 பதிகம் 20
ஆசை, பகை, கோபம், ஆகியவற்றை நீக்கிச் சிவத்தொண்டன் ஆயினேன் என்கிறார் திருநாவுக்கரசர் சுவாமிகள்
"விடுமின் வெகுளி, வேட்கை நோய்" - திருமுறை 8 பாடல் 607 மாணிக்க வாசகர் சுவாமிகள்
கோபத்தையும் ஆசைையும் விட்டோழிக்க வேண்டும் என்கின்றன தமிழ் திருமுறைகள்
பொதுவாக நம்முடைய ஆசைகள் அல்லது எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாதபொழுது கோபப்படுகிறோம், கோபம்இயற்கையானது இல்லை. இதனால் தான் திருமூலர் தன் பாடலில்
"ஆசை யறுமின் ஆசையறுமின்" என்றருளியுள்ளார்,
" ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே," திருமூலர்
ஆசையின் உச்சகட்டம் ஈசனிடம் நாம் கொள்ளும் ஆசைதான் இதனையும் வீஞ்சிய ஆசை இல்லை இதனையே விட்டொழிய வேண்டுமென கூறுகிறார், ஆசை ஏற்பட ஏற்பட துன்பங்கள் தாம் வந்து சேரும், ஆசையை ஒழித்தால் இன்பம் மேல் ஓங்கும்,
ஆசை இருந்தால் துன்பமும் , ஆசை அழிந்தால் இன்பமும் ஏற்படும், எப்பொருளிடத்தும் ஆசையை விட்டொழிக்க வற்புறுத்தவே ஈசணோடு கொண்ட ஆசையாயினும் ஆசை வேண்டாம் என்கிறார், இதன் மூலம் ஆசையின் ஆனிவேர் தன்மையை உணர்த்துகிறார்,
ஏமாற்றத்தின் வெளிப்பாடு கோபம் கோபப்படுவதால் விரக்தியோ அல்லது ஏமாற்றத்தையோ போக்கிவிட முடியாது. கோபப்படுவதால் நாம் நினைத்தது நடந்துவிடப்போவதில்லை. கோபம் நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடும். அமைதியை சிந்திக்க முடியாமல் போகிறது. நம்முடைய வேலை தடைப்பட்டு போக கோபமே காரணமாகிறது. கோபத்திற்கு ஆக்கும் சக்தி கிடையாது கோபப்படும் பொழுது உடலில் விசம் உண்டாகி இரத்தத்தில் கலக்கிறது. உடல் பலவீனம் அடைகிறது. நோய்கள் உள்ளே புகுவதற்கு வழிவகுக்கப்படுகிறது.
கோபம் நீடித்து நிற்கக் கூடியது இல்லை. ஆனால் கோபத்தால் எற்பட்ட பாதிப்புக்கள் நிலைத்து நிற்கும், ஆறுவது - தணிவது சினம் என்கிறது தமிழ் வேதங்கள்
கோபத்திற்கு பிரிக்கும் சக்தி தான் உண்டு. ஒன்றுபடுத்தும் சக்தி கிடையாது. ஒருவன் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம், ஒருவன் திட்டினால் உடனே திருப்பித் திட்ட ஆரம்பிக்கிறோம், ஒருவன் தீமை செய்தால் திருப்பி அவனுக்கு தீமை செய்ய நினைக்கிறோம்,
இவையாவும் பழிவாங்கும் உணர்ச்சியே ஆகும். கோபத்தின் விளைவே பழிவாங்கும் உணர்ச்சியாகும். கோபப்படுகிறவன் தன்னையும் அழித்துக் கொண்டுத் தன்னைச் சார்ந்தவர்களையும் அழித்து விடுவான்
கோபப்படும் சூழ்நிலையில் பொறுமையை கடைப்பிடித்துப் பழக வேண்டும், மன்னிக்கம் பழக்கம், எல்லோரிடமும் நல்லவற்றையே பார்ப்பது, இனிமையாக பேசுவது, இக்கட்டான சூழ்நிலையில் சிரிப்பது, பிறருக்கு உதவி செய்வது, போன்ற குணங்கள் வளர்த்துக் கொண்டால் கோபப்படாமல் வாழலாம், சிவனருள் நம்மீது தானே விழும். நலம் பல பெற்று நீடுழி வாழலாம்.
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம்
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
http://vpoompalani05.blogspot.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக