வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர்


சாம்பலில் இருந்து வந்த சித்தர் கோரக்கர் மனித உடல் கூறுகளைப் பற்றி சித்தர்கள் பாடல்களாகப் பாடி வைத்திருக்கிறார்கள் ஐம்பூலங்களால் ஆன உடம்பில் எத்தனை ஒட்டைகள், ஒன்பது வாசல்கள் என நவத்துவாரங்கள் என பாடியுள்ளனர், கண்கள் இரண்டு, செவிகள் இரண்டு, நாசி துவாரங்கள் இரண்டு, வாய், சிறுநீர் துவாரம், மலத்துவாரம்,என ஒன்பது வாசல்கள் என்றனர், உடலில் எழுபத்திரண்டாயிரம் நரம்புகள், உடலைத் தாங்க முதுகெழும்புத்தண்டு, எட்டு நீண்ட எலும்புகளுடன்இணைக்கப்பட்ட எழுபது எலும்புகள் என கண்டறிந்துள்ளனர், விஞ்ஞான காலத்திற்க முன்பே உடல்கூறுகளின் ரகசியங்களையும், ஏதாவது பாகம் பழுது பட்டால் செய்ய வேண்டிய சிகிச்சைகளையும் அறிந்தவர்கள் சித்தர்கள், இதனாலேயே அவ் வைத்தியத்திற்கு சித்தர் வைத்தியம் (சித்த வைத்தியம்) என வழங்கப்படுகிறது. வட இந்தியாவைச் சேர்ந்த கோரக்கர் என்ற சித்தரைப்பற்றி பார்ப்போம். சிவபெருமானும் பார்வதிதேவியும் பூவுலகில் சஞ்சரித்து வரும்போது கடற்கரையில் அமர்ந்து சிவபெருமான் பார்வதி தேவிக்கு தாரக மந்திரம் உபதேசித்தார், பார்வதி தேவி சற்று நேரம் தூக்கத்தில் ஆழ்ந்தார், அதை அறிந்த சிவபெருமான் மந்திரத்தை உபதேசித்துக் கொண்டே இருந்தார், கடற்கறையில் ஒரத்தில் பெரிய மீன்களுக்கு பயந்து ஒரு மீன்குஞ்சு தண்ணீரில் இருந்தது. அப்போது அந்த மீன்குஞ்சு, சிவபெருமான் கூறிய தாரக மந்திரத்தைக் கேட்டது, மந்திரத்தை கேட்ட அந்த மீன்குஞ்சு மனிதனாக மாறியது. இதைப்பார்த்த சிவபெருமான் மீனாகஇருந்து மனிதனாக மாறியவனுக்கு மச்சேந்திரன் என்று பெயர் சூட்டி, ஞானத்தை போதித்தார், ஞானம் பெற்ற மச்சேந்திரன் சித்தராகி ஞான வழியை மக்களுக்கு போதித்த கொண்டு இருந்தார். ஒரு கிராமத்தை சித்தர் மச்சேந்திரன் கடந்த போது, ஒரு வீட்டு வாசலில் கவலையோடு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் சித்தரைப் பார்த்ததும் அவசரமாக உள்ளே சென்று உணவை எடுத்து வந்து அவருக்கு கொடுத்தார். அவளது முக வாட்டத்தைப் பார்த்த சித்தர் உனக்கு என்ன மனக்குறை என்று வினவினார், எனக்கு குழந்தைப் பாக்கியம் இல்லை என்றாள். சித்தர் சிறிது திருநீற்றை கொடுத்து இந்த திருநீற்றை பாலில் கலந்து குடி குழந்தை பாக்கியம் கிடைக்கும், என்று கூறி ஆசிர்வதித்தார், நற்செய்தி கேட்ட பெண் முகமலர்ந்து சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். வெளியூர் சென்ற கணவன் வீடு திரும்பியதும் நடந்த நிகழ்வுகளை கூறினாள். அவனோ உனக்கு திருநீறு கொடுத்தவன் உண்மையான துறவியா? என்பது உனக்கு எப்படி தெரியும்? அந்த திருநீற்றை அடுப்பில் போட்டுவிடு என்றான், சிவன் நமக்கு நல்வழீகாட்டுவான் என்றான். கணவன் சொல்லை மறுக்க முடியாத நிலையில் திருநீற்றை அடுப்பில் போட்டாள் மனைவி. இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்தன, அந்தப் பெண்ணுக்கு குழந்தைப்பாக்கியம் அதன் பின் கிடைக்க வில்லை. சிவத்தலங்களை தரிசித்து விட்டு மீண்டும் அந்த கிராமத்தின் வழியாக வந்தார் சித்தர் மச்சேந்திரன்.தான் திருநீற்றை கொடுத்த பெண் வீட்டுக்கு வந்து கதவைத்தட்டினார், கதவைத்திறந்த பெண் சித்தரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கினாள். சித்தரோ வீட்டின் உள்ளே பார்த்தபடி உன் மகன் எங்கே அவனை அழை நான் பேச வேண்டும் என்றார். அவளோ, எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்றாள். நான் தந்த விபூதி என்னவாயிற்று என்றார், உடனே அப்பெண் " என்னை மன்னியுங்கள், தாங்கள் கொடுத்த திருநீற்றை அடுப்பில் போட்டு விட்டேன் என்றாள், எந்த அடுப்பில் என்றார் சித்தர், இந்த அடுப்பில் தான் போட்டேன் இந்த சாம்பலை இங்கே தான் கொட்டினேன் என்று அவ்விடத்தைக் காட்டினாள். உடனே அவ்விடத்தின் அருகில் நின்று சித்தர் " கோராக்கா வெளியே வா! என்றார், என்றைக்கு திருநீறு கொடுத்தாரோ, அன்று முதல் இன்று வரை எவ்வளவு காலங்கள் ஆனதோ அத்தனை காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியோடு அந்த சாம்பலில் இருந்து குழந்தை வெளிப்பட்டது. அந்தக் குழந்தைக்கு "கோரக்கர்" என்று பெயர்சூட்டினார், அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் சித்தர். கோரக்கர் எட்டு வயது ஆகும்போதே சித்தரோடு சேர்ந்து அவர் கற்றுக் கொடுக்கும் மந்திரங்களை கற்று குருவுக்கு மிஞ்சின சிஷ்யராக திகழ்ந்தார். சித்தர் மச்சேந்திரனுக்கு மீனாக இருக்கும் போது சிவபெருமான் உபதேசித்த மந்திரங்களையும் உபதேசித்தார். நிறைகுடம் போல் அறிந்தவற்றை வெளிக்காட்டாமல் சிறந்த ஞானியாக வாழ்ந்தார் கோரக்கர் சித்தர். குருநாதருக்கு உணவு வேண்டி வீடுகளில் பிச்சை வேண்டி குருவிற்கு உணவு அளித்தார், ஒரு நாள் பிச்சை எடுக்கும் போது ஒரு வீட்டில் வடை கிடைத்தது. அதை தம் குருநாதருக்கு கொடுத்தார். மறுநாளும் குருநாதர் அதேவீட்டில் வடை வாங்கி வர அனுப்பினார், ஆனால் அந்த வீட்டில் வடை கேட்டார். ஆனால் அந்த பெண் இன்று வடை இல்லை. அரிச்சாதம் தான் உள்ளது. என்றார். அதற்கு கோரக்கர் என் குருநாதர் வடைதான் கேட்டார் என்றார், உடனே அந்த பெண்மணி நல்ல வேளை உன் குருநாதர் வடைதான் கேட்டார், உன் கண்ணை கேட்டால் என்ன செய்வாய் என்றாள். கேட்ட மாத்திரத்தில் சற்றும் தாமதிக்காமல் கண்ணை தோண்டி எடுத்து, அந்த பெண்ணிடம் கொடுத்தார்., குருபத்தி எப்படிப்பட்டது என்பதை விளக்குவதைப் போல் இருந்தது அச்செயல். ஆசிரம் திரும்பிய கோரக்காரரை குருநாத சித்தர் பார்த்து திடுக்கிட்டார். எங்கே உன் கண் என்றார், உடனே கோரக்கார் நடந்த நிகழ்ச்சியை விளக்கினார். கோரக்கரின் குருபக்தியை பார்த்து வியந்த சித்தர், தன் சக்தியால் இழந்த கண்ணை திரும்பக் கிடைக்கச் செய்தார். இருவரும் சிவத்தலங்களை தரிசித்து வரும்போது, கேரள தேசத்தில் அந்நாட்டு மன்னனின் மகளை மணந்தார் சித்தர். கோரக்கர் தன் குருநாதரிடம் நாம் இங்கே வந்து அதிக காலம் ஆகிவிட்டது. நமது ஆசிரமம் செல்ல வேண்டினார். உடனே குருநாத சித்தர் தன் மனைவியிடம் விடைபெற்று கோரக்கருடன் ஆசிரமம் புறப்பட்டார், அப்போது அவரின் மனைவி தன் கணவரிடம் கோரக்காரருக்கு தெரியாமல் ஒரு தங்க் கட்டியைகொடுத்தர்ர், மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் வருவது இயற்கைதானே. வழியெல்லாம் கோரக்காரரிடம் இங்கு கள்ளர் பயம் உண்டா என கேட்டுக் கொண்டே வந்தார், கோரக்காருக்கு பயத்தின் காரணம் தெரிந்து விட்டது. அன்று இரவு ஒரு இடத்தில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தூங்கும் போது அதனை கோரக்காரருக்கு தெரியாமல் வைத்து விட்டு சித்தர் தூங்கினார். அப்போது கோரக்கார் சித்தர் மறைத்து வைத்திருந்த தங்கக்கட்டியை எடுத்து கண்காணாதஇடத்தில் புதைத்து விட்டார், தங்கக் கட்டி எடுத்த இடத்தில் அதே எடையுள்ள கல்லை வைத்துவிட்டார், காலையில் எழுந்த சித்தர் தங்கக் கட்டி இருந்த இடத்தில் கல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார், உடனே தன் சீடன் கோரக்கரிடம் என்னுடைய தங்கக் கட்டியை நீ அபகரித்துக்கொண்டாய் , நீ என் சீடனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டாய் என்று கூறினார், கோரக்கரோ அமைதியாக அங்கே இருந்த மலைமீது ஏறி கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை தெளித்து தான் நின்றிருந்த மலையையே தங்கக் கட்டியாக மாற்றினார். குருவே தங்கள் தங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். சித்தராக வாழும் பேற்றினை இழந்து அறியாமையின் பிடியில் சிக்கிய எனக்கு நல்வழிகாட்டிவிட்டாய் என்று வாழ்த்தினார் மச்சேந்திரன். அதன் பின் குருவை பிரிந்து சென்ற கோரக்கர் தவத்தில ஈடுபட்டார். அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார். சித்தர் கோரக்கர் பேரூரில் ஜீவ சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. இவரை சனிக்கிழமை வழிபட்டால் சனி தோசங்கள் நீங்கும். வீண் பயம் அகன்று தைரியம் உண்டாகும். திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக