புதன், 18 மே, 2016

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 16

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 16
இறைவனை அடையும் மார்க்கங்கள்

இறைவனுடைய திருவருளை அடைவதற்கு உரிய வழிகள் பற்பல, அவற்றுள் சத்புத்திர மார்க்கம், தாசமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனும் நான்கு அடங்கும், சத்புத்திர மார்க்கம் என்பது இறைவனை தந்தையாக எண்ணி ஆன்மா புத்திரனாக அமைந்து வழிபடும் வழி ஆகும்,
திருஞானசம்பந்தர் காட்டிய வழிஇதுவே. தாசமார்க்கம் என்பது இறைவனை எசமானனாக் பாவித்து உயிர்கள் பணியாளனாக இருந்து வழிபடும் நெறியாகும்,
இது திருநாவுக்கரசர் காட்டி வழி, சகமார்க்கம் என்பது இறைவன் தன் சகதோழன் என்று கொண்டு சிவனை வழிபடும் வழியாகும், இது சுந்தரரர் காட்டி வழி, சன்மார்க்கம் என்பது இறைவனை ஞான ஆசிரியனாகக் கொண்டு , ஆனமா சீடனாக இருந்து வழிபடும் வழியாகும்,
இது மாணிக்கவாசகர் காட்டிய வழி. இறைவழிபாட்டிற்கு ஆன்மா தியான வகையில் சுத்தி செய்து கொள்ளல் தவம் என்பது காடுகள் இருந்து கொண்டு கனிகளைகளை உண்டு வாழ்தல் மட்டுமன்று.
இறைவனை தியானம் செய்து, கொண்டு தம்மால் எவ்வுயிருக்கும் தீங்கினை செய்யாது இறைவனை தந்தையாகவோ, ஞான ஆசிரியனாகவோ, எஜமானனாகவோ, நட்பின் - பாசத்தின் மிகுதியால்நண்பனாகவோ கொணடு தன்னை அவனுடன் கொணடு தியானித்திருத்தலே இறையருளை பெறும வழிகள் ஆகும்,
இதனை திருமந்திரம் ஐநதாம் தந்திரத்தில் சாதகர்கள் உகந்து பற்றக்கூடிய நெறிகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

1) சன்மார்க்கம்:

இது ஒளிநெறி எனப்படும் இதனை மகான் இராமலிங்க அடிகள் இறைவனை ஒளிவடிவமாகவே கண்டார், மன எழுச்சிகளுக்கு இடமளிக்காமல் நிலைத்த சித்தத்துடன் சிவயோகத்திருக்க வேண்டும், என்கிறார் திருமூலர்,

சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவ நெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே.
சைவ நெறியை சிவனே அமைத்து தந்தான் என்கிறது பாடல்.




ஆன்மாக்கள் ஈடேற வேண்டும் என்பதற்காகவே இந்த ஒளிநெறியை இறைவன் ஏற்படுத்தினான் இதுவே தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் என்பது, தன்னுடைய சரீரமல்ல தான் உணர்ந்த ஞானியர் பற்றும் நெறியிது.
சிவனது வியாபகத்தை அறியாதவர் மனத் தெளிவு பெறாதவராவர், தெளிவில்லாத காரணத்தால் அவர்கள் சீவனது வியாபகத்தையும அறியமாட்டார்கள், சீவனை அறிந்தாலதான் சிவத்தை அறியமுடியும்,

ஐம்மலங்களாலும் நீங்கப்பெற்ற ஆன்மா சிவம் ஆகும், தன்னிலை மறந்து சிவனாதல் சன்மார்க்கம் பாடல்: தெளிவறியாதார் சிவனை அறியார்...............
ஆணவத்தால் ஏற்படும் தன் முனைப்பும் பாசமும் நீக்கி, முழுமுதற் கடவுளாகிய சிவத்துடன் கூட்டுவிப்பது சன்மார்க்கம், மெய்பொருளுடன் ஒன்றியிருத்ற் கேதுவாய் கனியாத மனத்தை கனிய வைக்கிற மார்க்கமிது, சிவத்தை அறியும் ஞானம் சன்மார்க்கம் என்கிற சாதனம் ஆகும்,

2) சகமார்க்கம்:

இது தோழமை நெறி,, இந்த சாதனம் வீடு பேற்றை யும் சித்தியையும் தருவதாகும், சகமார்க்கத்தில் நிட்டையில் இருப்பார்க்கு அவர்தம் உள்ளத்தில் பரத்த உலகங்கள் காணப்டும், அது போல் உள்ளொளியாகிய பேரோளி தோன்றும், அவ்வொளியில் சிவமும் சக்தியும் உண்டு.
சித்தர்கள் விரும்பி மேற்கொள்ளும நெறியிது, சமயக்குறவர்கள் நால்வரில் சுந்தரர் பின்பற்றி இறைவனிடம் அடைந்த வழி, ஆறு ஆதாரங்களையும் திருவருள் துணையால் கண்டு மேல்நோக்குதல் நாடி சுத்திகளாகும், அதனால் அகரம் முதலான பதினாறு கலைகளில் விளங்கும் ஆகாயமும் அதில் விளங்கும் ஒளியும் காணற்காகும்,
ஆன்மாவின் ஐம்புலங்களும் ஐம்பொறிகளும் புத்தியும்தம்முடைய இயல்பான கீழே இழுக்கும் தனமமையை விட்டு நிற்பதே சகமார்க்கம்,
பொறிகளை அடக்கும் யோகியின் மனதில் சிவன் வந்து பொருந்துவான்,

3) சற்புத்திரமார்க்கம்:

மகன் தந்தைக்கு செய்யும் தொண்டுபோல் பூசனைகள் செய்வது - கிரியை நெறி. சற்புத்திர மார்க்கம் எட்டு உறுப்புகளை கொண்டது
அவை:
1, பூசை செய்தல், 2,, பாராயணம் செய்தல், 3. இறைவனை போற்றித் துதித்தல், 4, மந்திரஸ்மரணை, 5, தவ ஒழுக்கம், 6, உண்மை பேசுதல், 7. காமம் குரோதம் கோபம், மோகம் மதம், மாற்சரியம் என்கிற ஆறு பகைகளை நீக்குதல், 8. அன்புடன் அம்ச பாவனை மேற் கொள்ளல் , இவற்றை சற்புத்திரமார்க்கத்தின் இயல்புகள் எனலாம்,

பாடல் : பூசித்தல,, வாசித்தல், போற்றல்....

திருமூலர் கூறுகிறார் நான் நின்று தொழுவேன் எம்பிரானை நாளும் தொழுதபடி இருப்பேன் நீங்களும் அவனை மலர் கொண்டு வணங்குங்கள் சிவபெருமான் தன்னை தொழுவார் சிந்தையில் தோன்றி நிற்பார் என்று இந்த பாடலில் கூறுகிறார், பாடல்: நின்று தொழுவன், கிடந்து எம்பிரான் தன்னை......

4) தாசமார்க்கம்:

திருக்கோவில் சென்று தொணடு செய்யும் நெறி, கோவில்களில் உழவாரப்பணி செய்து முத்தி பெறுதல்

கோயிலில் நல்ல விளக்கினை ஏற்றுதல், பூக்கொய்தல், அன்போடு மெழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்துதல், பூசைக்காலங்களில் மணிகளை ஒலிக்க செய்தல், திருமஞ்சன நீர் முதலியன கொணர்தல் இவை தாசமார்க்கப்பணிகள் என்கிறது திருமந்திரம்

தெய்வம் ஒன்றென்றியிருப்பதே இவரகளின் கொள்கை, தங்களுக்கு எதில் பற்று இருக்கிறதோ அதை ம்ட்டுமே இவர்கள் விரும்பி வழிபடுகிறவர்கள்,

சிவன் ஆயிரம் திருநாமம் கூறி வழிபடும் தேவர்கள் பக்கம் திரும்பாமல், தன் திருவடியை சிந்தையில் இருத்தி தன்னை கண்ணெனப் போற்றும் அடியார்க்கு பேரன்புடன் வெளிப்பட்டு அருள்கிறான் என்கிறார் திருமூலர், இறைவனை அன்புடன் இடைவிடாது சிந்தித்திருங்கள் அன்புக்கு ஆட்படுவான் நீலகண்டன்

தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவற்கும் இறைவா போற்றி

திருச்சிற்றமபலம் - ஓம் நமசிவாய ஓம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக