ஞாயிறு, 1 மே, 2016

சோற்றுக் கற்றாழை

வறண்ட சருமமா? அல்லது எண்ணெய் சருமமா? எடுங்கள் கற்றாழையை.. .கூந்தல் பிரச்சனையா? 

என்றும் பதினாறாக ஜொலிக்க வேண்டுமா?


வறண்ட சருமமா? அல்லது எண்ணெய் சருமமா? எடுங்கள் கற்றாழையை.. .கூந்தல் பிரச்சனையா? இதோ கற்றாழை... உடலில் பிரச்சனையா?அல்லது எனர்ஜி வேண்டுமா? கற்றாழை இருக்கவே இருக்கு. இப்படி சோற்றுக் கற்றாழையின் குணங்கள் கணக்கிலடங்காதவை. மருத்துவ குணங்களை நிரம்ப பெற்றுள்ளது. சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை தருகிறது. ஆரோக்கியத்திற்கும் உகந்தது. இந்த சோற்றுக் கற்றாழையை கொண்டு இன்னும் என்னென்ன செய்யலாம். இதோ இப்படி பேக்குகளாகவும் உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். நீங்களே உங்கள் சருமத்தை கொண்டாடுவீர்கள். வறண்ட சருமத்திற்கான சோற்றுக் கற்றாழை பேக்:- தேவையானவை: சோற்றுக் கற்றாழை சதைப் பகுதி - 2 ஸ்பூன் பாலாடைக் கட்டி(சீஸ்) - 2 ஸ்பூன் விதையில்லா பேரிச்சை - 5 அல்லது 6 வெள்ளரி துண்டுகள் - ஒன்று எலுமிச்சை சாறு - சில துளிகள் மேற்கூறிய அனைத்தையும் அரைத்து பேஸ்ட் ஆக்கவும். இந்த பேஸ்டை தேவையான அளவு எடுத்து முகம் கழுத்து ஆகிய பகுதிகளில் பேக்காக போடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். மீதமுள்ள இந்த கலவையை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். தேவையான போது உபயோகிக்கலாம். எண்ணெய் சருமத்திற்கான சோற்றுக் கற்றாழை பேக்: சோற்றுக் கற்றாழையை நீரில் போட்டு கொதிக்க விடவும். பின் அதனுடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்து நைஸாக அரைக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பேக்காக போடவும். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். மாசு, தூசு மற்றும் எண்ணெய் பசையின்றி முகம் பொலிவாக காணப்படும். சென்ஸிடிவ் சருமத்திற்கான பேக்: வெள்ளரி சாறு, சோற்றுக் கற்றாழை சதைப் பகுதி, தயிர், ரோஸ் வாட்டர், பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அதனை முகம் கழுத்துப் பகுதியில் போட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த முறையை செய்து பார்த்தால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். முதிர்ந்த சருமத்திற்கான பேக்: பாதாமை நன்கு பொடி செய்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகம் கழுத்தில் போடவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முழுவவும். இப்போது உங்கள் முகம் இளமையாகவும்,மிருதுவாகவும் இருப்பதை உணர்வீர்கள். இந்த பேக்குகளை அவரவர் சருமத்திற்கேற்றது போல் செய்து பாருங்கள்.கற்றாழையின் மகிமையை நீங்களே உணர்வீர்கள்.



சுந்தரபாண்டியத்திலுள்ள நண்பர்கள் சோத்துக்கத்தாழைக்கு 9944205684 க்கு தொடர்பு கொள்க,
மருந்துக்காக வேண்டுவோர் பயன் அடைந்து கொள்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக