நம் நினைவில் கலைவாணர்
கலைவாணரால் எம்.ஜி.ஆர்-ரிடம் ஏற்பட்ட மாற்றம்
செருப்பை வைத்து எம்.ஜி.ஆர்-க்கு கலைவாணர் புகட்டிய பாடம் என்ன? - அழியாத நிகழ்வுகள்!
என்.எஸ்.கிருஷ்ணன் என்ற இவரது இயற் பெயரைவிட "கலைவாணர்" என்றாலே இவரை பெரும்பாலானோருக்கு தெரியும். நகைச்சுவை என்றால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் கூட என்று உணர்த்தியவர். இவரது இந்த தனி பாணி, அக்காலத்து மக்கள் அனைவரையும் ஈர்த்தது. மற்றும் இவர் வள்ளல் குணம் கொண்டவரும் கூட, தன்னிடம் இருப்பதை மற்றவருக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ்ந்தவர்.
நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள்!!! எம்.ஜி.ஆர். நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் கலைவாணர் அவர்கள் உதவியுள்ளார் மற்றும் நல்ல நண்பராகவும் பொறுப்பாளராகவும் இருந்து கவனித்து கொண்டார். எம்.ஜி. ஆருக்கு ஓர் நல்ல வழிகாட்டி என்று கூட கலைவாணர் அவர்களை கூறலாம்.
எம்.ஜி.ஆர். நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் கலைவாணர் அவர்கள் உதவியுள்ளார் மற்றும் நல்ல நண்பராகவும் பொறுப்பாளராகவும் இருந்து கவனித்து கொண்டார். எம்.ஜி. ஆருக்கு ஓர் நல்ல வழிகாட்டி என்று கூட கலைவாணர் அவர்களை கூறலாம்.
இவர்கள் இருவருக்கு மத்தியில் நடந்த ஓர் நிகழ்வு, எம்.ஜி.ஆர்-க்கு ஓர் நல்ல பாடத்தை கற்பித்தது. அது என்ன நிகழ்வு, அந்த நிகழ்வின் காரணமாக எம்.ஜி.ஆர் அவர்கள் என்ன பாடம் கற்றுக்கொண்டார் என்பதை இனிக் காணலாம்....
கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் எம்.ஜி.ஆர்-இன் காலணிகளை தைத்துக் கொடுத்த நிகழ்வு!!! 1/10
கல்கத்தாவில் படப்பிடிப்பு எம்.ஜி.ஆர்-க்கு அது திரையுலகில் ஆரம்ப காலக்கட்டம். ஒரு படப்பிடிப்புக்காக கல்கத்தா சென்று இருந்தார்கள். எம்.ஜி. ஆர்-வும், கலைவாணர் அவர்களும் ஒன்றாக தான் பயணம் செய்துக் கொண்டிருந்தார்கள்.
ஓடையை கடக்க வேண்டிய நிலை ஒருநாள் படப்பிடிப்புக் குழுவினர்கள் ஓர் ஓடையை தாண்டி செல்ல வேண்டிய நிலை நேர்ந்தது. அனைவரும் ஓடையில் இறங்கி, கடக்க ஆரம்பித்தனர், கலைவாணர் உட்பட.
தாவிக் குதித்த எம்.ஜி.ஆர். தனக்குரிய அந்த துடிப்பான முறையில், அனைவரையும் போல ஓடையில் இறங்கி கடக்காமல், அந்த ஆறடி ஓடையை ஒரே தாவில், தாவிக் குதுத்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
செருப்பு அறுந்தது தாவி குதித்த மறு நொடி எம்.ஜி.ஆர் அவர்களது செருப்பு அறுந்துப் போனது. உடனே கலைவாணரிடம், "வாங்கண்ணே ஒரு புது செருப்பு வாங்கி வரலாம்.." என்று கூறியருக்கிறார் எம்.ஜி.ஆர்.
கலைவாணர் மறுப்பு. இன்று வேண்டாம், நேரமாகிவிட்டது, நாளை போய் வாங்கிக்கொண்டு வரலாம் என்று எம்.ஜி.ஆர்-க்கு பதில் அளித்திருக்கிறார் கலைவாணர் அவர்கள்.
மீண்டும் மறுநாள் அழைத்த எம்.ஜி.ஆர். மறுநாள் காலை மீண்டும் கலைவாணரின் அறைக்கு சென்று, "வாங்க போகலாம்.." என்று செருப்பு வாங்க அழைத்திருக்கிறார் எம்.ஜி. ஆர்., அப்போதும், உடன் கிளம்பவில்லை கலைவாணர் அவர்கள். அதற்கு பதிலாக எம்.ஜி.ஆரிடம் ஓர் பார்சல் கொடுத்தார்.
கலைவாணரே தைத்த செருப்பு கலைவாணர் கொடுத்த பார்சலை திறந்த பார்த்த எம்.ஜி.ஆர்-க்கு ஆச்சரியமாக இருந்தது. அதில், அவரது அறுந்த செருப்பு தைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனே, "என்ன அண்ணே, புது செருப்பு வாங்கலாம்'னு கூப்பிட்டா, பழசையே தரீங்களே" என்று கலைவாணரிடம் வினா எழுப்பினார் எம்.ஜி,.ஆர்., Show Thumbnail
கலைவாணர், எம்.ஜி.ஆர்-க்கு புகட்டிய பாடம் "உங்க அம்மா, உன்னையும், உன் அண்ணனையும், அனுப்பியது பணம் சம்பாதிக்க தான். பழைய செருப்பு நல்லா தான் இருக்கு, அத நானே தைத்து வெச்சுட்டேன். எந்த பொருளாக இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்த வேண்டும்" என்று கூறினாராம் கலைவாணர்.
எம்.ஜி.ஆர்-ரிடம் ஏற்பட்ட மாற்றம் கலைவாணர் கூறிய நாள் முதல் அவர் இறக்கும் தருவாயின் வரையிலும் எந்த பொருளாக இருந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்தும் பழக்கத்தை பின் தொடர்ந்து வந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
ஆடம்பரத்தை தவிர்த்த எம்.ஜி.ஆர் மற்றும் இந்த நிகவுக்கு பிறகு, தான் எவ்வளவு உயரத்திற்கு சென்ற போதிலும் கூட ஆடம்பரத்தையும் தவிர்த்தார் எம்.ஜி.ஆர். மற்றும் இந்த நிகழ்வு எம்.ஜி.ஆர்-இன் ஆள் மனதில் அவர் இறக்கும் வரையிலும் பதிந்து இருந்ததாக கூறப்படுகிறது
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக