ஞாயிறு, 15 மே, 2016

காத்தவராயன் கதை

காத்தவராயன் கதை


நாட்டுப்புற கதைப்பாடல்களில் காத்தவராயன் கதைப்பாடல்

பண்டைய காலத்திலிேலயே கலப்பு திருமணக்கருத்ைத வலியுறுத்தும் கருத்துக்களில் கதை வடிவில் அதன் கருத்தை வெளிபடுத்தியுள்ளனார்
அதற்கு சிறந்த உதராணமாக விளங்குவது காத்தவாராயன் காதல் இது நாட்டுப்புற கதைப்பாடல்களில் உள்ளது
திருச்சிழைம் பகுதிகள் தனக்கு நற்புத்தி புகட்டவேண்டும் துஷ்டருக்குச் சொன்ன நீதி பயன்படாது என்று தன்னைத் துஷ்டனென்று கூறிக் கொள்கிறான். இப்பகதி கைலைவாசம், சகுனக்கதை இவற்றை பிற்காலத்தில் புனைந்தவர்கள் சேர்த்து விட்ட பகுதிகளாகும்.

எனவே கதையின் பழைய பகுதியும், நாட்டுப்பாடல் வடிவில் மக்கள் போற்றிய கதைக் கருவும், காத்தவராயன் துணிவாக மனுதர்ம அநீதியை எதிர்த்துப் பிராம்மணப் பெண்ணை மணந்ததும், அதற்காகக் கழுவேறிச் சாகத் துணிவு கொண்டு வளர்ப்புத் தந்தை கையில் அகப்பட்டதுமே.
தான் குற்றவாளியல்லவென்று அவன் வாதிக்கும் பகுதிகளே பழமையானவை.
தன்னைத்தான் துஷ்டன், குற்றவாளி என்று கூறிக்கொள்ளும் பகுதிகள், உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள், சாதி உயர்வைப் பாதுகாக்க முயன்றவர்கள், சேர்த்ததுதான். கதையின் இவ்விரு பகுதிகளையும் ஆழ்ந்து படிப்பவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
முத்துப்பட்டன் கதையிலும், பொம்மக்கா, திம்மக்கா என்ற இரண்டு பெண்களும் சக்கிலியப் பெண்களல்லர் என்றும், அவர்கள் பிராம்மணப் பெண்களென்றும் கதையை மாற்றிய செய்தியை முத்துப்பட்டன் கதை ஆய்வுரையில் கூறியுள்ளேன்.
அதுபோலவே சமூகச் சீர்திருத்த ஆற்றல் கொண்ட இலக்கியங்களை அழிக்கவும், மாற்றவும், சிதைக்கவும், மேல் சாதியினரும், சீர்திருத்தங்களால் தம் செல்வாக்கை இழக்கக் கூடியவர்களும் முயன்று வந்திருக்கிறார்கள்.
எனவே நாட்டுப் பாடல் கதைகளைப் படிக்கும் போது நாட்டுப் பாமர மக்கள் கண்ணோட்டத்தில் யாரைக் கதைத்தலைவர் தலைவியராகக் கொள்ளுவார்கள் என்பதை மனத்தில் கொண்டு, அவர்களது விடுதலை ஆர்வத்தையும் மனத்தில் கொண்டு கதைக் கருவினைப் பிரித்தறிய வேண்டும். பாமர மக்களது சிந்தனைகளை அடிமைப்படுத்தும் முயற்சிகளை எடுத்துக்காட்டவேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் முயன்றால் கதைப் பாடல்களில் நாட்டு மக்கள் படைப்பான பகுதியையும், அதற்கு முரணான இடைச் செருகல்களையும் எளிதில் அறியலாம்.
காத்தவராயன் கீழ்ச்சாதியான். பறையன் என்றே தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறான். அவனை வளர்த்தவன் ஓர் நாடுகாவல் அதிகாரி. காத்தவராயன் ஒரு பிராம்மணப் பெண்ணைக் காதலித்தான். அவளை மணம் செய்து கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டான். அவனைப்பிடித்து அரசன் கழுவேற்றிவிட்டான். அவனை மக்கள்தெய்வமாக வழிபடுகின்றனர்.

கதை, பிராமணர் மன்னனிடம் வந்து முறையிடுதலோடு தொடங்குகிறது. ஆரியமாலை என்ற பிராம்மணப் பெண்ணைப் பரிமணம் என்ற காத்தவராயன் சிறையெடுத்துப் போய்விட்டதாகவும், அவனைப்பிடித்துத் தண்டிக்கவேண்டும் எனவும் அவர்கள் அரசனிடம் வற்புறுத்துகிறார்கள்.
பரிமளம் என்பவன் சேப்பிளையான் என்ற நாடுகாவல் அதிகாரியின் வளர்ப்புமகன். அரசன் சேப்பிளையானை அழைத்து அவனைப்பிடித்துக் கொண்டு வந்து கழுவேற்றிக்கொன்று விடக் கட்டளையிடுகிறான். சேப்பிளையான் நாடுமுழுவதும் தேடியும் மகனைப்பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நாட்டுக்கு வெளியே சென்று தேடிக் கண்டுபிடிக்கிறான். தந்தை சொல்லைக் கேட்டு அவனோடு சோழ நாடு செல்லுகிறான், சோழ மன்னன் நீ ஏன் பெரும்பாவம் செய்தாய் என்று கேட்கிறான்.
தான் செய்தது தவறென்றால் மக்கள் வணங்கும் தேவரும், தெய்வங்களும் இவ்வாறு பெண்களைக் காதலித்து மணம் செய்து கொண்டுள்ளார்கள் என்றும் அவர்களும் தவறு செய்தவர்களே என்றும் சொல்லுகிறான். இதில் மும்மூர்த்திகளும் அடங்குவர்.

பார்வதியாள் தானிருக்க பரமசிவனாரும்
ஓர் சடையில் கன்னிதனை ஒளித்துமே வாழலையோ.

உலகமளந்த தொரு உத்தமனாம் மாயவனும்
நலமுள்ள உருக்கு மணியாள் நன்றாய் அருகிருக்க

தேசமதிலாய் சிறக்கவே கொண்டருளி
சத்திய பாமாவைத் தேடி அணையலையோ.

அன்னமதிலேறும் ஆனதொரு பிர்ம்மாவும்
வர்ணக் கலைமகளே வாக்கிலே வைத்தருளி

தானே படைத்துச் சமைத்த தொரு ஊர்வசியை
மானே எனத் தொடர்ந்து மருவிப் புணரலையோ

இந்திரர்க்கு இந்திராணி இசைந்து அருகிருக்க
வந்து அகலிகையை மருவிப்புணரலையோ.

எடச்சிகள் சேலையெலாம் எடுத்து மரமேறி
கடைக்கண்ணால் பார்த்திருந்தார் கன்னியர் மேலாசையதால்

வர்ணமுள்ள மாயவனார் வாழும் இடைச்சியுடன்
வெண்ணெய் தேடியுண்டு மேவிப் புணரலையோ.

பார்த்தனும் சுபத்திரையாள் பாங்கில் கலந்திருக்க
வேத்துமையாய் அல்லியரைக் கலந்து புணரலையோ,

சாதனமாய்க் கண்ணகியும் தானிருக்கக் கோவலனார்
மாதவியைக் கூடி மருவிப் புணரலையோ.

கானத் தவசிருக்கும் கௌசிகரும் ஆசையதால்
மேனகையைக் கூடி மேவிப் புணரலையோ.

வருந்தும் வசிஷ்டரிஷி வையகத்திலெப் போதும்
அருந்ததிப் பெண்ணாளை அணைந்து கலரலையோ.

முன்னும் சில பெரியோர்கள் மும்மூர்த்தி முதலாய்
வர்ண மற்ற பெண்களுடன் மருவிப் புணரலையோ.


இவ்வாறு கூறியதும் அரசன் மனம் மாறி அவனைக் கழுவேற்றாமல் விட்டுவிட எண்ணி அவ்வாறே கூறினான். ஆனால் காத்தவராயன் தன்னைக் கழுவேற்றத்தான் வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறான்.
இதற்குக்காரணம் கழுவேற்றப்பட்டது, ஓர் உண்மை. இதனைக் கதையில் மாற்ற முடியாது. காத்தவராயனது விவாதத்தில் உண்மையிருக்கிறது. அதனைக் கேட்ட அரசன் மனம் மாறினான். ஆனால் கழுவேற்ற ஒரு காரணம் வேண்டும். இல்லாவிட்டால் இங்கேயே கதை முடிந்துபோகும். எனவே கதையை இங்கு நீட்ட வேண்டியிருக்கிறது.
இதற்காகக் காத்தவராயனது முற்பிறப்பிலிருந்து கதையை மறுபடி பாடல் தொடங்குகிறது. முற்பிறத்தில் அவன் கைலாயத்தில் இருந்ததாகவும் அங்கு அவன் ஆறு தேவமாதரைக்கண்டு ஆசை கொண்டதாகவும், பூமியில் பிறந்து அவர்களை மணந்து, கழுவேறிச் சாகவேண்டுமென்று கைலைவாசன் சபித்ததாகவும் அச்சாபமேற்கொண்டே அவன் உலகில் வந்ததாகவும் கதை கூறுகிறது.
இக்கதை சுந்தரமூர்த்தி நாயனார் கதையை ஒத்திருப்பதைக் காணலாம். அது மிக முந்திய கதை. அக்கதையைத்தான் இது பின்பற்றியிருக்கிறது. மேலும் வேறு சாதிகளுக்குள் கலப்பு மணம் நடப்பதைக் தடை செய்ய, மனிதர் சாதியால் பிரிந்திருந்தாலும் அன்பால் பிணைக்கப்பட்டு மணம் செய்துகொள்ளலாம் என்ற கருத்து வளரக்கூடாது என்பதற்காக பரிமணத்தைப் பிராம்மண குலத்தில் பிறந்தவனாகவும் மூன்று நாள் பறைச்சி முலைப்பால் உண்டவனாகவும் கதையின் பிற்பகுதி கூறுகிறது.
ஆனால் கதையின் முற்பகுதியில் அவனது வளர்ப்புத்தாய் அவனை,

“பின்புத்திதான் நினைக்கும் பறச்சி பெத்த பிள்ளையவ்ன்
நாம் பெத்தபிள்ளை யென்றால் நம்மைப்போல் ஆகாதோ?”

என்ற கண்ணியில் “பறச்சி பெத்தபிள்ளை” என்று கூறுகிறாள். எனவே சங்கப்பிள்ளை என்பவள் அவன் வளர்ப்புத்தாய் தான் தவிரவும் ஆரியமாலை என்ற பிராம்மணப் பெண் தனது கின்னரி நாதம் கேட்டுத் தன்மீது ஆசைகொண்டுத் தன்னைப் பின்பற்றி வரும்பொழுது, காத்தவராயன் சொல்லுகிற சொல்லிலும் அவன் தன்னைப் பறையன் என்றே சொல்லுகிறான்.

“ஆத்தங்க கரைதனிலே அநேகம் பேர் பார்த்திருக்க
இதமுள்ள நீராட ஏகினேன் நீர்கேளும்.

தண்ணீர் துறைதனிலே தான்கண்டு மாதயரும்
என்னழகைக்கண்டு இனிது மையல் தானாகி

என் கிண்ணாரச் சத்தம் கேட்டு மிகநடந்தாள்
மாதயரே என்பின்னே வாராதே என்று சொன்னேன்

சோகக் கிளிமொழியாள் என் வசனம் கேட்காமல்
வாரதைக்கண்டு மனதில்பயம் பிடித்து

பார்தனிலே நானும் பறையன், பறையன் என்றேன்”

எனவே உட்சான்றுகளால் இவன் பறைக்குலத்தில் பிறந்தவன் என்று தெரிகிறது. இவனை வளர்த்தவர்கள் நாடுகாவல் அதிகாரி சேப்பிள்ளையானும் அவனது மனைவி சங்கப்பிள்ளையுமாவர்.
பறையன் பிராம்மணப் பெண்ணை மணந்து நாடுவிட்டு நாடு போய் வாழ்ந்துவிட்ட உதாரணம் பரவிவிட்டால், சாதிமுறை குலைந்துபோகும் – சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமை முறையும் சீர்குலைந்து போகும். இதனைத் தடுக்கவே பிற்கால மேல்சாதியினர், கதையின் ஆற்றலைப்போக்கச் சில மாறுதல்கள் செய்தனர்.
அதில் ஒன்றுதான் காத்தவராயனது கைவவலைவாசமும் சாபமும். அவன் தேவனாயிருந்து சாபத்தால் மனுதர்மத்திற்கு விரோதமான மணத்தைப்புரிந்தான். மனிதனாகி செய்திருக்கமாட்டான் கதைப்பாடலின் பிற்சேர்க்கையின் நோக்கமே இதுதான்.
அவனுடைய விவாதத்தைக் கேட்டதும் அரசன் மனம் மாறி ஆரியமாலையோடும் மற்றும் மனைவியரோடும் வாழ்ந்திருக்கக் கூறினானாம். இதன் நோக்கம் அரசு சாதிமுறையைப் பாதுகாப்பதில் கடைப்பிடித்த கடுமையான அடக்குமுறையை மறைப்பதற்காகும். பின் ஏன் காத்தவன் கழுவேற்றப்பட்டதாகக் கதை கூறுகிறது? கழுவேற்றப்பட்ட செய்தி மறைக்கமுடியாத உண்மை. கொல்லப் பட்டவர்கள், கழுவேற்றப்பட்டவர்கள் சிறு தெய்வங்களாக மிகப்பழங்கால முதலாக வணங்கப்பட்டு வந்தார்கள். காத்தவராயனும் அவ்வாறே வணங்கப்பட்டிருக்கவேண்டும். எனவே கழுவேற்றப்பட்டசெய்தியை மறைக்க முடியாமல், உயர்சாதியினர் காத்தவராயன் கடவுள் சாபத்தை நிறைவேற்றுவதற்காகத்தானே கழுவேற முன்வந்தான் என்ற செய்தியைப் புனைந்தனர்.
உண்மைச் செய்திகளின் ஆற்றலைக் குறைக்க இத்தகைய முயற்சிகளை உயர்சாதியினர் பலமுறை செய்திருக்கிறார்கள். நந்தன் கதையில் அவனே சோதியில் கலந்துவிட்டான் என்று கூறப்படுகிறது. ஆனால் அவன் பிராம்மணரால் கோயில் முன் எரிக்கப்பட்டான் என்று உறுதியாக நிரூபிக்கலாம். இதுபோலவே காத்தவராயனைக் கழுவேற்றிவிட்டு அவனே வேண்டிக்கொண்டதாகக் கதையை மாற்றிவிட்டிருக்கவேண்டும்.
பறையனான காத்தவராயனை பிராம்மண குலத்தில் பிறந்து மூன்று நாள் பறைச்சி முலைப்பால் குடித்ததாக இக்கதை கூறுகிறது. இதனால் தேவனான காத்தவராயன் இவ்வுலகப் பிறப்பிலும் மனுதர்மம் மாறாமல் ஆரியமாலை என்ற பிராம்மணப் பெண்ணை மணந்தான் என்றுகூறி சாதியைப் பாதுகாத்துக் கொள்ள கதை முயலுகிறது. வேறு சாதிப்பெண்களை மணந்து கொள்ளுவது மனுதர்மப்படி குற்றமல்ல. பிராம்மணன் தனது வர்ணத்திற்குக் கீழேயுள்ள வர்ணங்களில் பெண் கொள்ளலாம். அதன்படி காத்தவராயன் தவறு செய்தவனல்லன். பறையன் என்று சொல்லிக் கொண்டு பிராம்மணப் பெண்ணை அழைத்துச் சென்றதுதான் மனுதர்மப் படி குற்றம்.
ஆனால் காத்தவராயனோ மனுதர்மத்தை தனக்கு முன் மீறிய மும்மூர்த்திகள், முனிவர்கள் கதைகளைக் கூறித் தான் செய்தது தவறல்லவென்று வாதிக்கிறான்

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக