வியாழன், 30 மார்ச், 2017

நக்கு ( சிரித்து) நிற்பர் அவர் ( இறைவர்)

நக்கு ( சிரித்து) நிற்பர் அவர் ( இறைவர்)



" நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீருங்கண்டு
நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே " ...... அப்பர் சுவாமிகள் தேவாரம் 5

சிவபெருமான் ஏன் சிரிக்கின்றார்? யாரைக் கண்டு சிரிக்கின்றார்? என்பனவற்றை திருநாவுக்கரசர்அருளிய ஐந்தாவது தமிழ் வேதப் பாடலை ஆதாரமாக கொண்டு சிந்திப்போம்.

மனம் நெகிழ்ந்து இறைவரை யார் நினைக்கின்றார்களோ அவர்கள் நெஞ்சினுள்ளே இறைவர் புகுந்து நிற்பார். பொய்மையை உடையவர்கள் அளிக்கும் பூவையும் நீரையும் கண்டு இறைவர் சிரித்து (நக்கு ) நிற்பார் என்பது இப்பாடலின் கருத்து.

இறைவரை வழிபாடு செய்யும் பொழுது மனதில் உருக்கம் அல்லது நெகிழ்ச்சி ஏற்பட வேண்டும். அப்படி நெஞ்சம் உருகி வழிபாடு செய்பவர் நெஞ்சினுள்ளே இறைவர் புகுந்து நிற்பார் என்பது அவரது அனுபவ வார்த்தை.

இதே கருத்தை திருஞானசம்பந்தரும் அருளியுள்ளதைக் கண்டு இன்புறலாம். இறை அனுபவம் யாவர்க்கும் ஒன்றுதானே,

" பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில்உடனாவர் " ......... சம்பந்தர் திருமுறை 2

பண்ணிசை பொருந்திய வீணையை உடையவரும் பதினெட்டு தேவர்கணத்தினர் ஆகியோர்உணர முடியாத வகையில் நஞ்சுண்டு விளங்கும் கழுத்தினை உடைய சிவபெருமான் உள்ளம் உருகும்பொழுது நம்மிடத்தே விளங்கி நிற்பார்.

ஆக உள்ளம் உருகுகின்ற வழிபாடுதான் உண்மையான வழிபாடு ஆகும். தற்கால வழிபாடுகளினால் உள்ளம் உருகும் வாய்ப்புக்கள்உள்ளனவா என்று சிந்தித்து பாருங்கள். தற்காலத்தில் உள்ள முறைகளால் உள்ளம் உருக ஒரு சதவீதம் கூட வாய்ப்பே இல்லை. எனலாம். ஏன்? உள்ளம் உருகினால் தான் இறையருளைப் பெற முடியும்என்பதே நமக்கு தெருயாதல்லவா?

பொருட் செலவு செய்துவிட்டால் இறையருளைப் பெற்று விடலாம் என்றல்லவா நாம்எண்ணியும் செய்தும் வருகிறோம். ஆடம்பரமும் பொருளற்ற சடங்குகளிலும் நாம் மூழ்கி இருக்கின்றோம்,அவைதாம் இறைவழி பாடு என்று சுயநல வாதிகள் கற்பித்து விட்டார்கள். அதை நாம் கைவிடவும தயாராக இல்லை. தமிழ் வேதங்கள் மக்களிடையே பரவாமைதான்.

தமிழ் வேதங்கள் யாவும் கடவுளைக் கண்டவர்கள் அருளியவை உடலோடு முத்தி பெற்ற புண்ணியவான்கள் மூலம் இறையவரே அருளியவை, இங்கு சடங்கு சம்பிராதாயங்களுக்கு இடமே இல்லை. உண்மை நேர்மை அன்பு, ஈகை, ஆகிய நற்பண்புகளைத் கொண்டதுதான் இறைவழிபாடு எனப் பறை சாற்றுபவை நமது தமிழ் வேதங்கள்.

தமிழர்களின் இறைவழிபாடு ஒழுக்கத்தின் அடிப்படையில் அன்பின் அடிப்படையில் கருணையின் அடிப்படையில் அமைந்ததே ஆகும். பிற மொழியினர் திணித்த வழிபாடு கடங்குகள் மட்டுமே அடிப்படையாக கொண்டதாகும். அதனால்தான் தற்காலத்தில் கோயிலுக்கு செல்பவர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தாலும். சமுதாயத்தில் களவு, கொலை, கொள்ளை ஏமாற்றுதல் போன்ற தீமைகளும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

பக்தி அதிகமாகும் பொழுது சமுதாயத்தில் தீமைகள் குறைய வேண்டும், ஆனால் நிலமை எதிர்மாறாகத்தான் உள்ளது. காரணம் இறைவழிபாடு நமது அருளாளர்கள் வாழ்ந்து காட்டிய வகையில் அமையாததே ஆகும். ஆலயங்கள் வியாபாரத்தலங்களாக மாறிக் கொண்டு வருகின்றன. நாமும் இறைவரிடம் வியாபாரம் செய்யவே ஆலயத்திற்கு செல்கிறோம். எனக்கு இந்த நன்மையைச் செய்தால் நான் 108 தேங்காய் உடைக்கிறேன். உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன். என்றெல்லாம் வியாபார நிபந்தனையுடன் இறைவரிடம் வேண்டுகிறோம். நமது உலக ஆசைகளை அல்லது உலகத் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் ஒருவராகத்தான் கடவுளை எண்ணுகிறோம்.

இவற்றுக்கெல்லாம் காரணம் தமிழ் வேதங்களான திகழும் பன்னிரு திருமுறைகள் மக்கள் மத்தியில் பரவாமையே ஆகும்.

நம்முடைய செயல்களைக் கண்டுதான் சிவபெருமான் சிரிக்கின்றார். பூசும் நீறு போல நமது உள்ளம் தூய்மையாக அமைய வேண்டும். அப்போதுதான் நமது செயல்களும் உலகத்திற்கு நலம் பயப்பனவாக அமையும்.

இரட்டையாக உள்ள ( இணைந்துள்ள பழம்) வாழைப்பழத்தை பிரிக்கக் கூடாது என்கிறார்கள். நல்லது ஆனால் இரண்டு நண்பர்களைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறார்களே அதுதான் பொய்யான வாழ்க்கை.

குரங்கினைக் கண்டால் கோல் கொண்டு விரட்டி அடிக்கிறார்கள், அதே குரங்கு மின்கம்பியால் இறந்த பிறகு கோயில் கட்டிகும்பிடுகிறார்கள்.

தாய் தந்தையர் உயிருடன் வாழும் பொழுது எவ்வித உதவியும் செய்யாத பலரைக் கண்டதுண்டு. இறந்த பிறகு பெரிய படம் செய்து நடு வீட்டில் வைத்து மாலை போடுகிறார்கள். 

முருகனை வழிபாடு செய்கிறோம். அவருக்கு உரியது சேவல் கொடி, அதை வைத்து வழிபாடு செய்கிறோம் ஆனால் சேவற் கோழியை தின்பதை விடுவதில்லை.

இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் ( பொக்கம்) பொய்மை மிகுந்த வாழ்க்கை என்கிறார் திருநாவுக்கரசர். இப்படிப்பட்ட வாழ்க்கையை உடையவர்கள் அளிக்கும்( பூவையும் ) மலரையும் நீரையும் கண்டு இறைவர் சிரிக்காமல் வேறு என்ன செய்வார்?

அறவழியில் பொருளை சம்பாதிக்க யாவரும் முற்பட வேண்டும். மனதில் கொடுக்கும் குணம் மேலோங்கி நிற்க வேண்டும், மற்றவர்கள் நமக்கு என்ன எண்ணுகிறார்களோ அதனை நாம் மற்றவர்களுக்கு செய்யவே கூடாது.
மற்றவர்கள் நமக்கு எதை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோமோ அதனையே நாம் பிறருக்கு செய்ய வேண்டும் இதுவே பொய்மையற்ற வாழ்வாகும். ஆன்மாவைத் தேடி இறைவரே வருகிறார். என்பதுதான் திருமுறை ஆசிரியர்களின் அனுபவம். அதனையே நமக்கு சொல்லிச் சென்றார்கள்.

இறைவர் நம்மிடம் எதையும் வேண்டுவதில்லை. நம்முடைய உள்ளத்தைத்தான் பார்க்கின்றார். எந்த வேலையைச் செய்தாலும் அதில் நம்முடைய நல்ல எண்ணம் விளங்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் . ஒரு நாளைக்கு ஒரு நன்மையாவது செய்து வாழ வேண்டும். நான் எனது என்பது விலகி போகும் போது பொய்மையும் நம்மை விட்டு நீங்கும். இறைமை நம்மிடம்குடி கொள்ளும் பிறகு பிறப்பதும் இறப்பதும் இல்லை என்ற நிலை உண்டாகும். பிறவாமை இருந்தாலே நம் வினைப்பயன்கள் அறவே ஒழியும்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி : தமிழ் வேதம்

ஞாயிறு, 26 மார்ச், 2017

திரு ஐந்தெழத்தின் ஆற்றல்

திரு ஐந்தெழத்தின் ஆற்றல்



தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே,   சம்பந்தர் தேவாரம்

தும்மல், இருமல், தொடர்ந்து வரும் பொழுதும், கொடிய துன்பங்கள் அனுபவிக்கும் காலத்ததிலும, முற்பிறவிகளில் செய்த வினை இந்த பிறவியில் வந்து வருத்துமு் காலத்தும் மறுபிறவிக்கும் துணையாக வந்து உதவுவது, திரு ஐந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரச்சொல்லாகும்,

இன்று நாம் அனுபவித்து வரும் இன்பமும் துன்பமும் முற்பிறவிகளில் நாம் செய்த வினைகளால் வந்தவைதான் என்று முதலில் நாம் தெளிவடைய வேண்டும்.
இன்பம் இடர்என்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம் அறியாரே,       ..... திருமந்திரம்

கடவுளைக் கண்ட திருமூல நாயனார் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். நமக்கு வரும் துன்பமும், இன்பமும் முன்னே நாம் செய்த வினையால் வருபவனவே அனறி வேறு எதனாலும் இல்லை எ்ன்பது தான் திருமூலர் நாயனாரின் முடிவு. அனுபவ வாக்கு உண்மை இப்படி இருக்கும் போது நாம் வீடு குற்றம் உடையது நாளும் கோளும் நம்மை துன்பறுத்து கின்றன என்றெல்லாம் ஆதங்கப்படுவது அறிவுடைமை ஆகுமா? என எண்ணிப் பார்க்கவேண்டும்.

  சரி தெரிந்தோ, தெரியாமலோ வினைகளைச் செய்து விட்டோம் அவ்வினைகளை போக்க வழி என்ன என்று சிந்திப்போம். அவ்வினைகளை போக்க நாம் மேற்கொள்ளும் வாழிதான் தவறானது, பலர் பொருட் செலவ செய்துவிட்டால் வினை கழிந்துவிடும் என்று சுயநலக்காரர்களின் பின் செல்கிறார்கள் மேலும் வினைகள் பெருகத்தான் செய்யுமே ஒழிய நீங்குவ தில்லை. வினை நீங்காத காரணத்தால் துன்பமும் தொலைவதில்லை.

  இம்மைவினை ெநருங்கி வந்து நம்மை துன்படுத்தும்போது சடங்குகடகும் சம்பிராதங்கட்கும் சென்று விடவே கூடாது. பொருளற்ற சடங்குகட் கெல்லாம் தெய்வீக நியாயத்தை கற்பித்துவிட்டார்கள் சுயநலக்காரர்கள். பிறர் நலத்திற்காக 
இறைவரால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்கள் நால்வர் , என்பதை முதலில் நாம் மனதில் கொள்ளுங்கள். நமது பன்னிரு தமிழ் வேதங்களையும் அருளிய இருபத்தேழு அருளாளர்கள் இறைவரால் நாம் நலமாக வாழ அனுப்பப்பட்ட புண்ணியவான்கள் என்று உணர வே்ண்டும்,
  இவரகள் சொல்லலிய யாவும் இறைவரால் சொல்லப்பட்டனவே ஆகும். இறைவர் உள் நின்று உணர்த்த இப் பெருமக்கள் கூறினார்க்ள். அந்த வகையில் பத்தாவது திருமுறை தந்த திருமூலர் நம் வினை தான் நம் துன்பத்திற்கு காரணம் என்கிறார்.
  இந்த வினை வந்து நாம் துன்பப்படும் போது திரு ஐந்தெழுத்தை / சிவாயநம/ சொல்ல வேண்டும். இதுவே வினைகளை போக்கி நலத்தை அளிக்கும் என்பது இறந்தாரை எழுப்பும் திறம் பெற்ற சம்பந்த பெருமானின் கூற்று,
  மிக எளிய முறை, உரிய முறை, பொருட்செலவே இல்லை, ேவண்டவும் வேண்டாம் , இப்படி சொன்னவர் உடலோடு முத்தி பெற்றவர். மற்றவர்கட்கும் அப்பேற்றினை அளித்தவர். நாமும்  காலையும்மாலையும் திரு ஐந்தெழுத்ைத ஓதி நம் பல பெறலாம்,
ஓம் நமசிவாய நம
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;  வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

வெள்ளி, 17 மார்ச், 2017

பஞ்சகவ்ய ரகசியங்கள்

பஞ்சகவ்ய ரகசியங்கள்



பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. வெவ்வேறு குணமுடையன இவற்றின் கலவை சிறந்த 
சத்துணவு . 

கோசலமும்(கோமியம்) , 

கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 
5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். 
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் 

பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி

பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி

பசும்நெய்:மோட்சம்

கோசலம் :தீட்டு நீக்கம்

கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும்.
கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் 
குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் காரணமாககருவறைகள் , சிலைகள், இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல் அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் தன்மை கொண்டவை, என்றென்றும் 

புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர்.
 பசுவின் பால்,தயிர், நெய். கோமயம், சாணம் எனும் இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் எனப்படும்

இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் 

பொருள்(உரம்) ஆகும். மேலும் பூச்சி கிருமி நாசினியாகவும் பயன்பாடு உண்டு

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு

பசுந்தயிர் :2 அளவு

பசும் நெய் அளவு

கோசலம் :1 அளவு

கோமயம் : 1 அளவு

தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது .

பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்வு உண்டு.

பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும் நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,

கருநிறப் பசுவிடமிறந்து நெயும் , செந்நிற பசுவிடமிருந்து கோசலமும்,

தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில்  "ஆனைந்த "என்பர் .

பசும் பாலில் சந்திரனும் ,பசுவின் தயிரில் வாயு பகவானும்,

கோமயத்தில் வருண பகவானும், பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,

நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ;ஆன்மீகத்தகவல்

வியாழன், 16 மார்ச், 2017

ஆன்மீகச்சுடர்: நடராஜப்பத்து – ஆருத்ரா திருநாள் சிறப்புப் பதிவு

ஆன்மீகச்சுடர்: நடராஜப்பத்து – ஆருத்ரா திருநாள் சிறப்புப் பதிவு:   மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் ந...

ஆணவத்தோடு கொடுக்கும் தங்கத்தை விட அன்போடு கொடுக்கும் துளசி தழையே சக்தி அதிகம்

துலாபாரம்
ஆணவத்தோடு கொடுக்கும் தங்கத்தை விட அன்போடு கொடுக்கும் துளசி தழையே சக்தி அதிகம்

இதனை கிருஷ்ண பரமாத்மாவின் துலாபார நிகழ்வு உணர்த்தும்



துலாபாரம் என்றால் இந்தக் காலத்தில் கொடுக்கப்படும் வெங்காயம் காய்கறி, அரிசி பருப்பு போன்றதல்ல. தங்கத்திலேயே துலாபாரம்.

சத்திய பாமாவிற்கும் ருக்மணி தேவிக்கும் இடையே யார் கிருஷணரிடம் அன்பும் பக்தியும் உள்ளவள் என்ற பிரச்சனை ஏற்பட்டது.கிருஷ்ணரிடம் யார் அதிக பிரியம் அன்பு செலுத்துவது யார்?? என்ற வினா எழுந்தது.

சத்தியபாமாவோ தான்தான் கிருஷ்ணரிடம் மரியாதையும் அன்பும் உடையவள் என்னிடம் தான் தங்க ைவர நகைகள் எல்லாம் உள்ளது, என் அன்பு பக்திக்கு யார் அன்பும் ஈடாகாது என்று அதற்கு ஈடாக தனது தங்க, வைர வைடுரங்கள் அனைத்தையும் பகவனின் எடைக்கு எடையா துலாபாரத்தட்டில் வைத்தாள். ஆனால் தட்டு சிறிதும் அசையவில்ைல. மேலும் தான் கொண்டுவந்த சீதனப் பொருட்கள் எல்லாவற்றையும் வைத்தாள், இனனமும் தட்டு அசையவில்ைல.

மெதுவாக வருகிறாள் ருக்மணி

தனது அன்பின் அடையாளமாக ஒரு துளசி தழையை ஸ்ரீகிருஷணரின் காலில் வைத்து வணங்கிவிட்டு அதை எதிர் துலாபார எதிர் தட்டில் வைக்கிறாள். 

என்ன ஆச்சரியம் தராசு சமமாகிறது.

ஆணவத்தோடு கொடுக்கும் தங்கத்தை விட அன்போடு கொடுக்கப்படும் ஒரு சிறு துளசி தழைக்கு சக்தியும் மரியாதையும் அதிகம் என்பதைஇந்தக் கதை உணர்ததுகிறது அல்லவா?

திருச்சிற்றம்பலம்

நன்றி° கண்ணதாசனின் ஞானத்தைத்தேடி
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்




புதன், 15 மார்ச், 2017

அற்சனை பாட்டே ஆகும்

அற்சனை பாட்டே ஆகும்


தோடுடைய செவியனாகிய சிவபெருான் விரும்பும் அற்சனை சொற்றமிழ்  பாட்டே ஆகும். என்கிறது நமது தமிழ் திருமுறை வேதங்கள் அதில் பன்னிரண்டாம் திருமுறை பெரியபுராணத்தில் சேக்கிழாரின் கூற்று

" அற்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் " தடுத்தாட் கொண்ட புராணம்.

நாம் வாய் திறந்து பாட வேண்டும், உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாவற்றிலும் பேசும் ஆற்றல் பெற்றவன் மனிதன் மட்டுமே, அதனால் இறைவரை வாயினால் பாடித் துதித்திட வேண்டியது நமது தலையாக கடமை,
  மற்ற எல்லாவற்றையும் விட வாயினால் பாடும் பயன் மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். இக்காலத்தில் இரண்டு ரூபாய் கொடுத்து அருச்சனை சீட்டு வாங்கி விட்டா்ல் நமது இறைவழிபாடு முடிந்து விட்டதாக எண்ணுகிறோம். இது மிகப் பெரி தவறு இதனால்  யாதொரு பயனும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். 
  வழிபாடு என்பது ஆன்மாவை ஆண்டவருடன் இணைக்கும் ஒரு செயலே ஆகும். உள்ளம் ஒன்றிப் பாடும் பொழுதுதான் இது நடைபெறும்.இதனால் தான் சம்பந்தர் " வாயடைந்து பாடவல்லார் வானுலகு ஆள்பவரே " என்றருளிச் செய்தார். 

 சுந்தரமூர்த்தி சுவாமிகளும் " இன்னிசையால் பாட வல்லர்ர் இருநிலத்தில் ஈசன் என்னும் இயல்பினோரே " என்றருளினார்.

கல்லையும் கனிவிக்கும் தமிழ்வேதப் பாடல்கள் பாடினால் இதுவே அருச்சனை பாட்டேயாகும்  என்கிறார் சேக்கிழார் சுவாமிகள்.

இன்று நாம் இறைவழிபாட்டில் என்ன செய்கிறோம், தேங்காய் , கற்பூரம் பழம் பூ இவற்றை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டால் நம் வழிபாடு முடிந்து விட்டது என நினைத்து இறைவரை தரிசித்து விட்டு திரும்பி விடுகிறோம், இது மட்டும் வழிபாடு ஆகிவிடாது. இன் தமிழ் பாக்களைக் வாயினால் நாம் பாடி துதிப்பது மிகவும் அவசியம் என்கிறார் தெய்வச் சேக்கிழார். அதன் அவசியத்தை இங்கு காண்போம்.
" விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினார் பதிற்றாகும் 
  துளக்கில் நல்மலர் ெதாடுத்தால் தூய விண்ணே றலாகும்
 விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்
 அளப்பில் கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே "  திமுறை 4/77/3

ஆலயத்தை தூய்ைம செய்தல், விளக்கேற்றுதல் மலர் தொடுத்தல் போன்ற தொண்டிற்கெல்லாம் பயன்களை அளவிட்டுக் கூறுகிறார் அப்பர் பெருமான், இறைவரை தண்டமிழால் பாடி வழிபட்டவர்க்கு அளவிட முடியாத பேற்றினை பெருமானே அருளுவார், அதனை தன்னால் அளவிட்டு கூற இயலாது என்கிறார் அப்பர் பெருமான்.

" பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் "  சம்பந்தர்

பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமதாமே "  த,திருமுறை 1/95/3

வாயினால் தீந்தமிழ்ப் பாக்களை பாடுங்கள் நீங்களும் உங்கள் சுற்றமும் (மண்ணில் ) இவ்வுலகில் வளமாக வாழலாம். பிறகு விண்ணுலகும் எய்தலாம் என்கிறார் நான் மறை சதுரராம்  ஞானசம்பந்தர்.
  " பாட்டினால் பணிந்தேத்திட வல்லவர்
   ஓட்டினார் வினையொல்லையே "  திமுறை 1. 57,5

செந்தமிழ் பாக்களால் இறைவரை எவர் அற்சித்து வணங்குகிறார்களோ அவர்களுடைய வினைகள் யாவும் விரைவில் அழிந்தொழியும்.

" இன்னிசை பாடுவார் பால் மன்னினார் "   சம்பந்தர்  1/8/5

அடியார் பெருமக்களுடன் சென்று வாயினால் பாடுதல் ேவண்டும். இன் தமிழ் பாடல்களை இன்னிசையுடன் பாடும் ெதாண்டர்களின் பால் நிலை ெபற்று நிற்பார் சிவபெருமான் என்கிறார் சம்பந்தர்

ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு
அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை "    திருவாசகம் திருச்சதகம்

இறைவருடைய அன்பைப் பெறுவதற்கு நாம் வாயினால் பாடுதல் வேண்டும், ெசந்தமிழ் பாடல்கள் நமது கல்போன்ற நெஞ்சங்களையும் உருகுவிக்கும் தகைமை உடையவை. உருகும் மனத்தே தேனாய் ஊறி நி்ற்பார் பெருமான்.

" கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
  பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி

  கீதத்தை மிகப்பாடும் அடியார்க்கென்றுங்
  கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ"    

சொற்றமிழ் பாக்களையே பெருமான் மிகவும் விரும்புகின்றார்.இப்படி கீதத்தை மிகப் பாடும் அடியார்களுக்கு என்றும் இன்பம் தழைக்க அருளுபவர் பெருமான்.

  கீதம் பாடியல்லவா இராவணன் அருள் பெற்றுய்ந்தான்? நாமும் பாடுவோம் பலனடைவோம்.

   இறைவருக்கு ஆபரணம் செய்து அணிவித்து மகிழ வேண்டுமாகில் தமிழ் மாலைகளால் படிக்கலம் ( ஆபரணம்) செய்து வணங்குங்கள்,
  பொன் மாலைகள் எப்போதும் இருக்காது
 பூமாலைகள் உடனே வாடிவிடும்
 பாமாலைகள் என்றும் நிலத்து இறைவரை உருக்கிவிடும்.

" செஞ்சொல் நாவன் வன் தொண்டன்
  பன்னு தமிழ் நூல் மாலை வல்லார்
 அவர் என் தலைமேல் பயில்வாரே "   சுந்தரர் 7/41/10

நாமெல்லாம் உய்யும் பொருட்டு இறைவரால் கயிலாயத்திலிருந்து இம் மண்ணுலகிற்கு அனுப்பப்பட்டவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள், இவர் சொல்கிறார் " தமிழ் மாலை பாடவல்லவர்கள் எப்பொழுதம் என் தலைமேல் இருப்பதற்குரியவர்கள் " என்கிறார். இதிலிருந்து திருமுறைப் பாக்களின் அருமையும் பெருமையும் அளவிடற்கு அரியது என்று நாம் உணர வேண்டும். அ்த்தகைய பாக்களால் இறைவரை பாடித் துதித்து வணங்கிவது தான் அற்சனை 
 என்று தெளியவும் வேண்டும்.
 வாயாரப் பாடுவோம் !  வளம் பெறுவோம் !!

தொகுப்பு ;வை,பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதப்பாடல்கள்
திருச்சிற்றம்பலம்

புதன், 8 மார்ச், 2017

பக்திக்கோர் வரகுண பாண்டியன்


பக்திக்கோர் வரகுண பாண்டியன்
பட்டிணத்தடிகள் அருளிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் வரகுண பாண்டியனுடைய உன்னத இறையன்பினைக் காணலாம். " பெரிய அன்பின் வரகுண தேவர் " என்கிறார் பட்டிணத்தடிகள். வரகுண தேவரின் பக்திக்கு எல்லையே இல்லை என்கிறார். அம்மன்னரது உன்னத பக்தியைக் கூறும் தாமே அதில் மூழ்கி விடுகிறார் நம்மையும் மூழ்க வைக்கிறார் பட்டிணத்தார்.
வரகுண பாண்டிய மன்னர் திருவிடை மருதூரில் வாழ்ந்து வருகிறார். அது சமயம் ஒரு நாள் காவலர்கள் திருடனைக் கொண்டு வந்து அவர் முன்னே நிறுத்துகின்றனர். திருடன் நெற்றியில் திருநீறு அணிந்துள்ளான், அரசனுக்கு அவன் திருடனாகத் தெரியவில்லை. திருநீற்றைக் கண்ட மாத்திரத்தில் சிவபெருமான் நினைவே மன்னருக்கு வந்தது. உடனே அவனை கட்டவிழ்த்து விடுமாறு உத்தரவிடுகிறார். இந்த இடத்தில் அப்பர் பெருமான் அருளிய பாடலை நினைவில் கொள்வது சாலப் பொருத்தமுடையது ஆகும்..
" எவரேனும் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி
உலராதே அவரவரைக் கண்ட போது 
உகந்தடிமைத் திறம் நினைத்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணிக் 
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே, " த,தி,மு, 6-61-3

இந்த இலக்கணத்திற்கு ஒரு இலக்கியமாய் உள்ளதுதான் பெரிய அன்பின் வரகுண தேவரின் உயர்ந்தபக்தி

இரவில் நரிகள் ஊளையிடுகின்றன. அந்த ஓசையைப் பெருமானை வாழ்த்தும் மங்கல ஓசையாகவே எண்ணுகிறான் மன்னன். உடனே வேலை ஆட்களை அழைத்து " நம் பெருமானை வாழ்ததும் நரிகள் குளிரில் வருந்தாமலிருக்க (படாம்) போர்வைகளைப் போர்ததுங்கள் என்று ஆணையிடுகிறார் மன்னார்.
திருவிடை மருதூரில் குளம் குட்டைகளில் தவளைகள் இரவில் கத்துகின்றன. மன்னனுக்கு ஹர ஹர என்று அரனைப்பாடும் வாழ்த்தொலலியாகவே கேட்கிறதாம். உடனே தவளைகள் வாழும் நீர் நிலைகளில் பொன்னையும் காசையும் கலந்து தூவச் செய்கிறார். இறைவரது திருப் பெயரையும் புகழையும் கேட்டுப் பழகிய அரசனுக்கு நரிகள் ஊளையிடுவதும், தவளைகள் கத்துவதும் இறைவரை வாழ்த்தும் வாழ்த் தொலியாகவே கேட்பதில் தவறுஏதும் இல்லையே !
திருவிடை முருதூர் மேவிய மகாலிங்கப் பெருமானின் திருமுழுக்கிற்காக வேண்டி எள்ளை ஆலத்தினுள் உலர்த்தியுள்ளார்கள், அதனை ஒருவன் தின்று கொண்டிருந்தான். அந்த நேரம் வரகுணத் தேவர் அங்கே வருகிறார். எள்ளைத் தின்பவனிடம் இறைவனுக்கு என்று உலர்த்தப்பட்டுள்ள எள்ள தின்பாதால் ஏற்படும் விளைவு யாதென்று உனக்கு தெரியுமா? என்று கேட்கிறார். அவனும்இதனைத் தின்பதால் தின்பவர்கள் செக்கிழுக்கும் மாடாக பிறக்க நேரிடும். காளைமாடாக பிறந்தும் பெருமானுடைய திரு திருமுழுக்கிற்கு உதவும் எண்ெண்ய் எடுக்கும் செக்கினை இழுக்க வேண்டும் என்று நினைத்துத்தான் இப்படிச் செய்தேன் என்றான்.
உடனே அரசன் அவன் தின்று கொண்டிருந்த எள்ளினை கீழே துப்பும்படி செய்து, தான் அந்த எச்சில் கலந்த எள்ளினைத் தின்றான். இதனைப் பார்த்த அந்த மனிதன் " இப்பொழுது நீங்கள் ஏன் இறைவருக்கு உரிய எள்ளினைத் தின்றீர் என்று கேட்க அதற்கு அன்பின் வரகுண தேவர் சொல்கிறர் " ஐயா செக்கிழுக்க இழுக்க இரண்டு மாடுகள் வேண்டுமல்லவா? ஒன்று நீ மற்றொன்று நான், நானும் மாடாக பிறந்து மகாலிங் பெருமானுக்கு செக்கிழுக்கும்புண்ணியம் பெற வேண்டும் எனும் எண்ணத்தில்தான் தின்றேன் " என்று கூறுகிறார். இதை நினைக்கும் பொழுது நம் கண்ணில் நீர் தானாகவே மல்கிறது நமது பக்தி எங்கே நாம் எங்கே என்று நினைக்க தோன்றுகிறதல்லவா?

தன்னை மறந்து தலைவரை நினைக்கும் உன்னத நிலையே இந்நிலை.

மற்றொரு நாள் ஆலயத்தை வலம் வருகிறார் மன்னர். ஆலய எல்லைக்குள் ஒரு மண்டை ஓடு கிடக்கிறது. இதனைக் கண்ட மன்னர் கீழே விழுந்து அம்மண்டை ஓட்டினை வணங்குகிறார். நீ செய்த புண்ணியம்தான் என்ன? இறந்த பிறகும் உன் தலை பெருமானின் வளாகத்தில் உள்ளதே,இதைப் போல எம் தலையும் கிடத்தல் வேண்டும் பெருமானே என்று வேண்டுகின்றார் மன்னர்.

ஒரு நாள் ஆலயத்தினுள் நாயின் மலம் கிடப்பதைக் காண்கிறார். உடனே ஓடோடி பெருமானுக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கிடைத்ததே என்று எண்ணி, தானே அம்மலத்தினை அப்புறப்படுத்தி ஆலயத்தை தூய்மைப் படுத்துகிறார்.
ஒரு வேப்ப மரத்தின் அருகில் வருகிறார் மன்னர். வேம்பின் பழங்கள் கிழே உதிர்ந்து பாதி மண்ணிலும் பாதி வெளியிலும் தெரிகின்றன, இப்பழங்கள் யாவும்மன்னருக்கு சிவலிங்களாகவே தெரிகின்றனவாம். உடனே அவற்றுக்கெல்லாம் விதானம் அமைக்கும்படி செய்கிறார் மன்னர்.


அக்கால நியதிப்படி வேற்று நாட்டைக் கைப்பற்றிய மந்திரி அந்நாட்டு மகளைக் கொணர்ந்து வரகுண தேவருக்கு பரிசளிக்கிறார். அப் பெண் மிக அழகாக இருக்கிறாள், இந்த அழகான பெண்ணை நம் பெருமானுக்கு அல்லவா கொடுக்க வேண்டும் என்று எண்ணி மகாலிங்க பெருமானிடம் கொண்டு வந்து விட்டுவிடுகிறார் அந்த அழகியை , வரகுண பாண்டியன்.
இச் செயல்களால் சுகபோகத்தில் வாழ வேண்டிய ஒரு மன்னர் செய்தார் என்றால் அவர் " பெரிய அன்பின் வரகுண தேவரே " தான் அவருடைய பக்திக்கு எல்லைதான் உண்டா? அன்பே வடிவான இறைவரை அடைவதற்கு பெரிய அன்பின் வரகுண தேவரைப் போல நாமும்அன்பின் மயமாவது தான் , இவற்றை யெல்லாம் கூறி நிற்கும் பாடல் வரிகள்:

வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும்
ஓடும் பல்நரி ஊளை கேட்டு அரனைப்
பாடின என்று படாம்பல அளிததும்
குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்
வழிபடும் ஒருவன் மஞ்சனத் தியற்றிய
செழுவிதை எள்ளை தின்னக் கண்டு
பிடித்தலும் அவன் இப்பிறப்புக் கென்ன
இடித்துக் கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்
மருதவட்டத் தொருதனிக் கிடந்த
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப் போல் எம் இத்தலையும்
கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத் திரந்தும்
கோயில் முற்றத்து மீமிசைக் கிடப்ப
வாய்த்த தென்று நாய்க் கட்டம் எடுத்தும்
காம்பவிழூத்துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று
புரிகுழல் தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரியஅன்பின் வரகுண தேவர் " 
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை - 


தி,முறை 11.

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி !!

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாயம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு

http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

செவ்வாய், 7 மார்ச், 2017

தமிழ் வேதங்களின் அருமையும் ஆற்றலும்



கருங்கல்லை மிதக்கும் தெப்பமாக்கியது / அபபர
நீற்றறையை பொய்கை போலாக்கியது  / அப்பர்
கொடிய விடத்தை அமிர்தமாக்கியது   / அப்பர்
மிதிக்க வந்த யானையை வணங்க செய்தது / அப்பர்
இறைவரை பொதித் சோறு சுமக்க வைத்தது  / அப்பர்


பொற்றாளம் பெற்றுத் தந்தது  / சம்பந்தர்
முத்துப்பந்தரும் குடையும் பெற்றது  / சம்பந்தர்
தீயிட்டவருக்கு வெப்பு நோய் வரச்செய்தது  / சம்பந்தர்
இறந்தவரை மீண்டும் உயிர் பெறச் செய்தது / சம்பந்தர், அப்பர்
நீங்காத நோய்களை நீக்கியருளியது  / சம்பந்தர், அப்பர்
அடைப்ட்ட கோவில் கதவுகளை திறக்கச் செய்தது  / சம்பந்தர் , அப்பர்
ஆன்பனைகளை பெண்பனையாக்கி காய்க்கச் செய்தது / அப்பர்

நள்ளிரவில் இறைவரை தூது போக வைத்தது / சுந்தரர்
பொன் முடிப்பை பெற்றுத் தந்தது   / சுந்தரர்
பாலை நிலத்தை விளை நிலமாக்கியது  / சுந்தரர்
முதலை உண்ட உடலை திரும்ப உய்யக்கச் செய்தது / சுந்தரர்

நீர் நெருப்பு காற்று இவற்றை கட்டுப்படுத்தியது
நரிகளை பரிகளாக்கியது  / மாணிக்க வாசகருக்காக எம்பெருமான்
பிரம்படி பட்டது, புட்டு தின்றது, மண் சுமந்தது /  மாணிக்க வாசகருக்காக

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்        

மகளிர் தின நல்வாழ்த்துகள்





பெண் என்பவள் அழகிய தேவதையா?
இல்லை சூனியக்காரக் கிழவியா?
ஒரு குட்டிக்கதை
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச்
சொன்னால் உன் நாடு உனக்கே”
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில்
என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம்
இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை
சாென்னால் தான் நமக்கு திருமணம்
என்று சாெல்லியிருந்தாள்)
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை
கிடைக்கவில்லை.கடைசியாக சிலர்
சொன்னதால் ஒரு சூனியக்காரக்
கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால்
அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு
கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன
கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச்
சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட
முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு
பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம்
சொல்ல,அவன் தன் காதலியிடம்
சொல்ல,அவர்கள் திருமணம்
நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம்
வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து
கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற
அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக்
காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது
நான் கிழவியாக இருந்தால், உன்னுடன்
வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
ஆனால் நான் வெளியே உன்னுடன்
வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில்
உன்னுடன் அழகிய தேவதையாக
இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?”
என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல்
சொன்னான்”இது உன்
சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க
வேண்டும்” என்று
அவள் சொன்னாள்”முடிவை
என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும்
அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து
விட்டேன்.!” என்றாள்
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை
அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்..
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
மகளிர் தின நல்வாழ்த்துகள்

திங்கள், 6 மார்ச், 2017

" பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது பக்கத்தில் நான் செல்வேன்"

" பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது
பக்கத்தில் நான் செல்வேன்"

’’ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்கிறார் திருமூலர். தேவன் ஒருவனே என்றாலும் அந்த தேவனுக்குத்தான் எத்தனை உருவங்கள்! எத்தனை பெயர்கள்! அவரவர்கள் உணர்ந்தவாறு, விரும்பியவாறு ஒவ்வொரு பெயரிட்டு வணங்கி வழிபாடு செய்து வருகிறோம்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ?

என்று அந்த தேவனுக்கு ஆயிரம் நாமங்களையும் சூட்டி மகிழ்ந்தனர். ’ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ என்றார் காந்தியடிகள். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்கும் இறைவனை எளிதில் உணர அவன் நாமங்களே நமக்கு உதவுகின்றன.அந்தந்த நாமங்களைச் சொல்லும் போதே அந்த உருவத்தையும் நாம் கற்பனை செய்து பார்க்கிறோம். ராமா என்று சொல்லும் போது வில்லும் கையுமாக இருக்கும் உருவமும், முருகா என்னும் போது வேலும் மயிலும், சேவற்கொடி யோடு இலங்கும் உருவமும் கண்ணன் என்றால் குழலோடும் மயிற்பீலியோடும் திகழும் உருவமும் தோன்றுகிறது. காமாக்ஷி என்றால் அமர்ந்த கோலத்தில் கரும்பு வில்லோடு வீற்றிருக்கும் கோலமும் தெரிகிறது.

நாலு பவுன் எடையுள்ள தங்கக்கட்டி அல்லது தங்க பிஸ்கட் நம்மிடம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நம்மிடம் இருப்பது தங்கம் என்றாலும் அதை நம்மால் அப்படியே அணிந்து கொள்ளமுடியாது. ஆனால் இந்த தங்கக்கட்டியைச் சங்கிலியாகவோ, வளையல்களாகவோ மாற்றினால் அதே தங்கம் மேலும் அழகும் வடிவமும் பெற்று உபயோக மாகவும் ஆகிறது. அந்த அணிகலன்களை அணிந்து அழகும் ஆனந்தமும் பெறுகிறோம். இறைவனும் கட்டிப்பொன் போன்றவன். இறைவனுக்கு இரண்டு நிலைகள் இருக்கிறது. ஒன்று நாம ரூபமற்ற நிலை. மற்றொன்று நாமமும் ரூபமும் கூடிய நிலை.

முதல் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காணவும் உணரவும் முடியாது. இறைவன் அருளைப் பெற்றவர்களாலேயே அவனைக் காண முடியும். இரண்டாம் நிலையிலுள்ள இறைவனை எல்லோராலும் காண முடியும். அவனுடைய நாமங்கள் மூலம் அவனை உணர்கிறோம். மேலும் அவனுடைய நாமங்களை எல்லோரும்சொல்லலாம். வாய் பேசமுடியாதவர்கள் என்ன செய்வது யோசிக்க வேண்டாம். வாய்பேச முடியாதவர்களுக்கும்,சம்பந்தப் பெருமான் ஒருவழி சொல்கிறார்.

’துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினமின் நாள் தொறும்’

நினைக்க நெஞ்சம் இருக்கிறதே! என்கிறார். ஆக இறைவனைவிட அவன் நாமங்களே எங்கும் எந்த நேரத்திலும் எளிதாகப் பயனாகிறது. இதையே

’’கட்டிப்பொன் போலே அவன்(இறைவன்)
பணிப்பொன் போலே (அவன்) திருநாமம்

என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. கட்டிப் பொன்னை எல்லோரும் அணிந்து அழகு பார்க்க முடியாது ஆனால் நகைகளாக்கப்பட்ட பொன்னையோ எல்லோரும் எளிதில் கையாண்டு அணிந்து அழகு பார்க்க முடியும். கட்டிப் பொன்னான இறைவனை விட பணிப் பொன்னான அவனுடைய திரு நாமங்களை எல்லோரும் பாடி, கூவியழைத்துப் பயன் பெறமுடியும் என்று விளக்குகிறார். இதற்கு ஆதாரமாக மஹாபாரத நிகழ்ச்சியைக் காட்டுகிறார்.

’திரௌபத்திக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே!’’. கோவிந்தா கோவிந்தா என்று அலறி அலறி அழைத்த அந்த நாமம் தானே அவளைக் காத்தது?

நாராயண நாமம்

hiranya

சிறுவன் ப்ரஹ்லாதன் குருகுல வாசம் செய்யப் போகிறான்.ஆசிரியர் ‘’ஓம் இரண்யாய நம; என்று ஆரம்பிக்கிறார். வெள்ளையர்கள் நம்மை ஆண்ட அக் காலத்தில் முதலில் ‘’ God save the King’’என்று சொல்லி விட்டுத்தான் தொடங்க வேண்டும். இரணியன் காலத்தில் அவன் பெயரைச் சொல்லி விட்டுத்தான் எதையும் தொடங்க வேண்டும். ஆனால் ப்ரஹ்லாதனோ, ‘’ஓம் நமோ நாராயணாய’’ என்று சொல்கிறான். இதைக் கேட்ட ஆசிரியர் நடுங்குகிறார்.’’ப்ரஹ்லாதா, இந்தப் பெயரை ஏன் சொல்கிறாய்? நம் தலைவனான உன் தந்தையின் பெயரைச் சொல்’’ என்கிறார்.ஆனால் ப்ரஹ்லாதனோ, மறுபடியும்’’ஓம் நமோ நாராயணாய’’என்கிறான்

ப்ரணவத்தின் பொருளைக் குழந்தை முருகன் தந்தைக்கு உபதேசித்தது போல் ப்ரஹ்லாதன் இரண்யனுக்கு உபதேசம் செய்கிறான்
அஷ்டாக்ஷர நாம மகிமையை விரிவாகச் சொல்கிறான். தன் எதிரியின் பெயரைக் கேட்டு அடங்காத சீற்றம் கொண்டு ப்ரஹ்லாத னுக்கு எத்தனையோ விதமான துன்பங்களைக் கொடுக்கிறான். ஆனால் அஷ்டாக்ஷர நாமத்தின் மகிமையால் அத்தனை துன்பங்களையும் விலக்கி கடைசியில் சிரஞ்சீவிப் பட்டமும் பெறுகிறான் ப்ரஹ்லாதன்.

ஐந்து இந்திரியங்களும் கைவிட்ட நிலையில் யார் கை கொடுப்பார்கள்? ஆண்டவன் ஒருவனே கைகொடுக்க முடியும். ஆனால் அந்த நேரம் ஆண்டவன் நாமத்தைச் சொல்லி அழைக்க முடியுமா? நல்ல நினவும் அறிவும் இருக்கும் போதே ஆண்டவன் நாமங்களைச் சொல்லிப் பழக வில்லை யென்றால் " புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபம்அடைக்க நலம் நசிந்து நமன் வரும் வேளையிலா நாமம் சொல்ல முடியும்? "  அதனால் தான் ஆன்றோர்கள், நாம் நல்ல நிலையில் நினைவோடும் அறிவோடும் இருக்கும் போதே இறைவன் திரு நாமங்களைச் சொல்லிப் பழகிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பிற்காலத் தேவைகளுக்கு என்று எப்படி பணத்தைச் சேமித்து வைக்கிறோமோ அதேபோல கடைசி நேரத்துக்கு உதவும் என்று நாமங்களை ஜபித்து எழுதி சேமித்து வையுங்கள் என்கிறார்கள். அப்போது சொல்ல முடியாது நினைக்க முடியாது என்பதால் இப்போதே சொல்லி வைக்கிறேன் என்கிறார்கள்.

இதன் கருத்தையே பனிரெண் திருமுறையில் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
" குந்தி நடந்து குனிந்தொரு கைகோல் ஊன்றி
நொந்து இருமி ஏங்கி நுரைத்தேறி / வந்து உந்தி
ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை "  என்கிறார்.

நம் வாயால் இறைவன் திருநாமம் செப்ப இயலாத முதுமையில் நோய்வாய் பட்ட நிலையில் வாய் பேசாத நிலை ஏற்படும்நிலை அடையும் முன்பே இறைவனின் திருநாமகங்களை சொல்லிச் சொல்லி பழகிக்கொள்ள வேண்டும். 

அருணகிரிநாதரும் ’’மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’’ என்று நாமங்களின் பெருமையைப் பேசுகிறார். அவன் நாமத்தை யாரும் எந்த இடத்திலும் சொல்லலாம். ’’எல்லோரும் ராம நாமத்தைச் சொல்லுங்கள்’’ என்று சம்பாதி சொல்ல வானரங்கள் ராம நாமம் சொல்லச் சொல்ல தீய்ந்துபோன தன் சிறகுகளைச் சம்பாதி பெறுகிறான் என்று ராம நாம மகிமையை ராமாயணம் சொல்கிறது. 


கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே மிகவும்
நன்மையைத் தரும். பகவான் சொல்கிறார்

யோகி தன் உள்ளிலோ பரிதியிலோ
வைகுண்டம் தன்னிலோ வாசமில்லை
பக்தர்கள் நாமம் ஜபிக்கும் போது
பக்கத்தில் நான் செல்வேன் நாரதரே.

நாம சங்கீர்த்தனம் நடைபெறும் இடங்களுக்கு இறைவனே வருவதால் அவன் நாமங்கள் என்னும் பணிப்பொன்னை நாவில் அணிந்து நலம் பெறுவோம். 

  இறைவனின் திருநாமங்கள் இவ்வளவு பெருமை உடையதாக இருப்பதால் அவற்றை அடிக்கடி சொல்ல வேண்டும் என்பதற்காகவே நமது பெரியோர்கள் குழந்தைகளுக்கு இறைவனது திருப்பெயரையே சூட்டினார்கள்.

ஆனால் இப்பொழுதெல்லாம் அபிமான நடிக நடிகைகள் பெயர்களையும் விளையாட்டு வீரர்களின் பெயர்களையுமே தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள்.

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வியாழன், 2 மார்ச், 2017

மனிதனின் பலம் நம்பிக்கையில் தான்




மனிதனின் பலம் நம்பிக்கையில் தான்
மனிதனாக பிறப்பதற்கு அறிய மாதவம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம் . பூர்வ ஜன்மத்தில் புரிந்த நல்ல கர்மவினையால் நாம் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கிறோம் என்று புராணங்கள் சொல்லுகின்றன . இந்த மனிதப் பிறவியை அபூர்வமான பிறவி என்றும் சொல்லலாம் . எத்தனையோ பிறவிகள் நாம் எடுத்திருப்போம் , அதிலும் மனிதப் பிறவி நமக்கு கிடைத்த பொக்கிஷமாகும் . இந்த பிறவியில் அறிவாற்றல் , மனோசக்தி , திறமை மூன்றும் இணைந்து மனிதனை செயல்படுத்துகிறது . இவைகளே மனித்னக்குள்ளிருக்கும் சக்தி என்று சொல்லலாம். இந்த சக்தியானது மனிதனுக்கு அவனை பற்றி தெரிந்து கொள்ளச் செய்கிறது . அவனுக்குள்ளே புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வருகிறது . மனிதனுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது . தனம்பிக்கையுள்ள மனிதன் சாதனையை படைக்கிறான் . மாபெரும் வரலாற்றை உருவாக்குகிறான் . மனிதனுடைய சக்தியே மனிதகுலத்தை வளர்க்கிறது . இந்த சக்தி அழகிய நம்பிக்கையான சமுதாயத்தை படைக்கிறது . நம்பிக்கையானது மனிதனை சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்கும்படி செயல்படுத்துகிறது .
எதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயங்க வைக்கிறது . இந்த சக்தியை கடவுள் என்றும் சொல்லலாம் , மனிதனின் நம்பிக்கை என்றும் சொல்லலாம் . இதிலிருந்து நம்பிக்கை தான் கடவுள், கடவுள் தான் நம்பிக்கை என்ற அடிப்படை பதிலையும் நாம் பெறுகிறோம் . இந்த சக்தி உலகத்தை ஒரு கட்டுபாட்டுக்குள் இயங்க வைக்கிறது . இதனை மீறி இயங்கினால் உலகம் தன்னுடைய அழிவையும் காண நேரிடுகிறது . இயற்க்கை மற்ற அனைத்து ஜீவன்களும் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டால் உன்னதமான உலகத்தை உருவாக்கலாம் . இந்த ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு பக்கபலமாக அமைகிறது . அவனுடைய நம்பிக்கை துளிகள் மாபெரும் சாகரத்தை உருவாக்குகிறது . அதுவே அன்பு, அறிவு , பாசம், பண்பு ஆற்றல் , நேர்மை , பண்பாடு ஆகிய இயல்புகளை மனிதனுக்கு தருகிறது .

மனிதன் மட்டும் தான் ஆறு அறிவோடு பிறக்கிறான் . இந்த ஆறாவது அறிவானது மனிதனுக்கு சமீபத்தில் நிகழப் போகும் சம்பவத்தை முன்கூட்டியே உணர வைக்கிறது. இந்த அறிவாற்றலானது மனிதனை அபூர்வமான செயலை செயல்படுத்தச் செய்கிறது . நடக்கப் போகும் அசம்பாவிததிலிருந்து மனிதனை காப்பாற்றுகிறது . அவனுடைய அன்பும் பாசமும் சமுதாயத்தை வாழ வைக்கிறது , மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறான் . மனிதனுடைய பலம் நம்பிக்கையில் தான் என்ற உண்மையை அவனுக்கு அறிய வைக்கிறது.

அர்த்தமுள்ள இந்துமதம்

கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்
" வாசலில் அமீனா நிற்கிறான் "


தமிழர் ஒருவர் லண்டன் நகருக்குச் சென்றார்.

காலையில் குளித்துவிட்டுக் கட்டுக்கட்டாக விபூதி பூசினார்.

அதைப் பார்த்த ஓர் ஆங்கிலேயர் அவரிடம் கேட்டார்:

“ஏன் இப்படிச் சாம்பலை அள்ளி நெற்றியில் பூசுகிறீர்கள்?”

தமிழர் பதில் சொன்னார்:

“இந்த உடம்பு என்றாவது ஒருநாள் சாம்பலாகப் போகிறது என்பதை நாங்கள் தினமும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். அதன்மூலம் கெட்ட புத்தி விலகி விடுகிறது”.

ஆங்கிலேயர் திகைத்துப் போனார்.

அன்று முதல் இந்துமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

இன்றும் லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தமிழர் எனக்குச் சொன்ன செய்தி இது.

`யாக்கை நிலையாமையை’ இந்துசமய தத்துவஞானிகள் அடிக்கடிக் கூறி வந்திருப்பது, மனிதனை விரக்தியடையச் செய்வதற்கு அல்ல.

வாழ்க்கையில் ஒரு தைரியத்தை உண்டாக்குவதற்கே.

`விட்டுவிடப் போகுதுயிர்; விட்ட வுடனே உடலைச்

சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்…’

என்று பட்டினத்தார் மரணத்தைச் சுட்டிக் காட்டியது, ஒருநாள் மரணம் வரப்போகிறது என்பதை உணர்ந்து அதுவரை வாழ்க்கையை நேர்மையாக நடத்துமாறு செய்வதற்கே.

இந்த ஞானம், ஒவ்வொரு சராசரி மனிதனுக்குக் கூட ஒருநாள் வருகிறது.

ஏதாவது ஒரு சாவு வீட்டுக்குப் போகும்போது, “நாமும் சாகத்தான் போகிறோம்” என்ற எண்ணம் வருகிறது.

அதையே `மயான வைராக்கியம்’ என்பார்கள்.

“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” என்று பாடியவர், இறைவன் படைத்த உடலை அவமானப் படுத்துவதற்காகப் பாடவில்லை.

`பொய்யான இந்தக் காயத்தைக் காப்பாற்ற, நீ பொய் சொல்லாதே, நீ திருடாதே, பிறரை ஏமாற்றாதே’ என்று எச்சரிப்பதற்காகப் பாடினார்.

`இந்த உயிர் இறைவன் கொடுத்த கடன்.

இந்த உடல் இலவசமாகக் கொடுத்த பரிசு.

தலை வழுக்கை விழுவதோ, ரோமம் நரைப்பதோ, பல் விழுவதோ இறைவன் நமக்குப் போடும் ஞாபகக் கடிதம்.

`நீ கையெழுத்துப்போட்ட பத்திரம் காலாவதியாகிப் போகிறது.

கடனைக் கட்டுவதற்குத் தயாராகிக் கொள்.

உன் உயிரை நான் ஜப்தி செய்யப் போகிறேன்”.

என்று இறைவன் நம்மை எச்சரிக்கிறான்.

உயிரை ஜப்தி செய்தவற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும் ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.

அந்த அமீனாவுக்கு `யமன்’ என்றும், `கூற்றுவன்’ என்றும் பெயர் கொடுத்தார்கள்.

உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில் நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.

சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.

துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.

அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு ஒருவழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத் தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

மரணத்தின் மகத்தான சக்தியை மரணம் வருமுன்பே மனிதனை அறிந்து கொள்ளச்செய்வது, இந்துசமயவாதிகளின் நோக்கங் களில் ஒன்றாகும்.

எதையும் அளவோடும் நியாயமாகவும் பகிர்ந்து அனுபவிக்கும் உணர்ச்சிக்கு இது அடித்தளம்.

ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில்
பாவிஎன்று நாமம், படையாதே!

மேவியசீர்
வித்தாரமும் கடம்பும் வேண்டா
மடநெஞ்சே!

செத்தாரைப் போலத் திரி!
இப்பிறப்பை நம்பி இருப்பாரோ
நெஞ்சகமே!

வைப்பிருக்க வாயில்
மனைஇருக்கச் சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண்
மெத்தப்பஞ் சிட்டு அப்பைக்
கக்கிச் செத்துக் கொட்டக்
கண்டு!

ஒன்பதுவாய்த் தோல்பைக்கு
ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே
அலைந்தாயே!

வன்கழுக்கள்
தத்தித்தத் திச்செட்டை
தட்டிக்கட் டிப்பிட்டுக்
கத்திக்குத் தித்தின்னக் கண்டு!

முதற்சங்கு அமுதூட்டும்,
மெய்குழலார் ஆசை
நடுச்சங்கம் நல்விலங்கு
பூட்டும் கடைச்சங்கம்
ஆம்போ ததுஊதும், அம்மட்டோ?
இம்மட்டோ?
நாம்பூமி வாழ்ந்த நலம்!

எத்தனைநாள் கூடி
எடுத்த சரீரம் இவை!

அத்தனையும் மண்தின்ப
தல்லவோ வித்தகனார்
காலைப் பிடித்துமெள்ளக்
கங்குல்பகல் அற்றிடத்தே
மேலைக் குடியிருப்போ மே?
இருப்பதுபொய் போவது
மெய் என்றெண்ணி நெஞ்சே!

ஒருத்தருக்கும் தீங்கினை
யுன்னாதே பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப
நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்!

இவை பட்டினத்தார் பாடல்கள்.

காயம் நிலையாமையைப் பற்றிப் பாடிய பட்டினத்தார் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் தான் பாடினார் என்றாலும், அந்தச் சிந்தனை வந்த பிறகுதான், அவருக்கு அமைதி வந்தது என்பதை, அவரது வாழ்க்கையிலிருந்து காணுகிறோம்.

“செத்தாரைப் போலே திரி”, என்று அவர் சொன்னது பற்றில்லாமல் வாழச் சொன்னதாகும்.

அதே நேரத்தில், ஆவியும் காயமும் அழிவதென்றாலும், பாவி என்ற பெயரைப் படைக்கக்கூடாது என்று அவர் கூறுவது கவனிக்கத் தக்கது.

வாழ்க்கைக்கு மூன்று சங்குகள் என்கிறார் பட்டினத்தார்.

முதல் சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.

இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.

மூன்றாவது சங்கு மரணத்திற்குப் பிறகு ஊதப்படுகிறது.

அதிலும் வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார் பட்டினத்தார்.

`சங்கம்’ என்ற வார்த்தை சங்கையும் குறிக்கும்; சங்கமம் ஆவதையும் குறிக்கும்.

`முதற்சங்கம் அமுதூட்டும்’ என்பது, சங்கு பால் கொடுப்பதைக் குறிக்கிறது.

`மொய்குழலார் ஆசை நடுச்சங்கம்’ என்பது, ஆண் பெண் உறவு நடுவிலே சங்கமமாவதைக் குறிக்கிறது.

`கடைச்சங்கம்’ என்பது கடைசியில் மரணத்தில் சங்கமமாவதைக் குறிக்கிறது.

“இவ்வளவுதான் நாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார் பட்டினத்தார்.

`இந்த உடல் நமக்கே சொந்தம்’ என்று நாமிருக்கிறோமாம்.

`நாயும் நரியும், பேயும் கழுகும், தாம் ஒரு நாள் இதை உண்ணப் போகிறோம்’ என்று காத்துக் கொண்டிருக்கின்றனவாம்!

நிலையாத இந்த உடம்பின் மீது எவ்வளவு மோகம்; எவ்வளவு வருணனைகள்!

இந்த உடம்பும் அழகும் பொய்யென்று நினைப்பதில் என்ன லாபம் என்று நீங்கள் கேட்கக் கூடும்?

அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப் போவது, முதல் லாபம்.

கடற்பாம்பின் கால்கள் போல் ஆசைகள் திசை தோறும் பரவாமல், கிடைத்த வரைக்கும் நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்.

அதனால்தான் இந்துக்கள், பிற மதத்தவரைப் போல், இறந்தவர் உடலைப் புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்.

இந்த உடம்புக்கான தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலாகி விடுவதுதான் நியாயம். அதைப் புதைத்து வைத்து, இன்னும் அது இருப்பது போன்ற பிரமையை உண்டாக்கக்கூடாது என்று இந்துக்கள் கருதினார்கள்.

புதைபட்ட உடலுக்கு, அது புதைக்கப்பட்ட இடம் சொந்தமாகி விடுகிறது.

எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்?

“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்றார்கள்.

இறந்த உடலுக்கு, ஏன் ஆறடி நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும்?

அது சாம்பலாகிக் கரைந்து போவதுதான் முறை என்று நம்பினார்கள்.

தங்களைத் தாங்களே சரிபார்த்துக் கொள்ள நமது தத்துவ ஞானிகள் வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.

“அமீனா வாசலில் நிற்கிறான்”.

“இறைவனிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டத் தயாராக இருங்கள்”.