அற்சனை பாட்டே ஆகும்
தோடுடைய செவியனாகிய சிவபெருான் விரும்பும் அற்சனை சொற்றமிழ் பாட்டே ஆகும். என்கிறது நமது தமிழ் திருமுறை வேதங்கள் அதில் பன்னிரண்டாம் திருமுறை பெரியபுராணத்தில் சேக்கிழாரின் கூற்று
" அற்சனை பாட்டே ஆகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் " தடுத்தாட் கொண்ட புராணம்.
நாம் வாய் திறந்து பாட வேண்டும், உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாவற்றிலும் பேசும் ஆற்றல் பெற்றவன் மனிதன் மட்டுமே, அதனால் இறைவரை வாயினால் பாடித் துதித்திட வேண்டியது நமது தலையாக கடமை,
மற்ற எல்லாவற்றையும் விட வாயினால் பாடும் பயன் மிக அதிகம் என்பதை நாம் உணர வேண்டும். இக்காலத்தில் இரண்டு ரூபாய் கொடுத்து அருச்சனை சீட்டு வாங்கி விட்டா்ல் நமது இறைவழிபாடு முடிந்து விட்டதாக எண்ணுகிறோம். இது மிகப் பெரி தவறு இதனால் யாதொரு பயனும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
வழிபாடு என்பது ஆன்மாவை ஆண்டவருடன் இணைக்கும் ஒரு செயலே ஆகும். உள்ளம் ஒன்றிப் பாடும் பொழுதுதான் இது நடைபெறும்.இதனால் தான் சம்பந்தர் " வாயடைந்து பாடவல்லார் வானுலகு ஆள்பவரே " என்றருளிச் செய்தார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளும் " இன்னிசையால் பாட வல்லர்ர் இருநிலத்தில் ஈசன் என்னும் இயல்பினோரே " என்றருளினார்.
கல்லையும் கனிவிக்கும் தமிழ்வேதப் பாடல்கள் பாடினால் இதுவே அருச்சனை பாட்டேயாகும் என்கிறார் சேக்கிழார் சுவாமிகள்.
இன்று நாம் இறைவழிபாட்டில் என்ன செய்கிறோம், தேங்காய் , கற்பூரம் பழம் பூ இவற்றை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டால் நம் வழிபாடு முடிந்து விட்டது என நினைத்து இறைவரை தரிசித்து விட்டு திரும்பி விடுகிறோம், இது மட்டும் வழிபாடு ஆகிவிடாது. இன் தமிழ் பாக்களைக் வாயினால் நாம் பாடி துதிப்பது மிகவும் அவசியம் என்கிறார் தெய்வச் சேக்கிழார். அதன் அவசியத்தை இங்கு காண்போம்.
" விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினார் பதிற்றாகும்
துளக்கில் நல்மலர் ெதாடுத்தால் தூய விண்ணே றலாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்
அளப்பில் கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே " திமுறை 4/77/3
ஆலயத்தை தூய்ைம செய்தல், விளக்கேற்றுதல் மலர் தொடுத்தல் போன்ற தொண்டிற்கெல்லாம் பயன்களை அளவிட்டுக் கூறுகிறார் அப்பர் பெருமான், இறைவரை தண்டமிழால் பாடி வழிபட்டவர்க்கு அளவிட முடியாத பேற்றினை பெருமானே அருளுவார், அதனை தன்னால் அளவிட்டு கூற இயலாது என்கிறார் அப்பர் பெருமான்.
" பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் " சம்பந்தர்
பண்ணின் மொழி சொல்ல விண்ணும் தமதாமே " த,திருமுறை 1/95/3
வாயினால் தீந்தமிழ்ப் பாக்களை பாடுங்கள் நீங்களும் உங்கள் சுற்றமும் (மண்ணில் ) இவ்வுலகில் வளமாக வாழலாம். பிறகு விண்ணுலகும் எய்தலாம் என்கிறார் நான் மறை சதுரராம் ஞானசம்பந்தர்.
" பாட்டினால் பணிந்தேத்திட வல்லவர்
ஓட்டினார் வினையொல்லையே " திமுறை 1. 57,5
செந்தமிழ் பாக்களால் இறைவரை எவர் அற்சித்து வணங்குகிறார்களோ அவர்களுடைய வினைகள் யாவும் விரைவில் அழிந்தொழியும்.
" இன்னிசை பாடுவார் பால் மன்னினார் " சம்பந்தர் 1/8/5
அடியார் பெருமக்களுடன் சென்று வாயினால் பாடுதல் ேவண்டும். இன் தமிழ் பாடல்களை இன்னிசையுடன் பாடும் ெதாண்டர்களின் பால் நிலை ெபற்று நிற்பார் சிவபெருமான் என்கிறார் சம்பந்தர்
ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு
அன்பிலை என்புருகிப் பாடுகின்றிலை " திருவாசகம் திருச்சதகம்
இறைவருடைய அன்பைப் பெறுவதற்கு நாம் வாயினால் பாடுதல் வேண்டும், ெசந்தமிழ் பாடல்கள் நமது கல்போன்ற நெஞ்சங்களையும் உருகுவிக்கும் தகைமை உடையவை. உருகும் மனத்தே தேனாய் ஊறி நி்ற்பார் பெருமான்.
" கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி
கீதத்தை மிகப்பாடும் அடியார்க்கென்றுங்
கேடிலா வானுலகங் கொடுத்த நாளோ"
சொற்றமிழ் பாக்களையே பெருமான் மிகவும் விரும்புகின்றார்.இப்படி கீதத்தை மிகப் பாடும் அடியார்களுக்கு என்றும் இன்பம் தழைக்க அருளுபவர் பெருமான்.
கீதம் பாடியல்லவா இராவணன் அருள் பெற்றுய்ந்தான்? நாமும் பாடுவோம் பலனடைவோம்.
இறைவருக்கு ஆபரணம் செய்து அணிவித்து மகிழ வேண்டுமாகில் தமிழ் மாலைகளால் படிக்கலம் ( ஆபரணம்) செய்து வணங்குங்கள்,
பொன் மாலைகள் எப்போதும் இருக்காது
பூமாலைகள் உடனே வாடிவிடும்
பாமாலைகள் என்றும் நிலத்து இறைவரை உருக்கிவிடும்.
" செஞ்சொல் நாவன் வன் தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார்
அவர் என் தலைமேல் பயில்வாரே " சுந்தரர் 7/41/10
நாமெல்லாம் உய்யும் பொருட்டு இறைவரால் கயிலாயத்திலிருந்து இம் மண்ணுலகிற்கு அனுப்பப்பட்டவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள், இவர் சொல்கிறார் " தமிழ் மாலை பாடவல்லவர்கள் எப்பொழுதம் என் தலைமேல் இருப்பதற்குரியவர்கள் " என்கிறார். இதிலிருந்து திருமுறைப் பாக்களின் அருமையும் பெருமையும் அளவிடற்கு அரியது என்று நாம் உணர வேண்டும். அ்த்தகைய பாக்களால் இறைவரை பாடித் துதித்து வணங்கிவது தான் அற்சனை
என்று தெளியவும் வேண்டும்.
வாயாரப் பாடுவோம் ! வளம் பெறுவோம் !!
தொகுப்பு ;வை,பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதப்பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக