ஞாயிறு, 26 மார்ச், 2017

திரு ஐந்தெழத்தின் ஆற்றல்

திரு ஐந்தெழத்தின் ஆற்றல்



தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே,   சம்பந்தர் தேவாரம்

தும்மல், இருமல், தொடர்ந்து வரும் பொழுதும், கொடிய துன்பங்கள் அனுபவிக்கும் காலத்ததிலும, முற்பிறவிகளில் செய்த வினை இந்த பிறவியில் வந்து வருத்துமு் காலத்தும் மறுபிறவிக்கும் துணையாக வந்து உதவுவது, திரு ஐந்தெழுத்தான நமசிவாய என்ற மந்திரச்சொல்லாகும்,

இன்று நாம் அனுபவித்து வரும் இன்பமும் துன்பமும் முற்பிறவிகளில் நாம் செய்த வினைகளால் வந்தவைதான் என்று முதலில் நாம் தெளிவடைய வேண்டும்.
இன்பம் இடர்என்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம் அறியாரே,       ..... திருமந்திரம்

கடவுளைக் கண்ட திருமூல நாயனார் சொல்வதைத்தான் நாம் கொள்ள வேண்டும். நமக்கு வரும் துன்பமும், இன்பமும் முன்னே நாம் செய்த வினையால் வருபவனவே அனறி வேறு எதனாலும் இல்லை எ்ன்பது தான் திருமூலர் நாயனாரின் முடிவு. அனுபவ வாக்கு உண்மை இப்படி இருக்கும் போது நாம் வீடு குற்றம் உடையது நாளும் கோளும் நம்மை துன்பறுத்து கின்றன என்றெல்லாம் ஆதங்கப்படுவது அறிவுடைமை ஆகுமா? என எண்ணிப் பார்க்கவேண்டும்.

  சரி தெரிந்தோ, தெரியாமலோ வினைகளைச் செய்து விட்டோம் அவ்வினைகளை போக்க வழி என்ன என்று சிந்திப்போம். அவ்வினைகளை போக்க நாம் மேற்கொள்ளும் வாழிதான் தவறானது, பலர் பொருட் செலவ செய்துவிட்டால் வினை கழிந்துவிடும் என்று சுயநலக்காரர்களின் பின் செல்கிறார்கள் மேலும் வினைகள் பெருகத்தான் செய்யுமே ஒழிய நீங்குவ தில்லை. வினை நீங்காத காரணத்தால் துன்பமும் தொலைவதில்லை.

  இம்மைவினை ெநருங்கி வந்து நம்மை துன்படுத்தும்போது சடங்குகடகும் சம்பிராதங்கட்கும் சென்று விடவே கூடாது. பொருளற்ற சடங்குகட் கெல்லாம் தெய்வீக நியாயத்தை கற்பித்துவிட்டார்கள் சுயநலக்காரர்கள். பிறர் நலத்திற்காக 
இறைவரால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டவர்கள் நால்வர் , என்பதை முதலில் நாம் மனதில் கொள்ளுங்கள். நமது பன்னிரு தமிழ் வேதங்களையும் அருளிய இருபத்தேழு அருளாளர்கள் இறைவரால் நாம் நலமாக வாழ அனுப்பப்பட்ட புண்ணியவான்கள் என்று உணர வே்ண்டும்,
  இவரகள் சொல்லலிய யாவும் இறைவரால் சொல்லப்பட்டனவே ஆகும். இறைவர் உள் நின்று உணர்த்த இப் பெருமக்கள் கூறினார்க்ள். அந்த வகையில் பத்தாவது திருமுறை தந்த திருமூலர் நம் வினை தான் நம் துன்பத்திற்கு காரணம் என்கிறார்.
  இந்த வினை வந்து நாம் துன்பப்படும் போது திரு ஐந்தெழுத்தை / சிவாயநம/ சொல்ல வேண்டும். இதுவே வினைகளை போக்கி நலத்தை அளிக்கும் என்பது இறந்தாரை எழுப்பும் திறம் பெற்ற சம்பந்த பெருமானின் கூற்று,
  மிக எளிய முறை, உரிய முறை, பொருட்செலவே இல்லை, ேவண்டவும் வேண்டாம் , இப்படி சொன்னவர் உடலோடு முத்தி பெற்றவர். மற்றவர்கட்கும் அப்பேற்றினை அளித்தவர். நாமும்  காலையும்மாலையும் திரு ஐந்தெழுத்ைத ஓதி நம் பல பெறலாம்,
ஓம் நமசிவாய நம
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;  வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக