வெள்ளி, 1 மார்ச், 2019

உருவமற்ற ஈசன் உருவம் காெண்ட நமக்கு காட்டும் உருவதிருமேனிகள்

உருவமற்ற ஈசன் உருவம் காெண்ட நமக்கு காட்டும் உருவதிருமேனிகள்



சிவபெருமான் பக்தர்களுக்காக பற்பல திருமேனி தாங்கிய மூர்த்திகளாக விளங்குகிறார்.
உருவமற்ற ஈசன் உருவம் கொண்ட நமக்கு நம் வினைபயனை நீக்க நம்மீது அருள் கொண்டு தானே நாம் விரும்பும் அருஉருவ மற்றும் உருவத்திருமேனிகள் கொண்டு அருள்பாவிப்பதை அவன் கருணையை அளவிடற்கரியது.
 தம்மை வழிபடுமு் அன்பு அடியார்களை ஆட்கொண்டு அருளுவதற்கு அவன் தாங்கிய திருக்கோல மகாத்மியத்தை அளவிடுவதுதான் எங்ஙனம்?

 பரமேசுவரன் தட்சணாமூர்த்தியாக எழுந்தருளி யோகத்திற்கும் ஞானத்திற்கும் பொருளாகவிளங்குகிறார். 
 தில்லையில் உருவமற்ற ஆகாயமாக காட்சியளிக்கும் ஈசன் நம் பொருட்டு இறங்கி நடராஜப்பெருமானாக எழுந்தருளி களி நடனம் புரிந்து கலை நலம் சிறந்தது என்பதனை போதிக்கிறார்.
  நம்பினவருக்கு நடராஜன் நம்பாதவருக்கு எமராஜன் என்பது பழமொழி அவனை நம்புவோர்க்கு எம பயம் ஏது?
 எம்பெருமான் நமது குற்றங்களை எல்லாம் தாம் ஏற்றுக் கொண்டு தம்முடைய சத்குணங்களையெல்லாம் நமக்கு தந்தருளும் திிவ்ய திருக்கோலமே பிச்சானர் திருத்தவக்கோலம்
 பிச்சாடனர், கங்காளர், பைரவர் ஆகிய ஐயனின் மூன்று திருக்கோலங்கள் ஒரே தத்துவ வடிவமாக கொண்ட அருள் கோலங்களாகும்
சிவபெருமான் கொண்ட அழகு திருக்கோலங்களுள் சாேமாஸ்கந்தர் திருமேனி மிகவும் மேன்மையாக கூறப்படுகிறது.
 சிவபெருமான் பக்கத்திலே உமை அம்மை நடுவில் கந்தன், அருமைக்கு சிவன், எளிமைக்கு சக்தி, அழகிற்கு முருகன், ஓம் என்ற ஓங்கார தத்துவத்ததிற்கு விநாயகன், என்ற தத்துவத்தை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற கோலமாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்திரு உருவ மூர்த்தி
  துன்பம் நிறைந்த மரணத்திற்கு அஞ்சாத நிலையை பக்தர்கள் பெறுவதற்கு காலச்சங்காரத்திருமேனி கொண்டு வளங்குகிறார் ஈசன்.
  இறைவனும் இறைவியும் பிரிந்த நிலையில் சகல லாேகங்களும் ஸ்தம்பித்து போகும் என்ற பெருநிலையை உணர்த்துவதற்கு ஐயன் கொண்ட கோலம் காமதகனர்
 சிவனின்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவமில்லை என்ற தத்துவத்திற்கு சிவனும் சக்தியும் ஒன்றே என்று விளக்குவதற்கு எடுத்த கோலம் சிவசக்தி கோலம்
 மதுரையம்பதியிலே பாண்டியகுமாரியை மணம் புரிவதற்கு அவன் எடுத்த கோலங்களும் அவன் திருவிளையாடல்களும் எத்தனை எத்தனை? 
  தன் அடியார்களுக்கு எடுத்த கோலங்களுள் மாணிக்கவாசகருக்கு குருவாகி அவரை ஆட்கொள்ள பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்டும் பாணபத்திரருக்காக விறகு விற்று ஆடாத ஆட்டம் ஆடி பாண்டிய மன்னனுக்காக கால்மாறி ஆடி காட்டிய திருக்கோலம் கொண்ட மூர்த்தியின் பெருமையை என்னவென்பது.
  இப்படியாக அவன் பூண்ட திருக்கோலங்களுக்கு தத்துவங்கள் பல  உண்டு ஞானங்கள் உண்டு.
 சிவனை முப்போதும்நினைப்பவர்களின் பாவ கருமங்களை நீங்கச் செய்து அரிய பல யாகம் செய்தபேறு கிடைக்கிறது. முப்போதுமின்றி சிவபூசை செய்து வந்தால், முற்பிறப்பு பாவ வினைகள் அற்றுப்போகும். இம்மையிலும் நல்ல மார்க்கம் கிட்டும்
  சஞ்சலமும்இல்லாதவன், உருவங்களில் கட்டுப்படாதவன், இந்திரயங்கள் அனைத்தையும் வென்றாவன், பற்றை அறவே துறந்து அவன் பால் பற்றுடையவன் பால் பற்றுடையவன், ஆனந்தமாயமான சிவனே நம் பெருமான்.
 சிவனை நிந்திப்போர்க்கு சர்வநாசம் தான். அவர்கள் மங்களத்தை எதிர் பார்க்க முடியாது. என்ற ஒப்பற்ற உண்மையை உணர்த்துபவன்
எந்நாட்டவருக்கும் ஈசன் ஆனாலும் தென்னாடு உடைய சிவன்
அவன் அடிபணிந்து அவன் தாள் வழங்குவோம்
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக