புதன், 30 ஏப்ரல், 2014
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ருத்ராட்சம்
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ருத்ராட்சம்: நம் நாடு ஆன்மீக பாரம்பரியங்களின் வேர்கள் என்பதை விளக்குவதற்கான சந்தர்ப்பங்களை இறைவன் எப்போதுமே நிருபிக்கிறார்.நமது மண்ணின் விதைகளாய் இருக்க...
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சகஸ்ரவடுகர்
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சகஸ்ரவடுகர்: சகஸ்ரவடுகர் 25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு...
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தீபம் - சகஸ்ரவடுகர்.
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): தீபம் - சகஸ்ரவடுகர்.: அனைவருக்கும் வணக்கம், உலகில் உருவாகும் கலைநிலைகளில் இருவகைப்படும். அவை இருள் மற்றும் வெளிச்சம். இந்த இரண்டு காரணிகளை இயக்கும் சக்திகள...
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அட்சய திரிதியையின் சிறப்புகள
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அட்சய திரிதியையின் சிறப்புகள: ஒவ்வொரு ஆண்டின் முதல் மாதம் சித்திரை ஆகும்;சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திதியில் மூன்றாம் நாளை அட்சயத் திரிதியையாக நாம் பல நூற்றாண்டு...
திரு ஐந்தெழுத்தை ஓத நெறி முறை
இந்து சைவ மதத்தின் முக்கிய அடையாளங்களில் , திரு நீறு அணிதல், ருத்திராட்சம் அணிதல், சடாமுடி ,இவற்றுடன் முக்கிய பங்கு வைக்கும் திரு ஐந்தெழுத்து மந்திரம் ஓதுதல் ஆகும், எல்லாமந்திரங்களும் தோன்றுவதற்கு காரணமாவது திரு ஐந்தெழுத்து மந்திரமே என சமயக்குறவர்கள் ஞான சம்பந்தரும், அப்பர் பெருமானும், சுந்தரர் பெருமானும் இதற்கென தனி பதிகங்களாக நமச்சிவாய பதிகம் ஏற்றி பெருமை சேர்த்துள்ளனர்.
வேத மறையாளர்கள் ஓதிவரும் மந்திரங்களுக்கெல்லாம் தலையாயது திருஐந்தெழுத்து மந்திரமென்பர், " செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்கிறார், ஞானசம்பந்தர், இபபதிக பாடல்களை பக்தியுடன் உள்ள முருக வேண்டினால் தீவினையும், தீரா பிணியும், நீங்கி வளமும், இன்ப வாழ்வும் அடைவார்கள், என்பது அருளாளர்களின் வாக்கு, நாவுக்கரசர் பெருமானை அமணர்கள் கல்லுடன் பூட்டி கடலில் பாய்ச்சியபோதும், அது, தொப்பமாக மிதந்தது, " கற்றுணைப் பூட்டியோர் கடலின் பாச்சினும், நற்றுணை யாவது நமச்சிவாயவே" என்கிறார் அப்பர் பெருமான்,
இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பவர்கள் மனங்களில் உறைபவர் இறைவராக இருந்த போதிலும், அதனை ஓதும் மாந்தர்கள் நெறிஉடைவர்களாக இருக்க வேண்டும், இல்லையெனின் இவ்வைந்தெழுத்து மந்திரம் ஓதினாலும் இறைவர் விலகி இருப்பார், என்கிறார் நாவுக்கரசர் சுவாமிகள்.வேதமந்திரங்களுக்கெல்லாம் சிறப்பு வாய்ந்த மந்திரமான திரு ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுவதற்கு உரிய நெறியின்றி , வஞ்சனையுடைய மாந்தர்கள் " சிவாயநம" நமச்சிவாய " என ஓதினாலும் அவர்களை விட்டு விலகி தொலைவில் இருப்பார் இறைவர், வஞ்சனை மாந்தரை மறந்து விடுவர் அப்பெருமானார், வஞ்சனையும், சூதும் வாதும் உடையவர் மனத்தினில் தங்கார் திருவீழி மிழலையான் (இறைவர்) என்கிறார் அப்பர் சுவாமிகள்,
" தூயானைச் சுடர்வளச் சோதி யானைத்
தோன்றிய எவ்வுயிர்க்குத் துணையாய் நின்ற
தாயானைச் சக்கரமாற்கு ஈந்தான் தன்னைச்
சங்கரனைச் சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரப்பார் மனத்து ளானை
வஞ்சனையால் அஞசெழுத்தும் வழுத்து வார்க்குச்
சேயானைத் திருவீழி மிழலை யானைச்
சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே,
அதனால் தான் உண்மை அடியார்களுடன் ஆலயவழிபாடு செய்வது, நலம் பயக்கும், தீயவர்களுடன் செல்லும் பொழுது இறைவர் விலகி இருப்பார், எனவே " தூய மனத்துடன் திருஐந்தெழுத்தை ஓதுதல் வேண்டும். தீய குணங்களை விட்டு ஒழிக்க வேண்டும், எல்லா தீமைகளையும்செய்து கொண்டு ஐந்தெழுத்து மந்திரம் ஓதுவது நலல்தன்று, தூய்மையான உள்ளம் உடையவர்கள் தூயானை எளிதில்உணர்ந்து விடுகிறார்கள்
திருச்சிற்றம்பல் - " ஓம் நமசிவாய ஓம்"
செவ்வாய், 29 ஏப்ரல், 2014
"அடியாருக்கு அடியவன்"
பசுவினிடம் பால் பெற வேண்டுமானால் கன்றுக்குட்டி அவசியமாகிறது, அதுபோல் இறையருள் பெறுவதற்கு குருவருள் அவசியமாகிறது, குருவானவர் நமது கண் போன்றவர், கல்லையையும் முள்ளையும் காட்டுவதும், வழியை யும் குழியையும் உணர்த்துவதும் கண், இதைப்போலவே நன்மை தீமைகளை உணர்ததுபவர் குருநாதர், இந்த பிறவியில் அளிக்கும் ஞானம் எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடரும், பல பிறவிகளல் இறைவரை வேண்டி அந்த நிலையை அடந்தவர் குருநாதர், இறைவருடைய பரம கருணைக்கு பாத்திரமானவர் குருநாதர், அதனால் தான் சான்றோர்கள் இறைவருக்கு அடுத்த நிலையில் குருவை வைத்து போற்றினார்கள்,
குரு பக்தியே கோடி நன்மை தரும், குருவின் அடிபணிந்து கூடுவது அல்லாருக்கு அருவமாய் இருக்கும் சிவம் , இதனையே திருமந்திரத்தில் திருமூலரும் தனது பாடலில் " குருவே சிவம்" இறைவன் கட்புலனுக்கு காணப்படாததோர் பொருள் கட்புலனுக்கு காணப்படும் பொருள் குருவே, அதனால் அவனையே இறைவனாக தம் தலைவனாகக் கொள்ளவேண்டும் , குரு தான் இறைவனாய் எவர்க்கும் எவற்றிக்கும் தலைவனாய் இருப்பவன் , என்கிறார், இவர்கூற்றின் படி சைவ சமய குறவர்களில் சிவனடியார்களையே அடியாருக்கு அடியேன் என போற்றி தனது குருவையே இறைவனாகக் கண்டவர் இருவர், ஓருவர் அப்பர் (திருநாவுக்கரசர்) பிராணை குருவாக போற்றி இறைவனாகக் கண்டவர் அப்பூதிகடிகள் மற்றொருவர் பெருமிழலைக் குறும்ப நாயனார், குறும்ப நாயனார் குருபக்தியால் திருவருளைப் பெற்றவர், இவர் புதுக்கோட்டைக்கு வடக்கே சுமார் நான்கு கல் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள தலம் பெருமிழலை ஏன்னும் ஊர், இவ்வூர் பெயரே இவரின் பெயருக்கு அடைமொழீயாகவும் தோன்றியது, எனவே இவரை பெருமிழலைக் குறும்ப நாயனார் ஆனார், இவ்வூரில் குறுநில மன்னராகிய பெருமிழலைக் குறும்பனார் என்ற பெரியார் இருந்தார், இந்த மரபில் வந்தவர் நாயனார், சிவனடியார்கட்டு ஏற்ற தொண்டுகளை யெல்லாம் குறிப்பறிந்து உள்ளன்போடு செய்து வந்தார், மங்கைபங்கருடைய ( சிவபெருமான்) மலரடிகளில் மாறாத அன்பு கொண்டவர்,
குருவின் திருவடிகளால் ஏற்படும் நன்மை இன்னது என்று அறிந்தபின், அவரது திருவுருவம், திருவார்த்தை திருநாமம் , திரு உடல் இவற்றை நல் மாணவர்கள் முறையே சிந்தனை செய்து கொண்டு கேட்டுக் கொண்டும், இருப்பதை திருமந்திரத்தில் திருமூலர் வாக்குப்படி " தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருவார்ததை கேட்டல், தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே, " என்றபடி குருபக்தி கொண்டவர் பெருமமிழலை குறுப்பர்,
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளை மனம் வாக்கு காயங்களால் சிந்தித்து துதித்து வணங்கி வந்தார், இதுவே இறைவரின் திருவடிகளை அடைவதற்கு ஏற்ற நெறியெனக் கொண்டார், இவ்விதமே நாள்தோறும் சுந்தரமூர்த்தி நாயனாரரின் திருநாமத்தை நவின்று வந்தார், இப்புண்ணியத்தின் பயனாக அணிமா, மகிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம் ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டாமா சித்திகள் யாவும் கைவரப் பெற்றார், இதன் பிறகு திரு ஐந்தெழுத்தினையே பற்றுக் கோடாக கொண்டவர், இதையே சேக்கிழார் பெருமானார் தனது பெரியபுராணத்தில் கூறய படி
" நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணிமாதி சித்தியான அணைநதற்பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமசத தஞ்செழுத்தும்
கேளும பொருளும் உணர்வுமாம் பரிசுவாய்ப்பக் கெழுமினார் " பெரிய புராணம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் " திருஅஞ்சைக்களம் " என்னும் தலத்திற்கு சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிக் கயிலாயம் செல்ல இருக்கின்றார் என்பதை முன்கூட்டியே தனது யோக வலிமையால் உணர்ந்து கொண்டார் பெருமிழலைக் குறும்பர், " வன்தொண்டர் சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கயிலாயம் அடையவும், கண்ணையிழந்து வாழ்வார் போல நான் அவரை பிரிந்து வாழமாட்டேன் என்று எண்ணி " யோக நெறியில் மூலம் கபாலத்ததினைத் திறந்து ஒளி வடிவமாக திருக்கயிலாயம் சேர்ந்தார்,
இப்புணித வரலாற்றை படிக்கும் நமக்கு குருபத்தியின் மேன்மையை அதன் பயன்பாட்டை சீர்தூக்கலாம், திரு ஐந்தெழுத்து மந்திரத்தின் - சிவயநம - நம் உயிர் மூச்சாகக் கொண்டு எல்லா நலன்களும் பெற்று பொருளற்ற சடங்குகளில் சம்பிரதாயங்களில் கருத்தை செலுத்தி பிறப்பை பயனற்றதாக்க வேண்டாம் நாம் குருபத்தி கொண்டு அடியார்க்கு அடியானாக வாழ்ந்து இறையருளை பெறுவோம்,
திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம -
நன்றி : கருத்து வடிவம் - தமிழ் வேதம்
திங்கள், 28 ஏப்ரல், 2014
ஞானம்
ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
ஒருவருக்கு உடம்பில் சக்கரைச் சத்து அதிகமாக இருக்கும்போது, சக்கரை யற்ற காபி அருந்துவது, அல்லது காபியே அருந்தாமல் துறப்பது உள்ளத்துவன்று, நம்மனதில் ஆசையை வைத்துக்கொண்டு உடல் பாதுகாப்பிற்காக உணவின் பழக்கங்களை துறப்பது உள்ளத்துறவு ஆகாது, நாமே ஒன்றை விரும்பாது, நாடாது, பற்றாது இருக்க வேண்டும். நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் நம்நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். அவர் விடுதலைக்கு பின் எந்த பதவியும் வகிக்க வில்லை, அவர் உள்ளத்தால் ஆைச்பட வில்லை, அது உள்ளத் துறவு. உலகப் பொருட்கள் அனைத்தும் நம் உடனேயே இருக்கும், அருகிலேயே இருக்கும், நாம் அதைவிட்டு எங்கு ஒடி ஒளிந் கொள்ள இயலாது. காவி உடுத்தி காட்டுக்கு போக சைவம் சொல்லவில்லை. நாம் நம் உள்ளத்தால் எதையும் நாடாதிருப்பதே உள்ளத் துறவு.
இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நாவுக்கரசர். அழகிய பெண்களை அவர் முன் நடனமாட விடுகிறார் இறைவன். அவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நவ ரத்திங்களை அவர்முன் பெய்கிறார் இறைவர் அவற்றையும் குப்பையோடு குப்பையாகத் தள்ளிவிடுகிறார். நம் நிலையைத் தாண்டியவரல்லவா அவர்! அவரிடம் ஆசை என்பது அறவே இல்லை. பற்று இல்லாத வாழ்வு அது. இவையெல்லாம் நமக்காக இறைவன் நடத்திக்காட்டிய நாடகம். இதனை சேக்கிழார் , " ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்" என்கிறார். இதை உணர்ந்து நாம் ஆசைகளை துறந்து வாழ முயல வேண்டும், அதாவது எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும், அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணம், மண்,பொன், பெண் ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதால் பல பாவங்களை செய்யும் மனிதன், விட்டில் பூச்சியைப்போல், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல, தூண்டில் விழும் மீன்போல சிக்கி சுகங்களில் மனதை வைத்து தனது வாழ் நாட்களை வீணாக்கிறான். ஆயுட்காலம் முடிந்த பின் தன் ஆசையால் சேர்த் அத்தனையும் விட்டு செல்கிறான். உலகப் பொருட்களில் பற்றில்லாது வாழ்வதே உள்ளத்துறவாகும். புளிய்ங்காயில் தோலும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதுவே பழுத்த பின் ஓடு வேறு, பழம் வேறு என ஒன்றை ஒன்று பற்றாது இருக்கும், இதை "புளியம்பழம் ஒத்திருந்தேன்" என்கிறார் மாணிக்கவாசகர்.
இதையே உலகியலை நோக்கி,
" யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர், எந்த ஒன்றிலும் விலகியிருந்தால் அதன் வழியான துன்பங்கள் நம்மை அணுகா என்கிறார் அவர், இந்த குறளை படிக்கும் போது நம் உதடுகள் ஒன்டோன்று ஒட்டா, இது போல நாம் எதிலும் ஒட்டாதும் பற்றில்லாதும் வாழ வேண்டும். ( நோதல் என்றால் வருத்துதல்) எதிலும் பற்றவைக்காதும் அனைத்தும் உள்ளத்தால் துறந்தால் வாழ பழக வேண்டும். " பற்றுக பற்றாற்றான் பற்றினை " என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய உலகில் உள்ளம் வேறு, வெளித் தோற்ம் வேறு, நாம் உள்ளத்தில் பற்று வைத்து, வெளியில் பற்றில்லாதவர் போல் நடிக்கிறோம், உள்ளமும் புறத்தோற்றமும் ஒத்துப்போகிறவர் ஆயிரத்தில் ஒருவர் தேறலாம், அவர் அமைதியாக ஆராவரமின்றி இருப்பார், அவரையே நாம் முன்மாதிரியாக கொள்ளவேண்டும்,
திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாயம்
ஒருவருக்கு உடம்பில் சக்கரைச் சத்து அதிகமாக இருக்கும்போது, சக்கரை யற்ற காபி அருந்துவது, அல்லது காபியே அருந்தாமல் துறப்பது உள்ளத்துவன்று, நம்மனதில் ஆசையை வைத்துக்கொண்டு உடல் பாதுகாப்பிற்காக உணவின் பழக்கங்களை துறப்பது உள்ளத்துறவு ஆகாது, நாமே ஒன்றை விரும்பாது, நாடாது, பற்றாது இருக்க வேண்டும். நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் நம்நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். அவர் விடுதலைக்கு பின் எந்த பதவியும் வகிக்க வில்லை, அவர் உள்ளத்தால் ஆைச்பட வில்லை, அது உள்ளத் துறவு. உலகப் பொருட்கள் அனைத்தும் நம் உடனேயே இருக்கும், அருகிலேயே இருக்கும், நாம் அதைவிட்டு எங்கு ஒடி ஒளிந் கொள்ள இயலாது. காவி உடுத்தி காட்டுக்கு போக சைவம் சொல்லவில்லை. நாம் நம் உள்ளத்தால் எதையும் நாடாதிருப்பதே உள்ளத் துறவு.
இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நாவுக்கரசர். அழகிய பெண்களை அவர் முன் நடனமாட விடுகிறார் இறைவன். அவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நவ ரத்திங்களை அவர்முன் பெய்கிறார் இறைவர் அவற்றையும் குப்பையோடு குப்பையாகத் தள்ளிவிடுகிறார். நம் நிலையைத் தாண்டியவரல்லவா அவர்! அவரிடம் ஆசை என்பது அறவே இல்லை. பற்று இல்லாத வாழ்வு அது. இவையெல்லாம் நமக்காக இறைவன் நடத்திக்காட்டிய நாடகம். இதனை சேக்கிழார் , " ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்" என்கிறார். இதை உணர்ந்து நாம் ஆசைகளை துறந்து வாழ முயல வேண்டும், அதாவது எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும், அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணம், மண்,பொன், பெண் ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதால் பல பாவங்களை செய்யும் மனிதன், விட்டில் பூச்சியைப்போல், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல, தூண்டில் விழும் மீன்போல சிக்கி சுகங்களில் மனதை வைத்து தனது வாழ் நாட்களை வீணாக்கிறான். ஆயுட்காலம் முடிந்த பின் தன் ஆசையால் சேர்த் அத்தனையும் விட்டு செல்கிறான். உலகப் பொருட்களில் பற்றில்லாது வாழ்வதே உள்ளத்துறவாகும். புளிய்ங்காயில் தோலும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதுவே பழுத்த பின் ஓடு வேறு, பழம் வேறு என ஒன்றை ஒன்று பற்றாது இருக்கும், இதை "புளியம்பழம் ஒத்திருந்தேன்" என்கிறார் மாணிக்கவாசகர்.
இதையே உலகியலை நோக்கி,
" யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர், எந்த ஒன்றிலும் விலகியிருந்தால் அதன் வழியான துன்பங்கள் நம்மை அணுகா என்கிறார் அவர், இந்த குறளை படிக்கும் போது நம் உதடுகள் ஒன்டோன்று ஒட்டா, இது போல நாம் எதிலும் ஒட்டாதும் பற்றில்லாதும் வாழ வேண்டும். ( நோதல் என்றால் வருத்துதல்) எதிலும் பற்றவைக்காதும் அனைத்தும் உள்ளத்தால் துறந்தால் வாழ பழக வேண்டும். " பற்றுக பற்றாற்றான் பற்றினை " என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய உலகில் உள்ளம் வேறு, வெளித் தோற்ம் வேறு, நாம் உள்ளத்தில் பற்று வைத்து, வெளியில் பற்றில்லாதவர் போல் நடிக்கிறோம், உள்ளமும் புறத்தோற்றமும் ஒத்துப்போகிறவர் ஆயிரத்தில் ஒருவர் தேறலாம், அவர் அமைதியாக ஆராவரமின்றி இருப்பார், அவரையே நாம் முன்மாதிரியாக கொள்ளவேண்டும்,
திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாயம்
சனி, 26 ஏப்ரல், 2014
"வேண்டத்தக்கது அறிவாய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ
வேண்டும் அயன் மாய் கரியோய் நீ
வேண்டி என்னை பணிகொண்டாய்
வேண்டி நீயாதருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டினல்லால்
ேவ்ணடும் பரிசொன்றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே" மாணிக்கவாசகர்
இதனையே வள்ளுவரும் " வேண்டங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்." என்கிறார், இனி நாமும் எதனையும் வேண்டாது அவனருளை மட்டும் வேண்டுவோம், இறைவனே நாம் வேண்டுவன அறிவான் அருளுவான்,
திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
வெள்ளி, 25 ஏப்ரல், 2014
மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகமே மாயை என்று ஞானிகள் சொல்வர். மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம், உறக்கத்தில் நாம் காணும் கணவும் ஒருவகை மாயைதான். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே அந்த சில நிமிடக் கனவில் நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும், உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை நிஜமாகவும், விழித்த பின் நிஜமல்ல கனவு என்று உணர்கிறோம்,
நம்மிடம் பணம் இருந்தால் மனம் மகிழ்கிறது. இல்லையென்றால் கலங்கிறது.பணத்குள்ளேயே நம் வாழ்க்கை கழிகிறதே! ஆக பணம் மனிதனைமயக்கும்மாயை. திரைப்படத்தில் அதில் வருபவர் தீயவரும் நல்லவராகவும், நல்லவர் தீயவராக நடிப்பவரே தீயவராகவும் நம் கண்ணுக்கு தெரிவர், திரையில் உண்மையென நம்பிவிதே காரணம். மாயை நம்மை மயக்கிவிடுகிறது. இவைபோன்றே கல்வி, அழகு, பொருள், பதவி, புகழ், இவையும் நம்மை அதிலேயே ஆழ்த்திவிடும், நமக்கு எது பலமோ, அதுவே பலவீனம், அது மாயை என்று உணர்ந்து மீளவேண்டும். மாயை என்றால் முற்றிலும் பொய்யானது என்பதாக பலரும் நினைக்கிறார்கள், மாயை என்பது தற்காலிக தோற்றம், உதாராணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம், கானல் நீர் கண்ணுக்கு தெரிவது நிஜம், அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனாலும், அது நீர் பொருளாக பெற முடியாது, கண்ட காட்சி நிஜம். தாகத்திற்காகக அனுகினால் அதைப்பருக நினைப்பது ஏமாற்றம், அது காணல் நீராக உணர்வது தான் ஞானம்.- அறிவு -
'" மா" என்றால் ஒடுக்குதல் , "ஆ" என்றால் வருவித்தல், அனைத்தையும் தன்னுள் ஒடுக்கியும், மீண்டும் வருவிக்கவும் செய்யும் சூக்குமப் பொருளை மாயை என்கிறோம். தமிழில் இது மருள் எனப்படுகிறது. நம்மை இது மயக்குகிறது. இது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐந்தாக விரிகிறது. அவை நம் உடலாகவும், உலகாகவும், உலகப் பொருளாகவும், மாறுகின்றன. ஆணவ வழியில் நாம் இதனுள் அழுந்தி, உணர்ந்து, திருந்தவே மாயை வழிக் காரியங்கள் வருவிக்கப் பட்டன. ஆகவே இது நம் வாழ்வில் சிறிய ஒளிபோல் நம்மைத் திருத்த வந்தது. அதனுள் வீழும் நாம் உணர்ந்து திருந்தவும், திருவருள் துணை வேண்டும். ஆம் மாயை என்று உணர்வதற்கே இறையருள் துணை வேண்டும். ஒன்று மாயை பொருள் என்று விளங்கும் போது அதைப் பெற ஆணவ வழியில் நாம் எவ்வளவு தூரம் பயணப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடியும். ஏனென்றால் இறைவனது அருள் மறைப்பு சக்தியாகவும், வந்து நம்மை மயக்கியுள்ளது. ஆக முன்பு நம்மை மயக்கியதும், பின்பு நமக்கு உணர்த்தியதும் இறைவனது கருணை என்பதும் பினனர் தெரியும்,
தவறு செய்வது மனித இயற்கை என்பர், மாயை நம்மை மயக்கித் தவறுசெய்யத் தூண்டும். தவறு உடலை வளர்க்கும், அது தவறு என உணரும்போது இறையருள் புரியும், இறையருளை உணரும் போது உயிர் வளரும், ஆகவே மாயை நம்மைத் திருத்த வந்தது.
திருச்சிற்றம்பலம்
செவ்வாய், 22 ஏப்ரல், 2014
வியாழன், 17 ஏப்ரல், 2014
மதுரமொழி: திருப்பள்ளியெழுச்சி - 3
மதுரமொழி: திருப்பள்ளியெழுச்சி - 3: திருச்சிற்றம்பலம் எல்லோரும் அறிவதற்கு அரியவன், எமக்கோ எளியவன்! கூவின பூங்குயில்; கூவின கோழி குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின த...
புதன், 16 ஏப்ரல், 2014







செவ்வாய், 15 ஏப்ரல், 2014
சனி, 12 ஏப்ரல், 2014
வியாழன், 10 ஏப்ரல், 2014
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு "நெற்றிக்கண்" என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.
இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும், மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து "நெருப்பாறு மயிர்ப்பாலம்" என்றும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் வழியாகக் குருவின் பரிச உணர்ச்சியிலும், நுட்ப விவேகத் திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.
நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு, அறிந்த ஞானாசிரியரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு, விந்தும், தன் ஞாபகமும் கலந்தால்தான் முடிகிறது.இந்தக்கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி [பிராணயாமம்] என்ற மூச்சுப் பயிற்சியாலும், மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது.
நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப் பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணர முடியும், பின் அதை அணுபோகத்தாலேயே அறிய முடியும்.
நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகிறோமென்று அவர்களுக்கு தெரியாமலேயே 'சலாம்' என்றும், 'வந்தனம்' என்றும், 'நமஸ்காரம்' என்றும், 'கும்பிடுகின்றேன்' என்றும் சொல்லியும் தங்கள், தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும், தங்கள் தங்கள் கையையும், சைகைகளையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத் தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமும், கோபமும், ஏற்படும் போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.
ஒரு மனிதனிற்கு உடம்பில் சூடு இல்லாமற் போனால் முன் சொன்னபடி நெற்றிக்கண்ணை ஞாபகத்தில் நினைத்தால் சூட்டை உற்பத்தி செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகித் தீருவான் என்பது திண்ணம். ஆகையால் தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.
நெற்றிக்கண் பயன்கள்:
பாலகனாயிருக்கும் போது பக்தியைத் தேடவும், வாலிப காலத்தில் யோகத்தில் ஈடுபடவும், வாலிபங்கடந்து முதியவராகும் போது நாஸ்திக ஞான அறிவு விளக்கம் பெறவும், மனிதன் ம்யற்சிக்க வேண்டும். எட்டாதே என்று ஒரு ஏமாளி சொல்வானானால் எட்டும் என்று வைராக்கிய தீரன் சொல்லுவான். நெற்றிக்கண் திறப்பது என்பது தற்கலத்தில் உள்ள வெல்டிங் வேலையைப் போன்று அறுக்கவோ, ஒட்ட வைக்கவோ முடியாததைப் போல் ஒப்பிடப்படுகிறது.
ஒரு அரசனுக்கு ஞானமானது கிடைத்துவிட்டால் அது உலகத்துக்கே பயன்படுகிறது. ஒரு யுத்தத் தலைவனுக்குக் கிடைத்தாலோ அது வேகத்தோடு பரவுகிறது. ஒரு குடும்பத்தலைவன் பெற்றகாலத்து ஒழுக்கத்தையும் குடும்பவாழ்க்கையில் ஒரு நிம்மதியையும் கொடுக்கிறது.
மனிதன் ஆண்டவனை அறியவோ, ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும்.
"கடத்திலோர் இடத்தில் கறந்த ஞானப்பாலை
கனலான மூலக்கனலால் மூட்டி மூட்டிக்
கம்ப நுனிவழியாய்க் கண்மூக்கு மத்தியில் ஊட்டி ஊட்டிக்
கருத்திற்கிசைந்த சுவையைக் கபாலம் ஏற்றி ஏற்றித்
தன்மணிபோல ரசமணி திரள திரளக்
கண்ணுக்கு தெரியாத திரை ஆறும் தன்
திறமையால் திறக்கத் திறக்கத்
தன் காரணத்தைத் தானே தெரியலாமே."
"என் சொல்லை நெஞ்சால் கேளுங்கள், மிக தைரியசாலிகள் ஆவீர்கள்
நெற்றியால் கேளுங்கள், மரணபயத்தை நீக்கிக் கொள்வீர்கள்
தலையால் கேளுங்கள், அறிவாய் பிரகாசிப்பீர்கள்
துரித நிதானத்தோடு நிதானியுங்கள், உங்களில் நீங்கள் எல்லாம் அறிவீர்கள்."
நன்றி
- Paranjothi
புதன், 2 ஏப்ரல், 2014
" பொருளல்லவற்றை பொருளென்று உணர்தல்"
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
