திங்கள், 28 ஏப்ரல், 2014

ஞானம்


ஞானம் படித்தறிவு என்பது வேறு அறிவு என்பது உலக பொது அறிவையையும் அறிவானந்த ஆற்றலையும் வளர்க்க வல்லது, அறிவு வேறு,ஞானம் வேறு, பலகைகளுடன் தலைவிரி கோலத்தில் சிவனே வந்து நின்றாலும் " இது சிவன்தானா? " என ஆராய்ந்தால் சிவன் போய் விடுவார் ஞானம் எழும் இடத்தில் அறிவுக்கு வேலை இல்லை. ஆராய்வது அறிவு. உள்ளதை உள்ளபடி உணர்வது ஞானம். நாம் படிப்பது அனைத்தும் அறிவு, அது பண வரவை அதிகரித்து நம் உடலை வளரச்செய்யும், அன்ற வேலைக் கல்வி என்றால் மருத்துவம், பொறியியல், சட்டம், எல்லாம், சில. இன்றோ நூற்றுக்கணக்கான படிப்புகள் எல்லாம் பணம் தருவன. நம் உடலை வளர்ப்பன. ஆனால் ஞானம் ஒன்றே உயிரை வளர்க்கும், உயிருக்குஇன்பம் தரும். ஞானம் என்றால் மெய்யறிவு, உண்மையறிவு. பொருட்கள் மூன்று அவை இறை, உயிர், உலகு இதைனையே திருமந்திரத்தில் திருமூலர் பதி, பசு, பாசம் என்கிறார், இவற்றின் இயல்பை உள்ளதை உள்ளபடி உணர்வது ஒன்றே ஞானம், நாம் ஆடம்பரமாக இருந்தாலும், ஆராய்ச்சியில் இருந்தாலும், உள்ளதை உள்ளபடி உணரமாட்டோம், நம் தோதுக்கே பதில் சொல்வோம், ஆகவே தான் இத்தனை மதங்கள், சமயங்கள், தோன்றின. அவை அனைத்தும் அறிவுக்கு வேலை கொடுத்தள்ளன, அவரவர் அறிவுக்கு எட்டிய உரைகள் மதங்கள், ஞானம் பெற நிரம்பிய அறிவு வேண்டியதில்லை, நம்மிடம் உள்ள அறிவே போதுமானது, அதுவே ஞானமாக மாறுகிறது. அறிவின் முதிர்ச்சி ஞானமாகிறது, ஒருவரைப் பார்க்கும் போது, இவர் சிரமப்படுகிறார் என்பது அன்பு, " சிரமத்தை அனுபவிப்பதும் ஒர் உயிர்" என்று உணர்வது ஞானம், மாறாக " அவர் நம் இனத்தவர், நமக்கு வேண்டியவர், பணக்காரர், பின்பு பயன்படுவார், நாமும் பழகிக் கொள்வோம்" என எண்ண வைப்பது அறிவு, நம் போன்றோருக்கு பின்னதே முந்தும், அறிவே எழும், ஞானம் எழாது, ஏனெனில் நாம் உலகப் பயன்களை எதிர்பார்தது வாழ்கிறோம், அதை ஆக்கித் தருவது அறிவுதானே, நட்ட கம்பை சிவனாக உணர்ந்தார் ஒருவர், உவர்மண்ணை திருநீராக கண்டார் ஒருவர், கல்லை பூவாக எறிந்தார் ஒருவர், அங்கெல்லாம் அறிவு எழவில்லை, சிவலிங்கத்திற்கு கண்களில் இரத்தம் வழிந்தது அங்கும் அறிவு எழவில்லை, ஞானமே எழுந்தது. அறிவே ஞானமாக பழுத்துள்ளது. முதிர்ந்துள்ளது. ஆணவம் இல்லாத அறிவில் தெளிந்த நிலையில் ஞானம் உண்டாகும், அந்நிலையில் தான் அருளாளர்கள் அவனை கண்டிருக்கின்றனர், தனக்கு கிடைத்த ஞானக் காட்சியைக் கண்டு வியக்கிறார், அப்பர், " கண்டேன் கண்டாறியாதன கண்டேன்" என்கிறார் அவர், அவரே திருபுவணத்தில் "வடிவேறு திரி சூலம் தோன்றும் தோன்றும்" எனத் தான் கண்டதை வருணிக்கிறார், நாமும் உலகியலைப் புறந்தள்ளுவோம், உள்ளதை உள்ளபடி உணர்வோம், பின் நமக்குள்ளும் ஞானம் பிறக்கும், திருச்சிற்றம்பலம் - ஓம நமச்சிவாயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக