ஞாயிறு, 27 ஏப்ரல், 2014


உள்ளத் துறவு ஒருவருக்கு உடம்பில் சக்கரைச் சத்து அதிகமாக இருக்கும்போது, சக்கரை யற்ற காபி அருந்துவது, அல்லது காபியே அருந்தாமல் துறப்பது உள்ளத்துவன்று, நம்மனதில் ஆசையை வைத்துக்கொண்டு உடல் பாதுகாப்பிற்காக உணவின் பழக்கங்களை துறப்பது உள்ளத்துறவு ஆகாது, நாமே ஒன்றை விரும்பாது, நாடாது, பற்றாது இருக்க வேண்டும். நமது தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் நம்நாட்டு விடுதலைக்காக பாடுபட்டார். அவர் விடுதலைக்கு பின் எந்த பதவியும் வகிக்க வில்லை, அவர் உள்ளத்தால் ஆைச்பட வில்லை, அது உள்ளத் துறவு. உலகப் பொருட்கள் அனைத்தும் நம் உடனேயே இருக்கும், அருகிலேயே இருக்கும், நாம் அதைவிட்டு எங்கு ஒடி ஒளிந் கொள்ள இயலாது. காவி உடுத்தி காட்டுக்கு போக சைவம் சொல்லவில்லை. நாம் நம் உள்ளத்தால் எதையும் நாடாதிருப்பதே உள்ளத் துறவு. இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நாவுக்கரசர். அழகிய பெண்களை அவர் முன் நடனமாட விடுகிறார் இறைவன். அவர்களை அவர் கண்டுகொள்ளவே இல்லை. நவ ரத்திங்களை அவர்முன் பெய்கிறார் இறைவர் அவற்றையும் குப்பையோடு குப்பையாகத் தள்ளிவிடுகிறார். நம் நிலையைத் தாண்டியவரல்லவா அவர்! அவரிடம் ஆசை என்பது அறவே இல்லை. பற்று இல்லாத வாழ்வு அது. இவையெல்லாம் நமக்காக இறைவன் நடத்திக்காட்டிய நாடகம். இதனை சேக்கிழார் , " ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்" என்கிறார். இதை உணர்ந்து நாம் ஆசைகளை துறந்து வாழ முயல வேண்டும், அதாவது எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும், அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணம், மண்,பொன், பெண் ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதால் பல பாவங்களை செய்யும் மனிதன், விட்டில் பூச்சியைப்போல், மகுடிக்கு மயங்கும் பாம்பு போல, தூண்டில் விழும் மீன்போல சிக்கி சுகங்களில் மனதை வைத்து தனது வாழ் நாட்களை வீணாக்கிறான். ஆயுட்காலம் முடிந்த பின் தன் ஆசையால் சேர்த் அத்தனையும் விட்டு செல்கிறான். உலகப் பொருட்களில் பற்றில்லாது வாழ்வதே உள்ளத்துறவாகும். புளிய்ங்காயில் தோலும் சதையும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும் ஆனால் அதுவே பழுத்த பின் ஓடு வேறு, பழம் வேறு என ஒன்றை ஒன்று பற்றாது இருக்கும், இதை "புளியம்பழம் ஒத்திருந்தேன்" என்கிறார் மாணிக்கவாசகர். இதையே உலகியலை நோக்கி, " யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்கிறார் வள்ளுவர், எந்த ஒன்றிலும் விலகியிருந்தால் அதன் வழியான துன்பங்கள் நம்மை அணுகா என்கிறார் அவர், இந்த குறளை படிக்கும் போது நம் உதடுகள் ஒன்டோன்று ஒட்டா, இது போல நாம் எதிலும் ஒட்டாதும் பற்றில்லாதும் வாழ வேண்டும். ( நோதல் என்றால் வருத்துதல்) எதிலும் பற்றவைக்காதும் அனைத்தும் உள்ளத்தால் துறந்தால் வாழ பழக வேண்டும். " பற்றுக பற்றாற்றான் பற்றினை " என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய உலகில் உள்ளம் வேறு, வெளித் தோற்ம் வேறு, நாம் உள்ளத்தில் பற்று வைத்து, வெளியில் பற்றில்லாதவர் போல் நடிக்கிறோம், உள்ளமும் புறத்தோற்றமும் ஒத்துப்போகிறவர் ஆயிரத்தில் ஒருவர் தேறலாம், அவர் அமைதியாக ஆராவரமின்றி இருப்பார், அவரையே நாம் முன்மாதிரியாக கொள்ளவேண்டும், திருச்சிற்றம்பலம் - ஓம் நமச்சிவாயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக