சனி, 26 ஏப்ரல், 2014


புண்ணியம் நாம் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வோம் அங்குள்ள இறைவரை வணங்கிவிட்டு கோவிலைவிட்டு வெளியில் வந்தவுடன் கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு நம்மால்இயன்ற காசுகளை போடும் பழக்கம் இன்றளவும் உள்ளது.இதை " போகும் வழிக்கு புண்ணியம் தேடுவது " என்பர். இதற்கும் புண்ணியம் உண்டு. " பிச்சை இடுவது நான், பெறுவது பிச்சைக்காரர் " என இறுமாந்து போட்டால் அது உயிர் நல்வினை. பசு புண்ணியம், "பசு" என்றால் உயிர் , மாறாக " கொடுத்ததும் சிவன், பெறுவதும் சிவன், ( பிச்சை ஏந்தி இருப்பதும் சிவன்) எனப் பணிந்து , இட்டால் அது பதி புண்ணியம் ( இறை நல்வினை) , புண்ணியமே யானாலும் பசு புண்ணியத்திற்கு பிறவி உண்டு, நல்ல பிறவி வாய்க்கும், அனுபவித்தே அதையும் கழிக்க வேண்டும், பதி புண்ணியம் பெற்றால் அதனால் தேவராயும், சிவகணங்களாயும் பிறக்க வைக்கும். கோவில்கள் கட்டுவதும், அங்கு அபிசேக ஆராதனைக்ள் எல்லாம் நம் செலவிலே செய்வதும், எந்த ஒரு செயலுக்கும் தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்துவதும், பசு புண்ணியமே ஆகும், ஏன் தேங்காய் உடைத்து நம் பெயரிலே அல்லது நம் குடும்ப உறவின் பெயரிலோ அர்ச்சனை செய்வதும் அதுவும் பசு புண்ணியமே ஆகும். கோவில்களில் முடியிறக்கி காதுகுத்து நிகழ்வுகளின் போது அன்னதானம் நம் சொந்தபந்தங்களை அழைத்து அன்னதானம் இடுவதும் பசு புண்ணியமே ஆகும். நாம் எதிர்பாராது வரும் வழிப்போக்கர் அல்லது யாத்திரியர்கள், ஏழை எளியயோர் நம் அழைப்பின்றியே வந்து உணவருந்தி செல்வோர்க்கு வழங்கும் புண்ணியமே பதி புண்ணியமாகும், அதற்கு பெயர்தான் அன்னதானம், சொந்த பந்தம் நண்பர்களுக்கு வழங்கும் உணவு அன்னதானமாகாது, அது பசு புண்ணியமே ஆகும். ஒருவர் நம்மிடம் பொருளோ பணமோ வேண்டி உதவி கேட்டு வருகிறார் , அப்போது நாம் இராசத ( இரஜோ ) குணத்தில் இருந்தால் நம் தன்முனைப்பு என்ற ஆணவம் எழும்,நம்மிடம் வந்து கேட்டதற்கே நாம் பெருமைப்படுவோம். பணம் கொடுத்து வாழ்த்துவோம், நம் உயிருக்கு நல்வினையாகிறது. உயிர் நல்வினை நம் புத்தியில் இது பதிகிறது. நற்பயனை பின் அனுபவிப்போம். அப்போது சாத்வீக குணத்தில் நாமிருந்தால், " இது இறைவன் செயல்" என்று எண்ணுவோம், பணம் இருந்தால் " இறைவன் கொடுத்தது," என எண்ணி கொடுப்போம். " பெறுவதும் சிவன், கொடுப்பதும் சிவன் " என்றெண்ணிக் போற்றுவோம், இது இறை நல்வினை. இறை சிந்தனையிலேயே இருப்பவருக்குத்தான் இந்த சாத்வீக குண உணர்வைத்தரும். இது தான் பதி புண்ணியம் ( இறைவன் தந்தது, இறைவனுக்கே) என்று உணர்வோம். எது எப்படியானாலும், நாம் செய்த பாவத்தை புண்ணியத்தையும் நாம் அனுபவித்தே கழிக்க வேண்டும். இது ஒரு நிலை. அதற்கு மேனிலையாக எவ்வேண்டுதலும் இல்லாத வழிபாடு ஒன்று உண்டு, எந்த வேண்டுதலும் இல்லாது, அதாவது "நான்" என்ற எண்ணமும் இல்லாது, திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், கோலமிடல், கோவிலையும், இறைவரையும் அழகுபடுத்துத்ல அபிசேக ஆராதனைகள் செய்தல், அவன் அழகில் அருளில் மெய்மறத்தல், தேவார, திருவாசக் கருத்துக்களை தெளித்த்ல், மந்திரம் ஒதுதல், தியானித்தல், ஆகியவை இது ஒரு உயர்ந்த நிலை. இதனால் மட்டுமே மறுபடி பிறவாமை எய்த முடியும், இதற்குத்தான் முத்தி என்னும் வீடுபேறு உண்டு. எதனையும் வேண்டாது அவன் அருளைமட்டும் நாடவேண்டும், நமக்கு எந்த நேரத்ததில் எதை தரவேண்டும் என்பது அவனுக்கு தான் தெரியும், இதனை மாணிக்க வாசகர் தனது பாடலில் உயிர்களுககு தேவையானது இது என அறிவோய் நீ. மேலும் அவ்வுயிர்கள எவ்வற்றை வேண்டினாலும், அதனை அருளுபவனும் நீயே, உன்னை காண விரும்பி பிரம்மா, திருமால் ஆகியவோருக்கு காட்சி அளித்தவனும் நீயே, நீயாவே என்னை விரும்பி பணிகொண்டாய் என்பொருட்டு நீ விரும்பி அருள் செய்தனை , அதனையே நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று உண்டெனில் அதுவும் நான் உன்னிடத்தில் வைக்கின்ற அன்புதானே என்று கீழ்கண்டவாறு பாடுகின்றார், "வேண்டத்தக்கது அறிவாய் நீ வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டும் அயன் மாய் கரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் ேவ்ணடும் பரிசொன்றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே" மாணிக்கவாசகர் இதனையே வள்ளுவரும் " வேண்டங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்." என்கிறார், இனி நாமும் எதனையும் வேண்டாது அவனருளை மட்டும் வேண்டுவோம், இறைவனே நாம் வேண்டுவன அறிவான் அருளுவான், திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக