செவ்வாய், 29 ஏப்ரல், 2014


கொண்டு வருவதும் கொண்டுபோவதும் "எதை கொண்டு வந்தாய்? எதை நீ இழப்பதற்கு? எது உண்டையது? அதுவே நாளை வேறு ஒருவருடையது " என்ற கீதையின் வாக்கிற்கு ஏற்ப ஒரு ஊரில் சாதாரண குடும்பத்ததில் பிறந்த ஒருவன் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயனால் தான் ஏழையாக இருந்தபோதிலும், தனது உழைப்பினால் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது, நிறைய சம்பாதித்தார், நல்ல மனைவி மக்களையும் பெற்றார், நிற்க நேரம் இல்லாமல் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டினார், சில நேரங்களில் சாப்பிடாமல் கூட தொழிலில் ஈடுபட்டிருந்தார், பல கோடிகளுக்கு அதிபதி ஆனார், நிலபுலங்கள் வேலையாட்கள், பெரிய வீடு, வண்டிவாகனம் என்று எல்லாம் பெற்றிருந்தார். பெற்ற பொருட்கள் எல்லாம் தனது உழைப்பின்காரணமாகத்தானே கிடைத்தது, என்ற ஆணவமும் சற்று இருக்க தவறவில்லை, எல்லாம் அவன் செயலாலேயே வந்தது என்பதையும், தனது பூர்விக புண்ணிய கருமங்களால் தான் கிடைத்ததென்பதையும் மறந்திருந்தார், பொருளை அருளாக மாற்றி கொள்ள வேண்டும் என்பது மட்டும் அவருக்கு தெரியாமால் போயிற்று, பெரும் செல்வமிருந்தால் போதும் என்று வாழ்ந்தார். இல்லாதவர்க்கு கொடுத்து உதவும் பழக்கம் அவரிடம் எள்ளளவும் இல்லை. ஆதலால் யாரும் அவரிடம் எதை வேண்டியும் செல்லவும் இல்லை. இவ்வாறு செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த நாளில் ஒருநாள், திடீரென்று மாரடைப்பினால் உயிர் பிரிந்தது எமன் தூதர்கள் அவனுடைய உயிரைப் பற்றிச்சென்றனர், அங்கே எமன் கேட்டார் " கோடி கோடியாக இறைவர் உனக்கு கொடுத்த செல்வத்தை கொடுத்தாரே எதையாவது கொண்டுவந்தாயா? வெறுங்கையுடன் வந்திருக்கிறாயே? அடுத்த பிறப்பில் கனவில் கூட காசை பார்க்க முடியாத ஏழையாகத்தான் பிறக்க வேண்டும் நீ" என்றார், அதற்கு அவனோ நான் பிறக்கும் போது வெறுங்கையுடன் தான் பிறந்தேன், வெறுங்கையுடன் தான் வந்துள்ளேன்" என்றான், அதற்கு எமன் " நீ கூறுவது தவறு, எல்லோரும் நல்வினை, தீவினை என்ற இரண்டையும் இருகை நிறைய கொண்டு போகிறார்கள், அதைப்போலவே இருகை நிறைய நல்வினை தீவினை கைநிறைய கொண்டு வருகிறார்கள், நீயே நல்வினை இல்லாமல் தீவினையுடன் மட்டும் வந்துள்ளாய் என்று கூறினார் எமன்.வேலை உழைப்பு என்று எப்போதும் காலம் கழித்தாய், ஆனால் சிறு பொழுதேயாயினும் இறைவனை நினைத்தாயா? பெரும் செல்வம் இருந்தும் சிறு துளியாவது மற்றொருவருக்கு - ஏழைகளுக்கு தருமமாக கொடுத்தாயா? நல்வினை யை - இறையருளை மட்டும் தேட மறந்து விட்டாய்? என்றார், அவரின் கூற்றுப்படி திருமூலர் வாக்கின்படி " யாவருக்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை, யாவர்க்கும் ஆம்பசுவுக்கொரு வாய்உறை, யாவர்க்கு ஆம் உண்ணும்போது கைப்பிடி, யாவர்க்கும் ஆம் பிறர்க் கின்னுரை தானே" என்ற படி நல்வினை என்ற இறையருளை சற்றேனும் இல்லாது தீவினைகளைமட்டும் கொண்டு சேர்ந்தான், இதனையே அப்பர் பெருமானார்," இரப்பவர்க்கு ஈய வைத்தார், ஈயவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார் " என்கிறார், நல்வினை தீவினைகளைக் கொண்டு வருகிறோம், அவற்றுடன் செல்கிறோம், இரண்டையும் விட்டால் பிறப்பில்லாமல் ஒழியும் உயிர்க்குத் துணையாய் வருவது நாம் செய்யும் தான தருமங்களே ஆகும், அதிகமான பொருளை நம்மிடம் கொடுப்பதின் நோக்கமே இல்லாத எளியவர்களுக்கு கொடுக்கும் புண்ணியவானுக்கு இறைவர் தம்முடைய அருளை பூரணமாய் அளிக்கின்றார், கொலை, கொள்ளை , திருடுதல், போன்ற தவறுகளை செய்பவரை அரசாங்கம் சிறையில் அடைத்து தண்டிக்கிறது, ஆனாலும் அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் யாவும் அளிக்கிறது. இதைப்போல கடந்த பிறவிகளில் பாவங்களைச் செய்தவர்கள் இப்பிறவியில் பரம ஏழையாக பிறக்கின்றனர், ஆடை உணவு, இருப்பிடம் ஆகியவற்றுக்கு திண்டாடுகின்றனர், தவறு செய்த தண்டனை கைதிகளும் நலமாக இருக்க வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. பரம கருணை நிறைந்த இறைவர், பாவம் ெசெய்து ஏழைகளாக பிறந்துள்ளவர்களுக்குநலமாக வாழ வேண்டும் என்ற எண்ணுகிறார், இறைவரும் ஏழைகளுக்கு உதவ வேண்டி, கடந்த பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களிடம் தேவைககு மேல் செல்வத்தை அளித்து ஏழைகளுக்கு கொடுக்க , செல்வந்தர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும் அவர்களும் நலம் பெற செல்வந்தர்கள் மூலம் அருளச் செய்கிறார், எனவே இறையருள் பெற்றால் பரம ஏழைக்கும் இறைவரின் பிரதிநிதியான செல்வர்களுக்கும் இறையருளை கொடுத்து தான தர்மம் செய்தபடியால் அவர்களுக்கும நல்வினை என்ற இறையருளை வாரி வழங்குகிறார் இறைவர், திருச்சிற்றம்பலம், - ஒம் நமச்சிவாயம், நன்றி : படித்ததில் பிடித்த கருத்து : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக