அருள்மிகு சிவசைலநாத சுவாமி திருக்கோவில் / சிவசைலம்
தென்மாவட்ட சிவ தலங்களில் மிகவும் பழைமையான இயற்கைவளமும் தெய்வீக மனமும் கொண்ட அழகுமிகு திருக்கோவில் சகலவரம் தரும் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாத சுவாமி திருக்கோவில். ஐந்துநிலை கொண்ட கோபுர அமைப்புடன் கெடனா ஆற்றங்கரையில் சுவாமி மேற்கு நோக்கி அமைந்த கோவில். இங்குள்ள நந்தீஸ்வரர் மிகவும் சிறப்புடையது, அசல் காளையான விடை தத்தருப அமைப்புடையது, சிற்பியால் செதுக்கியதற்கான சிறு துளி அடையாளமும் இன்றி நந்தி பழபழ அமைப்புடன் அமையப்ெபற்றது,
மூலவர் ; சிவசைல நாதர் / சுயம்பு லிங்கம்
அம்மன்; பரமகல்யாணி ஈஸ்வரி
ஸ்தல சிறப்பு ; பிருகு முனி, அத்திரி முனி ஆகியவர்களுக்கு காட்சி தந்த தலம்,
அத்திரி முனியவரால் அப்பக்திலுள்ள மலையில் சுமார் 1500அடி உயரத்திலுள்ள உயரத்தில் அத்திரி தீர்த்தம் உண்டாக்கப்பட்ட சிறப்புைடயது.வெள்ளிமைல, மேற்குதொடர்ச்சி மலை, முள்ளிமலை ஆகிய மூன்று மலைகளால் சூழப்பட்ட இயற்கை வளமிக்க திருக்ேகாவில்.
இக்ேகாவிலில் ஆடிவெள்ளி, மற்றும் பங்குனி உத்திரத்தின்ேபாது இக்கோவிலில் திருத்தேர் விழா சிறப்புடன் நடைபெறும். சிவசைலத்திலுள்ள உற்சவர் ஆழ்வார்குறிச்சியில் எழுந்தருளி இங்குதான் தேர்திருவிழா சிறப்புடன் நடைெபறுகிறது. இதனை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான கிராமமக்கள் ஒன்று கூடி ஆடவரும் பெண்டிரும் தேர் வடம்பிடித்து இழுக்கின்றனர். அம்மை பரமகல்யாணி ஈஸ்வரிக்கு தனித்தேர் இதனை பெண்டீர் மட்டுமே இழுக்கின்றனர். பங்குனி உற்சவ கமிட்டியாக ஸ்பென்சர் நிறுவனம் இதி்ல் முக்கிய பங்கு வைத்து சிறப்புடன் விழாவினை நடத்துகின்றனர். இங்குமட்டும் தான் மூலவர் சிவசைலதிருக்ேகாவிலும், தேர் திருவிழா ஆழ்வார்குறிச்சியிலும் நடைபெறுகிறது. இம் மூலவரின் பெயரிலேயே இவ்வூர் பெயர் அமைந்துள்ளது. எங்கும் பசுமையுடன் காணப்படும் இச்சிற்றூர்,சைவ, தான தருமங்களில் சிறப்புடன் விளங்குகிறது. இவ்வூரில் அமைந்துள்ள அவ்வை ஆசிரமமும், அருள்ஜோதி ஆசிரமமும் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவ்வை ஆசிரமம் காந்தி கிராம தொண்டு நிறுவனத்தின் மூலமும் அருள்சோதி ஆசிரமம் சர்குரு குருதேவர் வள்ளலார் அவர்களின் வழிச் சுவட்டில் அவர்களின் வழிகாட்டியாக மகான் ஜீவஜோதி சுப்பிரமணிய சுவாமி அறக்கட்டளை மூலம் வெகு சிறப்புடன் நடைபெற்றுவருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று அவ்வை ஆசிரமத்திலுள்ள சீரார்கள் வாய்பேசாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய சீரார்கள் மற்றும் அனாதை சீரார்கள் சுமார் 300 சீரார்களுக்கு அன்னதானம் இன்றுவரை சுமார் 30 ஆண்டுகளாக சிறப்புடன் செய்யப்பட்டு வருகிறது என்பது மிகவும் பெருமை சேர்க்கிறது.
அருள்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை
திருச்சிற்றம்பலம்
ஓம் சிவசிவ ஓம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக