செவ்வாய், 29 ஏப்ரல், 2014

"அடியாருக்கு அடியவன்"


"அடியாருக்கு அடியவன்" பசுவினிடம் பால் பெற வேண்டுமானால் கன்றுக்குட்டி அவசியமாகிறது, அதுபோல் இறையருள் பெறுவதற்கு குருவருள் அவசியமாகிறது, குருவானவர் நமது கண் போன்றவர், கல்லையையும் முள்ளையும் காட்டுவதும், வழியை யும் குழியையும் உணர்த்துவதும் கண், இதைப்போலவே நன்மை தீமைகளை உணர்ததுபவர் குருநாதர், இந்த பிறவியில் அளிக்கும் ஞானம் எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடரும், பல பிறவிகளல் இறைவரை வேண்டி அந்த நிலையை அடந்தவர் குருநாதர், இறைவருடைய பரம கருணைக்கு பாத்திரமானவர் குருநாதர், அதனால் தான் சான்றோர்கள் இறைவருக்கு அடுத்த நிலையில் குருவை வைத்து போற்றினார்கள், குரு பக்தியே கோடி நன்மை தரும், குருவின் அடிபணிந்து கூடுவது அல்லாருக்கு அருவமாய் இருக்கும் சிவம் , இதனையே திருமந்திரத்தில் திருமூலரும் தனது பாடலில் " குருவே சிவம்" இறைவன் கட்புலனுக்கு காணப்படாததோர் பொருள் கட்புலனுக்கு காணப்படும் பொருள் குருவே, அதனால் அவனையே இறைவனாக தம் தலைவனாகக் கொள்ளவேண்டும் , குரு தான் இறைவனாய் எவர்க்கும் எவற்றிக்கும் தலைவனாய் இருப்பவன் , என்கிறார், இவர்கூற்றின் படி சைவ சமய குறவர்களில் சிவனடியார்களையே அடியாருக்கு அடியேன் என போற்றி தனது குருவையே இறைவனாகக் கண்டவர் இருவர், ஓருவர் அப்பர் (திருநாவுக்கரசர்) பிராணை குருவாக போற்றி இறைவனாகக் கண்டவர் அப்பூதிகடிகள் மற்றொருவர் பெருமிழலைக் குறும்ப நாயனார், குறும்ப நாயனார் குருபக்தியால் திருவருளைப் பெற்றவர், இவர் புதுக்கோட்டைக்கு வடக்கே சுமார் நான்கு கல் தொலைவில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ள தலம் பெருமிழலை ஏன்னும் ஊர், இவ்வூர் பெயரே இவரின் பெயருக்கு அடைமொழீயாகவும் தோன்றியது, எனவே இவரை பெருமிழலைக் குறும்ப நாயனார் ஆனார், இவ்வூரில் குறுநில மன்னராகிய பெருமிழலைக் குறும்பனார் என்ற பெரியார் இருந்தார், இந்த மரபில் வந்தவர் நாயனார், சிவனடியார்கட்டு ஏற்ற தொண்டுகளை யெல்லாம் குறிப்பறிந்து உள்ளன்போடு செய்து வந்தார், மங்கைபங்கருடைய ( சிவபெருமான்) மலரடிகளில் மாறாத அன்பு கொண்டவர், குருவின் திருவடிகளால் ஏற்படும் நன்மை இன்னது என்று அறிந்தபின், அவரது திருவுருவம், திருவார்த்தை திருநாமம் , திரு உடல் இவற்றை நல் மாணவர்கள் முறையே சிந்தனை செய்து கொண்டு கேட்டுக் கொண்டும், இருப்பதை திருமந்திரத்தில் திருமூலர் வாக்குப்படி " தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருவார்ததை கேட்டல், தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே, " என்றபடி குருபக்தி கொண்டவர் பெருமமிழலை குறுப்பர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளை மனம் வாக்கு காயங்களால் சிந்தித்து துதித்து வணங்கி வந்தார், இதுவே இறைவரின் திருவடிகளை அடைவதற்கு ஏற்ற நெறியெனக் கொண்டார், இவ்விதமே நாள்தோறும் சுந்தரமூர்த்தி நாயனாரரின் திருநாமத்தை நவின்று வந்தார், இப்புண்ணியத்தின் பயனாக அணிமா, மகிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம் ஈசத்துவம், வசித்துவம் என்னும் அட்டாமா சித்திகள் யாவும் கைவரப் பெற்றார், இதன் பிறகு திரு ஐந்தெழுத்தினையே பற்றுக் கோடாக கொண்டவர், இதையே சேக்கிழார் பெருமானார் தனது பெரியபுராணத்தில் கூறய படி " நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே ஆளும் படியால் அணிமாதி சித்தியான அணைநதற்பின் மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமசத தஞ்செழுத்தும் கேளும பொருளும் உணர்வுமாம் பரிசுவாய்ப்பக் கெழுமினார் " பெரிய புராணம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் " திருஅஞ்சைக்களம் " என்னும் தலத்திற்கு சென்று பெருமானை வணங்கி திருப்பதிகம் பாடிக் கயிலாயம் செல்ல இருக்கின்றார் என்பதை முன்கூட்டியே தனது யோக வலிமையால் உணர்ந்து கொண்டார் பெருமிழலைக் குறும்பர், " வன்தொண்டர் சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கயிலாயம் அடையவும், கண்ணையிழந்து வாழ்வார் போல நான் அவரை பிரிந்து வாழமாட்டேன் என்று எண்ணி " யோக நெறியில் மூலம் கபாலத்ததினைத் திறந்து ஒளி வடிவமாக திருக்கயிலாயம் சேர்ந்தார், இப்புணித வரலாற்றை படிக்கும் நமக்கு குருபத்தியின் மேன்மையை அதன் பயன்பாட்டை சீர்தூக்கலாம், திரு ஐந்தெழுத்து மந்திரத்தின் - சிவயநம - நம் உயிர் மூச்சாகக் கொண்டு எல்லா நலன்களும் பெற்று பொருளற்ற சடங்குகளில் சம்பிரதாயங்களில் கருத்தை செலுத்தி பிறப்பை பயனற்றதாக்க வேண்டாம் நாம் குருபத்தி கொண்டு அடியார்க்கு அடியானாக வாழ்ந்து இறையருளை பெறுவோம், திருச்சிற்றம்பலம் - ஓம் நமசிவாய நம - நன்றி : கருத்து வடிவம் - தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக