வெள்ளி, 14 நவம்பர், 2014

சத்" "சித்" "ஆனந்தம்"


"சத்" "சித்" "ஆனந்தம்" ஒரு முகப்பட்ட மனத்தினால் அறிய முடியாததை அறிந்து கொள்ளும் திறன் உண்டாகிறது. இது மனோதத்துவ ரகசியனம், ஜீவனை இயக்குவது மனம். இந்த மனம் பண்பட்டால் தான் உயர்வு, ஒன்றை தானாக அறிவது மனத்தினால்தான்.பிறரால் அறிவது வாக்குகளால், இவை இரண்டின் துணையில்லாமல் எதையும் அறியமுடியாது, இந்த மனத்தால் பிரம்மத்தையும் அறியமுடியாது. பிரம்மத்திற்கு மனம் , சரீரம் போன்றதே. மனத்தின் உள்ளேயிருந்து கொண்டு ஆள்வது பிரம்மமே. எழுகின்ற எண்ணங்களை ஒய்வு பெறவைப்பதாலே சுகம் உண்டாகிறது. விருப்பு வெறுப்பாகிய எண்ணத் தோற்றமே துக்கம், எண்ண ஒடுக்கமே சுகம், எண்ணங்களே சுகத்திற்கு சத்ரு, எண்ணங்கள் ஒய்ந்தால்தான் சுகம், தானேதான் சுகம் என்பதை உணர்ந்தால் மனம் அடங்கும், சுகத்தை அனுபவிக்க வேண்டும், அற்ப காமனாய் இராதே. பூர்ண காமனாய் இரு, உன்னுள்ளே உனது இயல்பாகவே இருந்து "சத்" விளங்கிக் கொண்டிருக்கிறது. "சித்" தான் நீ. ஆனந்தத்தை அடையும் போது சச்சி தானந்தமாகிறாய். மனம் இரண்டு விதமாக ஒடுங்கும், தற்காலிகமாக ஒடுங்கும் நிலைக்கு மனோலயம் என்று பெயர், எண்ணங்களே மனம் எண்ணங்களே பல கோடி " நான்" என்கிற எண்ணமே எல்லா எண்ணங் களுக்கும் ஆணிவேர், " நான்" என்கிற இந்த எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்து விடலாம், மனத்தினால் கேட்பது, பார்ப்பது, நுகர்வது போன்ற பல காரியங்கள் மனத்தால் நடைபெறுகிறது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு பிரிவுகள்: 1 எந்த காரியத்தையும் செய்து முடிக்க காரணமாய் இருப்பதுவும் புத்தியின் தூண்டுதலால், 2, நின்ற செயல்படுவது சித்தம் 3, நான் செய்கிறேன் என்று நினைப்பது அகங்காரம் 4, எப்படி முடியுமோ என்று தவிப்பது மனம் மூன்று அவஸ்வதைகளின் குண பேதங்கள் மனிதனுக்கு மூன்று நிலை இயற்கை மாறுதல்கள் உண்டு, அவையாதெனில் விழிப்பு நிலை - ஜாக்ரத் உறக்க நிலை - ஸுஷுப்தி கனவு நிலை -ஸ்வப்னம் கனவு நிலையில் உண்டாகின்ற மாறுதல்களை விஞ்ஞானிகள் பலவித ஆராய்ச்சி செய்துள்ளனர், இந்த ஆராய்ச்சியின் பயனாக இம்மூன்று நிலைகளில் தனியான வேறுபட்ட நிலையை இருப்பதை உணர்ந்தனர், ஒரு குணத்ததில் சாந்த குணம் இருக்கிறது. மற்றொரு நிலையில் கோபம் இருக்கிறது. ஆனால் இரண்டு நிலைகளிலும் இருப்பவர் ஒருவனே, இந்த மாதிரி அவஸ்தை பேதங்களில் ஒன்றுக்கொன்று விரோதமான காரியங்களை செய்தாலும் வேறு வேறு விதமான தேகமும், மனதும் இருந்தாலும், எல்லா அவஸ்தைகளிலும் இருப்பவன் ஒருவன் ஒருவனே யோகியானவன் இந்த மூன்று நிலைகளை கடந்து தெய்வ நிலை என்கிற தனக்குதானாய் இருப்பவன், ஒரு அவஸ்தை இருக்கும் போது மற்றொன்று அங்கு இருப்பதில்லை, விழிப்பு நிலையிருக்கும் போது கனவு நிலை இல்லை. கனவு நிலை இருக்கும் போது உறக்க நிலை இல்லை. உறக்க நிலை இருக்கும் போது விழிப்பு நிலை இல்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும், தொடர்ந்து இருந்து , அவைகளிடமிருந்து வேறாக நின்று அவைகளின் இருக்கைக்கும், இன்மைக்கும் சாட்சியாய் இருப்பதுதான் துரியமாகிய ஆத்மா , " நான் " அது எக்காலத்திலும் அறிவில்லாதது. இந்த அவஸ்தை மூன்றம் ஒன்றாக நிகழ்வது இல்லை. ஆகையால் மித்தை - பொய் மாறாமல் தொடர்ந்து இருக்கும் இந்த அவஸ்தைகள் தோன்றப்பட்ன. ஒரே தீபத்தில் மூன்று நிறங்கள் தோன்றுவது போல், விழிப்பு, நிலையில் கருவி காரணங்களும் சாட்சியாகவும், உறககத்தில் தனக்குத்தான் சாட்சியாகவும், துரியத்தில் அகண்டகாரமான சொரூப வடிவமாக விளங்கும், அதற்கு அன்னியமாக ஒன்றுமில்லை. இந்த மூன்று அவஸ்தைகளிலும் தொடர்ந்து எவ்வித அறிவாகிய ஆத்மா, தன்னிடம் ஆரோபமுல்லாமல் இருக்கும் நிலைதான் துரியவஸ்தை, இது நான்காவது உறக்கத்தில் அஞ்ஞானத்தின் மறைப்பு இருக்கிறது, இந் மறைப்பு இல்லாமல் தான்தானாக இருக்கும் சொரூப ஆனந்த அனுபவமே துரியம் என்பது, அதைத்தான் தூங்காமல் தூக்கம் என்பதாகும், ஆத்மா என்பதை உணர்த்துவதற்காக துரியம், இந்த துரியமான ஆத்மாவே, எல்லா உருவங்களிலும் ஊடுருவி இருக்கிறது, இப்படி இருப்பதாலேயே இதற்கு சத்தியம், ஞானம், ஆனந்தம், நித்யம்,பூரணம் என்று எல்லா மகரிஷிகளால் கொடுக்கப்பட்டது, எனவே மனதை ஒருநிலைப்படுத்த சாதனைகளை தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திரியங்களை கட்டுபடுத்தி மனதை அடக்கினால் எல்லா காரியங்களுமே சித்திக்கம், புலனடக்கத்துடன் சத்யமும் அகிம்ஸை அவசியம் இருக்க வேண்டும், அஷ்டாங்க யோகத்தின் மூன்றாம் நிலை இதுவே. ஆஸனம் யமம், நியமம், எல்லாவற்றிக்கும் நிலையான இருப்பிடம் வேண்டும், உடலுக்கு வருத்தமில்லா இருக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்திரியங்களை அடக்குவதற்கு ஒருவித வழியாகும், சரீரததில் பல மாறுதல்கள் தியானத்தின் போது ஏற்படும், இந்த மாறுதல்களே சச் சித் தானந்தம் என்பதாகும், மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக