உலகையே வெல்லும் சக்தி
காமமாகிய இச்சை தோன்றாமற் செய்து தக்க ஆசனத்திலிருந்து, நாம ரூபத்தை நாடும் மனத்தை இருதயம்பரத்திலிருந்து, புற விடயங்களை நீக்கி விகற்பமில்லாமல் தன் சொரூபத்தை நாடி வெளி ஒலி தானே தானாய் ஒத்து வரும் நிலைதனை நிருவிகற்ப மாகுதல் தியான நிலையாகும்.
நீண்ட நேரம் ஆசனத்திலிருந்து தியானம் செய்ய வேண்டுமாதலால், தக்க ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும், உடலுக்கு ஊறு விளைவிக்காதும், உஷ்ணததை கொடுக்காததும், தியானத்தினால் உடலில் காந்த சக்தி பாய்வதாலும், அந்த சக்தி பூமியில் ஆகர்ஷணம் செய்யாமலும், ஆசனம் அமைத்துக் கொள்ள வேண்டும்,நாடி நரம்புகள் வேறுபாட்டை அடைந்து புது இயக்கம், உடலில் தோன்றும், இது பெரும்பாலும் இது முதுகெலும்புப் பகுதியில் உண்டாகும், ஆதலால் தலையும் உடலும், மார்பும் ஒரே நேர்கோட்டில் இருக்கத்தக்க ஆசனமே ஏற்றது,இதில் பத்மாசனமே மிகச் சிறந்தது.
தியானம் செய்யவதற்கு சரியான இடம் மிக அவசியம் இயற்கை சூழ்நிலையில் நல்ல காற்றோட்டமான சஞ்சலனமற்ற நிசப்தமான இடமும், ஏற்றதாகும், தர்பை ஆசனம்,உடலில் ஏற்படும் ஆற்றலை பூமிக்குள் ஈர்க்காது, இலகுவான பத்மாசனம் சித்தாசனம் போன்றவைகளில் எதேனும் ஏன்றை கைக் கொள்ள வேண்டும், புலித்தோல், துணி ஆசனமும் யோகசனம் செய்ய சிறப்புடையது, எண்ண அலைகளை ஆர்ப்பரிக்காது ஒரே மனமாக முனைப்பட்டு சாதனை புரிய வேண்டும், சபல எண்ணங்களையெல்லாம் நசிக்க செய்து நீண்ட தவமிருந்து வெற்றியடைய வேண்டும், இப்படி நீண்ட காலமாக சாதனை புரிந்து இறையருள் பெற்றவர்கள் முனிவர்களும் ஆச்சாரியர்களும் ஆழ்வார்களும் ஆவர்,
வேகமாக ஓடும் மனிதன், திடீரென்று ஓடுதிசையில் இருந்து மறுதிசைக்கு உடனே மாறமுடியாது, சிறிது சிறதாக வேகம் குறைத்துத்தான் திசை திருப்ப வேண்டும், அதுபோல இந்திரயங்கள் மிக வேகத்துடன் விஷசுகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர்களளை திசை திருப்பி, மாற்றி தியானத்தில் ஈடுபடுத்தவே ஆசனங்கள்.
நான்காம் நிலை பிராணாயாமம் சாதனையால் தோஷங்களை போக்கி மனதில் உண்டாகின்ற சஞ்சலமாகின்ற கில்மிஷத்தை களைகின்றது, கில்விஷத்தை நீக்கின் பவித்ராமான ஆத்மாவை சிந்திக்க வைக்கிறது, அப்படி சிந்தனையுடன் மூச்சை உள்ளிழுத்து,நிறுத்தி வெளியிடும் சாதைக்கு பூரகம் - கும்பகம்- ரேசகம் என்ற மூன்று பிரிவுகளாக உடையதுதான் பிராணயாமம்.
இந்த உடலுக்கு உயிர் முக்கியம், அதுதான் காற்று எனப்படும் ப்ராணன் , அது நாடி நரம்பு 96 தத்துவத்தையும் மயிர்க்கால்கள் வழியாகவும் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதை வீணாக்ககாமல் பிராணயாமம் என்ற முறையில் பதனப்படுத்தினால் நீண்ட காலம் உயிர் வாழலாம், பிராணனை வசப்படுத்தினால் பசி, தாகம், முதலியன அடக்க முடியும், எப்பேர்ப்பட்ட குளிரையும், கடுமையான உஷ்ணத்தையும், தாங்கும், சக்தி கிடைக்கும்,எனவே பிராணயாமம் சித்தியடைந்தவர்களின் சக்தி அபூர்வமானது,
வெளியே உள்ள காற்றை குறிப்பிட்ட நேரம் வரை உள்ளே இழுப்பது பூரகம் எனப்படும், அதேபோல் உள்ளே இழுக்கப் பட்ட காற்றை குறிப்பிட்ட நேரம் நிறுத்தி, சாதனை புரிவது கும்பகமாகும், உள்ளே தடுத்து நிறுத்தி வைத்த காற்றை குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளியேற்றுவது ரேசகமாகும், நாம் உள்ளே வாங்கிய காற்றை நான்கு விநாடி நேரமாவது இழுக்க வேண்டும், அப்படி உள்ளே காற்றை எட்டு விநாடியாவது கும்பகம் செய்ய வேண்டும், பின்னர் கும்பித்த வாயுவை எட்டு விநாடி நேரம் ரேசகம் செய்யது மூச்சுக் காற்றை வெளியேற்ற வேண்டும், இப்படி செய்யும்பயிற்ச ஒரு மனிதன் முதலில் கைக் கொள்ள வேண்டி சராசரி பயிற்சியாகும், ஆனால் பயிற்சி சாதனையால் கைவல்லியாகி அதே உள்ளே இழுக்கும் வாயுவை பதினாறு விநாடியாகவும், கும்பகத்தை நிறுத்தி வைப்பதை அறுபத்தி நான்கு விநாடி கும்பித்து, பின்னர் வெளியே விடும் ரேசகத்தை முப்பத்திரண்டாக பயிற்சியில் கொண்டு வரமுடியும் என்று திருமந்திரத்தில் திருமூலர் விளக்குகின்றார்,
"ஏறுதல் பூரகம் ஈரெட்டுவாமகத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத்தி ரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகமாமே, ----- என்கிறார்.
மனம் பிராண வாயுவின் சஞ்சாரத்திற்கு ஏற்ப விஷ சுகங்களில் சஞ்சரிக்கும், அந்த சலனத்தை நிறுத்தவே நல்ல காற்று பிராணாயாமத்தின் மூலம் உள்ளே நிறைய தேக்கி வைக்கிறது, ப்ராணன் நமக்கு உணவு நீர், காற்று சூரியன் மூலம் கிடைக்கிறது, அது எங்கும் நிறைந்த பொருள், அது நிலை சக்தியாகவோ சலன சக்தியாகவோ இருக்கலாம், நரம்பு மண்டலங்களின் மூலம் பிராணன் உட்கிரகித்து கொள்ளப்படுகிறது, நம் தேவைக்கு வேண்டியது போக எஞ்சிய பிராணன் மூளையிலும், நரம்பு மண்டலத்திலும் சேர்த்து வைக்கப்படுகிறது.பிராணயமம் ,மனோமயம் ,அன்னமயம், இம் மூன்றும் சுத்தப்படுத்தப்பட்டால் எதுவும் சாத்தியமாகும், பிராணயாமம் தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்தது, தெய்வீக சக்திகளை விழிக்க செய்கிறது. பிராணயாமம் செய்ய செய்ய மின் சக்தி பாய்வதை உணரலாம், மனதில் உற்சாகம் உண்டாகும், மனதில் நினைத்ததை சாதிக்கக் கூடிய சித்தியுண்டாகும், ப்ராணன் உடலில் தொழிலாகவும், நரம்பிலுள்ள ஓட்டமாகவும், வலிமையாகவும் தோன்றுவது, பிராணசக்தி எண்ணம், முதலான இழிந்த சக்தி அனைத்தும் பிராணனின் வெளித்தோற்றம், நாம் மூச்சு விடும் காற்று ஒரு நாளைக்கு எண்ணிக்கை 21600 மூச்சாகும், இம் மூச்சுக்களை ஆறு ஆதாரங்களில் ஒவ்வொன்றிலும் கணக்கிட்டுள்ளார்கள், இதைத்தான் சித்தர்கள் வேகாக்கால், சாகாக்கால் என்று சொல்வது வழக்கம், அழியாத காற்று என்று அர்த்தம், இது பிராணாயமத்தின் தத்துவத்தை குறிக்கிறது, இதனையே சித்தர்களின் பரிபாசையாக கூறியுள்ளார்கள், இதனை ராமலிங்க சுவாமிகள் தனது பாடல் வரிகளில்
" சாகா கல்வித்தரம் அறிதல் வேண்டும்
வேகாது கால் உணர்தல் வேண்டும் உடன் சாகாத்
தலையறிதல் வேண்டும் தனியருளில் உண்மை
நிலையடைதல் வேண்டும் நிலத்து " என்கிறார்,
சுவாசிக்கின்ற காற்று பனிரெண்டு மாத்திரை அளவு வெளியேற்றியபின் எட்டு மாத்திரை அளவே மீளத்திருப்பி உட்புகுகிறது, இதனால் பதினாலு மாத்திரை காற்று நஷ்டமாகிறது, இதை திருமூலர்
"ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை
பேராமல் கட்டிப் பெரிதுண்ண வல்லீரேல்
நீராயிரமும் நிலமாயிரத் தாண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே. என்கிறார்,
பதினாறு மாத்திரை அளவு சுவாசம் உள்ளிழுக்கப்பட்டால் சமனம் ஆகும், நஷ்டமாகும் வாயுவை நான்கு மாத்திரை அளவு உள்ளே அதிகப்படியாக உட்கொள்வதால் பெறலாம், இதனால் சுவாசத்தின் அளவை சமனப்படுத்தி விடலாம், நல் காற்றோட்டமுள்ள அரையைதேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும், வயிற்றில் நிறைவான உணவு உண்ட நிலை தவிர்க்கப்பட வேண்டும், உடலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள ேவ்ண்டும், பயிற்சி முடிந்த ஒரு மணி நேரம் கழித்தே நீர் குடிக்க வேண்டும்,
பிராணயாமத்தின் சாதனையால் சாதாரண நிலை மாறி உடலில் அபூர்வ புத்துணர்ச்சி பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும், இதனால் நோய் அணுகா நிலையும், நல்ல நினைவாற்றலும், நல் கிரகணமான சக்தியும் "தூர சிரவணங்கள் " அதாவது வெகுதூரத்தில் நடக்கும் சம்பவங்களை கிரகித்து பார்க்கும் நிலையும் உண்டாகும், இந்த சக்தியும் உயர் சக்தியும் உயிர் ஒட்டமும் ஒன்றாகும், இந்த அபூர்வ சக்தியினால் ஜலத்தை பிராணவாயு , ஜல வாயு என்ற இரு வாயுக்காளாக பிரிக்கலாம், இதன் துணை கொண்டே ராமலிங்க அடிகள் தன் உடலை வாயுவில் கரைத்து மறைந்துள்ளார்கள் என்பது கூற்று. தினமும் காலை, மாலை அப்பியாசம் செய்து வருவதும், சிறிது சிறதாக பயிற்சியை அதிகரித்து, அதிகமாக்கி உடலில் புத்துணர்ச்சியை உண்டாக்கி பழக்கப்படுத்திக் கொண்டால் இதுவே மூலாதாரக் குண்டலியை எழுப்பி நம் உடம்பில் ஆத்ம சக்தியை உண்டாக்கும், என்பது தின்னம் எனவே உலகின் அரிய சக்தியான தியான பயிற்சியில் பிராணயாமம் பயிற்சி செய்து ஆத்ம நிலையை பெறலாம் வாழ்வில் எதையும் வெல்லும் சக்தி பெறலாம்,
திருச் சிற்றம்பலம் .. ஓம் நமச்சிவாயம் ஓம்
மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக