ஞாயிறு, 2 நவம்பர், 2014

ஆசை


ஆசை ஆசைகள் அற்ற இடத்தில் குற்ற்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும் பாவங்களும் அற்றுப் போய் விட்டால், அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன. அனுபவங்கள் இல்லையென்றால் நன்மை தீமைகளை காண இயலாது. ஆகவே தவறுகள் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இறைவன் ஆசையை தூண்டி விடுகின்றான், ஆசை நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனமே . உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படி யெல்லாம் ஆட்டி படைக்கிறது, என்று யோசித்துப் பாருங்கள். மனத்துடன் நடத்தும போராட்டம் என்றும் ஒய்வதில்லை. விழிப்பு நிலையிலும், உறங்கும் நிலையிலும் கூட மனத்தின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. எனவே, அனைத்து சாஸ்தரங்களும் வேதங்களும் மனதை அடக்கும் வழிமுறைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் நிலையை ஆண்டவனிடம் தான் கேட்டு பெற வேண்டும். உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வாறு அனுபவித்தாலும், ஒருவனுக்கு நிரந்தர திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் இந்த ஆசையை விட்டுவிட இடம் தருவதில்லை. காய்ந்த எலும்புத்துண்டை கடித்த நாய் தன் வாயிலிருந்து வந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாக கடித்து துன்ப்படுவது போல, மனிதனும் ஆசைகளை பெருக்கி கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான். பாலைவனத்தில் காணப்பெறும் கானல் நீர் போன்றே இல்லாத - கிடைக்காத ஒன்றுக்கு ஆைச்பட்டு துன்பம் கொள்கின்றனர் மனிதர்கள். வாழ்வில் கிடைக்கும் இன்பங்கள் யாவும் நம்மை ஏற்றமடையக்கூடியதே, அவை நிரந்தரமனவை அல்ல. நம் மனித வாழ்வே அற்பமானது அந்த வாழ்வு சுகப்பட ஆண்டவனே ஆசையை தூண்டிவிடுகின்றான், ஏனெனில் இந்த அற்ப காலத்தில் கர்ம வினைகள் மூலம் பிறப்பற்ற வாழ்வை தூண்டவே ஆசை, பாசங்களிலிருந்து விடுபட்டு பற்றற்ற வாழ்வு பெறவே இவ்வாறு செய்கிறான், மண்ணாசை வளர்ந்தால் கொலையில் விழுகிறது. பொன்னாசை வளர்ந்தால் களவு நடக்கிறது பெண்ணாசை வளர்ந்தால் பாபம் நிகழ்கிறது மூன்று ஆசைகளையும் அற்றவர் மனிதர்களில் மிகமிக சிலரே ஆவர், ஆகவேதான் பற்றற்ற வாழ்வை இந்துமதம் போதிக்கிறது. அதற்காக முற்றும் துறந்து சந்நியாசி ஆவதல்ல, இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும் மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று ஆசை என்ற சபலங்களுக்கு ஆட்பாடதிருத்தல், பற்றற்ற வாழ்க்கை பரம் பொருள் மீது ஆசை வைத்தால் நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது. ஆண்டவன் மீது பாரத்தை சுமத்தி வருவது வரட்டும் என்பவனே பற்றற்ற நிலைக்கு ஆரம்பம் , இறைவன் மீது ஆசை மிகமிக பற்றற்ற வாழ்வு தானகவே உண்டாகும், இதுவே இந்து மதம் கூறும் வேத சாஸ்திரம். திருச்சிற்றம்பலம் மேலும் சில ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக