வியாழன், 6 நவம்பர், 2014

அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் நம்மை காக்க உதவும் பாடல்


அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் நம்மை காக்க உதவும் பாடல் " ேகாலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய சீலமேஅறியமாட்டேன் செய்வினை மூடி நின்று ஞாலமாம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் ஆலமா நஞ்சம் உண்ட ஆவடு துறையுளானே. " ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறையில் எழுந்தருளியுள்ள பெருமானே, அழகிய பார்வதிையப் பாகமாக கொண்ட அம்மையப்பாய் விளங்கும் தங்களின் அறியாதவன் நான். நான்செய்யும் இருவினையும் என்னைச் சூழ்ந்து, இவ்வுலப் பந்த பாசத்துள் அழுத்தித் துன்பப்படுத்தாத வகையில் எளியேனை காத்தருள் புரியுங்கள். நான் அறிந்தும் அறியாமலும் செய்யும் வினைகள் யாவும் என்னை வந்து தாக்காமலிருக்க உதவி அருள வேண்டுகிறேன், தலைக்கு வந்தது, தலைமுடியுடன் போனது புண்ணியம் என்று கிராமங்களில் பேசுவார்கள். இதைப் போல நம் வினை நம்மைத் தொடரும் என்றாலும் தாங்கக் கூடிய அளவினதாக அமையும், திருச்சிற்றம்பம் நன்றி ; தமிழ்வேதம் மேலும் பல ஆன்மீகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக