வியாழன், 20 நவம்பர், 2014

சிவம் காக்கும்


சிவம் காக்கும் நாகேந்திரன் திடுக்கிட்டார். அவருடைய அதுநாள் வரையிலான ஜாதகம் படித்தலில் இப்படி ஓர் அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டதேயில்லை. மீண்டும் கட் டங்களைத் தன் ஆள்காட்டி விரலால் தடவித்தடவி, சுற்றிச் சுற்றி வந்து சோதித்தார். இல்லை; வாய்ப்பே இல்லை. அன்றிரவு அந்த ஜாதகக்காரன் மரணத்தைத் தழுவுவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்னும் சில மணிநேரத்தில் தன் விதி முடியப்போவதை உணராமல் அவன்தான் எவ்வளவு வெகுளியாக அவரை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்! அவனிடம் எப்படி உண்மை யைச் சொல்வது? தன்னுடைய தர்மசங்கடத்தை மிகவும் உன்னிப்பாக அவனுடைய ஜாதகத்தை ஆராய்வது போன்ற முகபாவனையில் மறைத்துக் கொண்டார் நாகேந்திரன். அவனைத் தவிர்க்க வேண்டும். இன்னும் ஒரு சில மணிநேரங்களுக்குள் அவனுக்குதான் என்ன நற்பயன்கள் விளைந்துவிடப் போகின்றன? அப்ப டியே விளைந்தாலும் அதை அனுபவிப்பதற்குள்தான் அவனுடைய வாழ்வு முடிந்துவிடுமே! ஆனால் இந்த துர்ப்பலனைத் தன் வாயால் சொல்லத்தான் வேண்டுமா? தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவனைப் பார்த்து, “இந்தாப்பா, உன்னோட ஜாதகத்தை நான் ரொம்பவும் அலசிப்பார்க்க வேண்டியிருக்கு. அதனால் இப்ப உடனே உனக்கு உன் ஜாதகப் பலன்களை முழுமையாகச் சொல்ல என்னால் முடியலே. அதனால நாளைக்குக் கார்த்தால நீ வா. உனக்கு விவரமா சொல்றேன்” என்று கூறி அனுப்பி வைத்தார். அவன் போனதும், நாகேந்திரனின் மனைவி அவரை எதிர்கொண்டாள். “நீங்க என்ன சொன்னாலும் அது நடக்கும். ஒரு ஜாதகத்தைப் படித்து பலிக் கக்கூடிய பலனா சொல்ற உங்க வாய், அவனை நாளைக்கு வரச்சொல்லியிருக்கு. அவனோட ஜாதகத்தை நீங்க கூட்டி, கழிச்சுக் கணக்குப் போட்டுத் தடுமாறிண்டிருந்ததை நான் உள்ளேருந்து கவனிச்சுண்டுதான் வந்தேன். அவனை அனுப்பினதுக்கும் ஏதோ உள்ளர்த்தம் இருக்கு. ஏன், அவனுக்கு என்ன கெடுதல் நேரப்போறது?” என்று பதைபதைப்புடன் கேட்டாள். “கெடுதலா? இந்த ஜாதகப்படி அவன் இன்னிக்கு ராத்திரியே எமனுக்கு விருந்தாளியாய் போகப்போறான். அதை என் வாயால சொல்ல எனக்குத் திராணியில்லே. அதான், இன்றுபோய், நாளை வான்னுட்டேன்” தயங்கியபடி சொன்னார் நாகேந்திரன். http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com. “அடக்கடவுளே!” என்று பதறித் துடித்தாள் மனைவி. “நாளைக்கா வரச் சொன்னீங்க? அப்படியானால் அவன் ஜாதகப்படியான மரண சம்பவம் இன் னிக்கு ராத்திரி நடக்காதா? உங்க வாக்கு இதுவரைக்கும் பலிச்சது போல, அவன் நாளைக்கு நிச்சயம் வருவானே...” “அதெப்படி, அதெப்படி?” நாகேந்திரன் தடுமாறினார். என் வாக்கு பலிக்கணும்னா அவன் நாளைக்கு வரணும். அவன் ஜாதகம் பலிக்குமானா அவனால வரமுடியாது. அதாவது, என் கணக்கு சரியாகும். கணக்கு சரியாகுமா; வாக்கு பலிக்குமா? மொத்தத்தில் அன்றிரவு அவருக்கும் சரி, அவருடைய மனைவிக்கும் சரி, தூக்கம் போச்சு! விஜயன் தன் கிராமத்தை நோக்கி நடந்தான். மாலை வேளை மயங்கிக் கொண்டிருந்தது. இரவுக்குள் கிராமத்துக்குப் போய்விடலாம். இரவு தூங்கிவிட்டு, காலையில் மீண்டும் புறப்பட்டு ஜோதிட ரைப் பார்க்க வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டான். இருட்டு கருமையை அதிகரித்துக் கொண்டே வந்தது. இருட்டுக்குக் கார்மேகமும் துணை புரிந்தது. நட்சத்திரங்களும் சந்திரனும் மேகங்களை ஊடுருவ முடியாமல் தவித்தன. கருமை வலுக்க வலுக்க, அந்தப் பிராந்தியமே கொஞ்சம் சொஞ்சமாகக் குளுமைக்கு வந்தது. சில்லென்று வீசிய காற்று, மண்வாசனையையும் சுமந்து வந்தது. மழை, பன்னீர்த்துளித் தூறலாய் சுகமாய்த்தான் ஆரம்பித்தது. ஆனால் அதுவே நீள் கம்பிகளாகி வானத்தையும் பூமியையும் இணைக்க ஆரம்பித்த போதுதான் அவன் புகலிடம் தேடினான். மழையோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொண்டு அவனை விரட்டி மகிழ்ந்தன. அதோ! ஒரு மண்டபம். பாழடைந்த மண்டபம்தான். ஆனாலும் பரவாயில்லை. ஆபத்துக்குப் பாவமில்லை. நனையாமல் தன்னைக் காத்துக்கொண்டால் தான் மறுநாள் மீண்டும் வந்து ஜோதிடரைப் பார்க்க முடியும். ஒரு வேளை மழை, குளிர் காரணமாக உடல் சுகவீனமுற்று அவரைப் பார்க்க முடியாம லேயே போய் விடுமோ? அவன் கண்களில் இப்போது மழை. ஆனால் ஒதுங்கப் போன இடமும் அவனைப் பார்த்து கேலி செய்தது. கலகலத்துப் போயிருந்த அந்தப் பாழடைந்த மண்டபத்தின் விரிசல்களினூடே மின்னல் அவனை மிரட்டியது. ஓர் இடி விழுந்தாலும் போதும் பொலபொலவென்று உதிர்ந்துவிடும் அந்த மண்டபம். ஆனால் அந்த மண்டபத்துக்குள்ளே- அது என்ன பீடம்? ஓ! அது ஒரு சிவலிங்கம். என்ன கொடுமை இது? சிலந்திக்கூடுகள் தம் இழைகளால் லிங்கத்தைச் சுற்றிக்கொண்டு, எந்த மார்க்கண்டேயனுக்காகப் போரிட்டுக் கொண்டிருக்கின்றன? எமனுடைய பாசக் கயிறு போலத் தோற்றமளித்த அந்த சிலந்தி வலைப்பின்னல்களை அவன் தன் கைகளாலேயே அறுத்து அகற்றினான். லிங்கத்தின் மீது படிந்திருந்த தூசிகளும் தும்பும், மேலே நேராக விதான ஓட்டை வழியாக விழுந்து கொண்டிருந்த மழைத்தண்ணீரில் கரைந்தோடி லிங்கத்திற்குப் புதுப்பொலிவு கொடுத்துக் கொண்டிருந்தது. “அடடா... இந்த சிவாலயம் இப்படி எழில்கெட்டுப் போயிருக்கிறதே! எனக்கு மட்டும் வசதி இருந்தால், இந்த ஆலயத்தை உடனே புனருத்தாரணம் செய்வேனே!” என்று அங்கலாயத்துப் புழுங்கினான் விஜயன். நான் உழைப்பேன். அதிகம் சம்பாதிப்பேன். என் வருவாயைக் கொண்டு இந்தப் பாழடைந்த மண்டபத்தைப் புதுப்பிப்பேன். இந்த சிவலிங்கத்தைத் தூய்மைப்படுத்துவேன். மண்டபத்தைச் சுற்றிலும் நந்தவனம் அமைப்பேன். ராஜகோபுரம் கட்டுவேன். கோபுரம், ராஜகோபுரம், உட்பிராகாரங்கள், பெரியமணி மண்டபம், புதுப்பிக்கப்பட்ட ஆவுடையார், அதன்மீது புதுமெருகு கொண்ட சிவலிங்கம்... அடடா... புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய் வேன். மங்கல ஒலி முழங்க, வேதியர் புடைசூழ திருக்குடம் ஏந்தி கோயிலை பவனி வருவேன். சாரத்தில் ஏறி திருமஞ்சனம் செய்வித்து கும்பாபிஷே கம் செய்வேன். சுற்றுவட்டார கிராமத்து மக்களெல்லாம் திரண்டு வந்து கூடுவார்கள். அடடா... அப்போதுதான் எவ்வளவு பிரமாண்டமாக இந்தக் கோயில் வளர்ந்திருக்கும்! எத்தனை லட்சம் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவார்கள்! அவர்களுடைய துயரெல்லாவற்றையும் இங்கு எழுந்தருளியி ருக்கும் எம்பெருமான் எப்படியெல்லாம் தீர்த்துவைப்பார்! எம் நாயகன்தான் எவ்வளவு கம்பீரமாக கொலுவீற்றிருப்பார்! தினசரி ஆகமங்கள் என்ன, திரு விழாக்கள் என்ன, பண்டிகைகள் என்ன, எவ்வளவு கோலாகலமாக இந்தக் கோயில் கொண்டாடப்படும்! எவ்வளவோ தருமங்கள் இக்கோயில் மூலமா கச் செய்யப்படும்! அதில் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும்தான் எத்தனை ஆயிரம்பேர் பயனடைவார்கள்.விஜயனின் கற்பனை எல்லை கடந்து போயிற்று. மானசீகமாகவே கோயில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்திவிட்டான். அந்த சிவனுக்கு பிரதோஷ காலத் தில் பாலால், பன்னீரால், பச்சரிசிமாவால், கரும்புச்சாறால் அபிஷேகம் பண்ணி ஆனந்தம் கொண்டான். பளீரென்று ஒரு மின்னல். கற்பனை கலைந்தது. அதிர்ச்சியுடன் கண் விழித்தான். விரிசல் விட்ட விதானத்திலிருந்து மின்னல் பேரொளி. அந்த ஒளியில் அவன் கண்டதுதான் என்ன? மிகப் பெரியதாகப் படமெடுத்தபடி அவனைப் பார்த்து சீறிக்கொண்டிருந்தது ஒரு கருநாகப் பாம்பு. அவன் சுதாரித்துக் கொள்வதற்குள் எம்பி அவன் மீது பாய்ந்தது. பளிச்சென்று ஒதுங்கி, அந்த மண்டபத்தைவிட்டு வெளியே ஓடி வந்து விழுந்தான் விஜயன். பேரிடி ஒன்று விழுந்தது. அந்த அதிர்ச்சியில் மண்டபம் கிடுகிடுத்து, லேசாக முட்டு கொடுத்து கொண்டிருந்த தூண்கள் நழுவ, ஏற்கனவே சிதிலமடைந்திருந்த மேல்விதானம் அப்படியே ‘பொக்’கென்று கீழே விழுந்தது. எந்த பாதிப்பும் இல்லாமல் சிவலிங்கம் மட்டும், கொட்டும் மழை அபிஷேகத்தில் திளைத்தபடி அவனைப் பார்த்துப் பாசமாய் சிரித்தது. அப்போதைக்குத் தான் உயிர் தப்பிவிட்டாலும், மறுநாள் பொழுது விடிந்ததும் ஜோதிடரைப் போய்பார்த்து அவர் குறித்துக் கொடுக்கும் ஆகம விதி களின்படி இந்தக் கோயிலைக் கட்டி, கும்பாபிஷேகமும் செய்ய வேண்டும் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டான் விஜயன். தன் கிராமத்தை நோக்கி மழையையும் பொருட்படுத்தாமல் நடந்தான். பொழுது புலர்ந்தது. வாசல் கதவைத் திறந்த நாகேந்திரன் திடுக்கிட்டார். வாசலில் காத்திருப்பது யார்? நேற்று யாருடைய ஜாதகத்தைப் படித்து யாருடைய விதி நேற்றோடு முடிந்ததென்று மனசுக்குள் கணக்குப் போட்டு அனுப்பி வைத்தாரோ, அதே கிராமத்தான். இவன் சாகவில்லை. என் கணக்கு தப்பா? இதுநாள் வரை நான் படித்த ஜோதிடக்கலை, தன் அனுபவம், இதுவரை கொஞ்சம்கூடப் பொய்க்காத தன் கணிப்பு, அதெல்லாம், அந்த ஜோதிட அறிவெல்லாம் இவனுடன் ஏற்பட்ட அனுபவத்தில் மாயையாகிவிட்டதா? படித்ததெல்லாம் வீணா? ஆனாலும் அவனை வரவேற்று, முன்னறையில் அமர்த்தி, தன் ஜோதிட ஆய்வு கூடத்திற்குப் போனார் நாகேந்திரன். உயரே வைத்திருக்கும் அவனு டைய ஜாதகத்தை எம்பி எடுக்க முனைந்தபோது ஒரு ஓலைச்சுவடி கீழே விழுந்தது. விழுந்து பிரிந்தது. குனிந்து அதை எடுக்கப்போன நாகேந்திரன், பளிச்சென்று தெரிந்த வாசகங்களைப் படித்தார். “எவன் ஒருவன் மானசீகமாக சிவன் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறானோ அவனுக்கு மரணம் தள்ளிப்போகிறது.” உடலே சிலிர்த்தது அவருக்கு. விஜயன் மரணத்தை அப்போதைக்கு வென்றுவிட்டான். அப்படியானால் அவன் மானசீகமாக சிவன் கோயில் ஒன்றிற்கு கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறான். ஆவல் பொறுக்க மாட்டாமல் அவன் தன்னை சந்தித்த இரண்டு வேளைகளுக்கு இடையே நடந்ததென்ன என்று கேட்டார். விஜயன் விரிவாக நடந்ததை விளக்கிச் சொன்னான். தன்னைத் தழுவி இறையருள் வேண்டிய மார்க்கண்டேயனை யமனுடைய பாசக்கயிற்றிலிருந்து மீட்டார் சிவன். விஜயனைப் பொறுத்தவரை தன்மீது படர்ந்திருந்த சிலந்தி வலைக் கயிற்றை அறுத்துத் தள்ளிய சேவைக்காக அவனை மண்டப இடிபாட்டிலிருந்து விரட்டி அவன் உயிரையும் காத்திருக்கிறார் என்பதை ஜோதிடர் நாகேந்திரன் புரிந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக